அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றுள்ளது. இதற்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அணியின் […]
Tag: ஐபிஎல் போட்டிகள்
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக பிசிசிஐக்கு 2 […]
மும்பையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இதற்காக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான […]
ஐபிஎல் போட்டிகளில் களத்தில் இறங்கி விளையாடுவதற்கு இனி ஒரு நொடி கூட காத்திருக்க முடியாது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற இருந்த ஐபிஎல் தொடர்கொரோனாவின் காரணமாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐக்கிய அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்சமயம் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான அட்டவணைகள் போன்றவற்றை ஐபிஎல் போட்டிகளை நிர்வாகிக்கும் குழு கலந்தாய்வின் மூலம் நிர்ணயிக்க உள்ளது. இந்த சூழலில் சென்னை […]
இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் இல்லமால் காலி மைதானத்திலாவது ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என கங்குலி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த தொடக்கத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மார்ச்25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 21 நாட்கள் முடிவடைந்த […]
ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை […]