சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருக்க கூடிய இந்த நிலையில் தற்பொழுது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரிசனம் செய்வதற்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியதால் பாதுகாப்பு கருதி முதியோருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினமும் பக்தர்கள் வருகை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tag: ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவில் புரட்டாசி மாத பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் வைத்து நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல, மகரவிளக்கு சீசன் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தான மந்திரி கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 17-ஆம் தேதி அதிகாலை முதல் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். […]
சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளத்தில் உள்ள சாஸ்தா கோவில்கள் மிகவும் பழமை வாய்ந்ததும் பெருமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற கோவிலுமாகும். பத்தனம்திட்டை மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள சபரிமலை என்ற மலை மீது பெருமை வாய்ந்த இந்த கோவில் அமைந்திருக்கின்றது. எல்லா மதத்தை சார்ந்தவர்களும் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் கோவில் சன்னிதானத்திற்கு மிக அருகில் கிழக்குப் பக்கமாக வாவர் என்பவருக்கான ஒரு இருப்பிடம் அமைந்துள்ளது. வாவர் […]
கேரளா மாநிலம் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையை எதிர்த்து பக்தர்களுக்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்துள்ளனர். இன்று காலை நிறை புத்தரிசி பூஜை […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்திரை மாதம் விஷு சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். அவர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கோவில் […]
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜூன்-19 ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர், மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, […]
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மே 14ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் நின்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அம்மாநிலத்தில் மே 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மே 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. மே 19ஆம் தேதி வரை […]
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அச்சன்கோவில் ஐயப்ப சன்னதியில் விஷு கனி தரிசனம் நடந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கேரளா மாநிலம் முழுவதும் நேற்று விஷு கனி தரிசனம் சிறப்பாக நடந்தது . அவ்வகையில் அச்சம்கோவிலில் இருக்கும் ஐயப்பன் ஆலயத்திலும் விஸு கனி தரிசனம் நடந்தது . இதனால் கணபதி ஹோமம், கலச பூஜை போன்றவை அதிகாலையில் கோவிலில் நடந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் விஷுக்கனி தரிசனம் கிடைக்கப்பெற்றது. பின்னர் எப்பொழுதும்போல் கோவிலில் அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டது. இந்த […]
கேரளாவில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14ம் தேதி திறக்கப்பட்டு, கடந்த 28ஆம் தேதி அடைக்கப்பட்டது. இந்நிலையில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 14ஆம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு […]
சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை 5000ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இது கொரோனா காலம் என்பதால், தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 10 வயது மற்றும் 60 வயதிற்கு இடையில் உள்ள பக்தர்களுக்கு முன்பதிவு செய்துள்ள 24 மணி நேரத்திற்கு முன்பே […]
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 20ம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்திருக்கிறது. கொரோனா காரணமாக 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 3 ஆயிரம் பக்தர்கள் ஆக இருந்த நிலையில் 20 ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க தற்போது தேவசம்போர்டு முடிவு செய்திருக்கிறது. பக்தர்கள் அனைவரும் கொரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.
ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையில், பக்தர்கள் குறைந்த அளவு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளிலேயே வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் என கேரள முதல்வர் திரு. பினராய்டு விஜயன் தெரிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று முதல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் திரு. பினராய்டு விஜயன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் […]
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை மற்றும் உச்ச பூஜைக்கு பின் […]
ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய நவம்பர் மாதம் 16ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற நவம்பர் மாதம் 15-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கும் நிலையில் கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் இது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனாவை கருத்தில் வைத்து பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி கூட்டத்தின் முடிவில், […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரி பூஜை இன்று காலை நடைபெற்றது. ஆடி மாதத்தில் நடைபெறும் நிறைபுத்தரி வழிபாட்டில் தேவசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் விளையும் பயிர்கள், நெற்கதிர்களை கொண்டும், தமிழக பக்தர்களின் காணிக்கை கொண்டும் ஐயப்பனுக்கு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு நிறைபுத்தரி வழிபாட்டிற்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. எனிலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நிறைபுத்தரி வழிபாட்டிற்காக கேரளா மற்றும் தமிழக பக்தர்கள் நெற்கதிர்கள் கொண்டு வர […]