ரஷ்ய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணையின் விலை வரம்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயம் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து ஜி7 இல் உறுப்பினர்களாக இருக்கும் பணக்கார நாடுகள் இந்த விலையை நிர்ணயம் செய்திருக்கின்றன. மேலும் ரஷ்ய நாட்டிலிருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் எண்ணெய் தடையில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த […]
Tag: ஐரோப்பிய ஒன்றியம்
கடந்த சில நாட்களாக உக்ரைன் ராணுவ படைகள் அதிநவீன மேற்கத்திய ராக்கெட்கள் மற்றும் பீரங்கிகளுடன் ரஷ்ய ராணுவ படைகளை பின்வாங்க செய்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்ய தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான யூரோக்களை சேர்த்து, ராணுவ செலவினங்களுக்காக கூடுதலாக பணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக முகாமின் ராஜதந்திர […]
ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாட்டிற்கு வரலாம் என ஜெர்மன் சேன்சலர் கூறியுள்ளார். NORDI மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் சேன்சலர் ஓலாஃப் சோல்ஸ், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். ரஷ்ய நாட்டின் அரசை விரும்பாத பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வரலாம் என்றும், ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ரஷ்ய மக்கள் பலர் அகதிகளாக வெளியேறுவதை கருத்தில் கொள்ள வேண்டும் […]
உக்ரைன் மீது ரஷ்யா சென்ற பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. இப்போது வரை அங்கு போர் நடந்துவரும் சூழ்நிலையில், தாக்குதலை தொடங்கிய ரஷ்யாவின் மீது பல உலக நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளது. எனினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷ்யாவையே நம்பியிருக்க வேண்டியதாக இருக்கிறது. இப்போது ஐரோப்பியஒன்றியத்தின் 40% இயற்கை எரிவாயு, 30% எண்ணெய் மற்றும் சுமார் 20% நிலக்கரி ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்படுகிறது. இருப்பினும் இந்த வருடத்திற்குள் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் […]
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய நாட்டிற்கு விதித்த பொருளாதார தடைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க தீர்மானத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது சுமார் 150 நாட்களைக் கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளும் ரஷ்யாவை கண்டித்து வருகின்றன. மேலும், அந்நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டிற்கு விதித்த பொருளாதார தடைகளை மேலும் […]
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள உக்ரைனுக்கு டென்மார்க் ஆதரவு தரவேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள உக்ரைனை பரிந்துரைக்க தயக்கம் காட்டும் ஒன்றாக நாடுகளில் டென்மார்க் உள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு ஒரு வேட்பாளர் அந்தஸ்து வழங்குவது பற்றி டென்மார்க்கில் நிச்சயமற்ற நிலை இருக்கின்றது. இந்த நிலையில் உக்ரைனின் வேட்பாளர் நிலையை அதிகரிக்க வேண்டுமென டென்மார்க்கை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் […]
கடந்த 2015-ஆம் ஆண்டு பெல்ஜியமில் ஒரு லிட்டர் பாலின் விலை 10 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது. அதாவது பால் பொருட்களின் விலை குறைந்ததால் பாலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வறுமையில் வாடிய விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகள் சாலைகள் மற்றும் வயல்களில் பாலைக் கொட்டி கவிழ்த்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக ஒரு மிகப்பெரிய போராட்டம் நடந்துள்ளது. அந்தப் போராட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பாலை பீய்ச்சி அடித்துள்ளனர். மேலும் […]
ஐரோப்பிய ஒன்றியம் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் இனிமேல் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவத்தொடங்கி இரண்டு வருடங்கள் தாண்டிய நிலையில், தற்போது உலக நாடுகளில் தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த வாரத்திலிருந்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சியானது, ஐரோப்பா முழுக்க பொது போக்குவரத்தில் கொரோனோவிற்கு எதிரான கொள்கையை […]
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டமானது நேற்று பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பேசிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிந்துரைகளை முன்வைத்தார். இதனை அடுத்து ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷிய அரசு நடத்தும் தொலைக்காட்சிகளில் […]
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன் நாடு இணைவது தொடர்பான விண்ணப்பத்தை அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய தூதரிடம் ஒப்படைத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைவதற்கான முதற்கட்ட விண்ணப்பத்தை உக்ரைன் நாடு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான விண்ணப்பம் தொடர்பான கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை பூர்த்தி செய்து அதனை ஐரோப்பிய ஒன்றிய தூதர் மட்டி மாசிக்காசிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்ளார். இதுவே ஐரோப்பிய ஒன்றியத்தில் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அட்டூழியங்களை கடுமையாக கண்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் முழுவதும் மக்கள் மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பற்றிய அந்நாட்டின் அதிபருடன் உரையாற்றினேன். ரஷ்ய ஆயுதப் படைகளால் செய்யப்பட்ட குற்றங்களை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டிக்கிறது. புச்சா மற்றும் பிற நகரங்களில் நடந்த அட்டூழியங்கள் ஐரோப்பிய மண்ணின் கருப்பு பட்டியலில் பொறிக்கப்படும். உக்ரைனுக்கு […]
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், ரஷ்ய நாட்டின் மீது மேலும் பொருளாதார தடைகள் அறிவிப்பது தொடர்பில் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது அதிகமாக பொருளாதார தடைகளை அறிவிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை கொள்கைக்கான செயலாளரான ஜோசஃப் போரெல் பேசியதாவது, உக்ரைன் நாட்டில் மரியுபோல் நகரில் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கிறது. […]
ரஷ்யா தொழில் அதிபர்கள் மீது 4ஆம் கட்ட பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியமானது விதித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் கால் பந்து கிளப்ஆன செல்சியின் உரிமையாளர்ஒருவர், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த Abramovich, உள்ளிட்ட ரஷ்ய செல்வந்தர்கள் அதிபர் புதினுடன் தொடர்பில் இருந்து கொண்டு போருக்கான நிதிஉதவியை அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து கனடா, பிரிட்டனை தொடர்ந்து ஐரோப்பியஒன்றியம் ரஷ்ய செல்வந்தர்களினுடைய சொத்துக்கள், ஆடம்பர பங்களாக்கள், சொகுசு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐரோப்பியா ஒன்றியத்தை சார்ந்த […]
ஐரோப்பிய ஒன்றியம் மியான்மர் ராணுவ அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசை கவில்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ராணுவம் கைப்பற்றியது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. இதனைத் தொடர்ந்து மியான்மரில் ராணுவம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆனபோதிலும் ராணுவத்தால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. […]
பிரித்தானிய ஊடகங்கள் ஐரோப்பா பயணிக்கும் பிரித்தானியர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய ஊடகங்கள் ஐரோப்பா பயணிக்கும் பிரித்தானியர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் விடுமுறைக்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் போது அதிக பிரெக்சிட் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பாவிற்குள் நுழையும் பிரித்தானிய நாட்டவர்கள் ஒவ்வொரு முறையும் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், பிரிட்டனை பழிவாங்க அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அவருக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. பிரிட்டன், தங்களுக்குரிய ஜெர்ஸி தீவில் பிரான்ஸின் அனைத்து மீன்பிடி படகுகளையும் அனுமதிக்கவில்லை. இதனால், கோபமடைந்த பிரான்ஸ், தங்கள் மீன்பிடி படகுகளுக்கு அனுமதி தரவில்லை எனில், ஜெர்ஸி தீவிற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திடம், பிரிட்டனை பழிவாங்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரியது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் […]
சுமார் லட்சக்கணக்கானோர் போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். போலந்து அரசு ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து விலகுவது “போலெக்ஸிட்” என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலந்து நாடு வெளியேறினால் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். எனவே இதனை கண்டித்து நூற்றுக்கணக்கான இடங்களில் நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போலெக்ஸிட் பயத்திற்கு மத்தியில் அந்நாட்டில் […]
போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இருப்பதாக கூறப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் விளக்கமளித்துள்ளார். போலந்து நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தங்கள் நாட்டை வெளியேற்ற விரும்புவதாக கூறினர். மேலும் முரண்பாடு ஏற்படும் சமயங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை காட்டிலும், போலந்து நாட்டின் தேசிய சட்டத்திற்கு முன்னுரிமை இருக்கிறது என்று அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மோதலை உண்டாக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய நிர்வாக குழு கூறியிருந்தது. இந்நிலையில் […]
பிரான்சிடம், அடிக்கடி பிரிட்டனை மிரட்ட தேவையில்லை, சரியான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு பிரிட்டன் அதன் தீவுப்பகுதிகளில், தங்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடவில்லை, என்றால் அந்த தீவுகளுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்தது. பிரிட்டனின் சேனல் தீவுகளில் ஒன்றாக இருக்கும் ஜெர்சி தீவில் மீன் பிடிப்பதற்கு பிரான்ஸின் 47 மீன்பிடி படகுகள் அனுமதி கேட்டிருந்தது. எனினும், அதில் 12 படகுகளை தான் பிரிட்டன் அனுமதித்தது. […]
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் பிரித்தானிய பயணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி ஒன்று விதிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் பிரித்தானியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 7 யூரோ அதாவது 6 பவுண்டுகள் வரி விதிக்கப்பட உள்ளதாக ஐரோப்பிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது Schengen எல்லைக்குள் நுழையும் பிரித்தானியா உள்ளிட்ட 62 ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த […]
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு moderna, Pfizer உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் Covid-19 தடுப்பூசிகளின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தடுப்பு மருந்தை வாங்க moderna, Pfizer உள்ளிட்ட நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தடுப்பூசிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பைசர் தடுப்பூசி ஒரு டோஸ் பழைய விலைப்படி 15.50 யூரோவாக இருந்த நிலையில் புதிய விலைப்படி 19.50 யூரோவாக அதிகரித்துள்ளது. அதேபோல் மாடர்னா தடுப்பூசி ஒரு டோஸ் பழைய விலைப்படி 19 […]
ஐரோப்பிய ஆணையம் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட வெளிநாட்டு பயணிகளை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வெளிநாட்டு பயணிகளை தங்கள் நாட்டுக்குள் வர தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஆணையம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்ட பயணிகள் அனைவரையும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மட்டுமல்லாமல் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் […]
ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக உலகளவில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஆனது மார்ச் மாதம் அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு ஐரோப்பாவிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பிரதமர் ஜோ பைடனின் சிறந்த அரசாங்கத்தின் மூலம் தடுப்பூசி பெரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையடுத்து அமெரிக்காவில் மொத்தம் 94.8 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் […]
ஐரோப்பா சீனாவுடன் வைத்திருக்கும் தொடர்பை துண்டிப்பது சரியான வழி அல்ல என்று ஜெர்மனியினுடைய வெளியுறவுத்துறையின் அமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார். சீனா திடீரென்று ஜின்ஜிங் உயகுர் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமைக்கான மீறலில் ஈடுபட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடந்த மார்ச் மாதத்தில் சீன அதிகாரிகளில் பல நபர்கள் மீது பொருளாதார ரீதியாக தடை விதித்தது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சீனாவிற்குமிடையே பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து […]
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையையும் மீறி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் லட்சக்கணக்கான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியுள்ளது என Sydney Morning Herald தகவல் […]
ஜெர்மனியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு குடிபுகுவோரின் எண்ணிக்கை 2020ல் பாதியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஐ கணக்கிடும் போது மொத்தமாக ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 31 % குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெர்மனிக்கு இந்தியர்கள் வருவது மிகவும் குறைந்து விட்டதாகவும், சீனா மற்றும் அமெரிக்கர்களை பொருத்தவரை ஜெர்மனிக்கு வருபவர்களை விட ஜெர்மனியை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை […]
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றுமதி விவகாரத்தில் பிரிட்டனுடன் சேர்ந்து அறிக்கை வெளியிட ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைத்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen கடந்த சில நாட்களுக்கு முன்பு, ” கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பிரிட்டனுக்கு மட்டும் அதிகளவு ஏற்றுமதி செய்வதால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியையும் தடை செய்து விடுவோம் ” என்று மிரட்டினார். இதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலும் ஆதரவு தெரிவித்தனர். […]
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர், பிரிட்டனிற்கு அளிக்கப்படும் தடுப்பூசிகளை தடுக்க வேண்டும் என்று கூறியதற்கு பிரிட்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனின் பாதுகாப்புத்துறை செயலரான பென் வாலஸ், தடுப்பூசி தொடர்பில் எங்களுக்கு எதிராக எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுள்ளார். அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனாவின் 3ஆம் அலை பரவி வருகிறது. இதனால் ஐரோப்பிய […]
ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை வாங்கி மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் தலைவர் உர்சுலா வொன்டர் லெயன் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளை வாங்குவதற்க்காக ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி 90 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்க இருப்பதாக கூறிய அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் 30% […]
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை மீண்டும் செலுத்தி கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வியாழக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கு இரத்தம் உறைதல் போன்ற அபாயம் இருப்பதால் பல முன்னணி ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது. இதனால் ஐரோப்பிய மருத்துவ கட்டுப்பாட்டாளரான ஐரோப்பியன் மெடிக்கல் ஏஜென்சி தடுப்பூசியை குறித்து விசாரணை மேற்கொண்டது. விசாரணை மேற்கொண்டதில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ‘பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது’ என்று தகவல் வெளியிட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் […]
ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசி நிர்வாக தலைவர்கள் கொரோனா தடுப்பூசிகளை ரஷ்யாவிடம் கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். ஆஸ்ட்ரோஜெனகா தடுப்பூசிகளுக்கு ஜெர்மனி,அயர்லாந்து ,ஹாலண்ட் உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்ததால் ஐரோப்பிய ஒன்றிய தடுப்பபூசி நிர்வாகத் தலைவர்கள் ரஷ்யாவிடம் தடுப்பூசி கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். இதனால் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எல்லாம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகளில் தயாரித்து செலுத்தி தற்போதைய சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைத்துள்ளனர். முதன்முதலில் கொரோனாவிற்கு தடுப்பூசி […]
பிரிட்டனில் ஒன்றரை மில்லியன் அதிகமாக ஐரோப்பிய ஒன்றியம் குடி மக்கள் வாழ்வதாக பிரிட்டன் உள்துறை அலுவலகம் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது . பிரிட்டன் அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தீர்வுத்திட்டத்தின் கீழ் பிரிக்ஸிட்க்கு பிறக பிரிட்டனில் தங்குவதற்காக 4.6 மில்லியன் மக்கள் உரிமை பெற்றதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றது. சுமார் 5 மில்லியன் விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 31,2020 நிலவரப்படி பெறப்பட்டது. அதில் இங்கிலாந்தில் 90% ,ஸ்காட்லாந்தில் 5% ,வேல்ஸில் 2% மற்றும் வடக்கு அயர்லாந்தில் 2% என்று […]
இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுமார் 2,50,000 தடுப்பூசிகளை அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான அனாக்னி ஆலையத்திலிருந்து அனுப்புமாறு ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் இத்தாலி அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கைக்கு இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது .இந்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு அளித்துள்ளது . அதற்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியம் போட்ட ஒப்பந்தத்தை ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் பூர்த்தி செய்யாததால் மறுப்பு தெரிவித்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் […]
ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 நாடுகள் ஆஸ்ட்ரோசெனகாவின் தடுப்பூசிகளை கடந்த சனிக்கிழமை பெற்றுள்ளது. பிரிட்டன் தயாரிப்பான ஆஸ்ட்ரோசெனகா தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம், ஒட்டுமொத்தமாக 300 மி.லி வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் முதல் நிலையாக மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 80 மில்லியன் டோஸ்களை பெற தயாராக இருந்தது. ஆனால் 40 மில்லியன் மட்டுமே அளிக்கவுள்ளதாக கடந்த வாரம் ஆஸ்ட்ரோசெனகா தெரிவித்துவிட்டது.இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆஸ்ட்ரோசெனகாவின் இந்த செயலை […]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது தான் சரி என்று பிரெக்சிட்டுக்கு ஆதரவு அளித்த மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தபடுவது தாமதமாகி வருகிறது. எனவே ஐரோப்பிய ஆணையம் இது போன்ற விமர்சனங்களால் கடும் குழப்பம் அடைந்துள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்ததால் ஏற்கனவே கோபம் அடைந்திருக்கும் தலைவர்கள் பிரிட்டனுக்கு சரியான நேரங்களில் தடுப்பூசிகள் கிடைப்பதால் மேலும் எரிச்சலடைந்த்துள்ளார்கள். இந்நிலையில் தங்களுக்கு தடுப்பூசி தாமதமாவதால் ஐரோப்பிய ஒன்றியம் தங்களின் […]
ஐரோப்பா கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கூடுதலாக 300 மில்லியன் டோஸ்கள் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பைசர் நிறுவனத்தின் ஆர்டரை இரட்டிப்பாக்கி அதிகமாக 300 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளது. இதனை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான, உர்சுலா வான் டென் லேயன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஐரோப்பியர்கள் தேவையான அளவு பாதுகாப்பான மற்றும் உபயோகமுள்ள கொரோனா தடுப்பூசிகளை வைத்திருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஐரோப்பா பைசர் தயாரித்த கொரனோ […]
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு எதிராக அதிரடியான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதியாகும் விமானத்திற்குரிய பாகங்கள் மற்றும் ஒயின்கள் போன்ற சில ஐரோப்பிய ஒன்றியங்களின் தயாரிப்புகளுக்கு கட்டணங்களை அதிகரிப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விமான உற்பத்திக்கு தேவையான பாகங்கள் மற்றும் ஒயின்கள் மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த காக்னாக்ஸ் மற்றும் […]