இங்கிலாந்து நாட்டில் சமீப நாட்களாக இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் சமீப நாட்களாக வெப்ப தாக்கம் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெப்ப அலையால் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெப்பத்தை தாங்க முடியாமல் கடற்கரைகளில் மக்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் லண்டனில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் […]
Tag: ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று இல்லை என்று அளிக்கப்படும் சான்றிதழ் இன்னும் ஒரு வருடத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒரு நபர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்டார் அல்லது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்திருக்கிறது அல்லது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் என்பதை காண்பிக்கும் விதமாக கொரோனா சான்றிதழ் அளிக்கப்படும். தற்போது வரை அங்கு இச்சான்றிதழ் நடைமுறையில் இருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்கும், 27 […]
ஜெர்மனியில் கடந்த 2018-ம் ஆண்டு பிராஸ்பேர் கேனியல் நிலக்கரி சுரங்கம் மூடப்பட்டது. இந்த சுரங்கமானது 155 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், திடீரென மூடப்பட்டதால் தொழிலாளர்கள் சுரங்கத்தை விட்டு வெளியேறும்போது கண்கலங்கி சென்றனர். இந்த சுரங்கம் ஆனது பசுமை இல்ல வாயுக்கள் என்று கூறப்படும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளிப்படுவதை தடுப்பதற்காகவே மூடப்பட்டது. இதற்கான முக்கிய காரணம் ஐநா சபை பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவது அழிவுப்பாதையை நோக்கி செல்லும் என்று எச்சரிக்கை விடுத்ததுதான். […]
மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரச்சனையை உலக பிரச்சனைகளாக நினைக்கும் மனநிலையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியிருக்கிறார். ஸ்லோவேகியா என்னும் ஐரோப்பிய நாட்டின் தலைநகரான பிரஸ்லாவாவில், நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரிடம், உக்ரைன்-ரஷ்ய போரில் இந்தியா யார் பக்கம்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் தெரிவித்ததாவது, இந்தியா மீது இவ்வாறான கட்டமைப்பை திணிப்பதற்கு முயற்சி நடக்கிறது. இந்தியா, யார் பக்கமும் சாய தேவையில்லை என்று […]
ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பல உரு மாற்றங்களைப் பெற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இவ்வாறு இருக்க இந்தியா உட்பட சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது மெதுவாக குறைந்து வருகிறது. ஆனால் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி ஜெர்மனியில் ஒரே நாளில் மட்டும் 67,500 […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் தொடர்பில் விரிவாக ஆலோசனை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்திரிகையாளரிடம் ஜோ பைடன் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ரசாயன தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தற்போது ஏற்பட்டிருக்கும் தளவாட சிக்கல்களாலும், உக்ரைனின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், ரசாயன, அணு ஆயுதங்களை ரஷ்யா […]
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஐரோப்பிய நாடுகளே முதல் 8 இடங்களில் உள்ளன. ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்காக உலக நாடுகளில் உள்ள மக்களின் மகிழ்ச்சியை வாழ்க்கை மதிப்பீடு மற்றும் நல்வாழ்வு ஆகிவற்றின் அடிப்படையில் தீர்வு வலையமைப்பு ஆய்வு செய்து கணக்கிடப்பட்டது. இந்த ஆய்வில் இந்த ஆண்டின் மொத்தம் 146 நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பட்டியலில் ஐந்தாவது முறையாக தொடர்ந்து பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து டென்மார்க் (2), அயர்லாந்து(3), […]
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, உக்ரைன் போர் நீடிக்கும் பட்சத்தில் கொரோனாவின் போது எதிர்கொண்ட நிதி நெருக்கடியை காட்டிலும் கடும் நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைனில், ரஷ்யா மேற்கொள்ளும் போர் காரணமாக சர்வதேச சந்தையின் முதுகெலும்பாக திகழும் விற்பனை சங்கிலியில் பெரிதாக தாக்கம் உண்டாகி, பொருட்கள் பல மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஹெர்பெர்ட் டைஸ் கூறியிருக்கிறார். எனவே, ஐரோப்பிய நாடுகள் அதிக […]
ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷ்யாவை தடை செய்ய ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1973-ஆம் ஆண்டு ஷிப்ட் என்ற அமைப்பு பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுலபமாக நடைமுறைப்படுத்துகிறது. மேலும் ஷிப்ட் அமைப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளது. இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையான நிதி தொகை தொடர்பு கொள்வதற்கான சமூகமாகும். மேலும் இந்த அமைப்பு பணம் எப்போது […]
கடந்த ஒரே வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா தொற்றால் புதிதாக 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 26 பிராந்திய நாடுகளின் மக்கள் தொகையில் வாரந்தோறும் கொரோனாவால் 1% பேர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குனர் ஹான்ஸ் கிளக் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் இந்த நிலை நீடித்தால் கொரோனா நெருக்கடி சுகாதார கட்டமைப்பை நிலைகுலைய செய்யும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குவைத் அரசு ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தங்கள் மக்களை வலியுறுத்தியிருக்கிறது. குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தள்ளிவைக்க வேண்டும். இதில் குறிப்பாக இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்து […]
ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ஒமிக்ரான் வைரசால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு இங்கிலாந்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கிலாந்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முழுமையான தடுப்பூசி போட்டிருந்தாலும், தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும் கொரோனா 3-ஆவது அலை அந்நாட்டில் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக […]
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தாவிடில், மார்ச் மாதத்திற்குள் 5 லட்சம் நபர்கள் உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது என்று உலக சுகாதார துறை எச்சரித்திருக்கிறது. ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல மக்களுக்கு தகுந்த அளவில் தடுப்பூசி அளிக்கப்படவில்லை. மேலும், பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே, தான் கொரோனா அதிகரித்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி அளிப்பதை அதிகரிக்கவேண்டும். மேலும், அடிப்படை பொது […]
ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரண்டாவது முறையாக ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பாவில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ தற்போது நாட்டின் நிலை அபாய கட்டத்தில் […]
ஐரோப்பிய நாடுகளிலேயே ஜெர்மன் நாட்டின் கடவுச்சீட்டு தான் சக்தி வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் சக்திவாய்ந்த கடவுசீட்டுகளின் பட்டியலில் ஜெர்மன் கடவுசீட்டு, மூன்றாம் இடம் பெற்றிருக்கிறது. அதாவது, ஜெர்மன், இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை தான் பெற்றிருக்கிறது. ஆனால், இரண்டு நாடுகள் முதல் இடத்தில் இருப்பதால் ஜெர்மன் மூன்றாம் இடம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உலகிலேயே சக்திவாய்ந்த கடவுசீட்டு என்றால் அந்த கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு எத்தனை நாடுகளுக்கு, விசாயின்றி முன்பே பயணிக்க முடியும் என்ற அடிப்படையில் […]
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலில் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான மக்களையும் வெளியேற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க முன்னரே தங்கள் படைகளை திரும்பப் பெற்றதே பதற்றத்திற்கு காரணம் என்று […]
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால்அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. ஒருசில தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவிஷீயீல்டு கொரோனா தடுப்பூசிக்கு 16 ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் […]
ஐரோப்பிய நாடுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பலர் உயிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வெள்ளத்தால் அதிக பாதிப்படைந்திருக்கிறது. எனவே தினசரி உயிரிழப்புகள் அதிகரித்திருக்கிறது. தற்போது வரை சுமார் 60 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் முழுக்க பாதிப்படைந்தது. சாலையில் நின்ற வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றது. ஜெர்மனியில் மட்டும் பலர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் கூரைகளின் மேல் […]
பிரான்ஸின் பாதுகாப்பு ஆலோசனை செயலாளர் தன் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனால் அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு ஏற்றவாறு சில முக்கிய தகவல்களை கொடுத்து வருகிறது. அதன்படி பிரான்ஸின் பாதுகாப்பு ஆலோசனை செயலாளர் தன் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி ஐரோப்பிய மருந்துகள் நிறுவனதின் (EMA) ஒப்புதலுக்காகவும், கோவாக்சின் தடுப்புசி உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதலுக்காகவும் காத்திருக்கின்றது .இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த […]
பெலாரஸ் நாடு, பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்வதற்காக விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை கிளப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Ryanair என்ற விமானம், ஏதென்ஸ் நகரிலிருந்து வில்னியஸிற்கு புறப்பட்டுள்ளது. அப்போது பெலாரஸ் அரசு, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியைக் கிளப்பி, மின்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கி விமானத்திலிருந்த Roman Protasevich என்ற 26 வயதான பத்திரிக்கையாளரை கைது செய்திருக்கிறது. அதாவது இந்த பத்திரிக்கையாளர் பெலாரஸ் அரசை கடுமையாக விமர்சிப்பவர். இவர் அந்த விமானத்திலிருந்த பிற பயணிகளிடம் தான் […]
கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஐரோப்பிய நாடுகளில் கட்டாய தனிமைப்படுத்தல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டாய தனிமைப்படுத்துதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அயர்லாந்து சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் […]
ரஷ்யாவின் தடுப்பூசியை கேலி செய்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவர்களிடமே தடுப்பூசிக்காக கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், ரஷ்யா தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்தால் தங்கள் மக்களை காப்பாற்றிக் கொள்ள உதவும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரஷ்யா தான் உலக நாடுகளில் முதன் முதலில் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி விவகாரத்தில் ரஷ்யாவை கேலி செய்தார்கள். மேலும் அதன் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வியும் […]
அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனம் தகவல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ரோ ஜெனிகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி மக்களுக்கு செலுத்தியுள்ளது. இதனிடையே இந்த நிறுவனத்தின் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைந்துள்ளதாகவும், இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் […]
ரஷ்யா அரசாங்கம் நியாயமற்ற செயலுக்கு துணை போன தூதர்களை வெளியேற்ற வேண்டும் என்று அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் சில இடங்களில் ஆர்பாட்டங்கள் நடந்தது. இதனை கண்காணித்த ஜெர்மனி, போலந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேறுவதாக கடந்த வாரம் முடிவெடுத்தது. ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களும் சட்ட விரோத போராட்டங்களை மறுத்தபோது இந்த மூன்று நாடுகளின் தூதர்கள் பங்கேற்றுள்ளனர் […]
பல்கேரியா அரசாங்கம் பிரிட்டனுக்கு விதித்துள்ள விமான தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. பல்கேரியா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து சேவைக்கான தடையை நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பல்கேரியாவும் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தடை விதித்ததுடன் எல்லைகளையும் மூடிவிட்டது. இந்நிலையில் தற்போது இன்று காலையில் பல்கெரிய அரசு இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்கள் எங்கள் நாட்டில் தரையிறங்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் […]
கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளின் மனநோய் என பெலாரஸ் நாட்டின் அதிபர் வர்ணித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடான பெலாரஸ் கொரோனா தொற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் இரண்டாம் உலகப் போரின் 75 வது வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான மின்ஸ்கில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் கூறுகையில், “கொரோனா தொற்று […]
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 1,795 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 198 நாடுகளில் பரவி அச்சுறுத்து வருகிறது. கொரோனாவின் கோரப்பிடியில் தற்போது ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சிக்கித் தவித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரசால் இதுவரையில் 5, 27,288 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 23,927 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். முதலில் வேகமாக பரவத் […]