ஐஸ்லாந்து நாட்டின் சர்வதேச விமானநிலையம் அருகில் இரண்டு நாட்களுக்கு முன் வெடிக்க தொடங்கிய எரிமலையில் இருந்து லாவா குழம்பு வழிந்தோடும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அந்நாட்டின் தலைநகரான ரேக்ஜவிக்கிள் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் ஃபக்ராடால்ஸ்பியால் எரிமலை அமைந்திருக்கிறது. அப்பகுதியில் சென்ற சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த சூழ்நிலையில், கடந்த 3ஆம் தேதி எரிமலை வெடிக்க துவங்கியது. அடுத்தடுத்த தினங்களில் எரிமலையில் இருந்து புகையுடன்கூடிய […]
Tag: ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து நாட்டில் அரோரா போரியாலிஸ் என்றழைக்கப்படும் அரிய நிகழ்வால் அனைத்து இடங்கலும் பச்சை நிறமாக காணப்பட்டது. ஒரு வருடத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதுவும் வடதுருவத்திற்குள் நுழையும் சூரிய ஒளிக்கதிர்களை பூமியின் வாயு மண்டலத்துகள்கள் சிதறடிக்கின்றன. இதனால் பச்சை வண்ண ஒளி வீசும். இந்த அரிய நிகழ்வானது ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்கவிக்கில் நடந்துள்ளது. மேலும் இந்த அரிய நிகழ்வினை அரோரா போரியாலிஸ் என்று அழைக்கின்றனர். இதனை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு […]
2021-ஆம் ஆண்டில் உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது . ஒவ்வொரு வருடமும் உலகின் பாதுகாப்பு மிக்க நாடுகளின் பட்டியலை மதிப்பெண்களின் அடிப்படையில் Global Peace Index வெளியிட்டு வருகிறது. இதனையடுத்து குறித்த நிறுவனம் இதனை ஆய்வு செய்த பின் தன்னுடைய இணையபக்கத்தில் குறிப்பிட்டு வருகிறது. அதன்படி Global Peace Index பட்டியலில் 163 நாடுகள் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு நாடு எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் ஆபத்தானது என்பதை தீர்மானம் செய்ய […]
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் மொத்தமாக கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் வெவ்வேறு வகையாக உருமாற்றம் அடைந்து பரவி வந்தாலும் தடுப்பூசிகளினால் அவற்றை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள, தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்த கொரோனோவை எதிர்த்து நல்ல பலனளிப்பதாக தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து, கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் அகற்றியுள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற அனைத்து விதிமுறைகளும் […]
ஐஸ்லாந்தில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. ஐஸ்லாந்தில் ஒரே வாரத்தில் சுமார் 17 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தலைநகர் ரேக்யூவிக் அருகே உள்ள எரிமலை வெடித்தது. இந்நிலையில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு எரிமலை வெடித்த தாகவும் கூறப்படும் நிலையில், இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அனைவரும் குவிந்தனர். ஆனால் ஆபத்து நீடிப்பதால் மக்கள் பார்வையிட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 20 நாட்களில் சுமார் 40,000 நிலநடுக்கங்கள் பதிவானதால் எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 40,000 நிலநடுக்கங்கள் கடந்த 20 தினங்களில் மட்டும் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவைத் தாண்டி பல நிலநடுக்கங்கள் சக்தி வாய்ந்ததாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் ஏற்பட்ட அனைத்து நிலநடுக்கங்களையும் விட, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியில் இருந்து […]