நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் விரைவில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஐ சி எம் ஆர் வைரலாஜி அமைப்பின் இயக்குனர் ப்ரியா ஆப்ரகாம் கூறியுள்ளார். இரண்டு தவணை செலுத்திய பிறகு கிடைக்கும் நோய் எதிர்ப்பு […]
Tag: ஐ.சி.எம்.ஆர்
கடந்த நான்கு மாதமாக நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு முடிவு கட்ட உலக நாடுகள் கங்கணம் கட்டி, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போது இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் ? எப்போது இதிலிருந்து மீளலாம் என்ற எதிர்பார்ப்புகளோடு ஒவ்வொரு நாளையும் உலக நாடுகள் கடந்து வரும் நிலையில், இந்தியா இதற்கு சாதகமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் இன்று மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் […]
பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. அது இன்னும் சோதனை நிலையில் தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை பல இடங்களில் செய்யப்படுகிறது. இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனைப் படிப்பதற்காக ஐ.சி.எம்.ஆர் தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் மூலமாக […]
கொரோனா பரிசோதனைக்கு ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது என ஐ.சி.எம்.ஆர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சோதனை துல்லியமாக இல்லை எனவும், இந்த கருவியின் தரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நெறிமுறைகளின்படி அமையவில்லை எனவும் தகவல் வெளியானது. முதலில் ராஜஸ்தான் அரசு, ரேபிட் டெஸ்ட் கருவிகளின் பயன்பாட்டை நிறுத்தி வைத்தது. இதனை […]
இந்தியாவில் 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த வேகமாக பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சீனாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இந்த கருவிகள் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவு அனுப்பி வைத்த மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. மாநிலங்களும் ரேபிட் டெஸ்ட் கிட் மூலமாக பரிசோதனையை அதிகப்படுத்தின. ஆனால் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி. இந்த மாநில முதல்வர்களான மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நேற்று கொடுத்த பேட்டி இந்தியாவையே அதிர்ச்சியடையவைத்தது. அதில் கொரோனா அறிகுறி இல்லாமலே அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து கொரோனா பரபரப்பை அதிகரித்தது. டெல்லியில் 186 […]
கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருவதற்கு 4 நாள் தாமதம் ஆகலாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி […]