அறிமுக இயக்குனர் லாரன்ஸ் ஜெயக்குமார் அற்றை திங்கள் அந்நிலவில் எனும் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் என்னுடைய மாணவர் ஜெயக்குமார் லாரன்ஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். மற்றொரு மாணவர் பாபு ஆண்டனி இந்த படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்கவில்லை பலவிதமான யோசனைக்கு பின் இந்த படத்தை எடுத்திருக்கின்றனர் படம் என்றாலே காதல் காட்சிகள் இல்லாமல் இருக்க முடியாது. […]
Tag: ஐ-லியோனி
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் ஐ.லியோனி பிரச்சாரம் செய்தார். அதில் அவர் கூறியதாவது, “பாரத பிரதமர் மோடி எந்த இடத்திற்கு சென்றாலும் திருக்குறளை தான் கூறுகிறார். சென்னைக்கு வந்தபோது “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் தொழுதுண்டு பின் செல்வர்” எனக் கூறிய […]
தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் கடும் அதிருப்பதி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 12) காலை பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அலுவலகத்திற்கு சென்று லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் என்னை பொறுப்பேற்க வைத்ததற்கு […]
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் தலைவராக திண்டுக்கல் ஐ-லியோனியை நியமித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, பெண்களை இழிவுபடுத்தும் ஒருவரை அந்த பணியில் அமர்த்தியதன் மூலம் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், பெண்களின் இடுப்பு மடிப்பை பற்றி பேசுபவர்களுக்கு படிப்பைப் பற்றி என்ன தெரியும் என்றும் கூறியுள்ளார். லியோனி பாடநூல் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் கூறியுள்ள […]