இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 28.11.2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 […]
Tag: ஒன்றிய அரசு
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (புதன் கிழமை) முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு விசாரணைக்கு வந்த […]
தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (புதன் கிழமை) முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு […]
இந்தியில் பணிபுரியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், அனைத்து பணிகளும் இந்தியிலேயே நடைபெற வேண்டும் என்று அமித்ஷா குழு தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியில் பணிபுரியாத அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதுடன் விளக்கம் அளிக்க நோட்டீஸ் தர வேண்டும். திருப்திகரமான பதில் தராத ஒன்றிய அரசு ஊழியர்களின் தனிப்பதிவேட்டில் இந்தியில் பணிபுரியவில்லை என்பதை பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளது. மேலும் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கும்போதே […]
ஒன்றிய சமூக நீதி அமைச்சர் சார்பில் மேல்நிலைப் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில் மேல்நிலைப் படிப்புக்கு பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பல்வேறு […]
தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிரில்லாமல் தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு தன்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக துறை அமைச்சா் எ.வ.வேலு கூறியுள்ளார். தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை கூர்மையாக கவனித்த ஒன்றிய அரசு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு சார்பில் நம்மை காக்கும் […]
தமிழ்நாட்டிற்கு மட்டும் மழை வெள்ள நிவாரண நிதி அளிப்பதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்திருக்கிறது என்று வேல்முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டின் வாழ்வுரிமை கட்சி தலைவரான பண்ருட்டி வேல்முருகன் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் கனமழை பெய்து விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் நெற்கதிர்கள் சம்பா அறுவடைக்கு தயாரான நிலையில், […]
ஒன்றிய அரசின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை தயாரித்த 2021 ஆம் வருட நல்லாட்சி குறியீட்டை, நல்லாட்சி தினத்தை முன்னிட்டு டெல்லி விஞ்ஞான் பவனில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். நல்லாட்சி குறியீடு விவசாயம், வணிகம், சுகாதாரம், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உட்பட 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். இவற்றில் நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழுவில் […]
இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைர வேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில அரசுகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், புதிய பாதிப்புகள், இரட்டிப்பு விகிதம், மாவட்டங்களில் ஏற்படும் கிளஸ்டர்கள் உள்ளிட்ட விஷயங்களை மிகவும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் உள்ளாட்சி அளவில் […]
இந்தியர்கள் யாரும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் “ஸ்டார்லிங்க்” என்ற திட்டத்தினை இயக்கி வருகிறார். ஆனால் எலான் மஸ்க்கின் இந்த ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியாவுடைய அனுமதி பெறாததால் ஒன்றிய அரசு இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழி இணையதள சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது அடுத்த […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் படி ஒன்றிய […]
ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறித்து அந்நிறுவனங்கள் விளக்கம் கொடுத்துள்ளனர் . ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து சுவிகி, ஸ்மோட்டோ நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் விளக்கம் கொடுத்துள்ளனர். செப்டம்பர் 17ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை 5 சதவிகிதம் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படும் என ஒன்றிய அரசு […]
மதுரை மாநகராட்சியில் தீனதயாள் அந்தியோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு 250 சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டிகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2018ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர […]
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனி மரியாதை நிமித்தமாக நேற்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக எனக்கு வாய்ப்பளித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய அளவில் பள்ளி குழந்தைகள் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன். ஏழை, எளிய மாணவர்களும் கல்வியை ஒரு சுமையாக கருதாமல் பயில வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் “ஒன்றிய அரசு:” […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளின் நிலை என்ன? என்பது குறித்த அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 58,897 […]
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பதவியேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டுவருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே அழைத்துவருகின்றன. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் மத்திய அரசு, ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டுவருகிறது. தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினரும் ஒன்றிய […]
மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவதை சமூகக் குற்றமாக பார்க்கக்கூடாது. ஒன்றிய அரசு என்ற சொல்லையே தமிழக அரசு தொடர்ந்து பயன்படுத்தும், பயன்படுத்துவோம் என்றார். 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இந்திய யூனியன் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டது என்று கூறினார். இவ்வாறு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் ஒன்றிய அரசு என்று முதல்வர் குறிப்பிட்டது கோடிக்கணக்கானவர்கள் மனதை புண்படுத்தி உள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். […]
நீட் தேர்வை ஒன்றிய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்பதால் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவேண்டும் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நீட் தேர்வு முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் அதன் ஒன்றிய அரசு தான் செய்ய முடியும் என்ற நிலையில் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர […]
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]
ஜூன் 23ஆம் தேதி அதாவது நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை முடியும் தருவாயில் ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
மதுரையில் விரைவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகள் துறையை உருவாக்க முடியுமா? என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்காலிக வெளிப்புற நோயாளிகள் துறை அமைத்தால், கருவுற்ற பெண்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், இருதய நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.