பிரிட்டன் நாட்டின் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடிப்பு நடந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஜெர்சி தீவில் இருக்கும் செயின்ட் ஹீலியர் என்னும் நகரில் மூன்று தளங்கள் உடைய கட்டிட பகுதியில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட சில நொடிகளில் கட்டிடம் விழுந்து தரைமட்டமானது. அதில் வசித்த மக்கள் இடுப்பாடுகளில் மாட்டிக் கொண்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ […]
Tag: ஒருவர் பலி
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் லகான் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலர் கும்பலாக நின்று ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரமாக மோதியதோடு கடையையும் உடைத்துக் கொண்டு சென்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு […]
ஜெருசலேமில் இரட்டை ஆணி குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் நகரத்தில் தொடர்ந்து இரண்டு தடவை இன்று காலையில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்திருக்கிறது. ஜெருசலேமின் கிவாத் ஷால் என்ற பகுதியில் ஒரு பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் காலை 7 மணிக்கு குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ரமோத் ஜங்சன் நகரத்தின் நுழைவு வாயிலிலும் குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு நபர் […]
திருமண விருந்தில் ரசகுல்லா கிடைக்காததால் மணமக்களின் உறவினர்கள் மாறி மாறி மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகராறு முற்றிய அதில் கத்திக்குத்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். ஆக்ராவின் ஏத்மத்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மொஹல்லா ஷேக்கானை சேர்ந்த உஸ்மான் என்பவரின் மகள் திருமணத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருந்தில் பரிமாறப்பட்ட ரசகுல்லா தீர்ந்து போன நிலையில் தகராறு முற்றியது. அதில் கத்தி குத்து பட்டு படுகாயம் அடைந்த சன்னி என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]
சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு வீராங்கனை உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் சண்டை நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளான ஜெனின் நகரில் இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்திற்கு காரில் வந்த பாலஸ்தீனிய வாலிபர் சோதனை சாவடியில் இருந்த ராணுவ […]
அஜெண்டினா நாட்டில் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனை அடுத்து மைதானம் நிரம்பி வழிந்த காரணத்தால் அது பூட்டப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முற்பட்டதால் அவர்களை போலீசார் தடுக்க முற்பட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீசார் ரப்பர் குண்டுகளால் […]
கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகில் சென்ற படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும் 20 நபர்கள் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த 40 பேர் ஒரு மீன்பிடி கப்பலில் நேற்று சென்று இருக்கிறார்கள். கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகே சென்ற படகு, திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமிருக்கும் 22 நபர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை […]
மெர்சிகோவில் முந்தைய 2 நிலநடுக்கங்களின் நினைவு நாளில் அந்நாட்டில் பயங்கர சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. வடஅமெரிக்க நாட்டில் மெக்சிகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் வாடிக்கையானதாக உள்ளது. இருப்பினும் சில சமயங்களில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி போட்டு வருகின்றது. அதில் கடந்த 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி மெக்சிகோ தலைநகரான […]
மெக்சிகோவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வட அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:05 மணிக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் […]
ஸ்விட்சர்லாந்தில் ஒரு ஏரியில் நீச்சலடித்து கொண்டிருந்த பிரிட்டனை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுசிலாந்து நாட்டின் ஸ்வென்டிசி என்ற ஏரியில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு நபர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென்று நீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள், அவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். அதன்பிறகு, காவல்துறை அதிகாரிகளுடன், விமான மீட்பு சேவை, தீயணைப்பு குழுவினர் மற்றும் பராமரிப்பு குழுவினரும் மீட்பு பணியை மேற்கொண்டனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகும் மீட்பு குழுவினரால் அவரை […]
காங்கோ நாட்டில் கிழக்கு மாகாணத்தில் வடக்கு கிவு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எபோலா வைரஸ் பாதிப்பால் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து சந்தேகத்திற்குரிய அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ என் ஆர் பி), நோயாளிக்கு எபோலா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சந்தேகத்திற்குரியது. […]
யெரெவன் சந்தையில் உள்ள பட்டாசு குடோன் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவன் நகரத்திற்கு தெற்கே சுர்மாலு என்ற சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் மாலை நேரத்தில் அதிக அளவு மக்கள் பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த பட்டாசு குடோன் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். மேலும், 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]
கிரிமியன் தீபகற்பத்தில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விமானத்தளத்தில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா கைப்பற்றிய கிரிமியன் விமான தளத்தில் தொடர்ந்து பயங்கர வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அந்த தீபகற்பத்தில் இருக்கும் கடலோர ரிசார்டுகளுக்கு அருகே அமைந்துள்ள ரஷ்யாவின் விமான தளத்தை குறிவைத்து தொடர்ந்து மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது. இதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் வானுயரத்திற்கு புகை மூட்டம் […]
சென்னை கத்திப்பாரா ஆலந்தூர் மெட்ரோ அருகே சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த பெரிய பெயர் பலகை விழுந்ததில் மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் பைக் உள்ளிட்ட அருகே இருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.இந்த விபத்தினால் ஆலந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் வருவதைக் கண்ட இளம் பெண்கள் ரயில் பாலத்தில் இருந்து குதித்த நிலையில், ஒருவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம், வி.ஆர்.புரம் தொரப்பாடி தேவிகிருஷ்ணா ஸ்ரீஜித் (28) பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் பௌஷா முஜீப் (40) என்பவர் லேசான காயம் அடைந்தார். இச்சம்பவம் சாலக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள பாலக்குழி பாலத்தில் சனிக்கிழமை காலை நடந்தது. ரயில் வருவது தெரியாமல் இருவரும் பாலத்தின் குறுக்கே […]
திடீரென நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள போகி என்ற பகுதியில் கால்நடைகள் பண்ணை அமைந்துள்ளது. இங்கு திடீரென பயங்கரமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டின் போது 3 பேரின் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களோடு பிணமாக கிடந்தார். மேலும் 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் உடனடியாக அவர்களை […]
பெரு நாட்டில் ஒருவர் குரங்கம்மை நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா நோய் தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் பெரு நாட்டில் புதியதாக உருவான குரங்கம்மை நோய் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது. பெரு நாட்டில் ஒருவர் இந்த குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பெருவில் 300-க்கும் அதிகமானோருக்கு இந்த குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் […]
போலந்து நாட்டில் கடுமையாக புயல் வீசியதால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. போலந்தில் நேற்று முன்தினம் கடுமையாக புயல் வீசி தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்தது. எனவே, மசோவா என்னும் மாகாணத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அந்நகரமே இருளடைந்து காணப்பட்டது. 36,000 மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், புயலில் சிக்கி ஒரு நபர் பலியானதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மீட்புப்படையினர், புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணியை […]
நீச்சல் குளத்தில் திடீரென தோன்றிய பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் கார்மேய் யூசெப் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நீச்சல் குளத்தில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த குளத்தில் திடீரென தோன்றிய குழிக்குள் 30 வயதுடைய இளைஞர் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை நீண்ட நேர தேடியுள்ளனர். பிறகு நீச்சல் குளத்தின் கீழே இருந்த […]
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனருக்கும் இடையே பல ஆண்டுகள் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கூரை மற்றும் காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் உள்ள பேருந்தில் நேற்று பயணம் கொண்டிருந்தபோது இஸ்ரேலியர் மீது அதே பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த பாலஸ்தீனியரின் தாக்குதல் நடத்தினார். அதாவது தான் மறைத்து வைத்திருந்த ‘ஸ்குரு டிரைவர்’ கொண்டு […]
பாரீஸ் நகரில் உள்ள பார் ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சிச்சா என்ற பார் ஒன்று இயங்கி கொண்டிருந்தது. அந்த பாரில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அர்ராண்டிசெமண்ட் மேயர் பிரங்காயிஸ் வாக்லின் கூறியதாவது, […]
மான்செஸ்டர் நகரத்தில் நேற்று பஸ் விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில் மான்செஸ்டர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் நேற்று இரவு மக்கள் சிலர் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த இரட்டை அடக்கு பஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்தது. இந்த விபத்தில் 50 வயதுடைய பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் […]
அல்ஜசீரா நிறுவன பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா இஸ்ரேலிய படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல்களும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த மே மாதம் 11-ஆம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் […]
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூடு அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் முனி ஃபாரஸ்ட் உள்ள ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்த போது சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்து கிடந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு […]
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் நேற்று முன்தினம் இசைக்கச்சேரி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டு இசைக்கச்சேரியை கண்டு களித்துக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளார். இதனால் பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி அடித்து ஓடினர். ஆனாலும் அந்த நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த […]
ஜெர்மனி நாட்டில் மக்கள் கூட்டத்தின் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜெர்மனி நாட்டில் பெர்லினின் சார்லட்டன்பர்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மக்கள் கூட்டத்தின் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளர். மேலும் 12 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “மக்கள் கூட்டத்தின் மீது மோதியுள்ளது. கார் தொடர்ந்து ஒரு கடையின் மீது மோதியது. […]
கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளா நாட்டில் திரிச்சூரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 47 வயதுடைய நபர் ஒருவருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலினால் அவர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இது கொசுவால் பரப்பப்படும் வியாதியாகும். கேரளாவில் இது 2வது மரணமாகும். இதற்கு முன் 2019ம் ஆண்டில் இந்த நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட கொசு ஒரு நபரை கடிக்கும்போது வியாதி பரவுகிறது. ஜிகா, டெங்கு […]
கலிபோர்னியா மாகாணத்தில் சர்ச் ஒன்றில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து தென்கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாகுனா வூட்ஸ் பகுதியில் ஜெனீவா பிரஸ்பைடிரியன் என்ற சர்ச் ஒன்று அமைந்துள்ளது. இந்த சர்ச்சில் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் […]
பாலத்தில் தரை இறங்கிய இலகு ரக விமானமும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்க நாட்டில் மியாமி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 3 பயணிகளுடன் இலகுரக விமானம் பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தின் இஞ்சின் திடீரென பழுதான நிலையில் அவசரமாக ஹாலோவர் பாலத்தில் தரை இறக்கியது. அந்த சமயம் பாலத்தில் வந்து கொண்டிருந்த காரும் விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பற்றி எரிய தொடங்கியது. […]
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் 13 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருக்கும் சதார் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் நான்கு பேர் உயிருக்குப் போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டு வெடிப்பின் போது, அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பலத்த […]
காங்கோ நாட்டில் எபோலா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த நாட்டில் கடந்த 2018- 2020 ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிர எபோலா பாதிப்பு காரணமாக 23 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கடந்த அக்டோபர் டிசம்பர் மாதங்களில் அந்நாட்டின் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட எபோலா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது இந்நிலையில் தற்போது மீண்டும் நாட்டின் வடமேற்கு பகுதியில் புதிதாக எபோலா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. காங்கோவில் […]
இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது “கும்பலாக சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் நடத்தப்படும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்” என்று தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பிரண்ட்ஸ் காலனி பகுதியில் நிதோன் சித்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரும், சோபி என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கோடிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கொட்டில்பாடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் சித்ராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக […]
இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி அருகே பொன்னூர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அப்பர் என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பொன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஜீப் அப்பரின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் அப்பர் ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை […]
தமிழ் திரை உலகில் வசனம், இசை, நடிப்பு, இயக்கம் என பன்முக திறமை கொண்டவர் டி ராஜேந்திரன். இவர் கடந்த மார்ச் 18ஆம் தேதி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாற்றுத்திறனாளியான முனுசாமி மீது கார் மோதியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் இருந்து முனுசாமியை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி […]
பயங்கர தீ விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டுத்தெரு பகுதியில் ஷேக்தாவூத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்து நடத்தியுள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி மற்றும் வானவேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஷேக்தாவூத் இறந்ததார். இதன்பிறகு ஷேக்தாவூத்தின் மகன்கள் பட்டாசு குடோனை நடத்தி வந்துள்ளனர். இந்த குடோனின் உரிமம் கடந்த 2019-ஆம் வருடத்துடன் முடிவடைந்தது. […]
டிராக்டர் டிரெய்லர் கழன்று சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் புறவழிச் சாலையில் உள்ள தோப்பில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளிகள் 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தோப்பில் இருந்த புளியம்பழங்களை சாக்கு மூட்டைகளில் கட்டிக்கொண்டு டிராக்டர் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த டிராக்டரை அபினேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கம்பம் பாவலர் படிப்பகம் அருகே உள்ள சேனை ஓடையில் சென்றபோது திடீரென டிராக்டரின் டிரெய்லர் […]
கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குப்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகன் வசந்தகுமார்(22). இவர் பிஏ இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் பகுதி நேரமாக வெங்கடேச புறத்திலுள்ள பரகர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விளாமுத்தூர் சாலையில் உள்ள ரங்கநாதனின் வயலில் உள்ள கிணற்றிற்கு வசந்தகுமார் குளிக்க சென்றபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அக்கம் […]
கார் கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள எல்லிபாளையம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகின்றனர். லாரி அதிபரான இவரது மகன் மெய்யப்பன்(20) கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மெய்யப்பன் தனது நண்பர்களான கவுதம் (19), நரேந்திரன் (20), சுனில்நாத் (20), கோபி (20) ஆகியோருடன் காரில் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியில் வசிக்கும் […]
வாஷிங்டனின் வான் நெஸ் என்னும் பகுதியில் இருக்கும் பகுதியில் ஒரு ஓட்டலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் இருக்கும் ஒரு ஓட்டலில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. எனவே, அங்கிருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், ஒரு நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபர் யார்? என்பது […]
கிரீஸில், அகதிகளை ஏற்றி சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில்,ஒருவர் பலியாகியுள்ளார். ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாட்டு மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி உயிரை பணயம் வைத்து கடலில் பயணித்து ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாக சட்டவிரோதமாக நுழைகிறார்கள். அப்போது, உயிர் பலிகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் மத்திய தரைக்கடல் வழியே துருக்கியில் இருந்து சுமார் 30க்கும் அதிகமான அகதிகள் படகில் பயணித்து கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, கிரீஸின் […]
திருமண வீட்டின் முன்பு தகராறு செய்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேலகுறும்பனை பகுதியில் புருனோ என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் வீட்டில் கடந்த 27ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தன்னை அழைக்க வில்லை என்பதால் ஆத்திரமடைந்த புருனோ உறவினர் வீட்டின் வாசலில் நின்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி என்பவர் அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த புருனோவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக […]
மொபட் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள எலந்தகுட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கிழக்கு தொட்டிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த முருகேசன் என்பவரின் மொபட் […]
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள உள்காஸ்நகர் ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் படுக்கை அறையிலிருந்து மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து நான்காவது மாடியில் விழுந்தது. இதன் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் […]
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து தப்பிப்பதற்காக 19 வது மாடியில் இருந்து கீழே குதித்து அவர் உயிரிழந்தார். மும்பையில் உள்ள அபிக்னா பார்க் குடியிருப்பில் 60 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள 19 ஆவது மாடியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் இதனால் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனைதொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை […]
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்துரை அடுத்துள்ள பங்காருப்பளையம் பகுதியில் தரணிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களான ஆனந்தன், மோகன்ராஜ், ஜம்பேர், நித்தியாஸ் ஆகிய 5 பேர் கரூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்த காரை மோகன்ராஜ் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று அதிகாலையில் […]
காதலியிடம் தன் காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த சென்ற இளைஞர் விமான விபத்த்தில் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் காதலர்கள் தங்கள் காதலை பலவிதமான முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கனேடியர் ஒருவர் தன் காதலியிடம் வித்தியாசமாக காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த சனிக்கிழமை அன்று இரவு சிறிய ரக விமானம் மூலம், ‘will you marry me’ என்று எழுதப்பட்ட பதாகையை தொங்கவிட்டபடி புறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை […]
கனடாவில் விமான விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் செஸ்னா 172 என்ற விமானம் ஒன்று மான்ட்ரியல் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த விமானம் உயர பறக்க தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் அந்த செஸ்னா 172 என்ற விமானத்தில் இருவர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் மற்றொருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விபத்திற்கான காரணம் […]
நடிகர் திலகம் என்று உலகமே போற்றுகின்ற சிவாஜி கணேசனின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அவருடைய பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடி வந்தனர். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்குள்ள மக்களுக்கு வழங்கி இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். அந்த விழாவில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பாண்டியன் என்பவர் மயங்கி கீழே […]