வரதட்சணை கொடுக்காததால் திருமணத்தை நிறுத்துவதும், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிகளை கொலை செய்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். கேரள மாநிலத்தில் மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது இதற்கெல்லாம் முன்னுதாரணமாக உபியில் சவுரப் சவுகான் என்பவர், 11 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை மண்டபத்திலேயே மணமகள் வீட்டாரிடம் திருப்பி கொடுத்துள்ளார். மேலும், ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு திருமணம் செய்துள்ளார். இவரது இந்த செயலை […]
Tag: ஒரு ரூபாய்
புடவை என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான உடை, அவர்களின் அழகை மேலும் அழகாகும் ஒரு மாயக்கண்ணாடி. எந்த வகை பெண்களாக இருந்தாலும் சரி புடவை கட்டினால் அது தனி அழகு தான். பல பெண்களுக்கு புடவை கட்டுவது என்பது மிகவும் பிடிக்கும். அதே புடவையை ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் சும்மாவா இருப்பாங்க. கிருஷ்ணகிரியின் பிரபல தனியார் ஜவுளி கடையில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதால் இன்று அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் […]
வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் . இந்நிலையில் உலகிலேயே தென் […]
தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் 3.26 லட்சம் வணிகர்கள் ஒரு ரூபாய்கூட வரி செலுத்தவில்லை என தமிழக அரசு அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் வணிகத்துறையில் சுமார் 3.26 லட்சம் வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய்கூட வரி செலுத்தவில்லை. அதேபோல் சுமார் 1.92 லட்சம் வணிகர்கள், ரூபாய் 1000-க்கும் கீழ் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த நிதி ஆண்டில் செலுத்தியுள்ளனர். வணிகர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு அவர்களுடைய கணக்கை சரி பார்த்து […]
ஒரு ரூபாயில் தமிழக அரசு செய்யும் வரவு செலவு குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ரூபாயில் அரசுக்கு வரவாக மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 39 காசு, பொது நிறுவனங்கள் மூலம் வரும் வருமானத்தில் 36 காசு, மத்திய அரசு வழங்கும் மானியத்தில் 11 காசு கிடைக்கிறது. மத்திய அரசின் வரியில் மாநிலத்தின் பங்காக 8 காசு, மாநிலத்தின் சொந்த வரி அல்லா வருவாயாக 4 காசு, மூலதனம் இல்லா வருமானமாக இரண்டு காசு கிடைப்பதாக […]
உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்தில் நீங்கள் சேரலாம். சிறப்பான எதிர்கால சேமிப்பு திட்டம். இது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. .ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சேமிப்பதன் மூலம் இந்த திட்டத்தின் நன்மை கிடைக்கும். சுகன்யா சம்ரிதி யோஜனா உயர் கல்வி மற்றும் திருமணத்திற்கான சேமிப்பு திட்டம். இது ஒரு நல்ல முதலீடாகும். சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது […]
புதுச்சேரி மாநிலத்தில் பால் விநியோகம் செய்யும் பூத்துகளில் ஒரு ரூபாய்க்கு முக கவசம் இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களும் பெரும் முயற்சி செய்து வருகின்றன. மக்கள் அனைவரையும் முக கவசம் அணியும் படி வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் யாரையும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பால் […]
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழைகளுக்கு இலவச வீடு போன்ற பல திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. நவரத்தினங்கள் என்னும் ஒன்பது முக்கிய திட்டங்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் வாக்குறுதியாக வழங்கியுள்ளார் .ஏழைகளுக்கு வீடு, இலவச மருத்துவம், கல்வி, விவசாய கடன், வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு போன்ற திட்டங்கள் இதில் அடங்கும் .ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்று நாளிலிருந்து தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றியுள்ளார். அந்த வகையில் தனது வாழ்வின் […]
மை இந்தியா கட்சி ஆட்சிக்கு வந்தால் மருத்துவ படிப்பிற்கு ஒரு ரூபாயில் சீட்டு வழங்கப்படும், என அகில இந்திய தலைவர் அனில் குமார் தெரிவித்தார். திண்டுக்கல்லில் மை இந்தியா கட்சி அலுவலகத்தை அகில இந்திய தலைவர் அணில் குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘மை இந்தியா கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அனைத்தும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். மேலும் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான தொகை அனைத்தும் அரசின் சார்பில் செலுத்தப்படும். […]
டெல்லியில் ஒரு ரூபாய்க்கு ஒரு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் புதிய கேன்டீனை நாளை பாஜக எம்பி கௌதம் கம்பீர் திறந்து வைக்கிறார். டெல்லியில் கிழக்கு தொகுதியில் பாஜக எம்பி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் ஒரு கேன்டீனை திறந்து வைக்க உள்ளார். அதில் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனைப் போலவே குடியரசு தினத்தன்று டெல்லி அசோக் நகரில் மற்றொரு […]
நாம் மொய் செய்கையில் குறிப்பிட்ட தொகையுடன் எப்போதும் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து மொய் தருகிறோம். அதற்கு காரணம் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம். கல்யாணம், காது குத்து, கிரகப்பிறவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்? ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு […]
பேருந்தில் ஒரு ரூபாய் அதிக கட்டணம் வசூலித்ததற்கு நீதிமன்றம் சென்று நியாயம் பெற்றவரின் செயல் பாராட்டுகளைப் குவித்து வருகிறது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தனியாருக்கு சொந்தமான அரவிந்த் ட்ரான்ஸ்போர்ட் பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அதற்கு அவரிடம் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணைப்படி 24 ரூபாய் மட்டுமே தூத்துக்குடிக்கு செல்ல வசூலிக்கப்பட வேண்டும் என்பதால் நடத்துனரிடம் இசக்கிமுத்து கேட்டுள்ளார். […]