அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்துள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆனால் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளன. அதாவது சீனாவின் மேற்கில் உள்ள ஜின்ஜியாங்கில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது. இச்சம்பவத்தை முன்னிறுத்தி அமெரிக்கா இந்த போட்டிகளை […]
Tag: ஒலிம்பிக் போட்டிகள்
கொரோனா காலகட்டத்தில் சுகாதார வல்லுனர்களின் எச்சரிக்கையையும் மீறி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அந்நாட்டின் பிரதமருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்த நிலையில் தற்போது அவர் அதிரடியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாகாலகட்டத்தில் ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இதற்கு எதிராக பிரதமரிடம் சுகாதார வல்லுனர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். இருப்பினும் பிரதமர் அதனை பொருட்படுத்தாமல் செயல்பட்டதால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு 26 […]
ஜப்பானில் இதுவரை இல்லாத வகையில் தினசரி தொற்று பாதிப்பு 10,000 த்தை கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் 4 நகரங்களில் கொரோனா கால அவசர நிலையை பிறப்பித்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறான சூழலில் ஜப்பானில் இதுவரை இல்லாத அளவில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் 10,000 த்தை தாண்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் நாட்டின் அரசாங்கம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. […]
ஜெர்மன் நாட்டின் தடகள வீராங்கனைகள் உடல் தெரியும் அளவிற்கு இருக்கும் ஆடைகளை அணிவதை எதிர்க்கிறார்கள். இந்த வருடத்திற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்தே, பெண்களின் ஆடை தொடர்பில், பல பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. பிரிட்டன் நாட்டிலிருந்து வந்த தடகள வீராங்கனையான Olivia Breen, அணிந்திருந்த உடை சிறிதாக இருக்கிறது என்று ஒரு நடுவர் கூறியது, அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், நார்வேயை சேர்ந்த பெண்கள், கைப்பந்து அணியில் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டு விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று மாலை கோலாகலமாக தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் கலந்து கொண்டுள்ளார். உலக அளவில் பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020 ல் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளானது இந்த ஆண்டு நேற்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இதில் மற்ற நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியானது உலக அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதனால் நேற்று மாலை டோக்கியோவில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக […]
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தில் இன்னும் 5 நாட்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு மத்தியில் இந்தப் போட்டியானது நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் பரிசோதனைக்கு பிறகே அனைவரும் ஒலிம்பிக் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தனிஅறையில் தங்கப்படுவார்கள். இந்த நிலையில் […]
ஜப்பானில் ஒரு நபர் ஒலிம்பிக் போட்டியை நேரில் கண்டு உலக சாதனை படைக்க விரும்பிய நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த 45 வயதுடைய கசுனோரி தகிஷிமா என்ற நபர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண சுமார் 40 ஆயிரம் டாலர்களுக்கு டிக்கெட்டுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு, ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண அனுமதி கிடையாது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. எனவே ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்த்து உலக சாதனை […]
ஒலிம்பிக் நிர்வாகம் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான நடவடிக்கையில் ஜப்பான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி தினந்தோறும் 10,000 பேருக்கு ஒலிம்பிக் போட்டிகளை காண அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கு ஒலிம்பிக் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒலிம்பிக் போட்டியை காண மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் எந்த நிலையிலும் கொண்டாட்ட […]
உலக அளவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர்கள் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளனர். அவர்களில் சிலர் மறக்க முடியாதவர்கள். இந்தியா சார்பாக முதல் முதலாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர் நார்மன் கில்பர்ட் பிட்சார்ட். இவர் மூலமாக இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி பதக்கங்கள் கிடைக்கப்பெற்றது. ஒலிம்பிக் விளையாட்டில் முதல் முதலாக இந்தியா சார்பாக பங்கேற்ற பெண்மணி மேரி லீலா ராவ். இவர் […]
கிமு எட்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் உலகின் பழமையான விளையாட்டு பாரம்பரியம் ஆகும். நவீன கால ஒலிம்பிக் முற்றிலும் மாறுபட்டதாகவும் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு மாதங்கள் உலக மக்களை மகிழ்விக்க ஒலிம்பிக் பற்றிய சில அற்புதமான உண்மைகளை பற்றிய தொகுப்பு. 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே அதிக போட்டியாளர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டியாக கருதப்படுகிறது. 10 ஆயிரத்து 768 விளையாட்டு […]
ஒலிம்பிக் தீப ஓட்டம்… அறியாத வரலாறு…!!
ஒலிம்பிக் தீப ஓட்டம் என்பது கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைப்பதும் பின்னர் அதை உலகெங்கும் தொடர் ஓட்டமாக எடுத்து வந்து ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அரங்கில் ஏற்றுவதும் ஆகும். போட்டி நடைபெறும் 16 நாட்களும் இரவு, பகல் எந்நேரமும் பிரகாசமாகவும் கம்பீரமாகவும் ஒளிரும் இந்த ஒலிம்பிக் தீபம் நிறைவு விழாவின்போது அணைக்கப்படுகிறது. முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்றது என்றாலும் 1928 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் […]
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,37,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஜூலை 24ல் ஒலிம்பிக் போட்டி தொடங்க இருந்த நிலையில் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் […]