டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சி.ஐ.ஐ மாநாட்டில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் அபூர்வ சந்திரா பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது. மேலும் 60 கோடிக்கும் அதிகமான அறிதிறன் பேசி பயனாளர்களும், 80 கோடி அகன்ற அலைவரிசை பயனாளர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் கைபேசி நேரடி ஒளிபரப்பு நடைமுறை அறிமுகம் செய்வது தொலைக்காட்சி ஊடக பார்வையாளர்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக […]
Tag: ஒளிபரப்பு
FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி வருகிற 21-ம் தேதி தொடங்கி 28 நாட்கள் வரை நடைபெறும். இதன் இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்கும். இதனையடுத்து 32 அணிகளும், 4 அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்படும். அதன்படி குழு ஏ பிரிவில் நெதர்லாந்து, செனகல், ஈக்வடார், கத்தார் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு […]
‘கோப்ரா’ படத்தை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”கோப்ரா”. இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ […]
‘வலிமை’ திரைப்படம் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. பிப்ரவரி மாதம் திரையரங்கில் ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. போனி கபூர் தயாரித்த இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்தார். ஹீமா குரேஷி கதாநாயகியாக […]
நடிகர் அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவானவலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இந்த படம் நடிகர் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் நடிகர் அஜித் ரசிகர்கள் அனைவரும் […]
‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இந்த படத்தில் யோகிபாபு, ரவீனா ரவி, மாரிமுத்து, டிம்பிள் ஹயாத்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கவின் ராஜ் ஒளிப்பதிவு […]
‘வலிமை’ திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் […]
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர் முகிலன் பங்கேற்று மனு அளித்தார். முன்னதாக அவர் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதோடு லைசன்ஸ் முடிந்தும் சில கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக மூட வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டவிரோதமாக கல் குவாரிகளை நடத்துபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் […]
‘புஷ்பா’ திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரம்மாண்டமாக கடந்த டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தியேட்டரில் […]
ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ”சார்பட்டா பரம்பரை” படம் அமேசான் ப்ரைம் OTT யில் வெளியானது. இந்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ், காலா போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தான் இயக்கினார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில், தீபாவளியன்று பிரபல தொலைக்காட்சிகளில் நிறைய புதிய படங்கள் […]
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வரும் சூப்பர் பவுல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த விளம்பரம் ஒளிபரப்பானது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர் போராட்டம் […]