கேரள அரசின் லாட்டரி இயக்குனரகம் சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசு 25 கோடி ரூபாய் காண பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் ஆகும். 10 சீரியல்களில் மொத்தம் 67.50 லட்சம் டிக்கெடுகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது 90 ஆயிரம் டிக்கெட்டுகள் தவிர அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது. இதன் மூலமாக கேரள லாட்டரி துறைக்கு 330 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த சூழலில் ஓனம் பம்பர் லாட்டரி குலுக்கல் […]
Tag: ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஓணம் பண்டிகை கொண்டாடப் படவில்லை. இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்ததால் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை மக்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இந்த பண்டிகையை ஒட்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்லத்தில் மட்டும் 1 கோடியே […]
ஓணம் பண்டியையை முன்னிட்டு, கேரளாவில் ரூ.117 கோடிக்கு மது விற்பனை செய்து அம்மாநில மதுபானக்கழகம் வருமானம் ஈட்டியுள்ளது. கேரளாவில் ஓணப்பண்டிகைக்கு முந்தைய நாளில் வரலாறு காணாத வகையில் மது விற்பனை நடந்துள்ளது. நேற்று கேரளா முழுவதும் ஓணம் பண்டிகையையொட்டி, அரசு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 117 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. மாநில அளவில், கொல்லம் ஆசிரமம் விற்பனை நிலையத்தில் அதிக அளவில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொல்லம் ஆசிரம […]
தமிழ் திரையுலகில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரிசெல்வராஜ். தன் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காஇடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் வாயிலாக முன்னணி இயக்குனராக வளர்ந்த மாரிசெல்வராஜ், இப்போது உதய நிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் திரைப்படத்தை இயக்குகிறார். இவற்றில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, […]
கேரளாவில் மிக முக்கிய பண்டிகையான ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மது வகைகளை மது பிரியர்கள் வாங்கி குவிக்க தொடங்கினார்கள். இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியிலிருந்து 4 ஆம் தேதி வரை ரூ.324 கோடி மது விற்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில மதுபானம் கழகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு ரூ.248 கோடி விற்கப்பட்ட நிலையில் இருந்தாலும் 30% கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செப்டம்பர் 8ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 8ஆம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இன்று செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் மட்டும் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைக்கட்டி வருகின்றது. இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர் சென்னை மாவட்டங்களுக்கும் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மலையாளம் மொழி பேசும் […]
மலையாள மொழி பேசும் மக்களால் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி, வரும் 8-ம் தேதி 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை முன்னிட்டு செப்டம்பர் எட்டாம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இதற்கு ஈடாக செப்டம்பர் 10 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மலையாள மொழி பேசும் மக்களால் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளத்தின் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் […]
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகை மிக பிரசித்தி பெற்றதாக இருக்கும். தமிழகத்தில் பொங்கல், தீபாவளி போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மக்கள்களால் கொண்டாடப்படுகின்றது. அந்த நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவுப் பொருட்களை சமைத்து உறவினர்களை அழைத்து உணவிட்டு மகிழ்வார்கள். அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் எட்டாம் தேதி கேரளா […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவ்வலுவலகங்களுக்கு 17.09.2022 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும் என்றும், உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையை ஒட்டி பூ மற்றும் பழங்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கடந்த 25ம் தேதி முதல் சிறப்பு சந்தை திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனையாகி வந்தன. கரும்பு ,வாழைக்கன்று, விளாம்பழம் , அருகம்புல் ,கம்பு ,சோளம், மாவிலை தோரணங்கள் மற்றும் பழவகைகள் ஆகியவை வேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு கிலோ மல்லிகை 1000 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. முல்லை […]
அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை முன்னிட்டு மாநில முதல்வர் பினராயி விஜயன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 4000 போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போனஸ் பெற தகுதி இல்லாத ஊழியர்களுக்கு […]
ஓணம் பண்டிகையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கு ஈடாக செப்டம்பர் 17ம் தேதி பணி நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ஓணம் பண்டிகைக்காக வரும் 8ஆம் தேதி சென்னையிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் செப்.8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக செப்டம்பர் 17ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓனம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தேர்வுகள் முன்னதாகவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் வருகின்ற 24-ஆம் […]
ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி கூறியது, எர்ணாகுளம்- சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் வருகின்ற செப்டம்பர் 1-ந் தேதியும், மறு மார்க்கத்தில் சென்னை சென்டிரல்- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் வருகிற 2-ந் தேதியும், மேலும் தாம்பரம் -மங்களூர் சிறப்பு ரெயியில் வருகிற 2-ந் தேதியும், மங்களூர்- தாம்பரம் சிறப்பு ரெயில் வருகிற 3-ந் தேதியும், தாம்பரம் -கொச்சுவேலி சிறப்பு ரெயில் […]
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் இருந்து பெங்களூருக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள கொச்சுவேலி- பெங்களூரு சிறப்பு ரெயில் (06037) கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை அதிகாலை 4.30 மணிக்கு சேலம் வந்தடையும். அதன் பின்னர் அங்கிருந்து […]
இன்று ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓணம் பண்டிகை சகோதரத்துவத்தையும், நேர்மறை எண்ணங்களையும், நல்லிணக்கத்தையும் விதைக்கக்கூடியது. இந்த நல்ல நாளில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். கேரள எல்லையை ஒட்டிய கோவையிலும் அத்தப்பூ கோலம் கோயிலில் சிறப்பு வழிபாடு என ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் அறுவடைத் திருநாள் என கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்நிலையில் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாநில அரசு அலுவலர்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறை நாளை ஈடுசெய்ய செப்டம்பர் 11 ஆம் தேதி முழு பணி நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே நீலகிரி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து […]
கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நாடு முழுவதுமான மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50 சதவீத பாதிப்பு பதிவாகி வருகிறது.இந்தநிலையில், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன. இதனால், மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளது. அதுவே தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது. இதனால், கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான […]
கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை தமிழகத்திலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலையாள மொழி பேசும் அனைத்து மக்களாலும் வருடம் தோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, தமிழகத்திலும் கேரள எல்லையோர மாவட்டங்களில் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கத்தால் எளிமையான முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு, தனிநபர் இடைவெளியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். அதனை […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதிய அறிவிப்பு ஒன்றை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாட படக்கூடிய விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தத் திருநாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும் பலவகை உணவுகள் சமைத்தும் கொண்டாடுகின்றனர். மேலும் இதன் சிறப்பம்சமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு அழகுபடுத்துகின்றனர். இத்தகைய திருநாள் பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அதாவது ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தத் திருநாளில் தலைவர்கள் பலர் தங்களது […]
கோலாகலமாக தொடங்கியுள்ள ஓணம் பண்டிகைக்கு குடியரசுத் தலைவர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சாதி-மத பேதம் இல்லாமல் கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. இந்தப் பண்டிகை ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி பத்தாம் நாளான இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தப் பண்டிகையின் சிறப்பம்சம் ஆனது தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்தும் பல வகை […]
ஓணம் திருநாளை முன்னிட்டு கேரள மக்களுக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தின் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக ஓணம் பண்டிகை உள்ளது. தற்பொழுது இத்தகைய ஓணம் பண்டிகைக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை கேரள அரசுக்கும் மக்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த பண்டிகை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்த மகிழ்ச்சியான ஓணம் திருநாளில் நமது அன்பு, இரக்கம், உழைப்பு அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மலர்ச்சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அடுத்தடுத்து சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள், புதுமனை புகுவிழா உள்ளிட்ட விசேஷ வைபவங்களும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட குண்டுமல்லி தற்போது 800 முதல் 1000 […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. ஓணம் பண்டிகையின் போது பாரம்பரிய உடையணிந்து பூக்களால் கோலமிட்டு இறைவனை வழிபட்டு வணங்குவர்.. ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெறும்.. ஆனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கலையிழந்துள்ளது.. காரணம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் கொண்டாட கூடாது […]