அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் முன்னால் அரசு கொறடா துறை கோவிந்தராஜன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. எங்களை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுகவின் தலைமையில் பிரச்சினை உள்ளது போல் மாயம் தோற்றம் திட்டமிட்டு […]
Tag: ஓபிஸ்
அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்து உள்ளார். இருப்பினும் […]
அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஜூலை மாதம் அதிமுக சார்பில் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திருத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மட்டுமே எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் மேல் முறையீடு செய்யப்பட்டபோது, மனு தாக்கல் முறையில் தான் பட்டியல் […]
தமிழகத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக சபாநாயகரிடம் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் தான் எந்த ஒரு பதிலும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் அவரே சொல்லாத போது நான் மட்டும் என்ன சொல்ல முடியும். அதே நேரம் பழைய நடைமுறை தொடரும் என […]
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துள்ள அவர் சுதந்திர தினத்துக்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை தொடர இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு சுற்றுப் பயணத்தின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த அதிமுக வக்கீல் ஏ.பி.மணிகண்டன், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களில் ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என தமிழ் மீது மிகுந்த பற்று உடையது போல் காட்டிக் கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் […]
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமாக இருப்பவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து விலை ஏற்றத்திற்கு காரணமாக இருப்பவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,தமிழகத்தில் சில நாட்களாக பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பெங்களூரு […]
தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சும், ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு பேசுவதும் திமுகவிற்கு கைவந்த கலை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரிகான 45வது கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்கு கொண்டு வருவது […]
பென்னி குக்கின் 180 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு லோயர்கேம்ப் பகுதியில் அவரின் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக இருக்கும் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளையொட்டி தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக இது அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது […]
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதலமைச்சர் அவர்களை இன்று மாலை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார். இன்று காலை 10 மணியளவில் அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவும்,அதிமுகவின் சட்டமன்ற தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ் பி வேலுமணி ,ஜெயக்குமார்,சி வி சண்முகம், காமராஜ், ஜே சி டி […]
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என கோஷமிட்ட அதிமுக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனிக்கு திரும்பினார்.அதன் பின்னர் பல அமைச்சர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.இதனை அடுத்து சென்னை திரும்பாமல் தேனியிலேயே முகாமிட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் தேனியில் நாகலாபுரத்தில் நடைபெறவிருக்கும் “நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை” தொடக்கி வைப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்பொழுது […]
தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினார். சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அதிமுகவில் வெடித்திருக்கின்றது . சில நாட்களுக்கு முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே காரசார விவாதம் நடந்தது என்றும் கூறப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்த ஓபிஎஸ் தற்போது மீண்டும் தேனி திரும்பியுள்ளார்.சென்னையில் […]