‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவல் காரணமாக ‘மாநாடு’ படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அகில இந்திய சிம்பு ரசிகர்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது .இதில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் சிம்புவுக்கு கம்பேக் படமாக அமைந்தது . இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து […]
Tag: ஓமிக்ரான் வைரஸ்
குழந்தைகளை மையமாகக் கொண்ட ஷாட் பூட் 3 படத்தை இயக்கி வரும் அருண் வைத்தியநாதன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் இயக்குனரான அருண் வைத்தியநாதன் நிபுணன், அச்சமுண்டு அச்சமுண்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் தற்போது குழந்தைகளை மையமாகக் கொண்ட ராஜேஷ் வைத்தியா இசையமைக்கும் ஷாட் பூட் 3 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சினேகா, யோகி பாபு, வெங்கட்பிரபு போன்றோர் நடித்துள்ளார்கள். இவ்வாறான […]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் நேற்று மட்டும் சுமார் 2,08,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக அந்நாட்டின் சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மீண்டும் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் நேற்று மட்டும் 2,08,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக அந்நாட்டின் சுகாதார துறை மந்திரியான ஆலிவர் கூறியுள்ளார். மேலும் அவர் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் ஒரு […]
இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஓமிக்ரானின் அறிகுறிகளில் வழக்கமான ஜலதோஷமும் உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்தில் தற்போது 100க்கும் மேலான நாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவில் ஓமிக்ரான் அறிகுறிகளில் வழக்கமான ஜலதோஷமும் உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி வறண்டுபோன தொண்டை, தலைவலி, மூக்கு ஒழுகுதல் உடல்வலி போன்ற அறிகுறிகளும் ஓமிக்ரான் பாதிப்பில் தென்பட்டுள்ளது. மேலும் ஜலதோஷம் பிடித்த நபர்களை பரிசோதனை செய்கையில் அவர்களுக்கு ஓமிக்ரானோ அல்லது கொரோனாவோ உறுதி […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் முதலில் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளிடையே வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் கொரோனா உறுதியானால் அது ஒமைக்ரானா என கண்டறிய […]
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரன் என்ற புதிய வைரசாக உருவாகி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனை […]
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் வழக்கமாக சர்வதேச போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் […]
இங்கிலாந்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக 101 பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் உருவமடைந்த கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 2 நாளுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவால் 101 பேர் பாதிக்கப்பட்டவர்கள். ஆகையினால் அந்நாட்டில் மொத்தமாக ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் 45,691 நபர்கள் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானியான அந்தோணி பாசி என்பவர் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடிய […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைய தொடங்கிய நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மக்களவையின் போது மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியது, இந்தியாவில் இதுவரை 3.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 4.6 லட்சம் பேர் […]
ஒமிக்ரான் தொற்று பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்று தென்னாப்பிரிக்காவின் மருத்துவ சங்கத் தலைவர் கூறியிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. இது உலக நாடுகளில் அச்சறுத்தலை ஏற்படுத்தியது. எனவே, அந்நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் அதிகமாக பரவுமா? அல்லது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்னாபிரிக்காவின் மருத்துவ சங்க […]
பிரிட்டனுக்கு செல்லும் அனைத்து பயணிகளையும் கட்டாயம் தனிமைப்படுத்தும் விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரிட்டன் அரசு ஓமிக்ரான் பரவல் காரணமாக நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், நாட்டிற்கு வந்த 5-வது நாளிலும், 8-வது நாளிலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் தற்போது நடைமுறைப்படுத்தியிருக்கும் கட்டுப்பாடுகளின் படி, இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட அனைத்து பயணிகளுக்கும் முதல் இரண்டு நாட்கள் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமைச்சர்கள் […]
அமெரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான், தற்போது பல நாடுகளில் பரவியிருக்கிறது. எனவே, உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாட்டிலிருந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு வந்த ஒரு நபருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது, அந்த நபரையும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டில் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வெள்ளை […]
அமெரிக்க நிபுணர் ஒருவர், சுமார் 20 நாடுகளில் 226 நபர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனையடுத்து, பல நாடுகளிலும் அந்த வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் தொற்றுநோய் நிபுணரான ஆண்டனி பாசி, சுமார் 20 நாடுகளில் தற்போது ஓமிக்ரான் வைரஸ் 226 நபர்களுக்கு உறுதி […]
ஜப்பான் அரசு ஓமிக்ரோன் வைரஸ் பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசியளிக்கும் பணியை தொடங்கியிருக்கிறது. ஜப்பான் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் அங்கு குறைவான நபர்கள் தான் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். ஆனால் மே மாதத்திற்குப் பின் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தற்போது, மொத்த மக்கள் தொகையில் 77% நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் ஜப்பானிலும் இரண்டு […]
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட மொத்தமாக 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட மொத்தமாக 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நாடுகளில் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு […]
சவுதி அரேபியாவிலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனினும், ஐரோப்பிய நாடுகளிலும், இந்த தொற்று பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில் சவுதி அரேபியாவிற்கு, ஒரு நபர் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். அவருக்கு, ஓமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, அவரையும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களையும், தனிமைப்படுத்தியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் […]
உலக சுகாதார மையம், பயண தடைகள் விதிப்பதன் மூலம் ஓமிக்ரான் வைரஸை தடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவுடன், உலக நாடுகள் அந்நாட்டின் மீது பயணத் தடை விதிக்க தொடங்கியது. அதனையடுத்து இந்திய அரசு, பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர், சீனா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜிம்பாப்வே, வங்கதேசம், மோரிசியஸ் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார […]
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாட்டிற்கான அறிகுறிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கெளடெக் மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையின் பொது நல மருத்துவரான டாக்டர் அன்பென் பிள்ளே, தற்போது கொரோனா தொற்று பாதிப்புகள் 81% பதிவாகியிருப்பதாக கூறியிருக்கிறார். தற்போது வரை, இந்த ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களுக்கு சிறிய அறிகுறிகள் தான் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, காய்ச்சல், வரட்டு இருமல், இரவு சமயத்தில் அதிகமான வியர்வை மற்றும் உடல் […]
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் பரவினால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போஸ்ட்வானா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடம் பதித்து விட்டது. எனவே இந்த […]
ஜப்பான் நாட்டில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பாதிப்பு ஒரு சுற்றுலா பயணிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டிற்கு சமீபத்தில் நமீபியாவிலிருந்து ஒரு சுற்றுலா பயணி வந்திருக்கிறார். அவருக்கு ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளதாவது, ஜப்பான் நாட்டிற்கு வந்த அந்த சுற்றுலா பயணிக்கு, நேற்று முன்தினம் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தென்னாபிரிக்காவில் ஓமிக்ரோன் வைரஸ் பரவ […]
தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மராட்டியத்தில் உள்ள தோம்பிவிலி நகருக்கு திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கல்யாண் தோம்பிவிலி மாநகராட்சி உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அந்த நபரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அந்த நபருக்கு ஒமிக்ரான் புதிய வகையான கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய […]
ஒமிக்ரான் புதிய வகை வைரஸ் இந்தியாவில் 3-வது அலையை தூண்டலாம் என தேசிய தடுப்பூசி திட்டம் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான நரேஷ் போகித் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய நரேஷ் போகித், புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள பி 11529 வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது எனவும், தற்போதுவரை ஆல்பா பீட்டா,காமா, டெல்டா என 4 வகை வைரஸ்கள் கவலைக்குரிய வைரஸ்களாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். தடுப்பூசி திட்டம் முன்னேற்றம் கண்டு வருகிற […]
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து […]