Categories
கால் பந்து விளையாட்டு

#BREAKING : ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி.!!

உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. நீங்க கொஞ்சம் உடம்பையும் பாத்துக்கோங்க…. ஆண்டவருக்கு ரசிகர்கள் திடீர் அட்வைஸ்….. காரணம் அதுதான்…..!!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி பட விழாவில் சமீபத்தில் கலந்துகொண்டு விஜய் சேதுபதியை பற்றி மிகவும் புகழ்ச்சியாக பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கமல்ஹாசனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுநாள் டிஸ்ஜார்ஜ் ஆனார். அவர் டிஸ்டார்ஜ் ஆன பிறகு வீட்டில் ஓய்வெடுக்காமல் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கமலுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ரம்யா கிருஷ்ணன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனைவருக்கும் நன்றி..! “தினேஷ் கார்த்திக் ஓய்வு?”…. இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

தினேஷ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவால் ஓய்வை அறிவிக்க போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் தினேஷ் கார்த்திக். 2022 ஐ பி எல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் சிறப்பாக பினிஷிங் ரோலில் கலக்கியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஐபிஎல் தொடருக்குப்பின் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மருமகன்”….. போக்சோ வழக்கில் கைதானதால் எடுத்த திடீர் அதிர்ச்சி முடிவு…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரனுடன் ஒரு படம் மற்றும் தமிழில் கமல்ஹாசனை‌‌ வைத்து இந்தியன் 2 போன்ற படங்களை இயக்கி வருகிறார். இயக்குனர் சங்கரன் 2-வது மகள் அதிதி விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹீரோயின் ஆக அறிமுகமாகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் தாமோதரனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : பிரபல CSK வீரர் ஓய்வு…. பெரிய இழப்பு….!!!!

பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பா (36) 20 ஆண்டுகளாய் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் பெங்களூரு மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இவர் 46 ஒருநாள் போட்டிகளிலும் 13 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். போராட்ட குணமும், ஸ்டைலும் கொண்ட சிறந்த இவர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனைவருக்கும் நன்றி….. “ஓய்வை அறிவித்த ஆஸி வீரர் பிஞ்ச்”…. ஆனால் டி20 அணிக்கு அவர் தான் கேப்டன்….!!

 நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு ஆரோன் பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் உலகக் கோப்பைக்கான டி20 அணிக்கு அவர் கேப்டனாக இருப்பார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து சீல் செய்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கெய்ர்ன்ஸில் உள்ள காஸாலி மைதானத்தில் நடைபெற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: சினிமாவில் இருந்து ஓய்வு: நடிகர் விக்ரம் அறிவிப்பு…!!!!!

ஐதராபாத்தில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ‘சோழா சோழா’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ரம், “இந்த படத்தில் நடித்ததை எனது பாக்கியமாக நினைக்கிறேன். அதே சமயம், மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர் படங்களில் நடித்த பின்னர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம் என முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Categories
தேசிய செய்திகள்

நான்கு முறை எப்1 சாம்பியன் பெற்ற செபாஸ்டியன்…. ஓய்வு பெறுகிறார்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!!!!

35 வயதான கார் பந்தய ஜாம்பவானும் ஜெர்மனியை சேர்ந்த  வீரருமான செபாஸ்டின் வெட்டல் 2022 ஃபார்முலா 1 சீசன் முடிவடையும்போது கார் பந்தயங்களில் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் 2013 வரை ரெட் புல்லுக்காக ஒட்டிய செபாஸ்டியன் நான்கு முறை பார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதனால் இந்த அறிவிப்பு இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும். 2007 இல் அறிமுகமான வெட்டல் நான்கு முறை தொடர்ச்சியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்…. சர்வதேச போட்டியிலிருந்து திடீர் ஓய்வு…. வெளியான அறிவிப்பு….!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தினேஷ் ராம்தின். இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தனது கடைசி டி20 போட்டியை விளையாடினார். இவர் 71 டி20 போட்டிகள், 139 ஒரு நாள் போட்டிகள், 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு ராம்தின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். அதிலிருந்து  மேற்கு இந்திய தீவுகளை 17 போட்டிகளில் வழி நடத்தினார். இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: கேப்டன் இயான் மோர்கன் ஓய்வு…? சற்றுமுன் அதிர்ச்சி தகவல்….!!!!

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இவரின் ஓய்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் இயான்  மோர்கன் ஒருவர்.

Categories
இந்திய சினிமா சினிமா

“இனி நடிக்க மாட்டேன்”….. பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தெரிவித்துள்ளார். இவர் நடித்துள்ள புல்லட் ட்ரெயின் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது அவர் தெரிவித்ததாவது: “கடந்த 30 வருடமாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதிகமாக உழைத்து விட்டேன்.  இனி எனக்கு ஓய்வு தேவை. தொடர்ந்து என்னால் நடிக்க முடியும் என்றாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு புதியவர்களுக்கு  வழிவிட்டு ஒதுங்குவது தான் நல்லது” என்று அவர் தெரிவித்துள்ளார் .இதைக் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. சர்ப்ரைஸ் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்…. இது சரியான முடிவா…?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 62 ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நீதியும் வராத காரணத்தினால் நிலைமையை எப்படி சமாளிப்பது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் தீவிரமாக துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் வீண் செலவுகளை எப்படி குறைப்பது என்பது பற்றி ஆராய்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் செயல்படாமல் அல்லது […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் இறுதிக்கட்ட அதிபர் தேர்தல்….!! நிறைவு பெற்றது பிரச்சாரம்….!!

பிரான்சில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் இமானுவேல் மேக்ரான் மற்றும் தீவிர வலதுசாரி கொள்கையுடன் செயல்படும் மரினே லீ பென் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். இதில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும் மரினே லீ பென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்நிலையில் யாரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறாத நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மைக்ரானுக்கும் மரினேவுகுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட மோப்பநாய்க்கு சேவை விருது… பிரியாவிடை கொடுத்த அதிகாரிகள்…!!!

அமெரிக்காவில் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய்க்கு சேவை விருது வழங்கி அதிகாரிகள் கவுரவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சான் டியேகோ நகரத்தில் இருக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் தரம் பிரிக்கக்கூடிய அலுவலகத்தில் போடர் என்ற நாயை பயன்படுத்தி வந்தனர். அளவுக்கு அதிகமாக இருக்கும் பூச்சிக்கொல்லி உபயோகம், தரம் குறைவான பயிர்கள், பூச்சி தாக்கிய விளைபொருட்கள் போன்றவற்றை கண்டறிவதற்கும் அடையாளம் காண்பதற்காகவும் இந்த நாய் பயன்படுத்தப்பட்டது. இந்த போடர் தன் நான்கு வருட கால பணியில் 426 சம்பவங்களை சிறப்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறாரா தோனி?…. சிஎஸ்கே நிர்வாகி சொன்ன முக்கிய தகவல்….!!!!

நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே நிர்வாகம், “ஜடேஜாவிடம் தோனிதான் விருப்பப்பட்டு கேப்டன்ஸியை ஒப்படைத்தார்” என்று தெரிவித்துள்ளது. இந்த சீசனோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை…. யாருமே எதிர்பாக்கல…. திடீரென எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

ஆஸ்திரேலியாவின் மிகவும் சிறந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. இவர்  மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அது மட்டுமில்லாமல் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவர்   ஓய்வு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது ‘‘டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும் போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது தெரியவில்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#BREAKING: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு….!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தேர்ந்தெடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். 2007-ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை, 2011ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் 53 ஒருநாள் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

“நா இத சொல்லிருக்கவே கூடாது”…. அவரசப்பட்டுட்டேன்… வருத்தம் தெரிவித்த இந்திய டென்னிஸ் வீராங்கனை….!!!!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவை சேர்ந்த ராஜீவ் ராமுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில் களமிறங்கினார். அதில் சானியா மிர்சா தோல்வியை சந்தித்தார். ஏற்கனவே இந்த ஆண்டில் சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்சா ( வயது 35 ), “தனது ஓய்வு முடிவை அவசர கதியில் அறிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஓய்வை பற்றி யோசிக்கவில்லை. அதற்காக […]

Categories
விளையாட்டு

சானியா மிர்சா ஓய்வு…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தலைசிறந்த பெண் டென்னிஸ் வீரராக கருதப்படும் சானியா மிர்சா(35) இந்த வருடம் முடிந்ததும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மார்ட்டினா ஹிங்கிஸுடன் சேர்ந்து டென்னிஸ் இரட்டையர் உலகையே ஆட்டிப்படைத்த சானியா, ஆஸ்திரேலியா, ஓபன், விம்பிள்டன் உள்ளிட்ட புகழ்பெற்ற கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவரது ஓய்வு இந்திய டென்னிஸுக்கு மிகப்பெரிய இழப்பாகவே அமைகிறது.

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் ஓய்வு….!! நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்…!!

உச்ச நீதிமன்றத்தில் 2 தலைமை நீதிபதிகள் உட்பட 8 நீதிபதிகள் இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் யுயூ லலித்தும் நவம்பர் மாதம் ஓய்வு பெற்றுவிடுவார். பின்னர், அவருக்கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை நட்சத்திர வீரர் பானுகா ராஜபக்ச திடீர் ஓய்வு …. ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

இலங்கை கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரர் பானுகா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பானுகா ராஜபக்ச சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து  பானுகா ராஜபக் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அவர் ஓய்வு கடிதத்தை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.மேலும் இலங்கை கிரிக்கெட் சமீபத்தில்அறிமுகப்படுத்திய உடற்தகுதி தரத்துடன் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ….. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ….!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான முகமது ஹபீஸ் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 ,614 ரன்கள் எடுத்துள்ளார் .அதோடு 134 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். அதேபோல் 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2440ரன்களும், 61 விக்கெட்டும்  கைப்பற்றியுள்ளார் . மேலும் 55 டெஸ்ட் போட்டிகளில் 3,652 ரன்களும் 53 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில்  முகமது ஹபீஸ் சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ….! அமெரிக்க அணிக்காக விளையாடும் இந்திய வீரர் ….!

2016 -ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்திருந்த பிபுல் சர்மா இந்திய  கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் கிரிக்கெட்  விளையாட செல்ல உள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு விளையாடி வந்தாலும் அவர்களில் ஒரு சிலருக்கே இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கிறது .அதை தவிர மற்ற வீரர்கள் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன .அதன்படி உள்ளூர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே..! இத பாருங்க… பிரபல நாட்டின் அடுத்த இளவரசர் இவர்தான்…. பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறாரா மகாராணி…? இதோ… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!

அடுத்தாண்டில் இங்கிலாந்து பொது மக்களின் பார்வையிலிருந்து மகாராணியார் படிப்படியாக குறைந்து அவருடைய பேரனான இளவரசர் வில்லியம் அந்நாட்டின் நீண்டகால மன்னராக இருக்கப் போகிறார் என்ற கணிப்பை பிரபல மனநல ஊடக நிறுவனர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல மனநல ஊடக நிறுவனரான deborah அடுத்தாண்டு மகாராணியாரின் அரச குடும்பம் சில சிக்கலான சம்பவங்களை சந்திக்க நேரிடும் என்ற கருத்துக்கணிப்பை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது அடுத்தாண்டில் இங்கிலாந்தின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் தங்கள் […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

TEST Cricket-ல் இருந்து ஓய்வு….? சற்றுமுன் ஜடேஜா கொடுத்த அதிரடி பதில்….!!!!

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஜடேஜா இரண்டு ட்விடுகளை போட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதல் ட்விட்டில் ‘இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கு’ என்றும்,  இரண்டாவது ட்விட்டில் ‘பொய்யான நண்பர்கள் வதந்திகளை நம்புவார்கள், உண்மையான நண்பர்கள் உங்களை மட்டுமே நம்புவார்கள்’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது இல்லை என்பது […]

Categories
உலக செய்திகள்

16 ஆண்டுகால பயணம்…. நேற்றுடன் நிறைவு…. வெளிவந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள்….!!

சேன்ஸலர் பதவியிலிருந்தும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்தும் ஏஞ்சலா மெர்க்கல் ஓய்வு பெற்றார். ஜெர்மனியின் முதல் பெண் சேன்ஸலர் மட்டுமின்றி நான்கு அமெரிக்க அதிபர்கள் மற்றும் ஐந்து பிரித்தானிய பிரதமர்களை தனது ஆட்சிக்காலத்தில் கண்டவர் என்ற பெருமைக்குரியவர் 67 வயதான ஏஞ்சலா மெர்க்கல். இவரின் 16 ஆண்டுகால ஆட்சியில் ஜெர்மனியின் வளர்ச்சியானது பன்மடங்கு உயர்ந்ததோடு மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஒட்டு மொத்த உலக நாடுகளுக்குமிடையே ஒரு நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக பொருளாதார சக்தி மிகுந்த நாடாகவும் ஐரோப்பாவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோல்வியோடு விடைபெற்றார் சாம்பியன் பிராவோ …!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதால் சர்வதேச போட்டியில் இருந்து டுவைன் பிராவோ தோல்வியுடன் விடைபெற்றார். சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோவை வெற்றியுடன் அனுப்ப வெஸ்ட்இண்டீஸ் அணியினர் போராடினர். ஆனால் பிராவோ […]

Categories
விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்… ஓய்வு அறிவிப்பு…!!!

கிரிக்கெட் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அவர் இதுவரை டெஸ்டில் 439 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் அறுபத்தி நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் துணை நின்ற தனது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இன்றுடன் ஓய்வு பெரும் நீதிபதி கிருபாகரன்…. கண் கலங்கிய தருணம்….!!!

பாலியல் கொடுமைக்கு ஆண்மை நீக்கம், டிக்டாக் தடை, ஹெல்மெட் கட்டாயம், சமஸ்கிருதம் ஆரிய மொழி தானே எனக் கேள்வி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை உட்பட பல தீர்ப்புகள், வழிகாட்டுதல் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அவருக்கு இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நீதிபதி கிருபாகரன் வழக்கு விசாரணையின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் …. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு …. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

இலங்கை அணியின் இடது கை  வேகப்பந்து வீச்சாளரான உதனா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதனா சர்வதேச  கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடுவதற்கு இதுவே சரியான நேரம்  என நம்புகிறேன் .அத்துடன் உள்ளூர் மற்றும் டி20 லீக் போட்டிகள் நிச்சயம் விளையாடுவேன் “என்று அவர் கூறியுள்ளார். இவர்  இலங்கை அணிக்காக  இதுவரை 21 ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் சீக்கிரமா ரிட்டயர்டு ஆயிடுவேன்”….’வேற பிளேயரை ரெடி பண்ணுங்க’ …’ஷாக் கொடுத்த முகமது ஷமி’ …!!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, கூடிய விரைவில் ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்களை போலவே, பந்து வீச்சாளர்களும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்கின்றன. அந்த வகையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013 ம் ஆண்டில் சர்வதேச போட்டியின் மூலம் அறிமுகமானார். அவர் தற்போது வரை சிறப்பாக பந்துவீசி ரசிகர்களை கவர்ந்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து …! ஓய்வு பெறுகிறார் மிதாலிராஜ்…!!!

இந்திய மகளிர் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனான  மிதாலிராஜ், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் .  கடந்த 1999ஆம் ஆண்டு அறிமுகமான மிதாலிராஜ் இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக இருந்து வருகிறார். 21 வருடங்களாக   மிதாலிராஜ் ,இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் . இன்றளவும் வேகம் குறையாமல் ,அதே உற்சாகத்துடன் விளையாடுகிறார். இந்நிலையில் மிதாலிராஜ் அடுத்த ஆண்டு ,ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மிதாலி ராஜ், அடுத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மருத்துவரின் அறிவுரை…. பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓய்வு….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு வாரம் ஓய்வெடுக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல இந்நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கன்னடத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இதனை பிரபல நடிகர் சுதீப் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் ஓய்வெடுக்க வந்த மு.க.ஸ்டாலின்… கட்சியினர் வரவேற்பு… போலீஸ் பலத்த பாதுகாப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வருகை தந்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டனர். அதேபோல் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் அவர் தேர்தல் முடிந்ததையடுத்து தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுக்க முடிவு செய்தார். அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகும்… இங்கிலாந்து வீரர் மார்க் வூட்..!!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதற்காக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் தங்களது வீரர்களின் மனநலத்தை ஆரோக்கியமாக பேணும் விதமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வளிக்கப்பட்டிருந்த மார்க் வூட் வரும் 24ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது போட்டிக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல கிரிக்கெட் வீரர் (CSK) திடீர் ஓய்வு… அதிர்ச்சி…!!!

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான பாப் டூ பிளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர்களில் பங்கேற்க, டி20 போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன். அதனால் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார். அவர் இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,163 ரன்களை எடுத்து 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவு முழுவதும் தூங்காமல் இருந்த சசிகலா… இப்போதான் போயிருக்காங்க…!!!

பெங்களூருவில் இருந்து 23 நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்த சசிகலா தற்போது ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் இல்லாதது எனக்கு கஷ்டமா இருக்கு… பிசிசிஐ அனுமதித்தால் நான் விளையாடுவேன்… நடராஜன் பேட்டி …!

கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் பிசிசிஐ அனுமதி அளித்தால் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் நிச்சயமாக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சையத் முஷ்டாக் அலி போட்டியில் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பிசிசிஐ கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து நடராஜன் தெரிவித்ததாவது, சென்னை டெஸ்டுகளில் இந்திய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்கள் உலராமல் தடுக்க… சில எளிய டிப்ஸ்..!1

அதிக நேரம் நாம் கணினி மற்றும் மொபைல் ஐ பயன்படுத்தும் போது நம் கண்கள் பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க சில எளிய வழிமுறைகளை இதில் பார்ப்போம். கணினி மொபைல் திரைகளை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறை இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். உங்கள் உணவு திட்டத்தில் அவசியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கட்டும். விட்டமின் ஏ, விட்டமின் பி12, விட்டமின் டி சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியிலிருந்து விடுப்பு… அடுத்தது என்ன..? சகாயம் பதில்..!!

அரசு பணியில் இருந்து விடுப்பு அறிவித்த சகாயம் ஐஏஎஸ் அடுத்த கட்ட பணிகளை குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். சகாயம் ஐஏஎஸ்க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகள் எதுவும் வழங்கவில்லை எனவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது பணிக் காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. இதற்கிடையில் விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசுக்கு சகாயம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: ‘விடைபெறுகிறேன்’.. கிரிக்கெட் பிரபலம் கொடுத்த ஷாக்…ரசிகர்கள் அதிர்ச்சி…!!!’

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பார்த்திவ் படேல் அனைத்து வகையான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் பார்த்திவ் படெல் தனது 18 ஆண்டு வாழ்க்கையில் இந்தியாவுக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் 2 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் குஜராத்துக்காக 194 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்டின் ஷாமில் இந்திய அணியில் அறிமுகமானார். அவர் இந்தியாவிற்காக டெஸ்ட் விளையாடிய இளைய […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் அன்பே போதும்… வேறென்ன வேண்டும்… சுரேஷ் ரெய்னாவின் நெகிழ்ச்சி டுவிட்…!!!

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியதற்கு சுரேஷ் ரெய்னா நன்றி தெரிவித்துள்ளார். தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தை அடுத்து தங்களது ஓய்வை அறிவித்தனர். அதில் தோனி தனது 39 வயதில் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால் சுரேஷ் ரெய்னா 33 வயதில் ஓய்வு அறிவித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் உலகம் மட்டுமல்லாமல் பல்வேறு துறையை சேர்ந்த அனைவரும் பிரியாவிடை வாழ்த்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் தோனி …!!

சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னை வந்தது. இதற்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, பியூஸ் சாவ்லா,கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் நேற்று சென்னை வந்தனர். இன்று முதல் நாள் பயிற்சி மேற்கொண்ட நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் தீராத பசியில் இருக்கின்றேன்……கர்ஜித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!!!

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார் . 500 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் ஜேம்ஸ்ஆண்டர்சன் . இவர்  பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது .ஜேம்ஸ் ஆண்டர்சனின் தற்போது வயது 38 ஆகும். இவர் 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 590 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறந்த பந்துவீச்சு […]

Categories
உலக செய்திகள்

பணியிலிருந்து ஓய்வு பெறும் பூனை.. சோகத்தில் சக பணியாளர்கள்..!!

இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் பணியாற்றி வந்த பூனையின் ஓய்வு அலுவலக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பால்மர்ஸ்டன் என்ற பூனை பணியாற்றி வந்தது. எலிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அந்த பூனை தற்போது ஓய்வு பெறுவது அலுவலக பணியாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்மர்ஸ்டன் பிரத்யேக டுவிட்டர் பக்கத்தில் பூனையின் சார்பாக பதவி விலகல் கடிதம் பதிவிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், நான்கு ஆண்டுகள் பணியை சிறப்பாக செய்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓய்வை அறிவித்த கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்.!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ராஜட் பாட்டியா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உடைய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆக திகழ்ந்து வந்தவர் ராஜத் பாட்டியா. அவர் 1999 ஆம் ஆண்டின் முதல் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார். மேலும் தமிழ்நாடு, உத்திரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு அவ்வளவு வயதாகவில்லை” ஓய்வு பற்றி ஹர்பஜன் சிங் அதிரடி பதில்….!!

ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவதற்கான முடிவினை நான் எடுக்கவில்லை என்றும் தனக்கு வயதாகவில்லை என்றும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன்சிங் தனியார் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது தாங்கள் என் திறமையினை ஆராய விருப்பப்பட்டால் இளம் வீரர்களின் சிறந்தவராக கருதும் ஒருவரை என்னுடன் போட்டியிட சொல்லுங்கள். அப்போட்டியில், பீல்டிங் செய்யும்போது பந்தை கால்களுக்கு இடையில் தவற விட்டாலும்? குனிந்து பந்தை பிடிக்க முடியாமல் […]

Categories
மற்றவை விளையாட்டு

ஓய்வை அறிவித்த WWE-ன் சகாப்தம்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ரெஸ்லிங் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்டர்டேக்கர் அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது ரெஸ்லிங் பொழுதுபோக்கு விளையாட்டின் சகாப்தமாக 30 வருடங்கள் கருதப்பட்டு வந்தவர் அண்டர்டேக்கர். இவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டு வரும் திரைப்படம் “அண்டர்டேக்கர் டி ஃபைனல் ரைட்” இந்த ஆவணப்படத்தின் கடைசி பகுதியில் தனக்கு மீண்டும் ரெஸ்லிங் மேடையில் ஏறும் எண்ணம் இல்லை என குறிப்பிட்டு இருப்பார். என்றும் முடியாது என சொல்லக் கூடாது. ஆனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கிரிக்கெட்” மனதளவில் உதவியாக இல்லை… இப்பொது சுதந்திரத்தை உணர்கிறேன்…. ஓய்வுக்கான காரணம் கூறும் யுவராஜ்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான யுவராஜ் சிங் தனது ஓய்வுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங் சென்ற வருடம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தான் எதற்காக ஓய்வை அறிவித்தார் என்பதையும், அப்போது தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதையும் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “வாழ்க்கை மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்த சமயம் பல விஷயங்களை நான் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. திடீரென  என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தோன்றும். பல காரணங்களுக்காக […]

Categories
மாநில செய்திகள்

அரசாணையும் வந்தாச்சு… “இனி கவலை இல்லை”…அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

தமிழக அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே 31ம் தேதி முதல் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை உத்தரவிட்டார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வந்தது. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று […]

Categories

Tech |