கஜோல் மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் இரண்டு அப்பார்ட்மெண்ட்களை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை கஜோல். நடிகை ஷாருக்கானும் இவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் அடித்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் கடைசியாக தில்வாலே படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனையடுத்து தற்போது இருவரும் தனித்தனியாக தான் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கஜோல் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது பதிவு […]
Tag: கஜோல்
இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகை கஜோலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பல பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு குணமாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இந்தி முன்னணி நடிகை கஜோலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை கஜோல் அவரின் இணையதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மின்சார கனவு படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலுக்கு டப்பிங் கொடுத்தது யார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சுவாமி மற்றும் நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான மின்சார கனவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் கதையை விட பாடல்கள் தான் மக்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. மேலும், இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலின் காதல் பாடல்கள் மக்களிடையே பெரும் பாராட்டை […]