Categories
தேனி மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்க பொட்டலம் போட்ட வாலிபர்கள்…. மடக்கிப் பிடித்த போலீசார்… 5 பேர் அதிரடி கைது..!!!

தேனி அருகே கஞ்சா விற்பதற்காக பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பாண்டியன் நகரில் முற்புதருக்குள் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புதருக்குள் பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை மடக்கி பிடித்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்ற 14,200 […]

Categories
உலக செய்திகள்

இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?…. கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த ஜெர்மனி…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் தற்போது அதிக அளவில் கஞ்சா உபயோகத்தில் இருக்கிறது. இதனால்  மக்கள்  மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கனடா, அமெரிக்கா, உருகுவே, பிரான்ஸ், போர்ச்சுகல்  ஆகிய நாட்டில் புற்றுநோய், வாந்தி, தண்டுவட பாதிப்பு, கால் வலி போன்ற கஞ்சா  நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜெர்மனி கஞ்சாவை  பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான சட்டம் வருகின்ற 2024 […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!… 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?…. அதிர்ந்து போன நீதிபதிகள்…. பின் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா போலீஸ் நிலையத்தில் சென்ற சில வருடங்களில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2018, 2019ம் வருடங்களில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அவங்கள பார்த்ததும்!…. பயத்தில் டக்குன்னு கஞ்சாவை விழுங்கிய நபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் கோட்டயம் ஏட்டுமானூரில் கலால் துறையினரை கண்டு கஞ்சாவை விழுங்கிய இளைஞர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர்  மம்மூட்டைச் சேர்ந்த லிஜூமோன் ஜோசப் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சங்கராந்தி-பேரூர் சாலையில் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. ஏட்டுமானூர் கலால் குழுவினர் மம்மூட் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லிஜூமோன் உடல் பரிசோதனைக்கு பயந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் கலால் குழுவினர் அவரை கையும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் ரயில்வே கோட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கை”…. 10 மாதத்தில் 874 கிலோ கஞ்சா பறிமுதல்….!!!!!

சேலம் ரயில்வே கோட்டத்தில் சென்ற 10 மாதங்களில் 874 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 51 பேர் கைதாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சிலர் புகையிலை பொருட்களை ரயிலில் கடத்தி விற்பனை செய்கின்றார்கள். இதனை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் மாநில எல்லை பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி…. மீண்டும் கஞ்சா ஏற்றுமதியில் அடியெடுத்து வைக்கும் இலங்கை…. வெளியான தகவல்கள்….!!!!!

பிரபல நாடு  உலக நாடுகளுக்கு கஞ்சாவை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இலங்கை நாட்டில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு இலங்கையின் முன்னாள் அதிபர் தான் காரணம் என கூறி நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக இலங்கை அரசு ஆங்கிலேயே ஆட்சிக்கு முன்பு கஞ்சா ஏற்றுமதி செய்வதை போல தற்போதும் கஞ்சாவை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் சிசிர […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்…!!!!!!

சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் அதிகாரிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆட்டோவில் இருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிலுவத்துறை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் மற்றும் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட திண்டுக்கல்லை சேர்ந்த ராஜரத்தினம் அதிகாரி பட்டியைச் சேர்ந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர்கள்…. 10 ஆண்டு சிறை தண்டனை…. சிறப்பு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கார் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 18/7/2018 அன்று சென்னை காரனோடை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. காரில் இருந்த கோவை துடியலூர் சேர்ந்த ரகுராமன்(25), வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சரண்குமார்(23) போன்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 70 கிலோ கஞ்சா”…. கடலோர போலீசார் தீவிர விசாரணை….!!!!!

தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய 70 கிலோ கஞ்சாவை கடலோர போலீஸ்சார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கடலோர போலீசார் அங்கு சென்று பார்த்தார்கள். அதில் இரண்டு கிலோ பார்சல் என சுமார் 30 பார்சலுக்கு மேலாக மொத்தம் 70 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல் வழக்கு…. குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர்…..!!!!!!!!

நாகை வெளிப்பாளையம் ஏழைப் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அல்லி முத்து மகன் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு இருக்கிறது. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சுப்ரண்ட் ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பெயரில் சதீஷை குண்டச்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சதீஷை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து அவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் என் மகளை பார்க்க வந்திருக்கேன்…. சிறைக்கு கஞ்சா கொண்டு வந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 கஞ்சா கொண்டு வந்த  பெண்ணை  காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மத்திய சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக சிறைகள் உள்ளது. இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுசிலாமேரி என்பவரின் தாயார் பார்த்திமாமேரி  தனது மகளை  பார்ப்பதற்காக நேற்று சிறைக்கு வந்துள்ளார். அப்போது சிறை காவலர்கள்  அவரை சோதனை செய்துள்ளனர். அந்த  சோதனையில் அவர் 17 கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து கொண்டு வந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“3 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்”…. குண்டர் சட்டத்தில் கைது….!!!!!!!

வால்பாறை காமராஜர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் என்ற மரியசூசை. பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவரது வீட்டு கோழி கூண்டில்  பதுக்கிய மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மரியசூசை கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சமீரன்  உத்தரவின் பேரில் கோவை […]

Categories
உலக செய்திகள்

கஞ்சாவுக்கு சட்ட அனுமதி…. கொண்டாட்டத்திற்கு அல்ல…. தாய்லாந்து வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஆசியாவிலேயே கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்து சட்டபூர்வ அனுமதி வழங்கியுள்ளது. மரிஜுவானா எனப்படும் கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனை தொடர்ந்து தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த தயாரிப்புகளில் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் 0.2 குறைவாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக தாய்லாந்து அரசு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து சுகாதார மந்திரி அனுடின் சார்ன்விரகுல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் சொத்துக்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும்…. டிஜிபி எச்சரிக்கை…!!!!!

தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகத்தில் பலர் போதை பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அதனால் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றை  அழிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார்.  அதனை தொடர்ந்து, கடந்த 28ஆம் தேதி முதல் தமிழகம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை…. 6 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

நெல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதை தடுப்பதற்காக துணை போலீஸ் கமிஷனர் டி.பி,சுரேஷ்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவல்துறையினர் பாளையங்கோட்டை பகுதியில் சோதனை நடத்தி வந்த போது 1 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து பாளையங்கோட்டை பர்கிட் மாநகரில் வசித்து வந்த 23 வயதுடைய முகமது அஸ்லாம், […]

Categories
தேசிய செய்திகள்

கஞ்சாவுக்கு அடிமையான மகனுக்கு…. அம்மா கொடுத்த செம ட்ரீட்மென்ட்…. வைரலாகும் வீடியோ….!!!!

கஞ்சாவுக்கு அடிமையானவர்களுக்கு தாயொருவர் மிளகாய் பொடி ட்ரீட்மென்ட் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தெலுங்கானா மாநிலம் சூரிய பேட்டை மாவட்டத்திலுள்ள கோடாட் என்ற பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு தனது மகன் கஞ்சாவுக்கு அடிமையானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோபமடைந்த பெண் தன் மகனை கம்பத்தில் கட்டி வைத்து அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.  மற்றொரு பெண்ணின் உதவியுடன் முகம் முழுவதும் மிளகாய் பொடியை பூசி தண்டனை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுவன் எரிச்சல் தாங்க […]

Categories
உலகசெய்திகள்

நாடாளுமன்ற தோட்டத்தில் கஞ்சா செடிகள்… முளைத்தது எப்படி…?முழு விபரம் இதோ …!!!!!

நாடாளுமன்ற தோட்டத்தில் கஞ்சா செடிகள் முளைத்து இருந்தது குறித்து சரியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நியூஸிலாந்து நாடாளுமன்றத்தின் ரோஜா தோட்டத்திற்கு நடுவே சில இடங்களில் கஞ்சா செடிகள் முளைத்திருந்ததால்  சர்ச்சைகள் எழுந்துள்ளது. அது எப்படி அங்கு முளைத்தது என மக்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்த சரியான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. நியூஸிலாந்து பாராளுமன்ற பகுதியே சுமார் ஒரு வாரமாக ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்கள் விட்டுச்சென்ற கஞ்சாவில் இருந்து விழுந்த விதைகள் மூலமாகத்தான் இந்த செடிகள் […]

Categories
மாநில செய்திகள்

#JUST IN: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0….. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!!

தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கையை, ஏப்., 27 வரை, ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் தொடர வேண்டும். மேலும் பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து கஞ்சா, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி சோதனை…. இருசக்கர வாகனத்தோடு சிக்கிய நபர்…. 4 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

கஞ்சா விற்பனை நடந்தால் புகார் அளிக்க…. தமிழக காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனால் மாணவர்கள் அதற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை நடந்தால் பொதுமக்கள் அவசர போலீஸ் எண் 100, 112 அல்லது அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தகவல் வந்துச்சு”…. சாக்கு மூட்டைக்குள் 21 கிலோ…. வசமா மாட்டிக்கிட்டாங்க…. போலீஸ் அதிரடி….!!!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வேதாரண்யத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை பாப்பாகோவில் பகுதியில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் 3 நபர்கள் வந்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் வீசிய துர்நாற்றம்…. அதிரடி சோதனை நடத்திய போலீசார்….. கைப்பற்றியது என்ன….?? பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….

பிரித்தானியாவில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையிலிருந்து போலீசார் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். பிரித்தானியாவின் லஞ்சஷிர் பகுதியில் இறைச்சி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை தட்டியுள்ளனர். மேலும் கதவு திறக்காததால் அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை உடைத்துக் […]

Categories
உலக செய்திகள்

“கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படும் பீட்சா!”…. தாய்லாந்தில் விற்பனைக்கு வருகிறது….!!

தாய்லாந்து நாட்டில் கஞ்சா பீட்சா விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் முக்கியமான துரித உணவுகளில் ஒன்றாக இருக்கும் “கிரேசி ஹேப்பி பீட்சாவில்” தற்போது அதிகாரப்பூர்வமாக கஞ்சாவை சேர்த்து தயாரிக்கின்றனர். இது தொடர்பில் பீட்சா நிறுவன பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் கூறியிருப்பதாவது, நாட்டிலிருக்கும் அனைத்து பீட்சா நிறுவன கிளைகளிலும் இந்த கிரேசி ஹாப்பி பீட்சா விற்பனை செய்யப்படுகிறது. எனினும், அதிக அளவில் விற்பனை ஆகவில்லை. எனவே இந்த பீட்சாவுடன் கஞ்சா சேர்க்கப்படுகிறது. அதனை சாப்பிடும் […]

Categories
உலக செய்திகள்

உணவு செயலியில் கஞ்சாவா…? கன்னட மக்களுக்கு வெளியான தகவல்….!!

கஞ்சாவை விற்பனை செய்யும் நிறுவனமான Tokiyo smoke வுடன் உணவுகளை ஆர்டர் செய்ய பயன்படுத்தப்படும் uber eats நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளதால் இனி கனடாவிலுள்ள பொதுமக்கள் கஞ்சாவை uber eats செயலியில் ஆர்டர் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உணவுகளை ஆர்டர் செய்ய பயன்படுத்தப்படும் நிறுவனத்துடன் tokiyo smoke என்னும் கஞ்சாவை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றாக சேர்ந்துள்ளது. ஆகையினால் பொதுமக்களுக்கு முக்கிய தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இனி கஞ்சாவை uber eats என்னும் […]

Categories
மாவட்ட செய்திகள்

பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!

புதுச்சேரி காலப்பட்டியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை ஆகிய வழக்கில் கைதிகள் உள்ளனர். இந்நிலையில் இந்த சிறையில் வழக்கு ஒன்றில் சிறைப்பட்டிருக்கும் அஜித் என்பவரை ஜெகதீஸ்வரன் மற்றும் அகிலன் ஆகியோர் பார்க்க வந்தனர். அப்போது அவர்கள் அஜித்துக்கு இரண்டு பிஸ்கட் பாக்கெட் கொடுத்தனர். இந்த இரண்டு பிஸ்கட் பாக்கெட்களையும் சிறைவார்டன்கள் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் மறைந்திருந்தது. இதுகுறித்து காலாப்பட்டு போலீசாரிடம் சிறைதுறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா ஊரடங்கால் தொழில் நஷ்டம் ஆனதால் கஞ்சா கடத்தினேன்.”… மும்பைக்கு கடத்தவிருந்த 1240 கிலோ கஞ்சா…. பறிமுதல் செய்த போலீசார்…!!

ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு கடத்த முயன்ற 1240 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் போதை பொருள் கடத்தல் என்பது சமீப காலமாக தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் ஒரு கோடி மதிப்பிலான போதைப்பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத் எல்லை பகுதியில் உள்ள பொடூப்பால் என்ற பகுதியில் இருந்து மும்பைக்கு கடத்த இருந்த ஆயிரத்து 240 கிலோ போதைப் பொருள் பறிமுதல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மாமனார்-மருமகன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாமனார்-மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் தண்டுகாரனஅள்ளி, திருமல்வாடி கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த சக்திவேல், திருமல்வாடியை சேர்ந்த இவரது மாமனார் சின்னசாமி மற்றும் புதுகரம்பு கிராமத்தை சேர்ந்த குமார் ஆகியோரது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மீன்மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது மீன்மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கீழவாசலை சேர்ந்த  ஸ்டாலின் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அதன்பின் அவரிடம் இருந்த 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தஞ்சை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய தந்தை-மகன்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடியினை வளர்த்த தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் மூட்டைகார தெருவில் அய்யம்பெருமாள் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் இருக்கின்றார். இவர்கள் 2 பேரும் வீட்டின் பின் பகுதியில் கஞ்சா செடியை வளர்ப்பதாக பொன்னகரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மேலும் சிக்கிய ஒருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் காவல்துறையினர் பாகல்பட்டி பிரிவு சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த கெட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார், சந்துரு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 450 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் வலைவீசி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பையில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாகல்பட்டி பிரிவு சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில்களை கூறினர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் வந்த வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாலிபர் அண்ணாநகரைச் சேர்ந்த நசுருதீன் என்பதும், இவர் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நசுருதீனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Categories
உலக செய்திகள்

“கஞ்சா வைத்திருந்த தந்தை!”.. மகன் செய்த செயல்.. மயங்கி விழுந்த சிறுவன்..!!

ஜெர்மனியில் ஒரு சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை எடுத்து நண்பர்களோடு சேர்ந்து  தீ வைத்து எரித்திருக்கிறார். ஜெர்மனியில் உள்ள பவேரியா என்ற மாகாணத்தில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை பார்த்துள்ளார். எனவே அதனை திருடிச்சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து தீ வைத்து எரித்திருக்கிறார். அப்போது தீயிலிருந்து வந்த புகையால் ஒரு சிறுவன் மயக்கமடைந்து விட்டார். எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட பின்பு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி சென்ற வாலிபர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நடேசா பெட்ரோல் பங்க் பிரிவு ரோடு அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற 3 வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பிசெல்ல முயற்சி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள பாலக்காடு மாவட்டம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொட்டலத்தில் இதுவா இருக்கு…? சரணடைந்த 4 பேர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்துவதற்கு முயற்சி செய்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடந்த 26-ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன், கண்காணிப்பாளர்கள் பாலமுரளி, ரமேஷ், கழுகாசலமூர்த்தி, ஆய்வாளர் மாசிலாமணி போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கீச்சாங்குப்பம் அருகே புதிய துறைமுகம் பகுதியில் மீன்பிடி பைபர் படகில் சிலர் பெரிய அளவிலான பொட்டலங்களை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்தால் சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கன்னி அம்மன் கோவிலின் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கன்னியம்மன் கோவில் எதிரில் சந்தேகத்தின்படி நின்ற 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த அஜித்குமார், ரெட்டிபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் அந்தியூர் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதச் செயல்” தைரியமாக விற்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 1-வது கேட் பாண்டுரங்கன் தெருவில் அம்மமுத்து மகன் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியில் கணேஷ் கஞ்சா விற்பனை செய்ததை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து கணேஷை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்து அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மாட்டி கொண்ட 9 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தி வந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் இதில் தொடர்புடைய மொத்த வியாபாரிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யகோரி சரக டி.ஐ.ஜி. பர்வேஷ்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், கந்தசாமி, தலைமை காவலர் இளைய ராஜா மற்றும் போலீசார் நவீன்குமார், அருள்மொழி அழகு ஆகியோர் அடங்கிய சரக […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் வளர்க்க அனுமதி…. சட்டபூர்வமாக அங்கீகரிப்பு…. நிறைவேற்றிய இத்தாலி நாடாளுமன்றம்….!!

வீட்டிலேயே கஞ்சா சாகுபடி செய்யவதை சட்டபூர்வமாக இத்தாலி நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இத்தாலியில் வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்ப்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சீர்திருத்த சட்டமானது கடந்த புதன்கிழமை அன்று இத்தாலி நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நீதித்துறையின் சார்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வீட்டில் நான்கு கஞ்சா செடிகள் வரை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கஞ்சா கடத்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் போன்ற  குற்றங்களுக்கான அபராதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சிக்கி கொண்ட பெண்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள எம்.காளிப்பட்டி மாரியம்மன் கோவில் விதி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பூங்கொடி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக மேச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் 24 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

கேக்கில் கலக்கப்பட்ட கஞ்சா…. பாதிப்படைந்த இராணுவ வீரர்கள்…. கைது செய்யப்பட்ட உணவக பொறுப்பாளர்….!!

இராணுவ வீரர்கள் உண்ணும் கப் கேக்கில் கஞ்சாவை கலந்து கொடுத்த உணவக பொறுப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளது. கனடாவில் உள்ள New Brunswickச் சேர்ந்த Chelsea Cogswell என்ற பெண் அங்குள்ள இராணுவ உணவகம் ஒன்றில் பொறுப்பாளராக இருந்துள்ளார். அங்கு உணவு உண்ண வரும் துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு கேக்கில் கஞ்சா கலந்து கொடுத்துள்ளார். இதனால் இராணுவ வீரர்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம், போன்றவை ஏற்பட்டதுடன் மன ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கஞ்சாவை சுண்டி இழுத்து…. சாய்பாபா முகத்தில் குப்பென்று விடும் மீரா மிதுன்… வைரலாகும் வீடியோ…!!!

பட்டியில் இனத்தவர்களை தவறாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் கைதான மீராமிதுன் வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதால் அவரை குற்றப்பிரிவு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் விசாரணையின்போது மாறி மாறி மீராமிதுன் பேச வாய்ப்பு இருப்பதால் மனநல மருத்துவர் முன்னிலையில் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. https://twitter.com/RazzmatazzJoe/status/1426030287838875659 இதற்கிடையில் சாய் பாபா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்கவே முடியாது…. நடைபெறும் தீவிர சோதனை…. போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்ட் பத்ரிநாராயணன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இதனால் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பெரும்பாலான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மாவட்டத்தில் கடந்த 53 நாட்களில் மட்டும் 333 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது இந்த மாவட்டத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. நடைபெறும் தீவிர சோதனை…. காவல்துறையினரின் எச்சரிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து நாகர்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையில் காவல்துறையினர் வடசேரி கனகமூலம் சந்தை வடக்கு கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது தப்புன்னு தெரியாதா…. மாட்டி கொண்ட முதியவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருத்தங்கல் பேட்டை தெருவில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இருக்கக்கூடிய பொதுக்கழிப்பிடம் அருகில் அதே பகுதியை சேர்ந்த பிச்சை என்பவர் கஞ்சா விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிச்சையிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் பிச்சைக்கு திருத்தங்கல் மேற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார்சைக்கிளில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட 2 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாசலபுரம் அருகில் உள்ள சோதனைச்சாவடியில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை அவர் நிறுத்தி சோதனை செய்தபோது பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. இப்படியா பண்றீங்க…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது அலிவலம் சாலையில் சந்தேகபடும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்ததால் காவல்துறையினர் அவர்களை சோதனை செய்தபோது 3/4 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…? கையும் களவுமாக சிக்கிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த இந்திராநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலாய்கார் வட்டம் என்ற இடத்தில் காவல்துறையினர் வருவதை கண்டு பெண் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சுக்கிரவார்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது பெட்டிக் கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது சப்-இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து 12 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு மாரியப்பனை கைது செய்தனர். இதைப்போன்று சத்யாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]

Categories

Tech |