Categories
உலக செய்திகள்

“இதனால்தான் கடலில் தள்ளி விட்டேன்”…. குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைந்த…. 81 வயது முதியவர் ஜப்பானில் அதிர்ச்சி….!!!!

ஜப்பான் நாட்டில் ஹிரோஷிப் புஜிவாரா என்ற முதியவருக்கு 81 வயது ஆகின்றது. இவருடைய மனைவி 40 வருடங்களுக்கு முன்பு கால்களை இழந்துள்ளார். அதிலிருந்து ஹிரோஷி தான் அவருடைய மனைவியை கவனித்து வந்துள்ளார். தற்போது இவருக்கும் வயதானதால் மிகவும் சோர்வடைந்துள்ளார். இதனால் அவருடைய மனைவியை கவனிக்க முடியாததால் அவரை வீல் சேருடன் கடலில் தள்ளி விட்டுள்ளார். இதனையடுத்து ஹிரோஷியே தனது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |