காருக்குள் சிக்கி தவித்த 1 1/2 வயது ஆண் குழந்தையை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய பாலாஜி என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் பாலாஜி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நேரு என்பவர் தனது காரை சுத்தம் செய்து […]
Tag: கடலூர்
டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் குளத்தில் குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கருவேப்பிலங்குறிச்சி அருகே சென்ற போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்ததால் […]
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சில மாணவர்களை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நபர் உங்களுக்கு கல்வி உதவி தொகை வந்துள்ளது எனவும், அதனை வாங்க ஆன்லைனில் 3000 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஆசிரியர், யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு மூலம் உதவித்தொகை வழங்கினால் உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். […]
முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த முதியவர் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் முதியவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதியவர் கூறியதாவது, எனது பெயர் சிகாமணி. நான் பண்ருட்டி கீழ்மாம்பட்டை பகுதியில் வசித்து வருகிறேன். பிரதம மந்திரி […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆய்வாளர்கள் 15 சென்டிமீட்டர் உயரமும், 7 சென்டிமீட்டர் அகலமும் உடைய சூடு மண்ணால் ஆன விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையின் தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளில் ஓட்டையும், துதிக்கை நீண்டும் காணப்படுகிறது. சிலையின் தோள்களிலும் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை […]
சென்ற வருடத்தை விட நவம்பர் மாதத்தில் மழை குறைந்திருப்பதால் ஏரி, குளங்கள் நிரம்ப வில்லை. கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 26ம் தேதி வரை பருவமழை சராசரியாக 305.2 மி.மீ ஆகும். சராசரியை விட தற்போது அதிகமாக மழை பெய்துள்ளது. ஆனால் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே மழை பெய்து இருக்கின்றது. சென்ற வருடம் வடகிழக்கு பருவ மழை நவம்பர் 26ம் தேதி வரை 537 மி.மீட்டர் மழை பெய்திருந்தது. சராசரியை விட அதிக அளவு […]
வடலூரில் லாரி மோதியதில் என்.எல்.சி தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே திருமுருகன் என்பவரும் சுகுமார் என்பவரும் நெய்வேலியில் இருக்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சந்திரகலா தனது பெற்றோர் வீட்டில் இருந்து மொபட்டில் நெய்வேலி நோக்கி சென்று […]
மருத்துவமனையில் இளைஞர் கூறிய புகாரால் எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தபோது இளைஞர் ஒருவர் ஓடி வந்து புகார் ஒன்றை கூறினார். அவர் கூறியுள்ளதாவது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது உறவினரை சிகிச்சைக்காக அழைத்து வந்தேன். அப்போது டாக்டர் உடனடியாக குளுக்கோஸ் செலுத்த வேண்டும் என கூறினார். இதன்பின் குளுக்கோஸ் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தில் கணேஷ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொய்யாபிள்ளைசாவடி பைபாஸ் அருகே உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரபாவதி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கமித்ரா(11) என்ற மகளும், குருசரண்(9) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கணேஷ் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்த கணேஷ், தான் […]
கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த வழக்கில் மருந்தாக உரிமையாளர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது . கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான அமுதா அசகளத்தூரில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதனை செய்துள்ளார். அங்கிருந்து மருந்தாக உரிமையாளர் வடிவேல் என்பவர் அமுதாவை […]
கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவதாக கர்ப்பமான அமுதா வயிற்றில் இருப்பது ஆணா? பெண்ணா? என தெரிந்து கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17-ஆம் தேதி அமுதா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அசகளத்தூரில் இருக்கும் தனியார் மருந்தகத்திற்கு சென்றுள்ளார். […]
கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் ராஜ்குமார்- சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷ்மிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சங்கீதா தனது மகள், மாமனார், மாமியாருடன் அப்பகுதியில் இருக்கும் வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையிடம் ஒரு செல்போனை கொடுத்து தனியாக உட்கார வைத்துவிட்டு 3 பேரும் வயலில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்போனில் விளையாடி கொண்டே நடந்து […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேளங்கிப்பட்டு கிராமத்தில் விவசாயியான சுந்தரமூர்த்தி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு புஷ்பரோகிணி(19) என்ற மகள் உள்ளார். இவர் அரசு பள்ளி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி தனது மகளுக்கும், பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்தார். அதன்படி நாளை அவர்களுக்கு நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து கொண்டிருந்தனர். நேற்று […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு சரவணன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பெண்ணாடம் சென்று விட்டு சரவணன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் […]
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்கி(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராம்கி அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை முத்தமிட்டு அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டி ராம்கி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 3/4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சீனு- ஜகதாம்பாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டிற்கு முன்பு பழக்கடை நடத்தி வருகின்றனர். இங்குள்ள பழங்களை இருப்பு வைக்கும் குடோன் மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் அமைந்துள்ளது. கடந்த 6 மாதமாக பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்படுத்தி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையிலும், உழவர் சந்தை அருகிலும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 16 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் பெண் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும், சாவியை புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தனர். இதனை அறிந்த பெண் ஊழியர்கள் நேற்று இரவு கடலூர் அரசு மருத்துவமனை அம்மா உணவகம் முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]
வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் 2 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆ. குன்னத்தூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவுக்கு உதயகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக உதயகுமார் கூறியதை நம்பி ராஜா 2 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் உதயகுமார் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பலமுறை […]
போக்குவரத்து விதிமுறையை மீறிய நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக 100 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய 13 பேர், அதிவேகமாக வாகனத்தை ஒட்டிய 2 பேர், சீட் பெல்ட் […]
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல் நிலை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 11 மணிக்கு நடத்தப்பட […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் நகராட்சியை பசுமை ஆக்குவோம் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. நேற்று புகழூர் நகர மன்ற தலைவர் சேகர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் 1900 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி வாகனம் மூலம் வெளியேற்றினர். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
வீடு இடிந்து விழுந்து முதியவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநெசலூர் மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தொடர் மழை காரணமாக முத்து கருப்பன் என்பவரது கூரை விட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கிய பெரியசாமிையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். ஓட்டுனரான பிரகாஷ் ஆண்டிமடம் பகுதிக்கு பால் சப்ளை செய்ய அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பிரகாசுக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரகாஷ் சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
பெட்ரோல் பங்கில் எண்ணெய் திருடி சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் புதுக்கூரைபேட்டை புறவழி சாலையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலக அறையில் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பெட்ரோல் போடும் இயந்திரம் அருகே வைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள 5 லிட்டர் எண்ணெய் கேன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஊழியர்கள் பெட்ரோல் பங்கில் […]
சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எரப்பாவூர் கிராமத்தில் லாரி ஓட்டுனரான ஜெயவேல்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7- ஆம் வகுப்பு படிக்கும் நித்திஷ், 4- ஆம் வகுப்பு படிக்கும் சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக புது ஏரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சூர்யா ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் […]
வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் அருகே 9 வயது சிறுமி தனது தம்பியுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான தனுஷ் என்பவர் சிறுமியின் தம்பியிடம் 10 ரூபாய் கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனுஷ் அந்த சிறுமியை தூக்கி சென்று ஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி கூச்சலிட்டதால் தனுஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தில் ஆறுமுகம்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக ஆறுமுகம் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கவரப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும், மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனா தனது 16 வயது மகளை சுந்தரமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சமூக நலத்துறை அலுவலர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 1/2 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் முல்லா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், 66 கடைகள் மற்றும் அலடி ரோட்டில் இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 95 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி விருதாச்சலம் தாசில்தார் தனபதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விருதாச்சலம் பேருந்து நிலையம் சுற்றுச்சுவரை ஒட்டி இருக்கும் பிரபல மருத்துவமனையை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு விருதாச்சலம் உதவி […]
கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் வீட்டு சுவர் இடிந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான குமரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி கலியம்மாளுடன்(60) கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக எதிர்பாராதவிதமாக நேற்று வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் விஜய்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் விஜயலட்சுமி(24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் விஜய் ஈரோட்டில் தங்கி அங்குள்ள டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான நந்திமங்கலத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் […]
தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்டரக்கோட்டை பகுதியில் தொழிலதிபரான தேவராஜ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்கு சென்ற தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் தேவராஜ் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் […]
கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ரயில் நிலையத்தின் முன்புறம் ஒரு பெட்டி கிடந்தது. கடந்த மூன்று நாட்களாக கேட்பாரற்று பெட்டி கிடந்ததால் பொதுமக்களும், ஊழியர்களும் அதில் வெடிகுண்டு ஏதும் இருக்கலாம் என அச்சமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நவீன கருவி மூலம் சோதனை செய்து பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லை. அதன் பிறகே அனைவரும் […]
ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வி. ஆண்டி குப்பம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐடிஐ படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விஷ்வா தனது நண்பர்களான ரிஷிதரன்(18), பாலமுருகன்(19), நரேந்திரன்(18), பாலாஜி, அபிஷேக் ஆகியோருடன் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் விஷ்வாவும், பாலாஜியும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் […]
அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிருப்பு மேற்கு தெருவில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதிமுக பிரமுகரான கோவிந்தராசு(48) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் கோவிந்தராசு சடலமாக கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவிந்தராசுவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 697 பேர் மீது தீபாவளி பண்டிகை தினத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி 1500- க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 38 பேர், அதிவேகமாக வாகனம் ஒட்டிய 11 பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற 553 பேர், காரில் […]
கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் அருகே இருக்கும் வங்க கடலில் சென்ற சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் தற்போது குறைந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருக்கின்றது. இதற்கு சிட்ரங்கு என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த புயல் ஆனது மேலும் வலுவடைந்து வடக்கு […]
சட்ட கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(21) என்ற மகள் இருந்துள்ளார். விழுப்புரத்தில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா தனது தாய் உமாரான இடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டபோது தன்னிடம் இப்போது பணம் இல்லாததால் வேறு யாரிடமாவது விரைவில் வாங்கி தருகிறேன் என […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து கிராவல் மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி திருப்பாதிரிபுலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சந்தனம் என்பது ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டிபாளையம் சாலையில் இருக்கும் வளைவில் லாரி திரும்ப முடிந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தானம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். […]
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, வாலிபரை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்காங்கிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் காசிலிங்கம் மகன் ஜெயபால்(23). இவர் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி அவரிடம் நெருங்கி பழகி வந்ததோடு, உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அச்சிறுமி இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள பில்லாலிதொட்டி பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் பண்ருட்டி ராசாபாளையத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து உங்களை ஊரில் இறக்கி விடுகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். இவர்கள் வாழப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த […]
பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து நெல்லிக்குப்பம் அருகே அதி வேகத்துடன் வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் பேருந்து உள்ளே படிக்கட்டு அருகே கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் ஒருவர் படிக்கட்டு வழியாக குழந்தையுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் . அவரை உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது அவர் தனது குழந்தையுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் […]
போக்சோ வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விசாரித்ததில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்க்கும் பாபு என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவி கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை போலீசார் […]
வயதான தம்பதி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனத்தம் கிராமத்தில் கோவிந்தன்(75)- பூங்காவனம்(72) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கருப்பன்(50), பாலுசாமி(45) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பாலுசாமி இறந்து விட்டதால் கருப்பன் தனது தாய் தந்தையை பராமரித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகனின் விருப்பப்படி அப்பகுதியில் இருந்த 3 சென்ட் நிலத்தை கருப்பன் தனது மகனின் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தை […]
இருளர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட இருளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாதி சான்றிதழ் கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் திரிமங்கலத்தில் சுமார் 129 பேர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களில் வெறும் 4 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஏரிப்பாளையம், காராமணிகுப்பம், வடலூர் ஆகிய பகுதிகளிலும் சாதி சான்றிதழ் […]
12- ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் காந்தி சிலை அருகே இருக்கும் பயணிகள் நிழற்குடையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் 12 ஆம் வகுப்பு மாணவி, கல்லூரி மாணவர், அவர்களது பெற்றோரிடம் விசாரணை […]
கடலூர் மாவட்டத்திற்கு மதியம் 2:20 மணிக்கு மும்பையில் இருந்து வரும் லோக மாண்ய திலக் வாராந்திர விரைவு ரயில் வந்து சேரும். நேற்று மாலை 3:40 மணிக்கு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வராததால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். அந்த ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி புறப்பட்டது. இதுகுறித்து […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சம்முட்டிகுப்பம் பகுதியில் நடராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2 சொசைட்டியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு நடராஜன் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தனது ஏ.டி.எம் கார்டை அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் கொடுத்து பணம் எடுத்து தருமாறு நடராஜன் உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபர் ஏ.டி.எம் […]
மந்தாரகுப்பத்தில் பேருந்து நிலையம் இருந்தும் பேருந்துகள் செல்லாததால் மக்கள் சிரமமடைந்து வருகின்றார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் இருக்கின்றது. இங்கு என்எல்சி-யில் வேலை பார்க்கும் வெளி மாவட்டங்கள் மற்றும் வேலை மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் வசித்து வருகின்றார்கள். மந்தாரக்குப்பத்தில் இருந்து சேலம், திருச்சி, பழனி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா, எர்ணாகுளம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரை விட மந்தாரக்குப்பத்தில் […]