நாட்டின் வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. டெல்லியில் நேற்று (டிச.27) கடுங்குளிர் நிலவியதோடு, காலை வேளையில் மிகுந்த பனிமூட்டமும் காணப்பட்டது. அத்துடன் டெல்லியில் ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 -7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. இதன் காரணமாக உறைய வைக்கும் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான், […]
Tag: கடும் குளிர்
அமெரிக்காவில் குளிர்கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதி தீவிரமாக இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக அமெரிக்காவின் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. இங்குள்ள பல மாநிலங்களில் வெப்பநிலையானது மைனஸ் 0 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்துக் கொண்டே இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி அமெரிக்கா களை இழந்து காணப்படுகிறது. அதோடு பனிப்பொழிவின் காரணமாக சாலைப்போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்து போக்குவரத்துகளும் கடுமையான அளவுக்கு முடங்கியுள்ளது. […]
தமிழகத்திற்கு கடும் குளிர் தொடர்பாக எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் பல வகையான செய்திகள் போலியாக சுற்றும்.. அதனை பெரும்பாலான மக்கள் உண்மையென நம்பிவிடுகின்றனர்.. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.. அதாவது சூரியனை சுற்றியுள்ள பூமியின் நகர்வால் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம், […]
அமெரிக்கா-கனடா எல்லையில் கைக்குழந்தை உட்பட நால்வர் கடுமையான பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் எல்லை பகுதிக்குள் உறைந்து போன நிலையில் உயிரிழந்து கிடந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பில் மனித கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் கனடாவின் எல்லைக்குள் கைக்குழந்தை உட்பட நான்கு […]
ஜெர்மனில் கடும் குளிரில் இளம்பெண் ஒருவர் வெட்ட வெளியில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது பனிப்பொழிவு மிகவும் கடுமையாக உள்ளது. -15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகி இருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள பவேரிய மாநிலத்தில் இருக்கும் நியூரம்பெர்க் என்ற நகரில் காவல்துறையினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது 20 வயதுடைய பெண் ஒருவர் ரயில் சுரங்கப் […]
கனடாவில் அதிக குளிரினால் நள்ளிரவில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள dawson creek என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த பெண் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய அவர் தன் சென்றடைவதற்குள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது -41. 8 டிகிரியில் கடும் குளிரில் அப்பகுதி இருந்ததால் அதனை […]
புத்தாண்டின் போது வட இந்தியர்கள் மது அருந்த வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 28 முதல் கடுமையான குளிர் இருப்பதாலும், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாலும் புதிய வருட கொண்டாட்டங்களை முன் வைத்து மது அருந்துவது நல்லது கிடையாது என்று இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குளிர்ச்சியின் […]