போலந்து நாட்டில் கடுமையாக புயல் வீசியதால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. போலந்தில் நேற்று முன்தினம் கடுமையாக புயல் வீசி தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்தது. எனவே, மசோவா என்னும் மாகாணத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அந்நகரமே இருளடைந்து காணப்பட்டது. 36,000 மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், புயலில் சிக்கி ஒரு நபர் பலியானதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மீட்புப்படையினர், புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணியை […]
Tag: கடும் புயல்
ஜெர்மனியில் வசிக்கும் ஒரு தம்பதியர் படகிலேயே வாழ தீர்மானித்த நிலையில், புயலில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த Annemarie-Karl Frank என்ற தம்பதி படகில் வாழ முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் தங்கள் படகில், அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவரை ஏற்றிக்கொண்டு பயணித்திருக்கிறார்கள். அப்போது, திடீரென்று கடும் புயல் உருவானது. அதில், படகு சிக்கியது. இதனைத்தொடர்ந்து, Annemarie படகில் இருக்கும் பாய் மரத்தை சரி செய்ய சென்றுள்ளார். அப்போது, […]
சீன நாட்டின் ஹாங்காங் பகுதியில் பயணித்த கப்பல் ஒன்று இரண்டாக பிளந்து போனதில் 27 பேர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் ஹாங்காங் மாகாணத்தில் ஒரு கப்பல் 30 நபர்களுடன் சென்றுள்ளது. கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த கப்பல் திடீரென்று கடும் புயலில் சிக்கியது. இதனால், கப்பல் இரண்டாகப் பிளந்ததில் பயணிகள் 30 பேரும் கடலுக்குள் விழுந்து விட்டனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து, அந்த பகுதிக்கு சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். […]
பிரிட்டனில் 100 மைல் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் இருப்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம், இந்த வார கடைசியில் பல்வேறு பகுதிகளில் பனிப்புயல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி இன்று அதிகாலையில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. கடுமையான குளிர் காற்று மேலும் மூன்று தினங்களுக்கு பிரிட்டனை தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்னும் மூன்று தினங்களுக்கு 6 இன்ச் அளவில் பனிப்பொழிவு […]
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமம் கடந்த வாரத்தில் ஏற்பட்ட புயலால் கடும் பாதிப்படைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Neuchatel என்ற மாகாணத்தில் இருக்கும் Cressier என்ற கிராமத்தில் கடந்த வாரம் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதில் பல வீடுகளில் பெருவெள்ளம் புகுந்து சகதி ஏற்பட்டு, வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராமத்திலுள்ள மக்களே, அந்த வீடுகளை சுத்தம் செய்து, அவர்களுக்கு குடிக்க தண்ணீர் அளித்து, துணிகளை துவைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் […]