மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் எட்டப்படவில்லை. தற்போது வரை போராட்ட களத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறக் கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு […]
Tag: கடைகள் அடைப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த இன்று பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள் மற்றும் உணவகங்கள் தவிர பிற கடைகள் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் ஞாயிறுகளில் சில பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர வேறு கடைகளை திறக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதித்தும், பல முக்கிய இடங்களில் அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து ஞாயிறுகளில் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் […]
தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மால்கள், தியேட்டர்கள் பெரிய கடைகள் அனைத்தும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பெரிய கடைகள், மால்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]
கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை செல்போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் சூழ்நிலையில், அதில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அந்தந்த மாவட்டங்களில் கொரோனாவின் அளவைப் பொருத்து மாவட்ட […]
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முக்கிய வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸால் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் […]