நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறி வருகிறது. இந்தப் புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இன்று மாலை புதுச்சேரி இடையே கடல் […]
Tag: கடைகள்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மக்கள் கடைகளில் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர் . சென்னை புதுவண்ணாரப்பேட்டை சந்தைகளில், கடைகளில், வீட்டில் வைப்பதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் அவல், பொரி, கடலை என விநாயகருக்கு படைக்கும் படைப்பு பொருள்களையும் வாங்கி சென்றதால் வியாபாரம் மிகவும் ஆரவாரத்துடன் நடக்கிறது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட்களிலும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை – தாம்பரம், […]
திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடுமையாக இருந்த நிலையில், தற்போது ஆறாவது கட்ட ஊரடங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி […]
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட தூத்துக்குடி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. சில மண்டலங்களில் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேநீர் […]
நாமக்கல் மாவட்டத்தில் வணிக ரீதியாக கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் நாளை முதல் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் கூறியுள்ளார். இதுதவிர மதுக்கடைகள் காலை 10 மணி முதல் […]
புதுச்சேரியில் வரும் 23ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல் பங்குகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம் […]
வேலூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துணிக்கடைகள், நகைக்கடைகள், ஷோரூம்களும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இறைச்சிக் கடைகள் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது. வேலூர் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் நடமாட்டாதி குறைக்கும் வகையில் இவ்வாறு நடவடிக்கை […]
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்கு அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு இருப்பதால் 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 […]
முகக்கவசம் அணியாதவர்களை கடைகளில் அனுமதிக்கக்கூடாது என அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தளர்வுகள் காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை […]
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், […]
ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் மதுபானம் விற்பனை செய்ததாக 100 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுவரை நடத்திய மொத்தம் மற்றும் சில்லறை மதுவிற்பனையாளர்கள் 2018-19, 2019-20ம் ஆண்டுக்கான விற்பனை கணக்கை உடனே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் […]
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை கடந்த 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு […]
தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் நேற்றுடன் முதல் ஊரடங்கு முடிந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2ம் கட்ட ஊரடங்கு இன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வேறு ஊரடங்கு நெறிமுறைகளையும் மத்திய அரசு சார்பில் இன்று […]
நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் அளித்துள்ளார். நோய் தொற்று இருப்பவர்கள் வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று […]