இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவருக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி இனி இஎம்ஐ பரிவர்த்தனைகள் மற்றும் வாடகை செலுத்துவதற்கான கட்டடம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டட உயர்வு நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு பிராசசிங் கட்டணமாக இதுவரை 99 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டணத்தை EMIயாக மாற்றும்போது அதற்கு பிராசசிங் கட்டணம் வசூலிக்கப்படும். இனி இஎம்ஐ பிராசசிங் கட்டணமாக 199 […]
Tag: கட்டணம் உயர்வு
இந்தியாவின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான flipkart நிறுவனம் தற்போது கேஷ் ஆன் டெலிவரிக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.அதனால் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பணம் செலுத்துவோருக்கு தற்போது செலவு அதிகரித்துள்ளது. ஆன்லைனில் கட்டணம் செலுத்துவோருக்கு இந்த கூடுதல் கட்டணம் கிடையாது. Flipkart பிளஸ் பட்டியலில் உள்ள பொருள்களுக்கு 500 ரூபாய்க்கு உட்பட்ட விலை கொண்ட பொருளை வாங்கினால் கேஷ் ஆன் டெலிவரிக்கு 40 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.500 ரூபாய் அல்லது அதற்கு மேல் விளைவு […]
தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி நம்பர் என்ற ராசி எண்களை பெறுவதற்கு 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் வாங்குவோருக்கு ஒதுக்கப்படும் பதிவு எண்ணுக்கு பதிலாக செல்வந்தர்கள்,தொழிலதிபர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் உள்ளிட்டோர் தங்களின் ராசிக்கு உகந்த எண்கள் அல்லது தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பிறந்தநாள் குறித்த எங்களை கேட்டு பெறுகிறார்கள்.அதற்கு 40 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை இரு மடங்காக […]
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 4.3 லட்சம் முதல் 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 12.5 லட்சத்திலிருந்து ரூபாய் 13.5 லட்சம் உயர்த்தி உள்ளது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூபாய் […]
பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தஞ்சையின் மையப் பகுதியில் தஞ்சை ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பயன்படுத்துகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருக்கும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் கொரோனா காலத்தில் ஐம்பது ரூபாயாக […]
சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டு முக்கிய ரயில் நிலையங்களிலும் இன்று அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஒரு தனி நபருக்கான பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பண்டிகைகள் தொடர்ச்சியாக வர உள்ளதால் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் […]
தமிழகத்தை பொறுத்தவரை ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகள் தமிழ்நாட்டில் வந்த பிறகு குறைந்தபட்ச கட்டணம் 39 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதோடு பயணிகள் பயணம் செய்யும் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சேவையை வீட்டில் […]
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டியது அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு 10 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்க நகைகள் மற்றும் கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் முத்திரை கட்டணமானது 35 ரூபாயிலிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் அண்மையில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான மின் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் 10 மணி வரை சார்ஜிங் செய்ய ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாயும், காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாயும், இரண்டு மணி முதல் மாலை 6 மணி […]
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செப்டம்பர் 1ம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிப்பு முறையையும் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கட்டண உயர்வு விவரங்கள் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து தேர்வுகளும் முடிவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 2523 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசின் கட்டணம் நிர்ணய குழு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் நிர்ணயத்தால் தனியார் பள்ளி கட்டணம் 10 சதவீதம் முதல் […]
விமான கட்டணத்தை உயர்த்தப் போவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குறைந்த கட்டண சேவை விமான நிறுவனமாக இருந்தது. இந்த நிறுவனம் தற்போது எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் பண மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 10 சதவீதத்தில் இருந்து 15% வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் கூறியதாவது, விமானத்தின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் […]
தமிழகத்தின் கொரானாவிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனையடுத்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிகள் வரும் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து பள்ளிகள் திறக்கபடுவதால் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகள் கூட்டம் பேருந்து நிலையங்களில் நிரம்பி வழிகிறது. இதனால் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மதுரை- சென்னை ரூ.2,000, தூத்துக்குடி – சென்னை ஏசி படுக்கை கட்டணம் ரூ.1650 – ரு.2350, ஏசி […]
பிரபல வங்கியில் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. அதாவது இந்தியாவில் தற்போது அனைத்து சேவைகளும் டிஜிட்டல் சேவையாக மாறிவரும் நிலையில், ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அனைத்து வங்கிகளிலும் NEFT, RTGS வாயிலாக பண பரிவர்த்தனை […]
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிகளில் ஆதார் பேமென்ட் சிஸ்டம் ஜூன் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின் படி 3 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். இந்த மூன்று பரிவர்த்தனைகளுக்கு பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாயுடன் சேர்த்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் மினி ஸ்டேட்மெண்ட் எடுக்க ரூபாய் 5 உடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவணையை ஏற் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த வருடம் 10 புதிய பாதை திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும் தமிழகத்தில் பொறியியல் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் பழைய செமஸ்டர் […]
நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டண விகிதத்தை AICTE சற்றுமுன் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E, B. Tech B.Arch உள்ளிட்ட படிப்புகளுக்கு கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயம் செய்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொறியியல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை குறைந்து வந்தது. அதனால் முக்கிய வழித்தட ரயில் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தபோது மீண்டும் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக […]
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்ட போது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன். இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் […]
தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “போக்குவரத்து கழகம் ரூபாய் 48,500 கோடி கடனில் உள்ளது. இதனால் தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். ஆந்திரா- கேரளா அரசு பஸ்களில் தொலைதூர பயணம் பஸ் கட்டண விகிதத்தை ஆராய்ந்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அரசு பஸ் கட்டண உயர்வு […]
போக்குவரத்து கட்டணம் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கே என் நேரு பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் முடிவெடுப்பார். நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. சூழ்நிலைக்கேற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் புதிய சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. சான்றிதழ்கள் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைப்படும் முக்கிய ஆவணமாகும். மேற்படிப்பு பயில, வேலைகளில் சேர, அரசு உதவி பெற என பல்வேறு காரணங்களுக்கு பயன்படுகிறது. அவ்வாறு பயனுள்ள இந்த சான்றிதழ்கள் ஏதேனும் காரணத்தினால் தொலைந்து போனால் அதற்கான நகலை பெற முடியும். மேலும் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும். இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “அதில் 23 வகையான […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் பேருந்து, டாக்சி, ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் இன்று (மே 1ம் தேதி) முதல்இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 இலிருந்து ரூ.12 ஆகவும், விரைவு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.14 இலிருந்து ரூ.15 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் […]
நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 500 க்கும் மிகவும் குறைவாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் மின்சாரம் தேவை அதிகரித்துள்ள நிலையில் போதிய நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தால் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது, எனவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையை பெரும்பகுதி அனல் மின் […]
கோடை சீசனை முன்னிட்டு ஹோட்டல்களில் வாடகை கட்டணம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் தங்கியிருந்து சுற்றுலா தளங்களை பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஒரு நாள் அறை கட்டணம் […]
நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி லாரிகளுக்கான தகுதிச்சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ.13,500 மற்றும் பசுமை […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தினால் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி மற்றும் ஏ.டி.எம் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று தொழிற்சங்கங்களின் வேலை […]
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் குறைந்தபட்ச பயணசீட்டு கட்டணத்தை அதிகரிக்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து அமைச்சரும் பயண சீட்டு கட்டணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாணவர்களுக்கான குறைந்தபட்ச சலுகை கட்டணத்தை ரூபாய் 6ஆகவும், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தினால் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி மற்றும் ஏ.டி.எம் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று தொழிற்சங்கங்களின் வேலை […]
சாலைகளில் 15 வருடங்களுக்கு மேல்பழமையான வாகனங்கள் பயணிப்பதால்தான் காற்றுமாசு அதிகமாகிறது என புகார்கள் வருகிறது. இந்த புகாரின்படி 15 வருடங்கள் பழசான வாகனங்களை அழிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது இதற்கான பழைய வாகனங்களின் பதிவு புதுப்பித்தலுக்கான கட்டணத்தினை அதிகரித்து இருக்கிறது. சர்வதேச அளவில் காற்றுமாசு அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக 15 வருடங்கள் ஆகிய பழைய வாகனங்கள் இயக்கப்படுவதால் தான் காற்று மாசு அதிகரிக்கிறது என்று […]
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கார், பைக் வாங்குபவர்கள் அதிக இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு வகையான வாகனங்களுக்கு மூன்றாம் நபர் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி இந்த கட்டணங்கள் அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகின்றது. கொரோனா காரணமாக இந்த கட்டண உயர்வுகள் மீதான இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது ஆய்வு […]
ரயில் நிலைய மேம்பாட்டு நிதியாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் ரயில் கட்டணம் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் 25 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். சீசன் டிக்கெட் பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் (Immediate Payment Service) பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.20 ஜிஎஸ்டியுடன் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது. IMPS மூலம் எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.
தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடி திருத்தம் ஆகியவற்றிற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனவரி 1 முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து சலூன் கடைகளில் முடி திருத்தம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் சாதரணமாக கடைகளில் முடி வெட்டுவதற்கு 150 ரூபாயும், ஷேவிங் செய்வதற்கு 80 ரூபாயும், கட்டிங் மற்றும் சேவிங் செய்ய 200 ரூபாயாக […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களை நாடுவோம் . ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில விதி முறைகள் மட்டும் உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு […]
ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்களில் சில மாற்றங்களை கொண்டுவர உள்ளது. அவை என்னவென்றால், ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களை உயர்த்த உள்ளன. ஐசிஐசிஐ ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது, முதல் 5 முறை பண பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. ஆனால் அதற்குப் பின்னர் பணம் எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணம் 21 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று […]
வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களுக்கு செல்வோம். ஏடிஎம் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்தில் வேண்டுமானாலும் நாம் பணத்தை எடுக்கலாம். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. வங்கிக் கணக்கு இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும், வேறு வங்கிகளில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைப் போன்று மற்ற […]
இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கிகளிலிருந்து இருந்து 5 நிதி மற்றும் நிதி அல்லாத இலவச பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மாதந்திர இலவச பரிவர்த்தனை மீறுபவர்களுக்கு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற 2002ஆம் ஆண்டு ஜனவரி முதல் அபதாரம் தொகை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து உட்பட அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் 17.17% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு […]
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி மாணவர்களுக்கு 40 ரூபாய் ஆகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 80 ரூபாய் […]
தமிழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கிப் பயிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பண்டிகை கால சிறப்பு உணவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிதிராவிடர் விடுதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உணவு கட்டணம் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு உணவு கட்டணம் 40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பழைய வாகனங்களை மறு பதிவு செய்வதற்கான கட்டணம் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கு ஏற்கனவே 600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கட்டணம் எட்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகள் பழமையான கார்களை மறு பதிவு செய்ய கட்டணம் 600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 300 ரூபாயாக இருந்த […]
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை வாரச்சந்தையில் கால்நடை மற்றும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காளை மாடு, எருமைக் கிடா ஒன்றுக்கு நுழைவு கட்டணம் ரூ.40- லிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டுக்கு 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், லாரி ஒன்றுக்கு ஒரு முறை வருவதற்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டோவுக்கு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழி ஒன்றுக்கு ரூ.5ல் இருந்து ரூ.25 ஆகவும், கருவாடு கூடை கட்டு ரூ.50, […]
தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 606 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ளவை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக நாற்பத்தி ஒன்பது இடங்களில் சுங்க சாவடிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் 8 முதல் 10 சதவீத அளவிற்கு சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. இந்நிலையில் […]
தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வாரம் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். இதனால் ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகள் களைக்கட்டியுள்ளது. நட்சத்திர ஏரிகளில் படகு சவாரி செய்தும், ஏரி சாலைகளை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை […]
கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. வார நாட்கள், வார இறுதி நாட்கள் என தனித்தனி கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் அளித்தனர்.வார நாட்களில் 100 […]
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 24 சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே சிரமத்தில் உள்ள நிலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் த.வா.க தலைவர் வேல்முருகன், வழிப்பறிக் கொள்ளையர்களைப் சுங்கச்சாவடியை கண்டு தான் வாகன ஓட்டிகள் அஞ்சுகின்றனர். இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரித்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. […]
ஆகஸ்ட் மாதம் முதல் ஏடிஎம் அட்டை, கடன் அட்டை ஆகியவற்றிற்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடன் அட்டை, ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் முதல் உயர்த்தப்பட உள்ளது, அதன்படி ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக ஏடிஎம் மையங்களில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனை செய்வதற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். இதைத்தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படும். இந்நிலையில் ஏடிஎம் மூலம் பணப் […]