3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டில் தென்மேற்கு லாகோஸ் மாநிலத்தில் ஓனிக்போ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய அவசரநிலை மேலாண்மை அமைப்பின் அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து இந்த பகுதியில் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இந்த மீட்புப் படையினர் 8 பேர் உடல்களை […]
Tag: கட்டிடம் இடிந்து விழுந்தது
சீனாவில் உள்ள மத்திய ஹுனான் மாகாணத்தில் சுமார் 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட 6 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் குறைந்தது 39 பேரைக் காணவில்லை. மேலும் அந்த இடிபாடுகளில் 23 பேர் சிக்கியுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிக்கியுள்ள மற்றும் காயமடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கட்டிட விபத்துக்கான காரணம் குறித்து […]
12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் மீதமிருந்த கட்டிடத்தையும் தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் மியாமியில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 மாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மீட்பு பணியின் இடிபாடுகளில் உள்ள கட்டிடத்தை உடைக்கும்போது மீதமிருந்த கட்டிடமும் சரிந்து விழும் நிலையில் இருந்ததால் […]
கனமழை பெய்ததால் வீடு இடிந்து விழுந்து பெண் பலியான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு பகுதியில் இருக்கும் மருவூர் காலனி தெருவில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி என்ற மகளும் சுப்ரமணியன் என்ற மருமகனும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கடந்த 1991 – ஆம் ஆண்டு இவர் […]
பிரேசில் நாட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் ரியோ டாஸ் பெட்ராஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்திலிருக்கும் பல பகுதிகளில் அரசினுடைய அனுமதியில்லாமலே சட்டத்திற்குப் புறம்பாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவ்வாறு அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடிகளை உடைய அடுக்குமாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மீட்பு குழுவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ […]