அமெரிக்க அரசு தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. எனவே அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, அமெரிக்க அரசு தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு பயணிகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் பயணிகள், பயணத்திற்கு முன்பு செய்து கொண்ட […]
Tag: கட்டுப்பாடுகள் தளர்வு
சீன நாட்டின் பெய்ஜிங் மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப மாதங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது. மேலும், அங்கு ஜிலின், ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் போன்ற பல நகர்களில் கொரோனா தீவிரமடைந்தது. எனவே அந்நகரங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. எனவே, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு விதிமுறைகளும் குறைக்கப்பட்டிருப்பதால், மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு […]
பிரான்சில் பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிய வேண்டும் எனவும் ஆனால் பள்ளி மற்றும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, பிரான்சில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கூட உணவகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸின் சுகாதார துறை அமைச்சரான, ரோமுலோ புயத் தெரிவித்திருப்பதாவது, சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் பத்தாம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். சுற்றுலா பயணிகள் இதற்கு முன்பு இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலோ, பயணத்திற்கு முன் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலோ அரசு மையங்களில் […]
ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 600 நாட்களுக்குப்பின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் சிட்னி விமான நிலையத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தங்கள் உறவினர்களை வரவேற்றிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் அடைக்கப்பட்டது. மேலும், பயண விதிமுறைகளும், கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக அளவில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள், தங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதற்கும், தங்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்கும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் […]
கனடா அரசு தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்கள் கனடா வருவதற்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனடா அரசு செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த 2020-ஆம் ஆண்டு […]
பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், அடுத்த மாதத்தில் முகக்கவசம் அணிவது குறித்த கட்டுப்பாடுகளை அரசு மாற்றம் செய்யலாம் என்று கூறியுள்ளார். பிரிட்டனில் தற்போது விதிமுறைகளை தளர்த்தும் திட்டத்திற்குரிய நான்காம் கட்டமானது, ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி முகக்கவசம் அணிவது குறித்த விதிமுறைகள் மாற்றப்படும் என்று அமைச்சர்கள் கூறியதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த கோடை காலம் முதல் பொது போக்குவரத்து மற்றும் கடைகள் போன்ற பல இடங்களில் […]
உலகநாடுகளிலேயே இஸ்ரேல் முதல் நாடாக கொரோனா பிடியிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனோவின் கோரப்பிடியில் மீள முடியாமல் திண்டாடி வருகிறது. எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியையும் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்துவதற்கான முயற்சியை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல், தடுப்பூசி திட்டத்தின் மூலமாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. மேலும் அந்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசமின்றி நிம்மதியாக சுதந்திரமாக இயற்கை சுவாசிக்க துவங்கியுள்ளனர். மேலும் இஸ்ரேல் […]
பிரிட்டனில் கொரோனா பரவலால் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறிய தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டனில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் அந்நாட்டில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போதிருந்து வீடுகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 6 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்றும், டென்னிஸ் மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டு திடல்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரிட்டன் […]