மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.. இதனால் ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி பெரியார் […]
Tag: கட்டுமான பணிகள்
சென்னையில் நகருக்குள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வண்டலூரை அடுத்த கீளாம்பாக்கம் பகுதியில் சுமார் 40 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் திறப்பு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்த புதிய பேருந்து நிலையம் 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் […]
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் […]
வாழவச்சனூர் கிராமத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியை கூடுதல் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர் கிராமத்தில் கழிவறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குனருமான பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மண்டல துணை வட்டார […]
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பழமை வாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதைய கட்டடத்தின் அருகில் மத்திய விஸ்டா மறு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணிக்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது அடுத்து சுமார் […]