தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடை நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100% உறுதி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 30 நாட்கள் பள்ளி வராத குழந்தைகளையும் […]
Tag: கணக்கெடுப்பு
ஏகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கை செலவு கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் போன்ற நகரங்கள் உலக அளவில் இருக்கும் மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மக்கள் வசிப்பதற்கு ஆடம்பரம் மிகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் உணவு, ஆடைகள், போக்குவரத்து, வீடு போன்ற 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள் பற்றி ஆய்வு […]
ஆப்கானிஸ்தானில் தலைவான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பொருளாதார வீழ்ச்சியினால் அங்கு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என பல்வேறு நாடுகளில் சட்டம் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் சட்டவிரமாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. […]
இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகைய வலுவான பெரிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றார். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் ரத்து, கட்டாய கருத்தடை உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெறலாம் என தெரிகின்றது. குடும்ப கட்டுப்பாடு மசோதா நாடாளுமன்றத்தில் இதுவரை சுமார் 35 முறை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 10 கடலோர மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் 10 லட்சம் பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதில் வனதுறையினருடன் தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 500 பேர் ஈடுபட்டனர். சிறு கொசு உள்ளான், சதுப்பு மண் கொத்தி, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், நாமத்தலை வாத்து, கருவால் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ஊராட்சிகளிலுள்ள குடிசை வீடுகள் தொடர்பான விபரங்களை பெற புதிதாக கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் பி நாயர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் 2010ஆம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டது. இந்நிலையில் 22.04 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதை கண்டறிந்தனர். அவற்றில் 3.05 லட்சம் நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 2016-17 […]
சென்ற ஆண்டுகளில் மட்டும் 18 வயதிற்கு கீழ் கீழ் உள்ள சிறுவர்கள் 11,396 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு அறிவித்துள்ளது. சிறாரின் தற்கொலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்ற ஆண்டு மட்டுமே ஒரு நாளுக்கு 31 இளம் சிறார்கள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018-முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுவர்கள் தற்கொலை கணக்கெடுக்கப்பட்டது. அதில்-2018ஆம் ஆண்டு 9,431 சிறுவர்கள் 2019-ஆம் ஆண்டு […]
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிந்தன. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து […]
உலகில் மக்கள் வாழ அதிக செலவாகும் நகரமாக இஸ்ரேலில் உள்ள ஒரு நகரம் திகழ்வது ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் மக்கள் வாழ அதிக செலவாகும் நகரம் எது எனும் கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் கடந்த ஆண்டில் முதலிடம் வகித்த பாரிஸ் சுரிச் மற்றும் ஹாங்காங் நகரங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் நாட்டிலுள்ள டெல் அவிவ் நகரம் முதலிடம் பிடித்தது. உலகில் அதிகரித்து வரும் பண […]
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 2020 முதல் 2021 வருடத்திற்கான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் குழந்தை பெறும் வீதம் 2 சதவீதமாக குறைந்து இருப்பதால் நாட்டின் மக்கள்தொகை இனிவரும் காலங்களிலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் கணிசமாக குறைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஆண்களுக்கு […]
புதுச்சேரியில் உள்ள அக்கார்டு ஓட்டலில் புகையிலை கட்டுப்பாட்டு மையம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் அரசு மார்பு நோய் நிலையம், ஜிம்பர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை ஆகியோர்கள் சார்பில் உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாடு தகவல் இதழ் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். […]
இந்திய நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். ஆனால் இவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு இதுவரை அரசு எடுக்கவில்லை. இந்நிலையில் முதல் முறையாக வீட்டு வேலை செய்வோர் பற்றிய தகவலை டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பை நேற்று மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதேவ் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியது,” மத்திய அரசு சாதாரண மக்களுக்காக தனது கொள்கைகளை உருவாக்கி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் […]
குடிநீர் இணைப்பு பெறாத வீடுகளை கணக்கெடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த வருடத்தின் இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராமங்கள்தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2023 வருடத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் […]
2021 சென்சஸின்போது சாதி வாரியாகவும், சமூக, பொருளாதார நிலவரங்களையும் உள்ளடக்கிய சென்சஸ் எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி ஒழிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தவேண்டும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி கண்ணோட்டத்திலும், நீதிமன்றங்களில் எடுத்து கூர்வதற்கும் அவசியம் என்பதால் தாழ்த்தப்பட்டோருக்கு கணக்கெடுப்பது போல பிற்படுத்தப்பட்டோருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். எனவே தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 8 ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்த பணி நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், […]
பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் இருக்கின்றன. இந்த குளங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் சீசன் காலங்களில் அதிக அளவில் வரும். இதனால் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இந்த பணி இன்றுடன் முடிவடைகிறது. நெல்லை மாவட்டத்தில் முன்னீர் பள்ளத்தில் […]
உலக அளவில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட லோவி என்ற நிறுவனம் உலக அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பான […]