ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் சரண் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணம் முடிந்த நாளிலிருந்து சரண் தன்னுடைய மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு, ஆண் குழந்தை பெற்று தராததை குத்தி காட்டி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதற்கிடையில் சரணுக்கு விசாகப்பட்டினம் பகுதி சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணை சரண் திருமணம் செய்து கொள்ள […]
Tag: கணவர் கைது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மந்த்ச்சூர் பகுதியில் மோஜீம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சானுபி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்றதால், அஜ்மேரி ஹலிமா என்பவரை மோஜீம் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சிறிது காலம் கழித்து சானுபி திரும்பி வந்துவிட்டதால் மோஜீமுக்கு இரண்டாவது மனைவி பாரமாகி விட்டார். இதனால் இரண்டாவது மனைவியை அவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நபரின் உதவியோடு தன்னுடைய வீட்டின் […]
குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இரண்டு வருடங்களுக்கு பிறகு போலீசார் கணவரை கைது செய்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த பர்ஷானாவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சமதுவுக்கும் சென்ற 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பர்ஷானா 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி வழக்கு […]
போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மனைவியின் உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கட்டாரபட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பம்மாள் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முனியாண்டி தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அதே பகுதியில் வசிக்கும் சேர்ந்த சிலருடன் […]
அம்மாபேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கணவரை கைது செய்தார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே இருக்கும் உமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவரின் மனைவி தேவயானி. இவர்கள் இருவரும் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு மூன்று வயதில் பிரணிகா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி […]
லெபனான் நாட்டில் ஐந்து மாத கருவை கலைக்க மறுத்த மனைவியை, கணவன் உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லெபனான் நாட்டில் உள்ள திரிபோலி என்ற பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஹனா முஹம்மது கோடர் என்ற பெண்ணிடம் அவரின் கணவர் கருவை கலைக்குமாறு வாக்குவாதம் செய்திருக்கிறார். எனினும், முதல் தடவை தாயாவதால் கருவைக் கலைக்க மாட்டேன் என்று ஹனா உறுதியாக கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த நபர், எரிவாயு கானிஸ்டரை பயன்படுத்தி […]
கடலூர் புதுப்பேட்டை அருகில் உள்ள ஏ.பி. குப்பம் கிராமத்தை சுமன்ராஜ்(31) என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி சிவரஞ்சனி(30) இவர்களுக்கு மகன்(2) உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி சிவரஞ்சனி தூக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கந்தசாமி வரதட்சனை கொடுமையால் தனது மகள் சிவரஞ்சனி இறந்து விட்டதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது திருமணமான […]
தேனிலவு சென்றபோது மனைவியை கொலை செய்து விட்டு படகு வழியாக கணவர் தப்பி சென்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பசிபிக் கடலில் பிஜி என்னும் நாட்டில் நூற்றுக்கணக்கான தீவுகள் இருக்கிறது. அங்கே சுற்றுலா தளங்களும் அதிகம் இருக்கின்றன. எனவே, அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவதுண்டு. இந்நிலையில் அமெரிக்க நாட்டில் வசிக்கும் பிரட்லி ராபர்ட் டாசன்- கிரிஸ்டி ஜியோன் சென் என்ற தம்பதி கடந்த ஏழாம் தேதி அன்று பிஜி நாட்டில் இருக்கும் […]
குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்தார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் தாலுகா உட்பட்ட குமரலிங்கம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி கற்பகம். கிருஷ்ணன் கிளி ஜோதிடம் பார்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோதிடம் பார்த்துவிட்டு வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்பொழுது தனது மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டார். பின் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்து கத்தி எடுத்து கற்பகத்தை சரமாரியாக குத்தியுள்ளார் […]
அமெரிக்க நாட்டில் தன் கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவருக்கு வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மிசூரி என்னும் மாகாணத்தில் வசிக்கும் 31 வயது நபர் பியூ ரோத்வெல். அவர் ஆறு வார கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி ஜெனிபரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு தன் மனைவி காணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து ஜெனிபரின் உடல் கண்டறியப்பட்டது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், […]
மனைவியிடம் இருந்து 15 பாவம் நகை மூன்றில் லட்சம் பணம் மோசடி செய்த இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த சுபாஷினி(35) என்பவர் ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த நிலையில் சென்ற மூன்று வருடங்களுக்கு முன்பாக மாப்படுகை சிவன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன்(29) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்த கொண்ட நிலையில் சென்ற சில மாதங்களுக்கு […]
கேரள மாநிலமான காசர் கோட்டையை சேர்ந்தவர் மாடல் அழகி சகானா (20). இவர் மாடலிங்கோடு மலையாள திரைப்படங்களிலும் நடித்து வந்தார். சென்ற வருடம் இவர் சஜாத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். முன்பாக இவர்களின் திருமணத்தை ஏற்க மறுப்பு தெரிவித்த சகானாவின் குடும்பத்தினர், பின் அதனை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அடிக்கடி சகானா வீட்டிற்கு சென்று வந்தனர். இதில் சகானா நடிக்க வந்த பிறகு கோழிக்கோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவருடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாகீர்ரெட்டிப்பட்டியில் வசித்து வருபவர் திருவேங்கடம் (வயது 52). இவர் கட்டிட காண்டிராக்டராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருடைய மகன் பிரசன்னாவுக்கும் நெல்லையை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மின்வாரிய காண்ட்ராக்டரான மணிவண்ணன் என்பவரும் திருவேங்கடமும் நெருங்கிய நண்பர்கள். இவரின் மனைவி லீலா. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு […]
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் பகுதியில் பொன்னப்ப பிள்ளை – நீலம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவர்களுடைய மகன் பலரிடம் கடன் வாங்கி விட்டு வெளியூரில் தலைமறைவாக இருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் பொண்ணப்ப பிள்ளையிடம் பணத்தை திருப்பித் தருமாறு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னப்ப பிள்ளை மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதுதொடர்பாக பொன்னப்ப […]
பணம் தராததால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வ.நகர் பகுதியில் சாகுல் அமீது என்பவர் வசித்த் வருகின்றார். பெயிண்டரான இவருக்கு பாத்திமா பீபி என்ற மனைவி உள்ளார். இவர் நாமகிரிபேட்டையில் உள்ள சத்துணவு மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் சாகுல் அமீது அடிக்கடி பணம் கேட்டு பாத்திமா பீபியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் […]
தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் கலைச்செல்வன்(29) என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு காயத்ரி(28) என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கலைச்செல்வனுக்கு மது பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு காயத்திரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காயத்ரி கோபித்துக்கொண்டு தேவதானப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கலைச்செல்வன் தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மாமனார் […]
பிரபல நடிகை பாலத்திற்கு அடியில் சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. வங்கதேசத்தை சேர்ந்த ரைமா இஸ்லாம் ஷிமு என்ற பிரபல நடிகை, சில தினங்களுக்கு முன் திடீரென்று காணாமல் போனார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தலைநகர் டாக்காவில் இருக்கும் ஹஸ்ரத்பூர் பாலத்திற்கு அருகில், கிடந்த இப்படி சாக்குமூட்டையில் ரைமாவின் சடலம் கண்டறியப்பட்டது. அவரின் உடலில் பல காயங்கள் இருந்தது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி […]
கள்ளகாதலை கண்டித்த பெண் கவுன்சிலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கடமலை-மயிலை ஒன்றியத்தின் 5-வது கவுன்சிலராக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடமையிலைக்குண்டு பகுதியில் கணவர் வேல்முருகன் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வேல்முருகன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் உமா மகேஸ்வரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் உமா மகேஸ்வரி […]
வழக்கை வாபஸ் வாங்க மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள அம்பேத்கர் நகரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு உமா என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கொடுவாளை எடுத்து உமாவை வெட்ட முயன்றுள்ளார். இது குறித்து உமா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிலம்பரசனை கைது […]
பிரான்சில் தன் மனைவியை வாகனத்தை ஏற்றிக் கொலை செய்ததாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரான்சில் Prayssac என்னுமிடத்தில், பிரிட்டனை சேர்ந்த 67 வயதான David Turtle என்ற நபர், தன் மனைவியான Stephanie-மீது வேண்டுமென்றே 2, 3 முறை வாகனத்தை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், David, அது விபத்து என்றும், என் மனைவியை நான் கொல்லவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து டேவிட் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று […]
மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் முத்துக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு அங்காளஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துக்கண்ணன் அடிக்கடி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஈஸ்வரி கோபித்துகொண்டு குழைந்தையை அழைத்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது தம்பி சங்கிலி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு முத்துக்கண்ணன் சங்கிலியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து கொலை […]
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 22 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியரான அனில் கில்லும் அவரின் மனைவி ரஞ்சித் கில்லும், இங்கிலாந்தில் இருக்கும் ஷரி மாகாணத்தின் மில்டன் கினிஸ் நகரத்தில் இருக்கும் தாமஸ் வேலி என்ற பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு மதுப்பழக்கமும் போதைப் பழக்கமும் இருந்ததால், அடிக்கடி இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அன்று ரஞ்சித் கில், தனக்கு போதை பொருள் விற்பவருடன் […]
மருத்துவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரது கணவரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சடையன்வலசை பகுதியில் மகஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். மருத்துவரான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்தை சேர்ந்த சுகந்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுகந்தா தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மகேஸ்வரன் மேல் படிப்பிற்காக டெல்லிக்கு சென்று விட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் சொந்த […]
குடும்ப தகராறில் மனைவியின் மீது கணவர் கழிவறை கழுவும் ஆசிட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் பெயிண்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தமிழரசி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனை அடுத்து முருகன் தனது மனைவி தமிழரசி நடத்தி வரும் […]
குடும்ப தகராறு காரணமாக காப்பகத்தில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பு.கிள்ளனூரில் துரைபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகள் முன்பு உமா மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரி கோபித்துகொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள […]
கிரீஸ் தீவில் கொள்ளையர்களால் 11 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் அதிரடியாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் தீவின் ஏதேன்சில் வசிக்கும் பாபிஸ் என்ற 33 வயது நபர், தன் மனைவி கரோலின் மற்றும் தன் 11 மாத குழந்தையுடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்து தன்னை கட்டிபோட்டுவிட்டு மனைவியை கொன்றதாக கூறியிருந்தார். அதன்பின்பு கொள்ளையர்களால் கட்டி போடப்பட்டிருந்த பாபீஸ் மற்றும் குழந்தையை காவல்துறையினர் மீட்டார்கள். இச்சம்பவம் பெரும் […]
சீனாவில் மனைவியை பழிவாங்க வாகனத்தில் வந்து மோதிய நபரை, தடுக்க முயன்ற 7 பேரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள ஜியாங்சு மாகாணத்தில் இருக்கும் நான்ஜிங் என்ற நகரத்தின் சாலையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று நடந்து சென்றவர்களின் மீது மோதியுள்ளது. இதில் இரண்டு பெண்களும் ஒரு நபரும் படுகாயமடைந்தனர். அதன் பின் வாகனத்திலிருந்து இறங்கிய அந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தோழியும், அங்கிருந்த மக்களும் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்தியதோடு அவர் மீது 3 முறை கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் கோகுல் குமார்(30) என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா (26) என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கோகுல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்தனாவும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் […]
தெலுங்கானாவில் நபர் ஒருவர் மனைவி மீது சந்தேகமடைந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் என்ற மாவட்டத்தின் யெறபாலம் என்ற கிராமத்தில் நாகா ஷேஷிரெட்டி மற்றும் நவ்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திருமணம் நடந்ததில் இருந்து முகநூல் உட்பட பல இணையதளங்களை பயன்படுத்துவதில் நவ்யா அதிக விருப்பம் காட்டி வந்துள்ளார். இதனால் ஷேஷிரெட்டி பல தடவை நவ்யாவை கண்டித்துள்ளார். எனினும் அவர் அதனை நிறுத்தததால் இருவருக்கும் […]
சென்னையில் தன் மனைவியை சாதி பெயர் கூறி வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் பாலமுருகன் என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் ஆனந்தராஜ் (30) மற்றும் பாக்கியலட்சுமி (29). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி கர்ப்பமானதால் ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவீட்டாரும் அவர்களை சமாதானம் செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு ஆனந்தராஜ், […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு தொடர்பாக கணவர் ஹேம்நாத்தின் வாட்ஸ்அப் உரையாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. டிவி தொடரில் புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஹேம்நாத்தின் நண்பரான சையது ரோஹித் என்பவர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
மனைவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தில் கல்லூரி விடுதி ஒன்றில் வேலை பார்த்து வருபவர் ரேவந்குமார். இவர் திருப்பதி அருகே உள்ள திம்மப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த நிரோஷா(21) என்ற பெண்ணுக்கும் பெற்றோர் அனுமதியோடு காதல் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான மூன்று நாட்களிலேயே ரேவந் தன்னுடைய மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிரோஷா கடந்த 5 தினங்களுக்கு […]
கணவன் தன்மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டை இட்டதால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள ரேயிலடி ஹாஜியார் நகரில் மாதவன் என்பவர் (வயது 37) வசித்து வந்துள்ளார். இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஆவுடையம்மாள் என்னும் 34 வயதுடைய மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. ஹரிணிதா எனும் <12 வயது> பெண் குழந்தை […]
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி கற்பகவள்ளி ஆகியோர் வசித்து வந்தனர். மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தவர் மனைவியின் நடத்தையில் சந்தேகமிட்டார். இதை அடுத்து அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் அவரது மனைவியை 6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கடந்த 2015ஆம் ஆண்டு சுரேஷ் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் வயிற்றில் இருந்த குழந்தையும் […]
சீரியல் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் […]
தாய் மற்றும் மகள் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கீத கிருஷ்ணன்- கல்பனா. இவர்களுக்கு குணாலிஸ்ரீ(14) மற்றும் மானசா(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏழு தினங்களாக கீத கிருஷ்ணனின் வீடு பூட்டியிருந்ததுடன் அங்கிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை […]
மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி ரைட்டர் தெருவில் நூறுதீன் என்ற 52 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவியும், அல்தாப் என்ற மகனும் உள்ளனர். ஒரு மகளும் இருக்கிறார். அவரின் மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றார். […]
கணவர் ஒருவர் சாப்பிடும் போது தண்ணீர் கொண்டு வர தாமதமாக்கிய மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் தங்கவேல்(77) – காளியம்மாள்(60). தங்கவேல் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல சம்பவத்தன்று தங்கவேல் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாடு நன்றாகவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய […]
திருநங்கை ஒருவர் தன் கணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டவுன்டவுன் மியாமி பகுதியிலிருந்து Ygor Arrudasouza(28) எனும் நபர் தனது மனைவியை கத்தியால் குத்தியதாக காவல்துறையினரிடம் சென்று சரணடைந்துள்ளார். உடனே காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து கத்தியால் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு […]
கணவர் ஒருவர் தன் மனைவியை அடித்து கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தோட்டமேலக்காடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ரமேஷ் – சாந்தம்மா. ரமேஷ் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதில் ரமேஷ் கோபத்தில் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதில் சாந்தம்மா கீழே மயங்கி விழுந்துள்ளார். மேலும் […]
கணவர் ஒருவர் தவறு செய்யாத மனைவியின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தம்பதிகள் தங்கராஜ்-ருக்மணி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கராஜ் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ருக்மணி மிகவும் அழகாக இருந்ததால், அவருடைய கணவர் தங்கராஜ்க்கு சந்தேக புத்தி அதிகமாக இருந்துள்ளது. மேலும் அவர் இரவு வீட்டிற்கு வரும் போது தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் […]
வேப்பூர் அருகே திருமணமான 45 நாட்களில் புதுமணப் பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் அருகே உள்ள வரம்பனூர் என்ற கிராமத்தில் சபரி நாதன் என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் விருதாச்சலம் பூந்தோட்டம் நகரை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமன்றி சங்கீதாவிடம் வரதட்சணை கேட்டு சபரிநாதன் கொடுமை செய்துள்ளார். […]
தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மிகுந்த ஆத்திரம் அடைந்தே காதல் மனைவி மீது ஆசிட் வீசி கொலை முயற்சி செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளி என்ற பகுதியில் 38 வயதுடைய பிரிஜேஸ் என்பவர் வசித்து வருகிறார். அவர் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி அருகே இருக்கின்ற பெண்குலம் கிழக்குப் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரிஜா என்ற பெண்ணை 13 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் […]
கொள்ளிடம் அருகே உள்ள பகுதியில் திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே இருக்கின்ற நல்லூர் மெயின் ரோட்டில் 30 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். டீக்கடை நடத்திவரும் அவருக்கும்,ஆயங்குடி பள்ளம் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதா அவரின் வீட்டில் […]