மதுரை ஜெய் நகரில் தனியார் பள்ளிக்கூடம் அருகே முதியவர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு முதியவர் இரும்பு கம்பி ஆயுதங்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து […]
Tag: கண்காணிப்பு கேமரா
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர்கள் 2 பேர் தங்களது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்பி வீட்டின் மாடியில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அண்ணன் கீழ்தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென மாடியில் இருந்து தம்பி தவறி விழுந்தார். உடனே அவரது அண்ணன் அவரை லாவகமாக பிடித்து காப்பாற்றி காப்பாத்தினார். இதில் தம்பியின் எடை தாங்காமல் அண்ணனும் கீழே விழுந்தார். இந்த விபத்தில் இருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இந்த காட்சிகள் அங்கிருந்த […]
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘சிசிடிவி கேமரா’ கட்டாயம் பொருத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து எம்என்சி தலைவர் டாக்டர் சுரேஷ் சந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது முக்கியமானதாக உள்ளது. அதன்படி, வளாக முகப்பில் 1, நோயாளிகள் பதிவு இடத்தில் 2 மற்றும் புறநோயாளிகள் பிரிவில் 5 என கேமராக்களை பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர விரிவுரை கூடங்கள், ஆய்வகங்கள், அவசர […]
பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம். அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று அறிவுறுத்தினர். இந்த மனு மீது பதிலளிக்க மத்திய […]
ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியாக செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்று விழுப்புரம் ஆரோவில் உள்ள காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டரில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டுமென்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பொருத்தப்படும் […]
சிறைச்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பின்பற்றப்படவில்லை என்பது நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலமாக தெரியவந்துள்ளது. மக்களவை உறுப்பினரான ரவிக்குமார் கைதிகளின் விடுதலையை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் எதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறதா, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள சிறைகளின் விவரங்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் […]
ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் தன் செல்ல நாய், ஆவியாக வந்த நாயோடு விளையாடியதாக கூறியதோடு, அது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜேக் டிமார்கோ, தனது செல்லப்பிராணி, ஆவியாக வந்த நாயுடன் விளையாடியதாக கூறியுள்ளார். மேலும் தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ, 7 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. எனினும், சிலர் அது ஆவியாக வந்த நாய் இல்லை, என்றும், இது வதந்தி என்றும் […]
பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை […]
தமிழகம் முழுவதும் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் மோசடியை தடுக்கும் வகையில் பதிவர்களில் 6 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆள்மாறாட்டம் மற்றும் தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் சமீப காலமாகப் பல இடங்களில் மோசடியாக பத்திரப் பதிவுகள் நடைபெறுவதாக […]
தொடர்ந்து திருட்டு போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் முஸ்லிம் சங்கம் சார்பில் காவலர்களை நியமித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக திருட்டு, போதை பொருள் விற்பனை போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து திருட்டு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தடுக்க காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹாசனா […]
லண்டனில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய தகவலை புலனாய்வாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். லண்டனில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சபீனா டெஸ்லா (28), கடந்த 17ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அதன் பின்பு, அவரை காணவில்லை. அதற்கு மறுநாள் அருகிலிருக்கும் கேடர் என்ற பூங்காவில் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பின்பு, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆசிரியை உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே […]
உலகில் அதிக கண்காணிப்பு கேமராவை நிறுவியுள்ள முதல் நகரமாக டெல்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தங்கள் மாநிலத்தின் மீது அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இதில் ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக்கொண்டு அதிக கண்காணிப்பு உள்ள நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 1சதுரம் மையிலுக்கு 1,827 கேமராக்கள் […]
அமெரிக்காவில் பகல் நேரத்தில் அம்மாவுடன் சென்ற சிறுவனை மர்மநபர் கடத்த முயன்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Queens என்ற இடத்தில் இருக்கும் ஒரு சாலையில் Dolores Diaz Lopez என்ற 45 வயதுடைய பெண் தனது கணவரை பார்ப்பதற்காக குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது ஒரு நபர் வாகனத்திலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்து ஒரு குழந்தையை தூங்கி வாகனத்தில் ஏற்றி விட்டார். இதனால் பதறிப்போன Dolores, “கடவுளே என் குழந்தை” என்று அலறியபடி […]
சொகுசு காரில் குடும்பத்துடன் சென்று கோழிகளைத் திருடிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி வள்ளலார் பகுதியில் பூபாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பூபாலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
சிறுமியின் ஆடைக்கு கீழ் தவறாக புகைப்படம் எடுத்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி லியோன் சான் என்ற 26 வயது நபர் ரயில் பயணம் செய்தார் . அதே ரயிலில் பள்ளி சிறுமி ஒருவரும் பயணம் செய்தார். அப்போது லியோன் ரயிலின் கதவிற்கு அருகில் நின்று கொண்டு ரகசியமாக செல்போனின் கேமராவை ஆன் செய்து சிறுமியின் ஆடைக்கு கீழே தவறாக புகைப்படம் எடுத்துள்ளான்.மேலும் அவன் சிறுமிக்கு அருகில் […]