நிறுவனத்திற்கு சொந்தமான 5,315 ஏக்கர் நிலம் மற்றும் நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் அதை மத்திய அரசு ஏற்று நடத்த தயார் நிலையில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேன்டீன் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களையக்கோரி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை இது கண்டன ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா? […]
Tag: கண்டன ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரே அதிமுக கட்சியின் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, அதிமுக ஆட்சிக் காலத்தின் போது எந்த ஒரு வரியையும் உயர்த்தவில்லை. ஆனால் தற்போது குடிநீர் மற்றும் சொத்து வரியை அதிகரித்ததோடு, மின் கட்டண உயர்வையும் 12 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளனர். நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அடைந்ததால் எங்கள் […]
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் […]
விக்ரமசிங்கபுரத்தில் பொது மலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மூன்று விளக்கு திடலில் பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக இயற்கை வளங்களை காப்பது குறித்து விழிப்புணர்வும், வனத்துறையினரின் செயல்பாடுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முல்லை நில தமிழர் கட்சி தலைவர் கரும்புலி கண்ணன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதிகைமலை பாதுகாப்பு இயக்க செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியினர், […]
தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழத்தில் சொத்துவரியை உயர்த்தியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதிலும் நடைபெற்றுள்ளது. மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது, விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும், பெண்களுக்கான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்குபோட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் […]
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி தண்ணீர் தேக்க படாமல் கேரள அரசின் நிர்பந்தம் காரணமாக நீர் இருப்பை குறைத்து தண்ணீரை திறந்து இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சற்றுமுன் தொடங்கி […]
டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் உள்ள தர்கா திடலில் நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டெல்லி பெண் காவல்துறை அதிகாரி சபியா சைபி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுமையா நஸ்ரின்,அபிபா யாஸ்மின், எஸ்.டி.பி.ஐ, அல் சுமையா, மேற்கு மாவட்ட தலைவர் பீர் மைதீன் […]
சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்ட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை செயலாளர் […]
ரயில்வே துறையில் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பாக அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் இணைந்து உரிமைகளுக்காக சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் துளசிமணி, லட்சுமணன், மாரியப்பன், சுசீலா, இளங்கோ, வெங்கடாச்சலம், இடும்பன் போன்றோர் கோரிக்கைகள் பற்றி விளக்கி பேசியுள்ளனர். அதன்பின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ஆர்ப்பாட்டம் பற்றி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்திரக்குடி பகுதியில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான டாக்டர் முத்தையா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஒன்றிய ஜெயலலிதா […]
நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் மற்றும் தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் பழனிப்பன் ஆகியோர் தலைமை தங்கியுள்ளனர். இதனையடுத்து தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொது செயலர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றினால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களை விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்இளங்கோ தலைமை தங்கியுள்ளார். […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையின் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையின் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பொதுமக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அவர்கள் கொரோனா காலகட்டத்தில் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் காளிமுத்து […]
ராமநாதபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் முற்றிலுமாக நீக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட […]
ராமநாதபுரத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தாய் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் பரமக்குடியில் மத்திய, மாநில அரசை கண்டித்து தாய் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில அமைப்பு செயலாளர் முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை, ஹைட்ரோகார்பன் திட்டத்தை […]
விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கிய அரசை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் புதிய தளர்வாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நெசவாளர் காலனி, ஸ்ரீவில்லிபுத்தூர், இனாம் கரிசல்குலம் ஹவுசிங் போர்டு, […]
மது கடையை நிரந்திரமாக மூட வேண்டும் என நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணத்தினால் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு நேரத்தில் மது கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மூடப்பட்டிருக்கும் மது கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பா.ஜ.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கு நகர பா.ஜ.க சார்பாக மது கடையை திறக்கும் தமிழக […]
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட தலைவர் துல்கர்னைன் சேட் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டமானது சமூக இடைவெளியுடன் வீடுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜீத் பொருளாளர் பரிக்கி, மாவட்ட செயலாளர் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 19 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஐந்து விளக்கு அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் மன்றம் சார்பில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அபிநயா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கொரோனா பரவி வரும் காலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் மன்றத்தினர் பரபரப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மக்கள் மன்றத்தின் சார்பில் காரைக்குடி ஐந்து விலக்கு அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பசுமை தமிழகம் மாவட்ட அமைப்பாளர் […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று தெரிவித்தார். இதையடுத்து தேர்தலை ஒட்டி முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை மக்களை ஈர்க்கும் வண்ணம் அறிவித்தார். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டார். இது பல்வேறு தரப்பினரிடையே வரவேற்ப்பை பெற்றது. ஆனால் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு […]
தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை […]
வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டதை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சில தினங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனையடுத்து இவ்வழக்கில் பத்திரிகையாளர், அரசியல் பிரமுகர், காவல் அலுவலர் போன்ற பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே கடுமையான உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் விமன் […]
நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன் என்பதனை நன்றி வணக்கம் என மறைமுகமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அதனைக் கண்டித்து விஜய் -சேதுபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம் என டுவிட்டரில் மிரட்டல் […]
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதிய விவகாரத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பு துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு […]
இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். திரைப்படத் தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று கூறி அவமதித்த இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிடில் அவர் வீட்டின் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் ஓ.டி.டி வில் படங்கள் வெளியிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு என்றும் மேலும் கூறினார்.
நிரந்தரம் இல்லா வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வேண்டுமென தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பணி நிரந்தரம் இல்லாமல் வேலை பார்க்கும் மின்வாரிய தொழிலாளர்களை பணியை நிரந்தரமாக்க, தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சென்ற 15 வருடங்களாக வேலை பார்த்து வரும் 5,000 பேரையும் வேலையில் நிரந்தரம் செய்திட வேண்டும். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி கூலி […]
மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தியும், மின் வாரிய தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசை கண்டித்தும் , திருச்சியில் மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. திருச்சி தெண்ணூறு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய அலுவலகம் முன்பு, மின் வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் மின் வாரியத்தை கண்டித்தும், மத்திய அரசு […]