Categories
உலக செய்திகள்

“ஒரு வருஷத்துக்கு 30,000 குழந்தைகள்”….. உலகின் முதல் செயற்கை கருப்பை கண்டுபிடிப்பு…. வைரல் வீடியோ….!!!!

சர்வதேச அளவில் இன்றைய காலகட்டத்தில் பல தாய்மார்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருவதால் செயற்கை கருவூட்டல், வாடகைத்தாய் முறை என பல்வேறு விதமான முறைகளை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு 3 லட்சம் இறப்புகள் கர்ப்பப்பை பிரச்சனைகளால் ஏற்படுகிறது என்று தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது உலகின் முதல் செயற்கை கருப்பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்லினைச் சேர்ந்த எக்டோலைஃப் என்ற நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கும் கருவி…. வேற லெவலில் அசத்தும் சென்னை ஐஐடி….!!!!

உலகின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அளவில் பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி கடல் அலையின் வீச்சில் டர்பைன் என்ற சுழலியை சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த முறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொழில்நுட்ப கருவிகளை கண்டறிந்து வரும் நிலையில் சென்னை ஐஐடி தற்போது புதிய கருவியை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து சரியாக ஆறு […]

Categories
உலக செய்திகள்

சூரியனை விட 10 மடங்கு பெரியது…. புதிய கருந்துளையை கண்டறிந்த விஞ்ஞானிகள்….!!!

உலகிற்கு மிக அருகில் இருக்கும் கருந்துளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அந்தக் கருந்துளை சூரியனை விட 10 மடங்கு பெரியதாக இருக்கிறது என்றும் அது 1600 லைட் இயர் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஒளியின் வேகத்தில் சென்றால் 1200 ஆண்டுகள் எடுக்கும் அளவிற்கு தொலைவில் உள்ளது. இதற்காக விஞ்ஞானிகள் ஜெமினி நார்த் என்ற தொலை நோக்கியை பயன்படுத்தி உள்ளனர். இந்த தொலைநோக்கி வழியே கருந்துளை மற்றும் அதன் துணை பொருளான சூரியனை ஒத்த நட்சத்திரம் ஒன்றின் இயக்கமும் ஆராயப்பட்டுள்ளது. சூரியனை […]

Categories
தேசிய செய்திகள்

6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளைஞர்…. ஆதார் மூலம் கண்டுபிடிப்பு… நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மகாராஷ்டிராவில் நாக்பூர் ரயில் நிலையத்தில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி சிறுவனை மீட்டு ரயில்வே அதிகாரிகள் நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பேச்சு மற்றும் கேக் புத்திரன் இல்லாத அந்த சிறுவனுக்கு பிரேம் ரமேஷ் என்று பெயரிடப்பட்டது.கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பின்னர் இந்த பெயரை ஆதாரத்திற்கு பதிவு செய்ய அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்ட போது அந்த இளைஞரின்  கைரேகை ஏற்கனவே ஒரு ஆதார் எண்ணுடன் […]

Categories
அரசியல்

பல்வேறு சாதனைகளை புரிந்த சர் சி.வி.ராமன்…. இதுவரை பலரும் அறியாத வியக்கவைக்கும் தகவல் இதோ….!!!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்பியலுக்காக “நோபல்பரிசு”வென்ற ஒரேஇந்தியரான சர் சி.வி.ராமனை கவுரவப்படுத்தும் விதமாக இத்தினம் கொண்டாடப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக சாதனை புரிந்தவர்களின் பிறந்தநாளில் தான் அவர் சாதித்ததுறை தொடர்பாக விழா கொண்டாடப்படும். எனினும் சர் சி.வி.ராமன் நோபல்பரிசு பெற காரணமாகயிருந்த “ராமன் விளைவு கோட்பாட்டை” உலகிற்கு அறிவித்த நாளான பிப்ரவரி 28ம் தேதியை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம். அப்படியெனில் அவர் கண்டுபிடித்தது எவ்வளவுபெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை…. ரூ. 200 கோடி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். மேலும் அவருக்கு சொந்தமான சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைபுலி தானு அலுவலகம், ஞானவேல் ராஜா , எஸ் ஆர் பிரபு ஆகிய தயாரிப்பாளர்களின் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். […]

Categories
உலக செய்திகள்

பாறை துளையிடும் நவீன கருவி…. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்….!!!

பாறைகளைத் துளையிடும் அதிநவீன கருவியை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள எர்த்கிரிட் நிறுவனம் அதிக வெப்பத்தால் பாறைகளை துளையிடும் அதிநவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் 1 நாளைக்கு 1 கிலோமீட்டர் தூரம் வரை துளையிடலாம். இந்த கருவி சுரங்கம் தோண்டுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும். இந்த கருவியின் மூலம் 1 மீட்டர் துளையிடுவதற்கு 300 அமெரிக்க டாலர்கள் செலவாகும். இந்த இயந்திரமானது தற்போது இருக்கும் இயந்திரத்தை விட 100 மடங்கு ஆற்றல் மிக்கதாக இருக்கும் […]

Categories
உலகசெய்திகள்

“பிரபல நாட்டில் சிவாஜி மன்னரின் ஓவியம் கண்டுபிடிப்பு”….!!!!!!!!

சரபோஜி மன்னரின்  மகனான  சிவாஜி மன்னரின் ஓவியம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிவாஜி மன்னனின் ஓவியம் இருப்பதாய் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2006 ஆம் வருடம் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலமாக மன்னர் ஓவியம் பிஇஎம் அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல்முறையாக…… 65 வயது முதியவருக்கு….. EMM நெகட்டிவ் ரத்த வகை கண்டுபிடிப்பு….!!!!

இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவருக்கு அரிய வகை இரத்த வகை EMM நெகட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது, அதை மற்ற நான்கு இரத்த வகைகளாக (A, B, O, அல்லது AB) வகைப்படுத்த முடியாது. மனித உடலில் A, B, O, Rh மற்றும் Duffy உட்பட 42 வகையான இரத்த அமைப்புக்கள் உள்ளன. பொதுவாக, நான்கு வகையான இரத்தக் குழுக்கள் உள்ளன. 375 வெவ்வேறு வகையான ஆன்டிஜென்களிலும் EMM […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 200 ஆண்டு பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிப்பு….. அதிர்ச்சியான ஆட்சியாளர்கள்….!!!

பிரித்தானியாவின் ஷெஷயர் நகரில் அமைந்துள்ள ஆல்டெர்லி எட்ச் என்ற இடத்தில் உள்ள சுரங்கத்தில் தொல்காப்பிய துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சுரங்கம் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறுகிய பாதைகள் மற்றும் சிக்கலான அமைப்புகளை கொண்டிருந்ததால் இதற்கு நுழைந்து ஆய்வு மேற்கொள்ளவது சிரமமாக இருந்தது. இந்நிலையில் தான் நிபுணர்கள் பலரின் உதவியுடன் சுரங்கத்திற்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியடைந்தர். அதாவது அவை அனைத்தும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனையடுத்து 1810 ஆம் ஆண்டுகளுக்குப் […]

Categories
உலக செய்திகள்

நெருப்பிலும் உருகாத ஐஸ்கிரீம்…. விலை எவ்வளவு தெரியுமா?…. “WOW” சொல்ல வைக்கும் புதிய தயாரிப்பு…!!!!

சீனாவை சேர்ந்த சைஸ்கிரீம் என்ற ஐஸ்கிரீம் நிறுவனம் நெருப்பிலும் உருகாத வித்தியாசமான ஐஸ்கிரீம் ஒன்றை தயாரித்துள்ளது. இது ஒரு பக்கம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தாலும் மற்றொரு பக்கம் இதில் அதிக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும்,இதன் விலை அதிகமாக தான் இருக்கும் எனவும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. விலை மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அந்த ஐஸ்கிரீம் விலை 66 சீன யுவான், அதாவது இந்திய ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

தஞ்சையில் தொலைந்து போன புராதன பைபிள்…. பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு….!!!!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து தொலைந்து போன தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மியூசியத்திலிருந்து கடந்த 2005-ல் தொலைந்துபோன 300 வருட பழமையான புராதன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தஞ்சையின் மன்னராகயிருந்த சரபோஜிமன்னரின் கையெழுத்திட்ட அந்த பைபிள் சென்ற 2005-ல் தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

300 ஆண்டுகளுக்கு முன்பு…… காணாமல் போன தமிழின் முதல் பைபிள் கண்டுபிடிப்பு….!!!!

டென்மார்க் நாட்டை சேர்ந்த கிறிஸ்த்துவ தூதரான பார்தோலோமஸ் ஸிகன்பால்க் என்பவர் 1706 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தரங்கம்பாடி பகுதிக்கு வந்தார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்ததும் அங்கு ஒரு அச்சகம் நிறுவினார். இதையடுத்து 1715 ஆம் ஆண்டு பைபிளில் உள்ள புதிய ஏற்பாடு என்ற பகுதியை தமிழில் மொழி பெயர்த்தார். இதுவே தமிழில் முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகமாகும். இந்த பைபிளை தான் சார் வேர்ட்ஸ் என்று மற்றொரு கிறிஸ்துவ தூதர் தஞ்சாவூர் பகுதியை ஆட்சி செய்து வந்தபோது சர்போஜி […]

Categories
உலக செய்திகள்

wow : 2005 இல் காணாமல் போன தமிழ் பைபிள்…. லண்டனில் கண்டுபிடிப்பு….!!!!!!!!

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிள் தஞ்சையில் காணாமல் போனது. இந்த நிலையில் தற்போது லண்டனில் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005 ஆம் வருடம் காணாமல் போன பைபிளை  சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்து இருக்கின்றனர். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீகன்பால் நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முதலாக மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
உலக செய்திகள்

என்னது…. மிதக்கும் வீடா….? பிரபல நிறுவனத்தின் அரிய கண்டுபிடிப்பு இதோ….!!

ஜப்பான் நாட்டில் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான ‘இச்சிஜோ கோமுடென்’ மிதக்கும் வீட்டை உருவாக்கியது. இது வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று அந்நிறுவனம் கூறுகின்றது. இந்த வீட்டின் அமைப்பு தனித்துவமானது என அந்நிறுவனம் கூறுகின்றது. ஏனெனில் இந்த வீடு நீர்ப்புகா தன்மையை கொண்டுள்ளது. இதில் தண்ணீர் அளவு அதிகரித்தவுடன், வீடு மிதக்கத் தொடங்குமாம். மேலும் இந்த வீடு சாதாரண இல்லம் போல் தெரிகின்றது, ஆனால் அதைச் சுற்றிலும் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதும், வீடு […]

Categories
உலக செய்திகள்

நிலவில் தண்ணீர் உருவான ஆதாரம் கண்டுபிடிப்பு…. வியப்பில் உறைந்த விஞ்ஞானிகள்….!!!!

நிலாவை பார்க்க வைத்து சோறு ஊட்டிய காலம் போய் தற்போது நிலாவிற்கே சென்று சோறு சாப்பிடும் அளவிற்கு இன்றைய விஞ்ஞான உலகம் நாளுக்கு நாள் உச்சம் பெற்றுவருகிறது. நிலவிற்கு முதன்முதலில் விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா எனில், முதலாவதாக மனிதர்களை அனுப்பி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது அமெரிக்கா. 2024ஆம் வருடத்திலும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆதிக்கம் செலுத்திவந்த நிலவு ஆராய்ச்சிக்குள் தாமதமாக வந்தாலும், பல்வேறு புது தகவல்களை கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மருந்து கட்டுப்பாட்டு ஆய்வில்….. 41 தரமற்ற மருந்துகள்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் 41 மருந்துகள் தரமற்றதாக இருந்ததாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இவற்றில் பெரும்பாலானவை ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தயார் செய்யப்பட்டது . நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும், மத்திய மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, இதில் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

WOW: 110 வருஷத்துக்கு பின்…. அருணாசலபிரதேசத்தில் கண்டறியப்பட்ட தாவரம்…. என்னென்னு நீங்களே பாருங்க….!!!!

அருணாசலபிரதேசத்தில் சென்ற 1912 ஆம் வருடம் இங்கிலாந்து தாவரவியல் வல்லுனர் ஸ்டீபன் ட்ராய்ட் டன் என்பவர் இந்திய லிப்ஸ்டிக் தாவரம் என்ற அரியவகை செடியை அடையாளம் கண்டறிந்தார். இதையடுத்து காலப்போக்கில் அதனை யாராலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் இந்திய தாவரவியல் ஆராய்ச்சி துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சென்ற வருடம் டிசம்பர் மாதம் அருணாசலபிரதேச வனப்பகுதியில் பூக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மிகவும் உட்புற பகுதியான அஞ்சா மாவட்டத்தில் ஒருதாவர மாதிரிகளை சேகரித்தனர். அதனை ஆய்வு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் பகுதியில்…. “5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதனின் தடயங்கள்”…. கண்டுபிடித்த வரலாற்று ஆய்வாளர்கள்…!!!!

5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டிய வழவழப்பான கற்குழிகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் சாலவாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம காடுகளுக்கு அருகில் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்களின் ஆயுதங்களை தீட்டுவதற்கு பயன்படுத்தி இடங்களை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன், குழுவினர் கண்டுபிடித்துள்ளார்கள். இதுகுறித்து கொற்றவை ஆதன் கூறியதாவது, அன்பில் பிரியன் கொடுத்த தகவலின் […]

Categories
உலக செய்திகள்

22 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்பு…. அவசர எண் அறிவிப்பு….!!!

நேபாளத்தில் தாரா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ட்வின் ஓட்டர் 9-N-AET விமானம் பொக்காராவிலிருந்து நேற்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. அதன் பிறகு சில நிமிடங்களில் தொடர்பை இறந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் அறிவித்தார். இதையடுத்து நேபாள ராணுவத்திற்கு உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் படி அந்த விமானம் லாம்சே ஆற்றின் முகப்பில் விலை சரிவின் கீழ் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இதையடுத்து நேபாள ராணுவம் தரை மற்றும் வான் வழித்தடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றது. அந்த […]

Categories
பல்சுவை

மாணவர்களே…. வீட்டுப்பாடத்தை யார் கண்டுபிடித்தார் தெரியுமா….? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

நாம் பள்ளிகளில் படிக்கும் போது நமக்கு ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் தருவார்கள். இது மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் பிடிக்காது. அந்த வீட்டுப் பாடத்தை யார் கண்டுபிடித்து இருப்பார் என பலமுறை யோசித்திருப்பார்கள். இந்நிலையில் வீட்டுப்பாடத்தை யார் கண்டுபிடித்தார் என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம். இந்த வீட்டுப்பாடத்தை ராபர்ட் நெவிலிஸ் என்பவர் தான் கண்டுபிடித்தார். இவர் இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியராக […]

Categories
உலக செய்திகள்

“பள்ளிப்பேருந்து அளவுள்ள பறக்கும் வகை டைனோசர்”…. புதிய படிமம் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்…!!

பூமியில் டைனோசர்கள் என்ற ஒரு வகை உயிரினம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்துள்ளது என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான பல சான்றுகள் கிடைத்து வருகின்றன. அவற்றில் நிலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் காலகட்டத்தில் உருவில் பெரிய பறக்கக்கூடிய டைனோசர்கள் இருந்து உள்ளன அவை டேரோசார் என அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் நிற பள்ளி பேருந்து ஒன்றை போன்று 30 அடி நீளத்தில் பெரிய உருவம் கொண்ட அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அர்ஜென்டினாவின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நெல்லை கல்குவாரி விபத்து…. சற்றுமுன் 5வது நபர் கண்டுபிடிப்பு….!!!!

நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கினர். அதில் முருகன் மற்றும் விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பதினெட்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அதன் பிறகு இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி நீடித்து வந்தது. அதில் நாப்பத்தி ஏழு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நான்காவது நபர் முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN பூமியின் மையப்பகுதியில்…. 40 லட்சம் மடங்கு ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு….!!!!

பால் வெளியின் மத்தியில் மிகப்பெரிய கருந்துளை இருப்பதற்கான புகைப்படத்தை EHT வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். EHT என்பது உலகைச் சுற்றி அமைந்துள்ள எட்டு ரேடியோ டெலஸ்கோப் புகளின் ஒன்றிணைந்த அமைப்பு ஆகும். இந்த கருந்துளை சூரியனை விட சுமார் 40 லட்சம் மடங்கு பெரிதானது. தற்போது இந்த கருந்துளை சுமார் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தள்ளி இருப்பதாகவும் வானியல் ஆய்வாளர்களால் விளக்கப்பட்டுள்ளது.

Categories
பல்சுவை

போக்குவரத்து விதிமுறைகள் கண்டுபிடிப்பு…. இவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா….? இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்…!!!

போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை கண்டுபிடித்தவர் குறித்து பார்க்கலாம். கடந்த 1858-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வில்லியம் ஃபெல்ப்ஸ் ஈனோ என்பவர் பிறந்தார். இவர் சிறுவயதாக இருக்கும்போது தனது தாயுடன் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த போக்குவரத்து நெரிசலை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது யாருக்குமே தெரியவில்லை. அதன்பிறகு நேரம் செல்ல செல்ல தானாகவே போக்குவரத்து நெரிசல் சரியானது. இதுகுறித்து வில்லியம் வீட்டிற்கு சென்று தீவிரமாக யோசித்துக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி”…. சுடு மண் செங்கல் கட்டிடம், சுவர் கண்டெடுப்பு….!!!!

கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணியின் போது சுடுமண் செங்கல் கட்டிடம் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனில் உள்ள கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளானது சென்ற பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகின்றது. இதுபோலவே கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டு பாசி மணிகள், கண்ணாடி மணிகள், சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய்,  சிறுவர்-சிறுமிகள் விளையாடும்  சில்லுவட்டுகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தென்பெண்ணை ஆற்றில்,” 2,000 வருடங்களுக்கு முன் இருந்த சங்ககால உறைகிணறுகள்”… கண்டுபிடிப்பு ..!!!

தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைகிணறுகள் இருப்பதாக வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கண்டுபிடித்தார். விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்று பகுதியில் கள ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் சிறிது பெரிதுமாக உறைகிணறுகள் இருப்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, பிடாகம் குச்சிபாளையம் எல்லையில் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு செய்தபோது சிறிதான உறை கிணறு இருப்பது தெரியவந்தது. இந்த உறை கிணறு ஆறு […]

Categories
பல்சுவை

வாய கட்டுனா உடம்பு கம்மியாகும்னு சொல்லுவாங்க….. அது நிஜமாவே நடந்துருச்சு….. வாய்க்கு பூட்டுபோடும் புதிய கருவி…!!!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வாய்க்கு பூட்டு போடும் புதிய கருவியை நியூஸிலாந்து ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாயை கட்டினாலே உடல் எடையை ஈஸியாக குறைத்து விடலாம் என்று பலரும் கூறுவர். இந்த சொல்லை நிஜமாக்கும் வகையில் நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று வாய்க்கு பூட்டு போடும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமன் என்பது தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் அனைவரும் இஷ்டத்திற்கு உணவகங்களில் கிடைக்கும் பாஸ்ட்புட் ஐட்டங்களை அதிகளவில் வாங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கப்பூர் கிராமத்தில்… சிவன் கோவிலில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு…!!!

கப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டறியப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கப்பூர் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சோழர் கால கல்வெட்டை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் த.ரமேஷ், விழுப்புரம் கணிப் பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, கப்பூர் ஊரின் வடக்கே செய்தருளி ஈஸ்வரர் என்னும் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கருவறையின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆங்கிலேய படையால் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் எலும்பு கூடுகள்”….. மரபணு ஆய்வில் கண்டுபிடிப்பு….!!!

1857ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் எலும்புக்கூடுகள் மரபணு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம்  அஜ்னாலா நகர் அருகே பழைய கிணறு ஒன்றில் 2014ஆம் ஆண்டு ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றது. இது யாருடையது என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகின. இதையடுத்து பஞ்சாப் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் ஷெராவத், ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு உயிரியல் மையம், உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மரபணு ஆய்வில் ஈடுபட்டார். அதில் அந்த எலும்புக்கூடுகள் மேற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒதுக்கி வைத்த மக்கள்… “அய்யனார் சிலை என்று கண்டுபிடித்த ஆய்வாளர்கள்”… நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…!!

குறவன், குறத்தி என்று நினைத்து பராமரிக்காமல் இருந்த அய்யனார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் சித்துப்பட்டியில் பல்லவர்கால அய்யனார் சிற்பம், பொற்கலை தேவியின் சிற்பம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சிற்பங்களை அப்பகுதி மக்கள் குறவன், குறத்தி சிலை என்று நினைத்து பல தலைமுறைகளாக வழிபடாமல், பராமரிக்காமல் ஒதுக்கி வைத்தனர். கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய கள ஆய்வின்போது இந்த சிற்பங்கள் கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் மனிதனின் மூளையை கண்காணிக்க….!! புது வகையான ஹெல்மெட் கண்டுபிடிப்பு…!!

இஸ்ரேலை சேர்ந்த ப்ரெய்ன் ஸ்பேஸ் நிறுவனம் புதுவிதமான தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த தலைக்கவசத்தை அணிவதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதனின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறியலாம். ஆக்சியாம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து 4 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பிரத்யேகமாக அணிவதற்காக இந்த தலைக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தலைக்கவசத்தின் இஇஜி எனப்படும் மூளை மின் அலை வரைவை பரிசோதிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த…. குழந்தை பேறு வழங்கும்…. தவ்வை சிலை கண்டுபிடிப்பு….

காஞ்சிபுரம் அருகில் அங்கம்பாக்கத்தில் 1100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகில் அங்கம்பாக்கத்தில் 1100 ஆண்டு காலம் பழமைவாய்ந்த தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்க்குமார் மற்றும் ஆய்வு மைய தலைவர் இதுகுறித்து பேசியதாவது, பல்லவர் காலத்திற்கு முன்பு இருந்தே தாய் தெய்வ வழிபாட்டில் தவ்வை வழிபாடு தொன்றுதொட்டு மரபில் இருந்து வந்து இருக்கிறது . இந்த 7 கன்னியர்களுள் தவ்வை குழந்தை பேறு அளிக்கும் தெய்வமாக […]

Categories
மாநில செய்திகள்

புதிய சாப்ட்வேர் கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவர்…. குவியும் பாராட்டு…..!!!!!

இந்திய எல்லையில் அந்நியர்கள் நுழைவதை உடனடியாக தெரிவிக்கும் அடிப்படையிலும், மின்சாதனங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் அடிப்படையிலும் தி.மலை அரசுப் பள்ளி மாணவர் ஜவகர் புதிய சாப்ட்வேர் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இது 10 மீட்டர் தூரம் வரை அந்நியர்கள் வருவதை தெரியப்படுத்தும். இதனை மேம்படுத்தினால் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே அந்நியர்கள் வருவதைக் கண்டறிந்து ஊடுருவலை தடுக்க முடியும் என்று மாணவர் ஜவகர் கூறினார். இவரது அசத்தலான கண்டுபிடிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

ஏலியன் என எதுவுமில்லை…. அதிர்ச்சி உண்மையை…. வெளியிட்ட ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்….!!

வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் யாரும் இல்லை என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள SETI  அமைப்பின் ஆய்வாளர்கள், மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனத்தில் உள்ள முர்ச்சிசன் வைட்பீல்ட் அரே  என்ற உலகின் மிக உணர் திறன் வாய்ந்த  ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ச்சி செய்தனர்.அதன் பின்னர்  144 கோள்களையும்,ஆயிரக்கணக்கான  நட்சத்திரங்களையும் ஆராய்ச்சி செய்தனர். சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய கோள்களில் இருந்து எந்த அதிர்வெண்ணும்  […]

Categories
உலக செய்திகள்

புதிய கண்டுபிடிப்பு…. பூமியின் இரண்டாவது குறுங்கோள்….!!

பூமியின்  இரண்டாவது  குறுங்கோளான    ட்ரோஜன்   தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரோஜன் எனப்படுகின்ற  இந்த புதிய கோளானது பூமியைப் போல சூரியனின்  சுற்றுப்பாதையை  மற்ற விண்வெளி பாதைளுடன் பகிர்ந்து கொள்வது   தெரியவந்துள்ளது . இந்த கோள்  2020 xL  5 என  பெயரிடப்பட்டுள்ளது . இந்த கோள்  கடந்த நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்பாக பூமியை வலம் வந்திருக்கலாம்  என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது , இதுபோன்ற  சிறுகோள்கள்  முக்கியமானவை .  ஆரம்ப காலகட்டத்தில்  சூரிய […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணுக்கு அடியில் அதிசயம்…. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த…. அகழ்வாராய்ச்சி….!

மத்திய பிரதேசத்திலுள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் உள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் கலை மற்றும் பழம்பெரும் கலாச்சார அமைப்பை சேர்ந்தவர்கள் அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு சிவன் மற்றும் பிரம்மாவின் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷ்ணு சிலை கல்சுரிக் காலத்தின் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 40 அடி நீளமுள்ள இந்த […]

Categories
உலக செய்திகள்

குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்…. ‘புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு’…. விஞ்ஞானிகள் அதிர்ச்சி….!!!!

இஸ்ரேல் நாட்டில் ‘ப்ளோரனா’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் மக்கள் 2022-ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த நிலையிலும் கொரோனா உலகை விட்டு ஒழிந்த பாடில்லை. அதோடு மட்டுமில்லாமல் உருமாற்றம் அடைந்த ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்களும் தீவிரமாக […]

Categories
மாநில செய்திகள்

தோட்ட தொழிலாளி மர்ம மரணம்…. குவிந்து கிடந்த கள்ளநோட்டுகள்….!!!

தோட்டத் தொழிலாளி மர்மமாக இறந்து கிடந்த விவகாரத்தில் விசாரிக்கச் சென்ற இடத்தில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் இளங்கோவன் என்பவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்தார். இவர் அதே தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்த போலீசார் தோட்டத்தின் உரிமையாளர் பாண்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒமைக்ரான்….  எந்தெந்த மாவட்டத்தில் பாதிப்பு….? மக்களே எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது 34 பேருக்கு உறுதியாகி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 24 […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோ”…. 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானது…. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு….!!!!

சீன நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டையின் கரு, தற்போது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டறியப்பட்டுள்ள அந்த டைனோசர் முட்டைக்கரு குறைந்தபட்சம் 66 மில்லியன் (6.6 கோடி) ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முட்டைக்கரு தொடர்பான தகவல் உலகிற்கு தெரிய வந்த சம்பவமும் சுவாரசியமானது. அதாவது இந்த முட்டை முதன் முதலில் 2,000 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. அடுத்த 10 வருடங்களுக்கு பத்திரமாக அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டது. அங்கு […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோ”…. 2,300 வருடங்களுக்கு முந்தைய பௌத்தர் காலத்து கோவில்…. பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு….!!!!

பாகிஸ்தானில் 2,300 வருடங்களுக்கு முந்தைய பௌத்தர் காலத்து கோவில் கண்டறியப்பட்டு உள்ளது. அந்நாட்டின் கைபர்பாக்துன்கவா மாகாணம், ஸ்வாட் மாவட்டம், பாஸிரா நகரில் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த கோவில் கண்டறியப்பட்டது. இதை தவிர அந்தப் பகுதியில் இருந்து 2,700க்கும் மேற்பட்ட அருள்பொருள்களும் கண்டறியப்பட்டு  இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பாக டாக்ஸிலா பகுதியில் கண்டறியப்பட்ட கோவில்களை விட, பாஸிராவில் தற்போது கண்டறியப்பட்ட கோவில் மிகப் பழமை வாய்ந்தது என்று அவர்கள் கூறினர்.

Categories
உலக செய்திகள்

3 ஆவது சூரிய கோவில்…. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு….!!

எகிப்தில் அரசர்களை கடவுளாக கருதும் நோக்கில் கி.மு 25 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரிய கோவிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். எகிப்தை பார்வோன் நியூசேர் என்னும் மன்னர் கிமு 25 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்துள்ளார். அப்போது பார்வோன் மன்னர் அரசர்களையும் கடவுளாக பார்க்க வேண்டும் என்ற நோக்கில் கோவில்களை கட்டியுள்ளார். அவ்வாறு கட்டப்பட்ட கோவில்களில் 3 ஆவது சூரிய கோவிலை தற்போது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இதனையடுத்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த 3 ஆவது சூரிய […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் நிபா வைரஸ்க்கு தடுப்பூசி… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை ஆனால் தற்போது தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 2018-ம் ஆண்டும் முதல் முதலில் நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் அந்த நோய் பரவி இருப்பதால் கடும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஜென்னர் இன்ஸ்டியூட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் இணைந்து நிபா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது வெற்றிகரமாக […]

Categories
மாநில செய்திகள்

நகரும் விண்கற்களை கண்டுபிடித்த 2 ஆசிரியைகள்…. குவியும் பாராட்டு…!!!!

நகரும் மின் கருவிகளை கண்டுபிடித்த அரியலூர் அரசு பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசாவுடன் இணைந்து செயல்படும் நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளை கண்டுபிடிப்பதற்கான பயிற்சி அளித்து வருகின்றது. அதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நகரும் விண்கற்களை கண்டுபிடிக்கும் பயிற்சியில் பங்கேற்றனர். அதில் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து 40 […]

Categories
தேசிய செய்திகள்

துப்பு கொடுத்த நாய்… பெண்ணை வன்புணர்வு செய்த வாலிபர்களுக்கும் நேர்ந்த கதி… நாய்க்கு குவியும் பாராட்டு…!!!

ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரை ஒரு மோப்பநாய் கண்டுபிடித்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. குஜராத் மாநிலம், வதேரா என்ற பகுதியில் மூன்று குழந்தைகளுக்கு தாயான முப்பத்தி எட்டு வயதுடைய பெண் ஒருவர் வயல் பகுதியில் வேலை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறு நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் கொலை செய்து விட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

2,000 ஆண்டுகள் பழமையான…. 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிக்காக 17 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கொற்கை அகழாய்வு கள இயக்குநர் தங்கதுரை தலைமையில் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிய நத்தை வகை கண்டுபிடிப்பு…. வைரல்……!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள அம்போலி என்ற பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நத்தை ஒன்றை சத்குரு கடாஜ் மஹராஜ் கல்லூரியில் விலங்கியல் துறையினர் கண்டுள்ளனர். அன்றிலிருந்து இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாட்டின் விஞ்ஞானிகளுடன் இணைந்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர். அந்த ஆய்வில் பிற நத்தை வகைகளை விட பல விதத்தில் இந்த வகை வேறுபட்டு உள்ளது என தெரியவந்துள்ளது. இதனை அனைவரும் வியப்புடன் கண்டனர். இதற்கு “வராடியா”என்று பெயரிட்டுள்ளனர். அந்த நத்தையின் படம் […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் மூலம் இயங்கும்… பறக்கும் கார்… புதிய கண்டுபிடிப்பு….!!!

ஸ்லோவாக்கியில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனை பேராசிரியர் ஸ்டீபன் கெலன் என்பவர் பெட்ரோல் மூலம் இயங்கும் நவீன ஏர் காரை வடிவமைத்துள்ளார். இது பார்ப்பதற்கு பெராரி கார்போல் காட்சியளிக்கும் இது இரண்டரை நிமிடத்தில் பறக்கும் விமானம் ஆக மாறிவிடும். பிஎம் டபிள்யூவின் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வானில் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறக்க கூடிய இந்த ஏர் காரின் சோதனை ஓட்டம் […]

Categories
உலக செய்திகள்

1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை…. தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு….!!!!

இஸ்ரேல் நாட்டின் யவ்னே நகரில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வின்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோழிமுட்டையை கண்டுபிடித்துள்ளனர்.இந்த முட்டை இத்தனை ஆண்டுகளாக உடையாமல் இருப்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அதிலிருந்து வெள்ளை கரு கசிந்து தற்போது சிறிதளவு மஞ்சள் கரு மற்றும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் […]

Categories

Tech |