Categories
மாநில செய்திகள்

BREAKING: கண்டெய்னர் லாரி போட்டாபோட்டி: உயிரிழப்பு…!!!

திருச்சி, மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துவரங்குறிச்சி பகுதியில் 2 கண்டெய்னர் லாரிகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றுள்ளன. போட்டாபோட்டியில் ஒரு கண்டெய்னர் லாரி அருகில் உள்ள இணைச்சாலையில் சென்ற சிமென்ட் லாரி மீது மோதியது. விபத்தில் இரு லாரிகளும் தீப்பிடித்ததில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மணிபால், கிளீனர் பட்டேல் உயிரிழந்தனர்.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. கண்டெய்னர் லாரியில் இருந்து 40 சடலங்கள் மீட்பு…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!

அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியிலிருந்து 40 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சண்டியாகோ என்ற பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்பொழுது அந்த கண்டெயினரில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டு  காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் பயங்கர விபத்து!”…. கண்டெய்னர் லாரி கவிழ்ந்து 54 பேர் உயிரிழந்த பரிதாபம்….!!

மெக்சிகோ நாட்டில் புலம்பெயர்ந்த பணியாளர்கள் சென்ற கண்டெய்னர் லாரி விபத்துக்குள்ளாகி 54 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒரு டிரக்கில் நூற்றுக்கும் அதிகமான அகதிகள் மத்திய அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளனர். அந்தக் கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் உள்ள சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதி நெடுஞ்சாலையில் பயணித்தபோது, அபாயகரமான வளைவில் திரும்பியிருக்கிறது. அந்த சமயத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில், சுமார் 54 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கு அதிகமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கோடம்பாக்கம் – வடபழனி சாலையில் பள்ளத்தில் சிக்கிக்கொண்ட லாரி… போக்குவரத்து பாதிப்பு…!!

சென்னை கோடம்பாக்கம் – வடபழனி முக்கிய சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி செல்லக்கூடிய சாலையானது ஒரு வழி பிரதான சாலையாக மாற்றப்பட்டது. ஏன் மாற்றப்பட்டது என்றால், மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்காக எச்சரிக்கை கொடுக்க கூடிய வகையில் பொதுமக்களுக்கு அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்படும். அதற்கான அறிவிப்பு பலகையை வைப்பதற்காக நள்ளிரவில் கண்டெய்னர் லாரி மூலமாக கொண்டு வந்து […]

Categories
மாநில செய்திகள்

கண்டெய்னர் லாரி விபத்துகள்…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உயர்நீதிமன்றம் கண்டெய்னர் லாரி விபத்துகளைப் பற்றி ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் கண்டைனர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான எடையை ஏற்றி செல்லுவதால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

மனித நேயம் எங்கே போச்சு… உயிருக்கு போராடுனவங்கள காப்பாற்றாம… இப்படியா செய்றது…. என்ன உலகம்…!!!

மராட்டிய மாநிலத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்த விபத்தில் 70 லட்சம் மதிப்பிலான பொருட்களை அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சுருட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம்,உஸ்மானாபாத் என்ற நகரில் சோலாப்பூர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கண்டெய்னர் லாரியில் விலை உயர்ந்த செல்போன், கணினிகள், டிவிகள், பொம்மைகள் மற்றும் மின்னணு பொருள்கள் இருந்தது. அவை விபத்து காரணமாக லாரியில் […]

Categories

Tech |