ஆப்பிரிக்காவில் கண்ணிவெடியில் மாட்டி பேருந்து வெடித்து சிதறியதில் பத்து நபர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். புர்கினோ பாசோவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பக்கத்து நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் தீவிரவாதத்தை அழிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புர்கினோ பாசோ […]
Tag: கண்ணிவெடி
தன்னாட்சி பெற்ற டொனஸ்க் பகுதியில் சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ரிமோட் மூலமாக இயங்கக்கூடிய கண்ணிவெடியை அகற்றும் வாகனம் மூலமாக 10 டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் சாதாரண கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆட்டோ ஒன்று கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியா நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை ஆங்கங்கே புதைத்து வைத்து போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜவஹர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையில் வந்த ஆட்டோ ஒன்று கண்ணிவெடியில் சிக்கி […]
சோமாலியா நாட்டில் கண்ணிவெடி குண்டில் பேருந்து மாட்டி 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கிஸ்மேயோ என்ற துறைமுக நகரத்திற்கு பயணிகளுடன் ஒரு பேருந்து புறப்பட்டிருக்கிறது. அப்போது ஜுபாலேண்ட் என்ற மாகாணத்தில் அரச படையினருக்கும், அல் ஷபாப் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு சண்டை நடந்திருக்கிறது. இந்நிலையில், அந்த பேருந்தானது கண்ணிவெடியில் மாட்டியது. இதனால், பதறிய பயணிகள் மரண ஓலமிட்டனர். இக்கொடூர சம்பவத்தில் 10 பயணிகள் பலியாகினர். […]
ஜம்மு காஷ்மீர் நௌஷேரா பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, அங்கு புதைந்திருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால்வைத்ததால் அது வெடித்து இந்திய ராணுவத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சிகிச்சையின் போது லெஃப்டினன்ட் ரிஷி குமார், சிப்பாய் மஞ்சித் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொருவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ரிஷி குமார் பிகாரைச் சேர்ந்தவர் என்றும், மஞ்சித் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கடற்கரையில் ஒதுங்கிய கண்ணிவெடிகுண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா கடற்கரையில் ஒரு பொருள் கரையொதுங்கியுள்ளது. அந்த பொருளை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பதறிக்கொண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது அந்த மக்கள் கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை தான் பார்த்துள்ளார்கள். இதனால் உடனடியாக அந்த பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அதன் பின் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அது போலியானது என்று தெரியவந்துள்ளது. அதாவது வெடிமருந்து நிரப்பப்படாமல் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக […]