கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் மடையில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அல்லா பிச்சை தெருவில் அப்துல்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் ரகுமான், அப்துல்கலாம் என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் அண்ணன் தம்பி இருவரும் அப்பகுதியில் பெரிய தர்கா பின்புறம் உள்ள கண்மாய்க்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தண்ணீர் செல்லும் மடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த […]
Tag: கண்மாய்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கண்மாயில் அனுமதியின்றி மீன் பிடித்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவில் செல்வக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி வலை போட்டு மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார். இந்த கண்மாய் வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னகுட்டையன்பட்டி பகுதியில் கீழ்சந்தி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயால் 130-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகிறது. அந்த கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சொக்கலிங்கபுரம், சின்னகுட்டியன்பட்டி, ஆலம்பட்டி, சுக்காம்பட்டி, வஞ்சி நகரம், துவரங்குறிச்சி, கருங்காலக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை போட்டி போட்டு பிடிக்க ஆரம்பித்தனர். […]
மதுரையில் கண்மாயில் வாலிபர் பிணமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனது இரு நண்பர்களுடன் அதேபகுதியிலிருக்கும் வடகரை கண்மாய்க்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது நண்பர்கள் அருண் குமாரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் அருண்குமாரை காணவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதனால் அருண்குமார் குடும்பத்தார்கள் அவர்கள் அனைவரும் கடைசியாக சென்ற கண்மாய்க்கு சென்று பார்த்தபோது அவர் அதில் பிணமாக மிதந்துள்ளார். இதனை […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்ரமங்கலத்தில் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள விக்ரமங்கலம் கிராமத்தின் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை சுற்றியுள்ள 8 க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த கண்மாய் விளங்குகிறது. இந்நிலையில் சிலர் இந்த கண்மாயை ஆக்கிரமித்து விவசாய நிலமாக […]