Categories
உலக செய்திகள்

கனடாவில் கோர விபத்து…. பனிப்புயலில் சிக்கி பல முறை உருண்ட பேருந்து… 4 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

கனடா நாட்டில் உருவான பனிப்புயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் கடும் பனிப்புயல் ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் பக்கத்து நாடான கனடா நாட்டிலும் பனிப்புயல் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாண்ட்ரீல்  மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்து கிடந்த முதியவர்… பிண்ணனியில் இருக்கும் சிறுமிகள்…. கனடாவில் பரபரப்பு சம்பவம்…!!!

கனடா நாட்டில் 8 சிறுமிகள் சேர்ந்து ஒரு முதியவரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ரயில் நிலையத்தின் அருகில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சந்தைப்பகுதியில் 59 வயதுடைய ஒரு முதியவரை சிறுமிகள் எட்டு பேர் சேர்ந்து தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக துணை மருத்துவர்களை அழைத்தனர். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
அரசியல்

2022-ன் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?…. சிறப்பு தகவல்கள்…!!!

2022-ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம், இந்த வருடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது: கடந்த 1990 ஆம் வருடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆண்டபோது பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. அதிகமானோர் கூட்டம் கூட்டமாக நாட்டிலிருந்து வெளியேறினர். அதே போல்,  இத்தனை வருடங்கள் கழித்து இந்த வருடம் மீண்டும் தலைப்பான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டார்கள். இதனால் உணவு பஞ்சத்தில் தொடங்கி, மருத்துவ வசதி வரை மக்கள் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் இளைஞர் சுட்டுக்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!!

கனடாவில் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஆல்பர்ட்டா  மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்ராஜ் சிங் (24) என்ற இளைஞர் ஒருவர் வசித்து வந்தார். இவர் எம்டன் நகரில் தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சன்ராஜ் வாகனத்தை வழிமறித்து அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார். இந்நிலையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
உலக செய்திகள்

டிக் டாக் பிரபலம் திடீர் மரணம்… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!!!

கனடாவில் டிக் டாக் பிரபலம் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் மேஹா தாகூர்(21). இவர் மேஹா தாகூர்  டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்கள் மூலமாக நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு கனாடவில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இவரை டிக் டாக்கில் சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்தனர். அதேபோல் இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்துள்ளார். கடந்த 24-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

வேலை செய்ய பெரிய வாய்ப்பு…. இந்தியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன கனடா….!!

இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் கனடா நாட்டில் வசிக்கிறார்கள். கனடா நாடு என்பது பெரும்பாலானவர்களின் விருப்ப நாடாகவே உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தாண்டி அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். கனடா தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை உயர்த்த நிரந்தர குடியிருப்பாளர்களை ஊக்குவித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து நான்கு லட்சம் பேருக்கும் மேலாக வெளிநாட்டவர்களை அனுமதித்தது. இந்த நிலையில் கனடாவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி. ‘ஓபன் ஒர்க் பெர்மிட்டின்’ கீழ் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் படித்த இந்திய மாணவர்… சாலை விபத்தில் உயிரிழந்த பரிதாபம்….!!!

கனடா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற 20 வயது மாணவர் பயின்று வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மிதிவண்டியில் சென்ற அவர் சாலையை கடந்திருக்கிறார். அப்போது, அதிவேகத்தில் வந்த ஒரு லாரி பயங்கரமாக அவர் மீது மோதியது. இதில், கார்த்திக் சில தூரங்கள் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-கனடா நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தம்…. ஜஸ்டின் ட்ரூட்டோ வெளியிட்ட தகவல்…!!!

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூட்டோ தங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே அதிகமான விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார். கொரோனா பரவிய சமயத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அந்த நிலை சரியாகிவிட்டது. இதனிடையே, கனடாவில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரண்டு தரப்பு தூதரகங்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களிடையேயான தொடர்புகளை பலப்படுத்துவது, பரஸ்பர சட்ட உதவிக்கான […]

Categories
உலக செய்திகள்

இந்து பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய கனடா…. புடவையில் வந்த பாதுகாப்பு அமைச்சர்…!!!

கனடா அரசு, இம்மாதத்தை இந்து சமய பாரம்பரிய மாதமாக கொண்டாடும் நிலையில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புடவையில் பங்கேற்று ஜொலித்துள்ளார். கனட அரசு, இம்மாதத்தை இந்து சமயத்தின் பாரம்பரிய மாதமாக கொண்டாட தீர்மானித்திருக்கிறது. கனடா நாட்டில், பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வாழ்கிறார்கள். எனவே தங்கள் நாட்டின் வளர்ச்சியில் இந்து சமயத்தின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முதல் தடவையாக இம்மாதத்தை தேசிய இந்து பாரம்பரிய மாதமாக கடைபிடிக்கவிருக்கிறார்கள். Yesterday, I joined the Hindu […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் குரங்கம்மை பரவல்…. 1444 நபர்கள் பாதிப்பு…!!!

கனடா நாட்டில் மொத்தமாக சுமார் 1444 நபர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் தற்போது குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது நபர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 1444 நபர்கள் குரங்கு அம்மையார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 42 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கனடா நாட்டின் நோய் எதிர்ப்பிற்கான தேசிய அறிவுறுத்தல் குழு, குரங்கம்மை தடுப்பூசியை அளிக்குமாறு பரிந்துரைத்திருக்கிறது. அந்த வகையில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

OMG: ” சுட்டுக்கொன்ற தோழியின் உடலை எரித்த வாலிபர்”… 7 வருடம் சிறை விதித்த கோர்ட்… வெளியான அதிர்ச்சி பின்னணி…!!!!

தவறுதலாக சுட்டுக்கொன்ற தோழியின் உடலை எரித்த வாலிபருக்கு ஏழு வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடா நாட்டின் சர்ரே நகரில் இந்திய வம்சாவளி வாலிபர் ஹர்ஜோத்சிங் தியோ(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோழி பவ்கிரண் தேசி இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் வருடம் ஹர்ஜோத் சிங்கின் பெற்றோர் வீட்டில் தனியாக இருந்திருக்கின்றனர். அப்போது ஹர்ஜோத் சிங்கின் கை துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பவ்கிரண் தலையில் குண்டு பாய்ந்து அவர் […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் இனி புதிதாக வாங்கிய கை துப்பாக்கிகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியாது”…? கன்னட பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மக்கள் இனி புதிதாக வாங்கிய கை துப்பாக்கிகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியாது என கன்னட பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனடாவில் கைதுப்பாக்கிகளின் விற்பனை வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதற்காகவும் இது உடனடியாக அமல்படுத்தப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடா நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய கை துப்பாக்கி முடக்கம் ஒரு உடனடி […]

Categories
உலக செய்திகள்

ஆடைக்குள் மறைத்து கொண்டு வந்த நபர்…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?…

அமெரிக்காவிற்கு, கனடா நாட்டிலிருந்து Calvin Bautista என்ற வகை பாம்புகளை எடுத்து வந்த நபர் கைதான நிலையில், அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய Calvin Bautista என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி அன்று கனடாவிலிருந்து Burmese என்ற மூன்று பாம்புகளை பேன்ட்டிற்குள் மறைத்து கடத்தி வந்த வழக்கில் கைதானார். இந்நிலையில் சில […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்…. காலிஸ்தான் பிரச்சனை பற்றி பேசிய ஜெய் சங்கர்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், கனடாவில் காலிஸ்தான் விவகாரம் குறித்து சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, 13ஆம் வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு, காலிஸ்தான் விவகாரம் குறித்து அவர் தெரிவித்ததாவது, கனடா நாட்டிலிருந்து இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் குறித்து பிரச்சினைகளை இந்தியா எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் வழங்கப்படும் சுதந்திரங்கள் இவ்வாறான சக்திகளால் தவறான […]

Categories
உலக செய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலம்… இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… என்ன காரணம்?…

பாலஸ்தீனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியிருக்கிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த 25 வயதுடைய அஹ்மத் அபு மர்ஹியா என்ற இளைஞர் ஓரின சேர்க்கையாளர். சமீபத்தில் கடத்தப்பட்ட இவர் மேற்கு கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்டவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஓரினச்சேர்க்கையாளர் என்ற காரணத்தால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று ஹெப்ரான் பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு வருடங்களாக அவர் இஸ்ரேலில் […]

Categories
உலக செய்திகள்

கனடாவை அதிர வைத்த பயங்கர சம்பவம்…. 11 பேரை கொன்றவர் யார்?.. நீடிக்கும் குழப்பம்…!!!

கனடாவில் 11 நபர்களைக் கொன்ற கொடூர சம்பவத்தில் குற்றவாளி குறித்து மர்ம நீடிக்கிறது. கனடா நாட்டில் கத்தி குத்து தாக்குதலில் 11 நபர்களை இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது ஒரு நபர் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் Saskatchewan என்ற பிராந்தியத்தில் கடந்த மாதம் பயங்கர கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட இரண்டு சகோதரர்களில் ஒருவரான  மைல்ஸ் சாண்டர்சன், செப்டம்பர் மாதம் ஏழாம் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கொடூரம்… அனுபவமில்லாததால் நேர்ந்த துயரம்… பறிபோன 2 உயிர்கள்…!!!

கனடாவில் ஓட்டுனராக பணியில் சேர்ந்து சில மாதங்களிலேயே அனுபவம் இல்லாத காரணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோக காரணமானவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டில் அபினவ் என்ற ஓட்டுனர் ஒரு டிரெக்கை இயக்கிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதும் நிலை ஏற்பட்டது. விபத்தை தவிர்ப்பதற்காக அவர், வண்டியை திருப்பிய போது எதிரில் வந்த வாகனத்தின் மீது எதிர்பாராமல் மோதி விட்டார். இதில், அந்த வாகனத்தில் இருந்த ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த Mark Lugli என்ற […]

Categories
உலக செய்திகள்

இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்…. பிரபல நாட்டில் “இந்திய பெயர் பலகையை சேதப்படுத்திய பயங்கரவாதிகள்”….. இந்தியா கண்டனம் ….!!!!

பகவத் கீதை பூங்காவின் பெயர் பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன்  பகுதியில் ஸ்ரீ பகவத் கீதா என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு பகவத் கீதையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவின் பெயர் பலகையை  மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் இது பற்றி […]

Categories
உலக செய்திகள்

காபி குடித்துக்கொண்டிருந்த நபர்….. திடீர்னு வந்த டொயிங் சத்தம்…. வாழ்க்கையே தலைகீழாக மாறிய ஆச்சர்யம்….!!!!

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் காபி குடித்திக் கொண்டிருந்த போது வந்த மின்னஞ்சல் மூலமாக வாழ்க்கை அதிர்ஷ்டமாக மாறி உள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் வசித்து வருபவர் Richard Noronha(51). இவர் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய வீட்டில் காபி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இமெயில் ஒன்று வந்துள்ளது. காபி குடித்தபடியே அதனை திறந்து பார்த்த ரிச்சர்ட் மகிழ்ச்சியில் மெய்மறந்து போய் உள்ளார். இதற்கு காரணம் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. கனடாவை தோற்கடித்து “சிறந்த நாடு பட்டத்தை வென்ற சுவிட்சர்லாந்து”…. வெளியான வருடாந்திர அறிக்கை….!!!!

உலகின் மிகச்சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உலகில் உள்ள நாடுகளில் எந்த நாடு சிறந்தது என்பது பற்றி வருடாந்திர அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் us news கடந்த 27-ஆம் தேதி சிறந்த நாடுகளின் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் உலகின் சிறந்த நாடுகளாக வரிசைப்படுத்த வாழ்க்கை தரம், சக்தி, கலாச்சாரம், செல்வாக்கு, பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு சிறந்த நாடுகளுக்கான வரிசையில் கனடா முதலிடத்தை […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் தொடர்ந்து 2 இடங்களில் துப்பாக்கிசூடு…. காவல்துறை அதிகாரி உட்பட இருவர் உயிரிழப்பு…!!!

கனடாவில் தொடர்ந்து இரு இடங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இருக்கும் மிசிசாகா நகரத்தின் ஹோட்டல் ஒன்றில் ஒரு காவல்துறை அதிகாரி சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அப்போது, வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பாக அவர் தப்பிவிட்டார். இது […]

Categories
உலக செய்திகள்

ஆண்களின் விந்தணுவில் ஆபரணமா….? அசத்திய கனேடிய பெண்…. குவியும் ஆர்டர்கள்….!!!!

ஆண்களுடைய விந்தணுவில் கனடிய பின் ஒருவர் நகை செய்து அசத்தியுள்ளார். உலகத்தில் உள்ள அனைவராலும் பெரிதும் விரும்பி வாங்கப்படுவது ஆபரணங்கள் தான். அதுவும் பெண்களுக்கு ஆபரணத்தின் மேல் உள்ள மோகம் சற்றும் குறையாது. தற்போது பெண்களுக்கு இணையாக ஆண்களும் ஆபரணத்தின் மேல் அதிக நாட்டம் கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக நமது மனதிற்கு நெருக்கமானவர்களால் வாங்கி தரப்படும் நகைகள் அல்லது நமக்கு பிடித்தவர்களை ஞாபகப்படுத்தும் நகைகள் எப்போதுமே நமக்கு சிறப்பானவை தான். அப்படித்தான் கனடாவை சேர்ந்த அமாண்டா […]

Categories
உலக செய்திகள்

பிரபல இந்திய கனேடிய இயக்குனர் கொலை…. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கனடா நாட்டின் சர்ரேயில் பிரபல இந்திய கனேடிய இயக்குனர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கனேடிய இயக்குனரான மணி அமர் கனடா நாட்டின் சர்ரேயில் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் வசித்த பகுதியில் அருகில் குடியிருப்பவர்களுக்கு இடையே நடந்த மோதலில் இவர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில் ஒரு நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமர், திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி, ஆசியாவை சேர்ந்த இளைஞர்கள் தீங்கிழைக்கும் குழுக்களோடு சேர்ந்து […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கொண்டாடப்பட்ட தமிழர் திருவிழா… வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள்…!!!

கனடா நாட்டில் தமிழர்களின் பாரம்பரியமான உணவுகளுடன் தமிழ் தெரு திருவிழா கோலாகலமாக,  கொண்டாடப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள Scarborough நகரத்தில் தமிழர் தெரு விழா கடந்த சனிக்கிழமை அன்று கோலாகலமாக நடந்திருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும் வகையில், பிரமாண்டமாக தெரு திருவிழா நடத்தப்படும். Last Saturday, I joined Minister @AnitaAnandMP at @TamilFestTo 2022, a vibrant street festival celebrating Tamil culture with performances and food-like the dosa I […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் துணை பிரதமரை கடுமையாக திட்டிய நபர்… கடுமையாக கண்டனம் தெரிவித்த பிரதமர்…!!!

கனடா நாட்டின் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக இருக்கும் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்டை ஒரு நபர் மோசமாக பேசியதை பிரதமர் கடுமையாக கண்டித்திருக்கிறார். கனடா நாட்டினுடைய துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக இருக்கும் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், அல்பெர்ட்டா நகரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அந்நகரச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் வணிகர்கள் போன்றோரை சந்தித்து பேசியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து ஒரு கட்டிடத்தின் லிஃப்டிற்குள் சென்றார். அந்த சமயத்தில் ஒரு நபர் அவரின் பெயரை கூறி சத்தமாக கத்தினார். மேலும், […]

Categories
உலக செய்திகள்

“நான் ஒரு போதும் என் வாழ்நாளில் இதை எதிர்பார்த்ததில்லை”… இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் நெகிழ்ச்சி பதிவு…!!!!!

கனடாவின் மர்காம் நகரில் உள்ள தெருவிற்கு ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரகுமான் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதன் அருகே இசை புயல் ஏ ஆர் ரகுமான் போஸ் கொடுத்திருக்கின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. கனடா நாட்டின் மர்காம் நகரின் தெருவிற்கு ஏ ஆர் ரகுமான் பெயர் சூட்டுவது இது முதன்முறை அல்ல எனவும் ஏற்கனவே கடந்த 2013 ஆம் வருடம் அல்லாஹ் ரெகா ரஹ்மான் என ஏ ஆர் ரகுமான் பெயரை ஒரு […]

Categories
உலக செய்திகள்

இந்திய தேசிய கொடியில் “Made in China” Tag…… காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் வெடித்த சர்ச்சை…..!!!!

கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரத்தில் சபாநாயகர்களுக்கான 65 வது காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் சபாநாயகர் பங்கு பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சபாநாயகர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவும் இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளார். அதனை தொடர்ந்து காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஒம்பிர்லா தலைமையில் சபாநாயகர் கையில் தேசியக்கொடி […]

Categories
உலகசெய்திகள்

கனடாவில் மளிகை கடை உரிமையாளர் கைது… காரணம் என்ன…? இதோ முழு பின்னணி..!!!!!!

கனடாவில் Aurora நகரில் உள்ள மளிகை கடைக்கு 15 வயது சிறுமி சென்றுள்ள நிலையில் அங்கு கடைக்குள் அவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து கடையின் உரிமையாளரான 70 வயது நபரை கைது செய்திருக்கின்றனர். அவரின் புகைப்படமும் போலீசாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதன்மூலம் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் தங்களிடம் கூறலாம் என்பதற்காக வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தகவல் தருவதற்கான தொலைபேசி […]

Categories
உலக செய்திகள்

மக்களே அலர்ட்!….. “மார்பில் பச்சை குத்தியிருப்பார்”….. போலீசார் விடுத்த எச்சரிக்கை….!!!!

கனடாவில் ரொறன் ரோவில் லியோன் டைரில்(38) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை என்று க்ளென் எவரெஸ்ட் ரோடு மற்றும் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் லியோன் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார் லியோனை மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லியோன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இரண்டாம் நிலை கொலைக்காக தேடப்பட்டு வரும் சதீஷ்குமார் ரயன் ராஜரத்தினத்திற்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், […]

Categories
உலக செய்திகள்

தீப்பிடித்து எரிந்த புல்வெளி‌…. காத்திருந்த அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

புற்களுக்கிடையில் வைத்து ஒருவர் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள கேல்கரி என்ற பகுதியில் உள்ள புற்கள் நிறைந்த பகுதி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அப்போது ஒரு சடலம் ஒன்று எரிந்த நிலையில் புல் வெளிக்கிடையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

கனடாவிற்கு புலம்பெயர்ந்த பாகிஸ்தான் குடும்பம்… வேதனையான அனுபவத்தை கூறும் பெண்…!!!

கனடா நாட்டிற்கு புலம்பெயர்ந்த ஒரு பெண் தான் எதிர்கொண்ட ஏமாற்றங்களை கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டிலிருந்து, அதிக கனவுகளோடு கடந்த 2015 ஆம் வருடத்தில் கனடாவிற்கு தன் குடும்பத்தினரோடு புலம்பெயர்ந்திருக்கிறார் மிஸ்பா நூரின். இவரின் கணவர் பாகிஸ்தான் நாட்டில் பிரபலமான ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்திருக்கிறார். எனினும், கனடா நாட்டில் கட்டிடங்களில் கார்பெட் போடும் வேலை தான் அவருக்கு கிடைத்தது. இது குறித்து மிஸ்பான் கூறுகையில், குழந்தைகளுக்காக வேறு வழியின்றி அந்த வேலையில் இருந்த தன் கணவர், மூட்டுகளில் […]

Categories
உலக செய்திகள்

என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருக்கிறது… ஆனால் நான் இந்தியன் தான்… பிரபல நடிகர் வேதனை…!!!

பாலிவுட் நடிகை அக்ஷய்குமார் தான் கனடா நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பதாக முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் குடியுரிமை தொடர்பில் அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் அவரே முதல் தடவையாக மனம் திறந்து கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, “நான் இந்திய குடிமகன். இந்தியனாகத் தான் இருப்பேன். ஒரு காலத்தில் என் திரைப்படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. அப்போது கனடா நாட்டிற்கு செல்லலாம் என்று தீர்மானித்து அந்நாட்டின் கடவுச்சீட்டை பெற்றேன். அங்கு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் போலியோ வைரஸ்கள்…. ஆய்வுகள் தொடங்க இருப்பதாக தகவல்…. கனடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை….!!!!

முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என நம்பப்பட்டுவந்த நோய்கள் இப்போது மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளைத் தாக்கி நிரந்தரமாக உடற்குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தி விடும் போலியோ எனும் நோய்க்கிருமிகள் அண்மை காலமாக கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில்  பிரித்தானியாவில் 40 வருடங்களுக்கு பிறகு போலியோ நோய்க் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி அமெரிக்க நகரமான நியூயார்க்கில் கழிவுநீரில் மேற்கொண்ட ஆய்வில் போலியோ […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் 1059 பேர் குரங்கம்மை நோயால் பாதிப்பு… பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

கனடா நாட்டில் சுமார் 1059 நபர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார கழகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பாதிப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டில் சுமார் 10,000-த்திற்கும் அதிகமானோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது, கனடா நாட்டில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் பொது […]

Categories
உலக செய்திகள்

பல போராட்டங்களுக்கு பிறகு… நிறுத்தப்பட்ட பிரபல நிறுவனத்தின் பவுடர் விற்பனை…!!!

கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல சட்ட போராட்டங்களை கடந்து ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்படாஸ் என்னும் வேதிப்பொருள் இருப்பதாக கூறி கடந்த 2020 ஆம் வருடம் மே மாதத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல சட்ட போராட்டங்களை கடந்து இறுதியாக அதன் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இது குறித்து அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் 1980-ல் மாயமான இளம்பெண்…. 42 வருடங்கள் கழித்து கிடைத்த தகவல்…. ஏமாற்றத்தில் குடும்பத்தினர்…!!!

கனடாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 1980 ஆம் வருடத்திலிருந்து மாயமானதாக கருதப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் Vanier என்னும் இடத்தில் வசித்து வந்த இளம் பெண் நான்சி, கடந்த 1980 ஆம் வருடம் ஜூலை 16ஆம் தேதி அன்று காணாமல் போனார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் கடைசியாக ஒரு டாக்ஸியில் பயணம் செய்தது தெரிய வந்திருக்கிறது. விசாரணை மேற்கொண்ட போது அவர் தெரிவித்ததாவது, நான் […]

Categories
உலக செய்திகள்

10 லட்சம் வேலைவாய்ப்புகள்…… ரெடியா மக்களே?….. இந்த நாட்டில் சூப்பர் வாய்ப்பு….!!!!

கனடாவில் மே 2021 ஆம் ஆண்டு முதல் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலமாக கனடா பிஆர் பதிவில் விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. கனடாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் காலியாக உள்ளது. கனடாவில் அதிக வேலை வாய்ப்பு விகிதம், குறைந்த வேலையின்மை விகிதத்துடன் இணைந்து புலம்பெயர்ந்தோருக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது 2022 ஆம் ஆண்டில் 4 […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வன்முறை கும்பல்…. பட்டியலில் இடம் பெற்ற இந்திய வம்சாவளியினர்…. போலீசார் எச்சரிக்கை….!!!

கனடாவில் வன்முறை கும்பலை சேர்ந்த 11 பேரை அடையாளம் கண்டறிந்த அந்நாட்டு போலீசார் பொது எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவார்.  இவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும் பொதுமக்கள் இவர்களின் அருகில் இருக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒருங்கிணைந்த படைகளின் சிறப்பு அமலாக்க பிரிவு வான்கூவர் போலீசார் மற்றும் BC ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையிடம் இணைந்து ஒரு பொது எச்சரிக்கையை […]

Categories
உலக செய்திகள்

WOW: மளிகை கடைக்கு போன பெண்ணுக்கு…. அதிஷ்டமாக கிடைத்த பணம்…. ஆச்சரிய சம்பவம்….!!!!!

கனடா நாட்டில் மகள் திருமணத்துக்கு பணத்தை எப்படி தயார் செய்வது என்று எதிர்பார்த்திருந்த பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. நியூ பிரன்ஸ்விக்கில் வசித்து வருபவர் டொனா ஸ்டீவ்ஸ். இவர் அண்மையில் லொட்டோ 6/49 லாட்டரி டிக்கெட் வாங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டொனா மளிகை கடைக்கு சென்றார். அங்கு தான் சில வாரங்களுக்கு முன்பு வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்ததா என பார்க்க முடிவுசெய்தார். இந்நிலையில்தான் அவருக்கு கனேடிய $1 மில்லியன் (ரூ.28,00,49,264.80) பரிசு விழுந்தது […]

Categories
உலக செய்திகள்

மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம்…. தவறாக நடந்த மசாஜ் தெரபிஸ்ட் கைது….!!!

கனடா நாட்டில் மசாஜ் செய்வதற்காக சென்ற பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மசாஜ் தெரபிஸ்ட் கைதாகியுள்ளார். கனடா நாட்டின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள மசாஜ் செய்யும் மையத்திற்கு 40 வயதுடைய  ஒரு பெண் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு மசாஜ் செய்த தெரபிஸ்ட் அந்த பெண்ணிடம் தவறாக நடந்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனைதொடரந்து, அந்த நபர் கைதாகியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி அன்று அந்த நபர் நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் புலம்பெயர்ந்தவர்களுக்கு…. இந்த 10 நகரங்களில் வேலை வாய்ப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கனடாவில் ஏராளமான கனேடியர்கள் பணி ஓய்வு பெறுகின்ற நிலையில் அதிக புலம்பெயர்வர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser கூறியது, நமது சமுதாயங்களுக்கு உதவக்கூடிய வகையில் நாம் தொடர்ந்து வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்ந்தவோரை வரவேற்க இருக்கிறோம். இந்நிலையில் கனடாவில் 10 நகரங்களில் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதாவது, பிரான்ட்போர்ட் , Ottawa, கெலோனா, கியூபெக், கால்கரி, சாஸ்கட்டூன், அபார்ட்ஸ்போர்ட், ஹாலிஃபாக்ஸ், விக்டோரியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கு…. 2 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சீக்கிய தொழிலதிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி தீவிரவாதிகளால் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 329 பேர் உயிரிழந்தனர். இது கனடா நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு புள்ளியாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் சீக்கிய தொழில் அதிபர் ரிபுதமான் சிங் மாலிக் கைது செய்யப்பட்டார். இவர் மீது குற்றமில்லை எனக் கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. அப்போது கடந்த 14-ஆம் […]

Categories
உலக செய்திகள்

போப் ஆண்டவருக்கு பாரம்பரிய கீரிடம் அணிவிப்பு…. பழங்குடியின மக்களின் நெகிழ்ச்சி செயல்…!!!

கனடா நாட்டிற்கு சுற்று பயணமாக சென்ற போப் ஆண்டவருக்கு அங்கிருக்கும் பழங்குடியின மக்கள் கிரீடம் அணிவித்து மகிழ்ந்தனர். உலகில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தலைவராக இருக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸ் கனடாவிற்கு சுற்றுப் பயணமாக சென்றிருக்கிறார். அவர், அல்பெர்டா மாகாணத்தின் மாஸ்க்வாசிஸ் நகருக்கு சென்றார். அந்த நகரில் 19 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபை நடத்திய பூர்வகுடியின குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனவே, அந்த பள்ளிகளுக்கு சென்று பூர்வகுடியின மக்களிடம் மனம் […]

Categories
உலக செய்திகள்

பூர்வகுடியின மக்கள் படுகொலைகளுக்கு… மன்னிப்பு கோரிய போப் பிரான்சிஸ்…!!!

கனடா நாட்டிற்கு சுற்றுப்பயணமாக சென்றிருக்கும் போப் பிரான்சிஸ் அங்கிருக்கும் பூர்வ குடியின குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். போப் பிரான்சிஸ் கனடா நாட்டிற்கு சென்றார். அப்போது அங்கு இருக்கும் அல்பேடா என்னும் பகுதியின் கிறிஸ்தவ பள்ளிகள் உள்ள இடத்திற்கு சென்றபோது அவர் தெரிவித்ததாவது, ரோமன் கத்தோலிக்க பள்ளிகளில் கல்வி கற்ற பூர்வ குடியின குழந்தைகள் மீது வன்கொடுமைகள் நடந்ததற்கு மன்னிப்பு கூறினார். மேலும், அவர் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் முன்பே, கொடும்செயல்களுக்கு மன்னிப்பு கோரும் யாத்திரை […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய மர்மநபர்…. உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம்….!!!!

கனடா நாட்டில் வசிக்கும் இங்கிலாந்தை சேர்ந்த நபர்கள் மீது ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் லேங்கலி என்ற நகரில் இருக்கும் இங்கிலாந்து நாட்டு குடிமக்கள் வாழும் பகுதிக்கு ஒரு மர்ம நபர் சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அவர், திடீரென்று அங்கிருக்கும் மக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் பலர் காயமடைந்திருக்கிறார்கள். மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலத்த […]

Categories
உலக செய்திகள்

குரங்கம்மையிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி….? தகவல் வெளியிட்ட கனடா பொது சுகாதார அதிகாரி….!!

கனடா முழுவதும் 681 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கனடா நாட்டில் 681 பேர் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும், அவர்களுடன் பொருட்களை பகிர்ந்துகொள்பவர்களுக்கும் இந்நோய் தொற்றக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளியாட்கள் வந்து சென்ற பிறகு அந்த இடங்களை சுத்தம் […]

Categories
உலக செய்திகள்

பழி வாங்கும் நோக்கம்…. சாலை விபத்தை உண்டாக்கி… 16 பேரை கொன்ற இந்தியருக்கு ஜாமீன்?…

கனடா நாட்டில் சில இளைஞர்களை பழி வாங்குவதற்காக சாலை விபத்தை உண்டாக்கிய இந்தியாவை சேர்ந்த நபருக்கு பகல் ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் Saskatchewan என்னும் நகரில் கடந்த 2018 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில்  இந்தியாவை சேர்ந்த Jaskirat Singh Sidhu என்ற நபர் தான் இயக்கி சென்ற ட்ரக்கை ஒரு பேருந்து மீது மோதியிருக்கிறார். இதில், அந்த பேருந்தில் இருந்த ஹாக்கி அணியை சேர்ந்த இளைஞர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

போரிலிருந்து தப்பிய முதிய தம்பதி… கனடா சென்றபோது நேர்ந்த நிலை…. பரிதவிக்கும் மகன்…!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதி போரிலிருந்து தப்பி கனடாவிற்கு செல்ல முயன்ற போது இஸ்தான்புலுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த Oksana Korolova-Leonid Korolev என்ற தம்பதி கனடா செல்ல விரும்பி உள்ளனர். ஏதென்சுக்கு சென்று அதன் பிறகு கனடா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் அவர்கள் கனடா சென்றிருக்க வேண்டும். ஆனால், ரொறன்ரோ  மாகாணத்தில் காத்திருந்த உக்ரைன் நாட்டு அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவன […]

Categories
உலக செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. 30 வருடங்கள் கழித்து கைதான மதபோதகர்….!!!

கனடா நாட்டில் 30 வருடங்களுக்கு பின் பாலியல் வழக்கில் மத போதகர் மற்றும் பெண் ஒருவர் கைதாகியுள்ளனர். கனடாவில் கடந்த 1987 ஆம் வருடத்தில் இருந்து 1990 ஆம் வருடம் வரை சிறுமிகள் இருவர் யார்க் பகுதியில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு வழக்கமாக சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமிகளை மத போதகரான Raymond Swash என்பவரும், ஒரு பெண்ணும் சேர்ந்து வன்கொடுமை செய்திருக்கிறார்கள். பாதிப்படைந்த பெண் தற்போது தான், இது பற்றி புகார் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, இந்த […]

Categories
உலக செய்திகள்

“ஏர் இந்தியா குண்டு வெடிப்பு” கைதான நபருக்கு நேர்ந்த விபரீதம்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு….!!!

பிரபல நாட்டில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் ஏர் இந்தியா குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக ரிபுதபான் சிங் மாலிக் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சரே நகரில் வைத்து ரிபு தபான் சிங் மாலிக்கை மர்ம நபர்கள் சுட்டு கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories

Tech |