Categories
உலக செய்திகள்

அவசரக்கால பயன்பாடு… “இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை அங்கீகரித்த கனடா”… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கொரோனாவுக்கு எதிரான அஸ்ட்ரோஜெனேகாவின் தடுப்பூசிக்கு கனடா சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பைசர்- பயோஎன்டெக்  மற்றும் மாடர்னா என்ற இரண்டு நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசிகளுக்கு கனடாவின் சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான சோதனை தரவுகளின் அடிப்படையில் அஸ்ட்ரோஜெனேகாவின் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கனடாவின் சுகாதாரத்துறை தாமதமாக்கி வந்தது. இந்நிலையில் தற்போது  வெளியான ஆய்வின் முடிவில் நாட்டில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்துவதில் புதிய திட்டம்.. துரிதப்படுத்த முடிவு.. கனடாவின் முக்கிய அறிவிப்பு…!!

கனடாவின் சுகாதாரத்துறை ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்தின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது.  கனடாச் சுகாதாரத் துறையான “Health Kanada” பைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் அனுமதியளித்தது. எனினும் நவம்பர் மாதத்தில் வெளியான சோதனையினால் ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதியளிக்க தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது வெளியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்று அறிந்த பின்பு தற்போது அனுமதி அளித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்திற்கு வந்த பெண்…. தள்ளிக்கொண்டு தப்பியோட்டம்… 56 வயது நபர் கைது..!!

கனடாவில் தேவாலயத்திற்க்கு வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக 56 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்  கனடாவில் உள்ள வடக்கு ஏடோபிகோகில் இருக்கும் மவுண்ட் ஒலிவ் செவந்த் டே அன்வண்டிஸ்ட் என்ற தேவாலயத்தில் கடந்த வருடம் டிசம்பர் 27-ம் தேதியன்று ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது இந்த தேவாலயத்திற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். இவரைக் கென்னித் கெயில் என்ற 56 வயதுடைய நபர் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

தம்பதியின் வீட்டிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை… என்ன நடந்திருக்கும்…? குழப்பத்தில் காவல்துறையினர்…!!

கனடாவில் வீட்டிற்குள் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.  கனடாவில்  ஹால்மில்ட்டன் என்ற நகரில் அமைந்துள்ள வீட்டில் சந்தேகப்படும்  வகையில் ஏதேதோ மர்மமான விஷயங்கள் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த வீட்டில் இருந்த குழந்தை உயிரிழந்ததாகவும் அந்நகரில் செய்தி ஒன்று பரவியது. பின்னர் அந்த செய்தி புரளிதான் என்று மற்றொரு செய்தியும் பரவிக்கொண்டிருந்தது.இந்நிலையில்  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்ததாக கூறப்பட்ட குழந்தையை தேடினர். அப்போது அந்த வீட்டின் தரையில் ஏதோ […]

Categories
உலக செய்திகள்

“1700 பேரை கடத்திய நபர்”… இதனால தான் நான் கடத்துனேன்… அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா….?

1700 பேரை கனடாவிற்கு கடத்திய நபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மோகன், ரிச்சி என்ற பெயரால் அழைக்கப்படும் ஸ்ரீ கஜமுக செல்லையா என்ற நபர் கனடாவை சேர்ந்தவர். இவர் சுமார் 1700 பேரை இதுவரை கடத்தியுள்ளார். படகு மூலம் 154 புலம்பெயர்ந்தோருடன் அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்ற செல்லையாவை Turks and Caicos அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ஒரு வருடம்  Turks and Caicos -வில் சிறை தண்டனை அனுபவித்ததார் செல்லையா. அதற்கு […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம்”… இப்போதைக்கு இந்த நிகழ்ச்சி எதுவும் வேண்டாம்… டொரோண்டோ நகர அரசு அறிவிப்பு….!!!

கனடாவில் உள்ள டொரோண்டோ நகரில் நடப்பு ஆண்டின் ஜூலை மாதம் வரை வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனடாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கனடா தினத்தையொட்டி நடைபெற இருந்த அணிவகுப்புகள், திருவிழாக்கள், வானவேடிக்கைகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகள் போன்றவை ஜூலை 1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும்  டொரோண்டோ நகர அரசு நிர்வகிக்கும் சாலைகள், […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு எச்சரிக்கை…. கனடாவுக்கு வாக்குறுதி…. அமெரிக்க அதிபரின் முதல் சந்திப்பு…!!

அமெரிக்க அதிபர் தனது முதல் சந்திப்பில் கனடாவுக்கு உதவுவதாகக் கூறி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முதல் சந்திப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவோடு தொடங்கியுள்ளார். மேலும் காணொலி காட்சி மூலம் கன்னட பிரதமர் மற்றும் பத்திரிகையாளரிடம் பேசிய அமெரிக்க  அதிபர் ஜோ பைடன் சீனாவை எச்சரித்துள்ளார். ஏனெனில் அமெரிக்கா  சீனா ஹூவாய் தகவல் தொடர்பு நிறுவன தலைமை செயல் அலுவலர் மீது வங்கி மோசடி போன்ற பல குற்றச்சாட்டுகளை சுமத்திய […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆயுர்வேத மூலிகை வந்துருக்கு…! முகவரி தாப்பா இருக்கு… பார்சலை பிரித்த போது அதிர்ச்சி… பரபரப்பான சென்னை ஏர்போர்ட் ..!!

ஆயுர்வேத மூலிகை என கஞ்சா பார்சல்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்ததை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கனடாவில் டோரோண்டோ நகரில் இருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு ஆயுர்வேத மூலிகை என மூன்று பார்செல்கள் வந்தன.இந்த பார்சல் நேற்று முன்தினம்(பிப் 22) சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சல் பார்த்து சந்தேகமடைந்தனர்.பின்பு அதிலுள்ள தொலைபேசி எண்ணையும் மற்றும் முகவரியில் விசாரித்தனர். அதில் உள்ள முகவரி தவறாக இருந்ததால் அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

“தப்பே பண்ணாதவங்கள எப்படி அர்ரெஸ்ட் பண்ணலாம்”… உடனே ரிலீஸ் பண்ணுங்க… சீனாவை எச்சரிக்கும் ஜோ பைடன்…!!

குற்றம் செய்யாத 2 கனேடியர்களை  உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஜோ பைடன் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ- வுடன் தனது முதல் அதிகாரபூர்வ சந்திப்பை தொடங்கினார். அப்போது பைடன் தனது முதல் சந்திப்பிலேயே சீனாவை எச்சரித்துள்ளார். ஏனென்றால் சீன தகவல் தொடர்பு நிறுவனமான Huawei-ன்  தலைமை செயல் அலுவலராக பணிபுரியும் Meng Wanzhou என்ற பெண் வங்கி மோசடி செய்ததால் அமெரிக்க அரசு அவர் மீது […]

Categories
உலக செய்திகள்

கஞ்சா மிட்டாய் சாப்பிட்ட 3வயது சிறுமி….! கனடா சம்பவத்தில் தந்தை கைது …!!

கனடாவில் 3 வயது சிறுமி கஞ்சா மிட்டாய் சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் தந்தை கைது செய்யப்பட்டார் . கனடாவில் குய்ண்டே வெஸ்ட் என்ற பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று  அளவுக்கு அதிகமாக கஞ்சா மிட்டாய்  சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். வரும்  […]

Categories
உலக செய்திகள்

கனடா நாடாளுமன்றம் அதிரடி நடவடிக்கை…. கோபத்தின் உச்சிக்கு சென்ற சீனா …

கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம்  ஒன்று நிறைவேற்றப்பட்டதால்  சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . உய்குர் சிறுபான்மையினரை  சீனா இனப்படுகொலை செய்வதாக கனடா பாராளுமன்றத்தில் சட்டபூர்வ அதிகாரம் இல்லாத தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு சீனா பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா இனப்படுகொலை’ தொடர்ந்தால் 2022 ஒலிம்பிக்கை சீனாவிலிருந்து மாற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு  அழைப்பு விடுத்துதிருத்தும் ஒரு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. கனடா நாடாளுமன்றத்தில் 266-0 இந்த தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் பிரதமர் ஜஸ்டிஸ் […]

Categories
உலக செய்திகள்

கோழிகளை கொன்ற காட்டுப்பூனை… “எனக்கு நஷ்டமாயிட்டு இனிமேல் நீ இங்க வரக்கூடாது”… அறிவுரை கூறிய விவசாயி….!!

கனடாவில் விவசாயி ஒருவர் காட்டுபூனைக்கு அறிவுரை கூறியுள்ளார். கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் Chris Paulson என்ற விவசாயி தனது கோழிப் பண்ணையில் இருந்து கோழிகளை திருடிய காட்டுப்பூனையை பிடித்துள்ளார். பிறகு அவர் செய்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், அவர் காட்டுப்பூனையின் கழுத்தை பிடித்து தூக்கி  “உன்னால் எனக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பார். இனிமேல் நீ இங்கு வரவேக் கூடாது” என்று கூறியுள்ளார். பின்னர் தனது பண்ணையில் இருந்து தூரமாக உள்ள […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க எல்லையில் “கொரோனா சோதனை”… விதிகளை மீறினால் “சிறை”… கனடா அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்கா எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. நாடு முழுவதும் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க எல்லைகளில் சோதனைகளை வலுபடுத்த கனடா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா-கனடா  நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு ஆன்சைட் ஸ்வாப் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கோவிட்-19க்கு  எதிர்மறையான சான்றிதழ்களை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனையின்போது யாருக்காவது கோரோனோ இருப்பது […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி”….! 20ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் கைது… புகார் கொடுத்த மாணவிகளின் பின்னணி…!

20 வருடங்களுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கனடா கேல்கரியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1986ல் இருந்து 2016 வரை மைக்கேல் ஆண்ட்ரீசன் என்ற 57 வயது ஆசிரியர் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பெண் ஒருவர் போலீசிடம் வந்து கடந்த 2001-ஆம் ஆண்டு தான் படித்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என புகார் அளித்தார். இதேபோல 1999 முதல் […]

Categories
உலக செய்திகள்

மனைவி வேண்டாம்…! கள்ள காதலி போதும்… விசாரணையில் அதிர்ச்சி …! வசமாக சிக்கிய இந்திய வம்சாவளியினர் ..!!

கனடாவில் இந்திய வம்சாவளியினரான  ஒருவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததன் காரணமாக தன் மனைவியை கொலை செய்த வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியினரான பூபிந்தர்பல் கில் (43)என்பவர் குர்ப்பீட் ரொனால்ட் (37) என்ற வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்ததால் ஜக்தர் கில் (43) என்ற தன்  மனைவியை இருவரும் சேர்ந்து கொலை செய்ததாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு செய்தார்கள். […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் மீது பொருளாதார தடை… பிரபல நாடுகள் எடுத்த அதிரடி முடிவு…!

மியான்மர் ராணுவத்தின் மீது பிரபல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ராணுவம் புதிய அரசின் வெற்றியை ஏற்க மறுத்தது. இதுதொடர்பாக ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சியினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் ஆங் சான் சூகி, மியான்மரின் அதிபர் யு வின் மியின்ட் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

2021செல்வாக்கு மிக்க நபர்கள்… பட்டியலை வெளியிட்ட டைம் பத்திரிக்கை… பட்டியலில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழ் பெண்…!

2021 ஆம் ஆண்டிற்கான டைம் பத்திரிக்கையின் உலக அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் இடம் பெற்றுள்ளார். கனடாவின் நெவெர் ஹவ் ஐ எவர் என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக இலங்கை தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி என்பவர் நடித்துக் கொண்டுள்ளார். 19 வயதுடைய மைத்ரேயி அந்த தொடரில் முதலாம் ஆண்டு தலைமுறை இந்தோ அமெரிக்க பெண்ணாக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு காண நேர்காணலில் 15,000 பேர் கலந்து கொண்டனர். அதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

நான் இப்போது “கோடீஸ்வரன்”…. கனடா நபருக்கு அடித்த “அதிர்ஷ்டம்”…!

கனடாவில் நபர் ஒருவருக்கு லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஜூலி தாம்சன் என்பவருக்கு லாட்டரி சீட்டில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் முதலில் எனக்கு $50000பரிசு விழுந்ததாக நினைத்தேன். ஆனால் அதன் பிறகுதான் தெரியவந்தது எனது பரிசுத்தொகை ஒரு மில்லியன் என்பது. இதனைக் கேட்ட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்க்கையே தற்போது மாற்றப் போகிறது. நான் இப்போது கோடிஸ்வரன் என்று […]

Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு 70ஆயிரம் பவுண்டுகள் சம்பளம்… கவர்ச்சி உடையால் சிக்கல்… வேதனை தெரிவிக்கும் இளம்பெண்..!

கனடாவில் ஆண்டொன்றுக்கு 70 ஆயிரம் பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளியான இளம்பெண் தான் அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். லண்டனில் பிறந்து ரொரன்றோவுக்கு குடிபெயர்ந்த இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரான 29 வயதுடைய இளம்பெண் சப்ரினா சக்கு, கனடாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மற்றும் பயிற்சியின் மூலம் ஆண்டொன்றிற்கு 70,000 பவுண்டுகளை சம்பாதித்து வருகிறார். இவர் எப்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகிறார். அதனால் இவரைப் பார்க்கும் மக்கள் இவர் சம்பாதிக்கும் பணத்தை வேலை செய்துதான் […]

Categories
உலக செய்திகள்

6 நாட்கள் சிறை தண்டனை… உண்மை தெரிந்த பின் ஏற்பட்ட பரபரப்பு… பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கி சமாதானம்…!

சம்மதமின்றி ஆறு நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்த வாலிபருக்கு கனடா அரசாங்கம் நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. கனடாவிற்கு முனைவர் பட்டம் பெறுவதற்காக மமாடி ஃபாரா கமாரா என்ற நபர் மாணவர் விசாவில் வந்துள்ளார். ஒருநாள் போலீசாரின் துப்பாக்கியை ஒரு கருப்பின இளைஞர் பறித்துச் சென்றார். இதனைப் பார்த்த மமாடி ஃபாரா கமாரா உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு அடைத்துள்ளார். அதன் பிறகு அவர் தன் வீட்டிற்குச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பின் அவரது வீட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மாயமான தமிழர்… மீட்ட காவல்துறையினர்… வெளியான புகைப்படம்…!!

கனடாவில் வசித்த தமிழர் காணாமல் போன நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  கனடாவில் வசிக்கும் தமிழர் ராஜதுரை கஜேந்திரன்(56). இவர் கடந்த 14ஆம் தேதியன்று மாலை 5:30 மணியளவில் மாயமானார். Kennadi Rd& Eglinton Ave E என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் ராஜதுரை 5 அடி உயரமும் 9 அங்குலமும் இருப்பார் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் ராஜதுரையின் சில அங்க அடையாளங்களையும் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது ராஜதுரை பத்திரமாக […]

Categories
உலக செய்திகள்

பாதிப்பு எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு… ஆனா, புதுசா ஒரு பிரச்சனை வந்திருக்கு… கனடா அதிகாரி அதிர்ச்சித் தகவல்…!

கனடாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டின் தலைமை பொது சுகாதார அதிகாரி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். கனடாவில் கொரோனாவால் இதுவரை 831,577பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21,397பேர் இறந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் நாளொன்றுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏழு நாட்களாக அது 3000 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கனடாவில் தற்போது மொத்தமாக 33,972 பேர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். பாதிப்புகள் குறைந்து வரும் இவ்வேளையில் கனடா தலைமை பொது […]

Categories
உலக செய்திகள்

தினமும் 6000 பேருக்கா…!அதுவும் இலவசமாவா…! மருத்துவர்களை நெகிழ வைத்த ஹோட்டல் உரிமையாளர்…!

கனடாவைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 6000 மருத்துவப் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் போது முன்னணியில் நின்று வைரஸ் இடம் போராடியவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல. பல்வேறு ஊழியர்களும் தான். அவர்களில் பர்சனல் சப்போர்ட் ஒர்க்கேர்ஸ் நிர்வாக மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களோ, செவிலியர்களோ அல்ல. உடல்நலம் சரியில்லாதவர்கள், முதியோர்கள் ஆகியோரை கழிவறைக்கு அழைத்து செல்வது முதல் உணவு அளிப்பது வரை அனைத்துப் பணிகளையும் செய்பவர்கள்.இவர்களுக்கு சரியான ஒழுங்குமுறை அமைப்புகள் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மாயமான தமிழர்… அங்க அடையாளங்களை வெளியிட்ட போலீஸ்… பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்…!

கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் காணாமல் போனதால் அவர் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால் போலீசாரிடம் வந்து தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த தமிழரான 56 வயதுடைய ராஜதுரை கஜேந்திரன் என்ற நபர் கடந்த 14ஆம் தேதி மாலை 5.30மணிக்கு காணாமல் போனார். அதன் பிறகு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் கடைசியாக கென்னடி எக்ளிண்டன் அவே இ என்ற பகுதியில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது அங்க அடையாளங்கள் சிலவற்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், […]

Categories
Uncategorized உலக செய்திகள்

காதலர் தினத்தன்று மகளை கொடூரமாக கொன்ற தந்தை… காரணம் தெரியாமல் பரிதவிக்கும் தாய்…!

காதலர் தினமான நேற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரணம் தெரியாமல் தன் மகளைப் பிரிந்த தாய் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். கனடாவில் பிரியா-ராஜ்குமார் என்ற தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ரியா ராஜ்குமார் என்ற மகளும் இருந்துள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரியாவுக்கும் அவரது மகளுக்கு பிறந்தநாள். கணவன் மனைவி தனியாக இருக்கும் நிலையில் பிரியாவை அவரது தந்தை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அதேபோல அவர்களின் பிறந்த நாளன்றும் தன் மகளை பிரிந்து […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மீது நம்பிக்கை இல்லை… கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்… கனடா அரசு மீது குவியும் எதிர்ப்பு…!

கனடாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது என தெரியவந்துள்ளது. கனடாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் எம்பிகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அங்கஸ் ரீட் நிறுவனம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 41%பேர் கனடாவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 59 சதவீதம் பேர் கனடா அரசு திட்டமிடுதல் தோல்வி அடைந்துள்ளது என அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்க்கு முன்னதாக தடுப்பூசி போட விரும்பப்படும் […]

Categories
உலக செய்திகள்

பிப்ரவரி 22 முதல்… விமானம் மூலம் வருபவர்களுக்கு கட்டாயம்… சொந்த செலவில் செய்தாக வேண்டும்… கனடா அரசு முக்கிய அறிவிப்பு…!

கனடாவிற்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களிடமிருந்து தப்பிப்பதற்காக அணைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கனடாவில் காரணமில்லாமல் வரும் விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதில் கனடாவுக்கு வருகை புரியும் விமான பயணிகள் தங்களது சொந்த செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன அழகிய பெண்…! இறந்ததாக சடலத்தை தேடும் போலீஸ்… கனடாவில் நடந்த பரபரப்பு சம்பவம் …!!

கனடாவில் மாயமான பெண்ணை கொலை செய்ததாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மாலையில் எட்மண்டனை சேர்ந்த காணாமல் போன 30வயதான பில்லி ஜான்சன் என்ற இளம்பெண்  உயிரிழந்ததாக போலீசார் விசாரணை செய்ததில் தெரியவந்தது. மேலும்  அவரின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கபடாத  நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கென்னித்  கோர்டோரலி (35) என்பவர் பில்லியை கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர் . ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் பக்கத்து வீட்டிற்கு சென்ற பெண்… வீட்டிற்கு திரும்பும் முன் மரணம்… இது தான் காரணமா…?

கனடாவில் அதிக குளிரினால் நள்ளிரவில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள dawson creek என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த பெண் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய அவர் தன் சென்றடைவதற்குள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது -41. 8 டிகிரியில் கடும் குளிரில் அப்பகுதி இருந்ததால் அதனை […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் கதவருகே சடலம்…! கத்தி குத்தோடு கிடந்த குழந்தைகள்…. கனடாவில் கொடூர சம்பவம் …!!

கனடாவில் ஒன்ராறியோவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 38 வயது பெண் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் கையில் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு கத்தி குத்து காயங்களுடன் மற்றொரு 35 வயது பெண்ணும், நான்கு வயது மற்றும் இரண்டு வயது பையனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அப்போது திடீரென்று அந்த வீட்டிற்குள் இருந்த  37 வயதுடைய ஆண் ஒருவர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ஆபத்து வந்துருச்சு… இது அதை விட பயங்கரமா இருக்கும்… விஞ்ஞானிகள் கவலை…!

கனடாவில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதர்காக தடுப்பூசிகளும் போடப்பட்டுவருகிராட்.இதே போன்று கனடாவிழும்  தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் டொராண்டோ நகரில் வசிப்பவர் ஒருவருக்கு பிரேஸிலில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உருமாறிய வைரஸ் முன்பிருந்த வைரஸை விட மிகவும் அதிகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்… நடவடிக்கை எடுக்க உத்தரவு…!

கனடாவைச் சேர்ந்த  காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடுவது போல கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரும் போராடி வருகின்றனர். இதனால் பல இடங்களில் கலவரங்களும் போராட்டங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய தூதரகம் மற்றும் நான்கூவரில் உள்ள துணை தூதரகத்தின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஆகையால் இது தொடர்பாக கனடா […]

Categories
உலக செய்திகள்

“வேண்டாம்! இதனை செய்யாதீர்கள் “… கெஞ்சும் குடும்பம்… கனடாவின் முடிவு என்ன…?

கனடாவில் வசிக்கும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த குடும்பம் நாட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது.  கனடாவில் உள்ள மில்டன் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் வருடத்திலிருந்து போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வரும் 11ம் தேதி அன்று கனடாவிலிருந்து இக்குடும்பம் வெளியேற்றப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் தற்போதிருக்கும் சூழ்நிலையில் எங்களை வெளியேற்றாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு கொரோனாவின் ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

சீச்சீ… இப்படியா செய்வது…. இளைஞரிடம் தாத்தா செய்த வேலை… வீடியோ கேட்கும் போலீஸ்…. கனடாவில் மோசமான செயல்….!!

கனடாவில் இளைஞரிடம் முதியவர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் இருக்கும் Halifax என்ற பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்துக்கு அருகில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் அருகில் வந்த 60 வயதுள்ள முதியவர் ஒருவர் திடீரென்று அந்த இளைஞரிடம் தவறாக நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் உடனடியாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது நீலநிற ஆடை மற்றும் கருப்பு நிற ஷூவும் அணிந்து கொண்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் ஆட்டம்… “தொடரும் வேலை இழப்பு”… கனடாவில் அதிகரிப்பு..!!

கொரோனா  பெரும் தொற்று காரணமாக கனடாவில் தொடர்ந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கனடாவில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். வேலை இல்லாதவர்கள்  சதவீதம் 9.4 ஆக உயர்ந்துள்ளது. இந்த சதவீதம் முந்தைய மாதத்தில் 8.8 ஆக இருந்தது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டின் பெரும்பகுதி கனடாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முடங்கிவிட்டன. கடந்த […]

Categories
உலக செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுமி…. “கண்ணிமைக்கும் நொடியில்”கடலுக்குள் இழுத்த கடற்சிறுத்தை…. வைரல் வீடியோ…!!

வேடிக்கைபார்த்து கொண்டிருந்த சிறுமியை கடற்சிங்கம் ஒரு கடலுக்குள் இழுத்து செல்லும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கனடா நாட்டில் உள்ள ரிச்மாண்ட் நகரத்தில் உள்ள கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த சிங்கங்களை எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு சிறுமி ஒருவரும் தடுப்பு சுவரை உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது நீந்தி கொண்டிருந்த கடல் சிங்கம் உட்கார்ந்துகொண்டிருந்த சிறுமியின் உடையை பிடித்து இழுத்து சென்றுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த நபர் ஒருவர் தாமதிக்காமல் கடற்கரையில் குதித்து சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகர்… அமெரிக்காவில் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

கனடாவின்  பிரபல நடிகர் வயது முதிர்வினால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள ரொறொன்ரோ பகுதியை சேர்ந்த நடிகர் பிளம்மர். இவர் கடந்த 1958 ஆம் வருடத்தில் ஸ்டேஜ் ஸ்டிரைக் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு காலடி வைத்துள்ளார். மேலும் பிளம்மர் மூன்று முறை திருமணம் செய்தவர். சவுண்ட் ஆப் மியூசிக் என்ற திரைப்படத்தில் கேப்டன் வான் டிராப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றார். கடந்த 60 ஆண்டுகளாக திரைப்படங்களில் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் பணிக்கு வரவேண்டாம்… தம்பதிகளை திடீரென வெளியேற்றிய அதிகாரிகள்… நீடிக்கும் மர்மம்..!!

கனடாவில் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பணியாற்றிய தம்பதிகளை காரணம் கூறாமல் அதிகாரிகள் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவை சேர்ந்த தம்பதிகள் Dr. Xingguo Qui மற்றும் Kedding cheng இருவரும் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இத்தம்பதியினர் திடீரென்று ஆய்வகத்திலிருந்து அதிகாரிகளால் வெளியேற்றபட்டனர். சக அறிவியலாளர்களுக்கு இத்தம்பதிகள் இனிமேல் பணிக்கு வரமாட்டார்கள் என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக அவர்கள் வெளியில் அனுப்பப்பட்டார்கள் என்பதற்கான காரணங்கள் ரகசியமானவை என்றும் அதனை தெரிவிக்க […]

Categories
உலக செய்திகள்

“இது தீவிரவாத அமைப்பு”… உலகிலேயே முதலாக… அதிரடியாக அறிவித்த கனடா…!!

உலகில் முதல் நாடாக கனடா, அமெரிக்காவில் பிரபலமாகி வரும் proud Boys குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட குழு “proud Boys”. இந்த குழு தீவிர வலதுசாரிக் கொள்கைகளை கொண்டுள்ளது. கனடா இந்த குழுவினை “தீவிரவாத அமைப்பு” என்று அறிவித்திருக்கிறது. மேலும் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் இந்தக் குழு […]

Categories
உலக செய்திகள்

சில லட்சம் கொடுத்து வாங்கிய பழைய வீடு… உள்ளே சென்ற இளைஞர் கோடீஸ்வரன் ஆன அதிர்ஷ்டம்…!

கனடாவில் வசித்த இளைஞர் ஒருவர் இலட்சத்திற்கு வாங்கிய வீட்டிற்குள் கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடுத்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் உள்ள ஒட்டாவாவை சேர்ந்தவர் அலெக்ஸ் ஆர்ச்போல்ட் என்பவர். இவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அலெஸ்க்கு அதே பகுதியை சேர்ந்த பியானோ இசை ஆசிரியரான பெட் ஜோன் ரேக் என்ற 76 வயது மூதாட்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெட் ஜோன் […]

Categories
உலக செய்திகள்

பறவை சத்தத்தைக் கேட்டு பின்னால் சென்றேன்… அபூர்வ காட்சியை கண்டு அசந்து நின்றேன்…ஆச்சரியத்தில் மூழ்கிய கனேடியர்…!

கனடாவில் பறவை சத்தத்தைக் கேட்டு பின்னால் சென்றவர் வேறொரு காட்சியை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார். கனடாவிலுள்ள நோவா ஸ்கோஷியாவில் வசிப்பவர் பில் ஜில் என்பவர். இவர் ஒரு நாள் அவரது வீட்டுத் தோட்டத்தில் இரண்டு பறவைகள் சத்தத்தை கேட்டுள்ளார். சத்தம் கேட்ட பக்கத்தை நோக்கி சென்றபோது அவர் அங்கு ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார். அவர் அங்கே இரண்டு தலைகள் உள்ள கௌதாரி இரை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தார். ஒரு உடலில் இரு தலைகள் இரை உண்பதை கண்ட […]

Categories
உலக செய்திகள்

யாருக்கோ பரிசு விழுந்துவிட்டதே… பொறாமையில் பொங்கியவருக்கு… என்ன கிடைத்தது தெரியுமா…?

கனடாவில் மாகாண வரலாற்றிலேயே முதன் முறையாக லாட்டரியில் மிக பெரிய பரிசுத்தொகையை ஒருவர் பெற்றிருக்கிறார்.  கனடாவிலுள்ள மணிடோபா என்ற மாகாணத்தில் இருக்கும் வின்னிபெக் என்ற நகரில் வசிப்பவர்  John Chua. இவருக்கு இந்த மாகாண வரலாற்றிலேயே முதல் முறையாக லாட்டரியில் மிகப்பெரிய தொகை விழுந்துள்ளது. அதாவது $60 மில்லியன் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து John Chua  கூறியுள்ளதாவது, கடந்த மாதம் 23ம் தேதியன்று நான் தூங்கிக்கொண்டிருக்கையில் என் மனைவி என்னை அவசரமாக எழுப்பி, வின்னிபெக்கில் லாட்டரியில் $60 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

சூட்கேசுக்குள் நிர்வாணமாக இருந்த அழகிய பெண் சடலம்… தீர்ப்பளித்த வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்வி? மீண்டும் விசாரிக்க உத்தரவு…!

கனடாவில் ஆங்கிலம் கற்க வந்த ஜப்பானிய பெண் சூட்கேசுக்குள் நிர்வாண சடலமாக  கண்டெடுக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே தீர்ப்பளித்த நிலையில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து கனடாவிற்கு நட்சுமி கோகாவா என்ற இளம் பெண்ணும் வில்லியம் ஷ்னீடர் என்பவரும் ஆங்கிலம் கற்பதற்காக வந்தனர். கனடா வந்த நான்கே மாதத்தில் நட்சுமி காணாமல் போனார். ஜப்பானில் இருக்கும் தனது மனைவிக்கு போன் செய்வதாக தனது சகோதரரிடம் வில்லியம்  மொபைல் வாங்கி பேசியிருக்கிறார். அப்போது அவர் தன் மனைவியிடம்,நட்சுமி மரணம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

சலூன் கடையை ஸ்டூடியோவாக மாறியது எப்படி?..கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெண்ணின் புத்தி கூர்மை…!

கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த பெண் ஒருவர் தனது தொழிலை மாற்றி அமைத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கனடாவில் இருக்கும் பெண் ஒருவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட போது தனக்கு புத்தி கூர்மையால் யோசித்து அதனை சமாளித்து வருமான ஈட்டியுள்ளார். கனடா ஒன்டாரியோ பகுதியை சேர்ந்தவர் அலிக்கா ஹிட்லர். இவர் அப்பகுதியில் குரோம் ஆர்டிஸ்ட் பார்மர் என்ற சலூன் கடை […]

Categories
உலக செய்திகள்

தீடீரென சுற்றி வளைத்த அதிகாரிகள்… அதிர்ந்து போன பெண்… இது தான் காரணமா..?

கனடாவில் பிசிஆர் சோதனை செய்யாததால் பெண் ஒருவர் அதிகாரிகளால் ரகசியமான இடத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Nikki Mathis. இவர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதன் பின்பு கனடா திரும்பிய Nikki கால்கரி விமான நிலையம் வந்தபோது அதிகாரிகள் அவரின் ஆவணத்தை பரிசோதித்துள்ளனர். அதன் பின்பு Nikkiயை பல அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு வெள்ளை நிற வேனில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் எங்களுடன் வரவில்லை எனில் கைது […]

Categories
உலக செய்திகள்

அங்கிருந்து யாரு இங்க வரக்கூடாது… கனடாவிற்கு தடை விதித்த சீனா…!

கனடாவிலிருந்து வருபவர்களுக்கு சீனாவிற்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து சீனாவிற்குள் நுழைய தற்கலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, சீன வாழிட உரிமை வைத்திருப்பவர்கள், வெளிநாட்டினர், வேலை காரணமாகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கனடாவிலிருந்து சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை டிப்ளமாட்டிக் மற்றும் சுவிஸ் விசா வைத்திருப்பவர்களை இந்த தடை பாதிக்காது. கனடாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4255 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பலியானோரின் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்… ஒரு மாதம் கழித்து புகார்..? காவல்துறையினர் கோரிக்கை…!!

கனடாவில் கடந்த வருடம் மாயமான பெண் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் கிடைக்காததால் காவல்துறையினர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.  கனடாவிலுள்ள வின்னிபெக் என்ற பகுதியில் வசித்து வந்த 29 வயதுள்ள இளம்பெண் ஜியேன்னி மெக்கன்னி. இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி என்று மாயமானார். ஆனால் இவரின் குடும்பத்தினர் கடந்த மாதம் 26ம் தேதி அன்று தான் காவல்துறையினரிடம் மெக்கன்னி மாயமானதாக புகார் அளித்துள்ளனர். இதனால் மெக்கன்னியின் குடும்பத்தினர் இவ்வளவு நாட்கள் கழித்து […]

Categories
உலக செய்திகள்

குடலில் கிழிந்த கவர்… ரத்தத்தில் பரவியதால் இளைஞர் மரணம்… தாய் சந்தேகம்…!!

கனடாவில் போதைக்கு அடிமையாகி சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் மரணமடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவரின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.  கனடாவின் ஒன்ராரியோ என்ற பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் Jordan Sheard . இவர் அடிக்கடி போதைப்பொருள் உபயோகித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடலில் ஏதேனும் போதைப்பொருள் வைத்திருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்பும் சிறைக்கு செல்லும் முன்பும் காவல்துறையினர் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவரிடம் […]

Categories
உலக செய்திகள்

ஸ்கேன் செய்தபின் சிறைக்குச் சென்ற இளைஞன்… உயிரிழந்தது எப்படி? தாய் எழுப்பிய கேள்வியால் திணறும் அதிகாரிகள்…!

கனடாவில் ஸ்கேன் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் போதைப் பொருளால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் போதை பொருள் பயன்படுத்திய ஜோர்டான் ஷீர்ட் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போதைப் பொருள் எதையாவது மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அறிவதற்காக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் ஸ்கேனில் அவர் அப்படி எதையும் மறைத்து வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட ஜோர்டான் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் வெளிவந்த […]

Categories
உலக செய்திகள்

கனடாவுக்கு வந்தா சொந்த செலவுல இதெல்லாம் பண்ணனும்… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரதமர்…!!

கனடாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் ஹோட்டலில் மூன்று நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கொரோனா பரிசோதனையை அவர்களுடைய சொந்த செலவிலேயே செய்ய வேண்டும் என்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக  இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்ட்டின் ட்ரூடோ,” கனடாவிற்கு வரும் பயணிகள் கட்டாயம் மூன்று நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுடைய சொந்த செலவில் பிசிஆர் […]

Categories

Tech |