கனடாவில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் விரட்டிச் சென்று காரை ஏற்றி பிடித்த அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் டொராண்டோ பாதுர்ஸ்ட் மற்றும் கிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கனடாவில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே மக்கள் அனைவரும் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்த மக்கள் அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், சந்தேகநபர் ஒரு பெரிய […]
Tag: கனடா
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் உலக நாட்டு தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி […]
தனது மனைவி சோபியா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அலுவல் பணிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டிலிருந்து மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியா கிரிகோரி (Sophie Grégoire) சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்று திரும்பினார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நலம் பெற்று வருவதாகவும், […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் […]
கொரோனா வைரசால் கனடாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 71 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 655 பேர் […]
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை மொத்தம் 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் […]
இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில் இந்தியர்களுக்கு கனடா அதிகம் முக்கியத்துவம் அளித்து குடியுரிமை வழங்கி வருவதாக நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 தேதி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அங்கு வசித்துவரும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் அந்நாடு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இதனிடையே, இந்தியர்களுக்கு கனடா அதிகம் முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குடியுரிமையை […]