கனடாவில் வசிக்கும் தம்பதி, டெல்லியில் மகனை தனியாக விட்டுவிட்டு தவித்துவருகிறார்கள். இந்தியாவை சேர்ந்த தம்பதி Nupur மற்றும் Ajay Soin. இவர்களுக்கு கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனைத்தொடர்ந்து, Ajay கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்றிருக்கிறார். Nupurக்கு ஏற்கனவே திருமணமாகி Shaurrya என்ற 15 வயது மகன் உள்ளார். இந்நிலையில் Nupur தன் கணவரை பார்க்க visitor visa மூலம் கனடா சென்றுவிட்டார். இவர்கள் […]
Tag: கனடா
இந்தியாவிற்கு உதவும் நோக்கில், கனடா அனுப்பிய 300 வென்டிலேட்டர்கள் வந்துசேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் கனடா அரசு சுமார் 300 வெண்டிலேட்டர்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. அவை இந்தியாவிற்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய வெளிவிவகாரத்துறை முகநூல் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் “சர்வதேச ஒத்துழைப்பு தொடர்கிறது, நமது தோழனான கனடா […]
கனடாவை சேர்ந்த தம்பதி, குழந்தையை தத்தெடுக்க இந்தியா வந்த நிலையில், பயண தடையால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் தம்பதி Hari Gopal Garg மற்றும் Komal Garg. இவர்கள் இந்தியாவில் ஒரு குழந்தையை தத்தெடுக்க கடந்த மார்ச் மாதம் வந்திருக்கிறார்கள். அவர்கள் கனடாவிற்கு திரும்ப இரண்டு நாட்கள் இருந்தபோது இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனால் கனடா செல்லும் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கனடா அரசு தங்கள் […]
கனடாவில் பிரபல இசையமைப்பாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் எட்முன்ஸ்டன் என்ற பகுதியில் வசித்த இசையமைப்பாளர் கில்ஸ். இவர் இசைக் கலைஞராக புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர். இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உயிர் பிரியும் சமயத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இருந்துள்ளார். இவரின் உயிரிழப்பு, சமூகத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று கூறிய எட்மன்ஸ்டன் முன்னாள் மேயர் சிரில் சிமர்ட் கூறியுள்ளார். மேலும் அதிக காலத்திற்கு நம் […]
கனடாவில் சடலம் ஒன்று நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்மேற்கு மணிடோபாவின் கிராமப்புற நகராட்சியான சோரிஸ்-க்ளென்வுடில் என்ற பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு ஒருவர் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றினர். ஆனால் உயிரிழந்தவருடைய வயது, பாலினம் மற்றும் அவரை பற்றிய ஏனைய விவரங்கள் குறித்து இன்னும் காவல்துறையினர் தகவல் வெளியிடவில்லை. மேலும் சடலமாக கிடந்தவருடைய மரணத்தில் சந்தேகம் எதுவும் உள்ளதா […]
கனடா குடியுரிமை பெற்ற குடும்பம் தாயின் இறுதிச்சடங்கிற்காக இந்திய வந்த நிலையில், பயண தடையால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. கனடாவின் குடியுரிமை பெற்று Anurag Sharma என்பவரின் குடும்பத்தினர் கடந்த மார்ச் மாதத்தில் அவரது தாயின் இறுதிச் சடங்கிற்காக இந்தியாவிற்கு வந்துள்ளனர். இறுதி சடங்கு முடிவடைந்த பின்பு மே 2 கனடா செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் கனடாவிற்கு செல்லும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பயணம் ரத்தானதால் […]
கனடாவில் தமிழினத்தை அழிப்பது தொடர்பில் கொண்டுவந்த அறிவியற்கிழமைக்குரிய சட்டமூலம் சட்டமாக்கப்பட்டிருக்கிறது. கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்றத்தில் இலங்கை அரசை எதிர்த்து தமிழினம் அழிப்பது குறித்து கொண்டு வந்த அறிவியற்கிழமைக்குரிய சட்டமூலம் நேற்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது. ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் இந்த சட்ட மூலத்தை மூன்றாம் வாசிப்புக்கு கொண்டுவந்திருந்தார். இந்நிலையில் சட்டம் மூலம் சட்டமாக்கப்பட்டிருக்கிறது. இது இலங்கை அரசிற்கு புதிய சிக்கலை உண்டாகியிருப்பதாக விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.
கனடாவில் கட்டுமான தளத்தில் கான்க்ரீட் வாளி மோதி தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் நேற்று மதியம் சுமார் 2:30 மணிக்கு தொழிலாளி ஒருவர் கட்டுமான தளத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கான்கிரீட் வாளி ஒன்று அவர்மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முழு விபரங்கள் கிடைக்காத நிலையில், ஒன்றாரியோ தொழிலாளர் அமைச்சகதிடமிருந்து […]
கனடாவில் வாழும் பூர்வக்குடியின பெண்கள் பலர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க பெண்கள் நேற்று சிவப்பு நிற உடை அணிந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுபான்மையினரை, வலியவர்கள் தாக்கும் சம்பவங்கள் உலகின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதனால் எளியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த கொடுமைகள் கனடாவில் வாழும் பூர்வகுடியினருக்கும் நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக பூர்வகுடியின பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆயிரக்கணக்கில் பெண்கள் மாயமாவதும், […]
கனடாவின் புகழ்பெற்ற ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா தமிழர் பேரவை மற்றும் தமிழ் இருக்கை அறக்கட்டளை அமைப்புகள் சேர்ந்து கனடாவின் ரொறன்ரோ பகுதியின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதாவது புகழ்வாய்ந்த ரொறன்ரோ பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க சுமார் 17.1 கோடி பணம் தேவைப்பட்டது. எனவே அதற்கான நிதி திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக உலகெங்கிலும் இருக்கும் தமிழ் மக்கள் நிதியளித்து வந்தனர். […]
கனடாவில், இளைஞர் ஒருவர் தன் பெற்றோர் கண்முன்னே கடலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த தம்பதிகள் Don Jayasinghe மற்றும் Chandima. இவர்களது மகன் Supul Jayasinghe (21). இந்நிலையில் இவர்கள் மூவரும் கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று Supul ன் தேர்வு முடிவடைந்ததை கொண்டாடுவதற்காக Flatrock பகுதியிலிருக்கும் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது உயரமாக இருந்த பாறையில் Supul தன் நாயுடன் ஏறியுள்ளார். இதனை கண்ட Supulன் தந்தை […]
கனடாவில் கடந்த 2009 ஆம் வருடத்தில் ஆசிரியர் ஒருவர் 16 வயது சிறுமியை துன்புறுத்திய வழக்கில் தற்போது தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார். கனடாவில் கடந்த 2009 ஆம் வருடம், Mississauga என்ற பகுதியில் வசிக்கும் 39 வயதுள்ள நபர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். அப்போது 16 வயது சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சுமார் 12 வருடங்களுக்கு பின்பு தற்போது தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் […]
கனடாவில் காணாமல் போன சிரிப்பு தொடர்பான தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவில் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த தரணிதா ஹரிதரன்(16) என்ற தமிழ் சிறுமி கடந்த வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் இந்த சிறுமி தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.அதில் தரணிதா கடைசியாக தப்ஸ்கோட் சாலை மற்றும் மெக்லிவன் அவென்யூ பகுதி சாலை வழியாக சென்றார் என தெரிவித்துள்ளனர். தரணிதா ஒல்லியாக இருப்பார் என்றும் அவரின் உயரம் 5 அடி 5 அங்குலம் […]
கனடாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மற்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளை ஒருவருக்கு முழுமையாக செலுத்த இரண்டு டோஸ்கள் கால இடைவெளி விட்டு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க தயாரிப்பான […]
கனடாவில் காணாமல் போன 16 வயது தமிழ் சிறுமி குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடா நாட்டில் 16 வயதுடைய தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக ரொறன்ரோ காவல்துறையினர் புகைப்படத்துடன் தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி கடந்த 29-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது சிறுமி காணாமல் போயிருக்கிறார். மேலும் அந்த சிறுமி இறுதியாக மெக்லிவன் அவென்யூ மற்றும் தப்ஸ்கோட் சாலையில் இருந்துள்ளார். MISSING: Daranita Haridharan, 16 […]
கனடாவில் கொரோனா தொற்றால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி எமிலி கொரோனாவால் பலியாகியுள்ளார். இது குறித்து அவரது தந்தை கூறுகையில் எமிலி கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்றும் அதன்பின் ஐந்து […]
கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு கனடா 10 மில்லியன் டாலர்கள் உதவி செய்யும் என தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, […]
இந்தியாவின் நிலையைக்கண்டு வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்த கனடா அதிபர், சுமார் 10 மில்லியன் டாலர் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்தியா, கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கனடா அரசு இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளதாவது, கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் கனடா மிகுந்த வருத்தமடைந்துள்ளது. இந்த சமயத்தில் எங்கள் நண்பர்களுக்காக உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதனால் சுமார் 10 மில்லியன் […]
கனட நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி வருகின்றது. இத்தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கனடாவில் 4 தடுப்பூசிகளை கொரோனாவினாவிற்கான தடுப்பூசியாக அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது. இந்த 4 தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராஜெனேகாவினால் ரத்தம் உறைதல் போன்ற பக்கவளைவு ஏற்படுகிறது என்ற பயத்தால் மக்கள் அதனை போட்டுக்கொள்ள அச்சமடைந்தனர். இந்த நிலையில் […]
கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களை கனடா அரசு தடை செய்துள்ளது/ கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கனடாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு […]
கனடா கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளிலிருந்து வரும் விமான சேவையை தடை செய்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே பொதுமக்களுக்கு தேவைப்படுகின்ற அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் ஆக்சிஜனிற்க்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் கனடாவிலும் பரவி வரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவைகளில் 1.8% […]
கனடாவில் இருதினங்களில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கனடாவின் டொராண்டோ நகரில் இருவேறு தினங்களில் இரண்டு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. டொரன்டோ நகரில் உள்ள கார்ல்டன் பகுதியில் 29 வயதான பெண் ஒருவர் இரவு 9.15 மணியளவில் மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது அவரை பின் […]
கனடாவில் வீட்டு பிரச்சினை காரணமாக காவல்துறையினரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Kate என்ற இளம்பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினைக்காக காவல்துறை அதிகாரியை அழைத்திருக்கிறார். விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி Const. Brian Burkett அந்தப் பெண்ணிடமிருந்து மொபைல் எண்ணையும் அவரது புகைப்படங்களையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும், ஆபாச படங்களை கேட்டும் துன்புறுத்தியுள்ளார். Kate ஏற்கனவே மனரீதியான வேதனையில் இருந்ததால் மகளிர் அமைப்பிடம் உதவி புகார் […]
கனடாவில் உணவு விடுதியில் வைத்து இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா வான்கூவரில் உள்ள உணவு விடுதியின் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் இருபதாம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் ஹர்பிரீத் சிங் தலிவால் (31) என்ற இளைஞர் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை குறிவைத்து சுட்டுக் கொன்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இந்தச் […]
கனடாவில் போதையில் இருந்த வாலிபர் இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள Manitoba பகுதியைச் சேர்ந்த Brittany Bung எனும் இளம்பெண் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சமையல் கலை பயின்று அதன் மூலம் சொந்தமாக காபி ஷாப் தொடங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று கொண்டிருந்த Brittany காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இளைஞர் ஒருவர் […]
கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் உதவிக்கு அழைக்கப்பட்ட போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல்தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கேட் என்ற இளம்பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கேட் தனது கணவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரி Brian Burkett அந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி அவரின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணையும் வாங்கியுள்ளார். இதனையடுத்து பெண்ணுக்கு குறுந்தகவல் […]
கனடாவின் ஒன்றாரியோவில் கொரோனாவின் 3 ஆம் அலை தீவிரமாக பரவுவதால் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ தெரிவித்துள்ளார். கனடா நாட்டிலேயே அதிக மக்கள் தொகையுள்ள ஒன்றாரியோ மாகாணம் கொரோனாவின் 3ஆம் அலையின் பிடியில் உள்ளது. இதனால் இந்த மாகாணத்திற்கு சுகாதாரப் பணியாளர்களை அனுப்புவதற்கு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் ட்ரூடோ தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவிட்டு […]
கர்நாடகாவில் 2 வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளான நாய்க்குட்டி தற்போது கனடா செல்லவிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி என்ற நகரில் ரேடியோ பார்க்கிற்கு அருகில் இரண்டு மாத நாய்க்குட்டி ஒன்று சுமார் 2 வருடங்களுக்கு முன்பு வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த “Human World For Animals” என்ற அமைப்பு அந்த நாயை பாதுகாப்பாக மீட்டு பெங்களூர் மற்றும் சென்னையில் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, அங்கு […]
கனடாவில் கொரோனா தீவிரம் அமெரிக்காவை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள மிகப்பெரிய மாகாணத்தில் கொரோனா தீவிரம் தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒன்ராறியோவில் சுகாதார பொது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் ஜூன் மாதத்திற்குள் 600 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கனடாவில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்பு அமெரிக்காவை விட […]
கனடாவில் சாலையின் ஓரமாக சென்ற முதியவர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ரொறன்ரோவின் நார்த்யார்க் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது லாரி மோதியது. அவர் சாலையின் கட்டுமான தளத்தில் நடந்து சென்ற போது சாலையில் அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முதியவரின் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே […]
கனடாவில் தடுப்பூசி செலுத்திய நபருக்கு அரிதான ரத்த உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கனடாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்திய நபருக்கு முதன் முறையாக அதிக ஆபத்தான ரத்த உறைவு பிரச்சனை […]
அமெரிக்கா வெளியிட்ட உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் கனடா முதலிடைத்தை பிடித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்த நாடுகளின் பாட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து இருந்தது தற்போது அதனை பின்னுக்குத்தள்ளி கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. கனடா கொரோனாவை எதிர்கொண்டு கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனிடையே சுவிட்சர்லாந்து தற்போது நான்காவது இடத்தை […]
கனடாவில் உள்ள ஒரு பெண்ணுக்கு புதிதாகரத்தம் உறைதல் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவித்துள்ளது. கனடாவில் கியூபெக் மாகாணத்தில் உள்ள பெண் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த அபாயகரமான நோய் கனடாவில் முதன்முதல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், மேலும் உரிய சிகிச்சை தொடர்ந்து வருவதாகவும் கியூபெக் சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார். இதனையடுத்து இத்தகைய நோய் கண்டறியப்பட்ட அந்தப் பெண் […]
கனடாவில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கேரன் மற்றும் ராஸ்மித் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டின் அருகே வசிப்பவர் பிரம்மாண்டமான தோட்டங்களை உருவாக்கும் ஆர்த்தர்(65). இவர் சில தினங்களுக்கு முன்பு தனது இயந்திரங்களை கேரன் வீட்டு தோட்டத்தில் வைக்க அனுமதி கேட்டுள்ளார். மேலும் கேரன் தோட்டங்களையும் பராமரிப்பதாக கூறியுள்ளார். இதனால் கேரன் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்துள்ளார். இந்நிலையில் திடீரென கேரன் […]
கனடாவின் விஸ்லர் நகரில் உருமாறிய பிரேசிலில் கண்டறியப்பட்ட தொற்று மிக தீவீரமாக பரவி வருவதால் நகரம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. மேற்கு கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் விஸ்லர் பகுதியில் தற்போது மிக தீவிரமாக பிரேசில் வைரஸ் பரவி வருகிறது. ஆனால் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி தற்போது வரை சுற்றுலாவிற்கான முழு ஏற்பாடுகளும் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சுமார் 200 நபர்களுக்கு இப்பகுதியில் அபாயகரமான பிரேசில் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரேசில் தொற்று கொலம்பியா […]
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோடைகாலம் முடிவடைவதற்குள் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார். கனடாவில் கடந்த சனிக்கிழமை வரை சுமார் 77,85,807 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.7 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டிருக்கும் உரையில், “கோடைகால இறுதிக்குள் கனடா மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான பாதையில் செல்கிறோம்” என்று […]
கனடாவில் பணியாற்றி வரும் இந்திய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த ரேணு சூரிய பிரசாத் முரிகிபிடி என்ற 29 வயது இளைஞர் கனடாவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் முதுகலை பொறியியல் பட்டதாரி ஆவார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி ரேணுவின் பெற்றோர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்காததால் அவரது நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் அவரின் நண்பர்கள் ரேணுவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது […]
கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்த முகமது யூனிஸ் அலி(21) கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் யூனிஸ்அலி சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்கள் கழித்து உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய இளம் […]
தீவிரமாக கொரோனா பரவி வரும் இந்த சமயத்தில் உலகில் மேலும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. கனடாவில் உள்ள ஒன்றாரியோ மாகாணத்தில் தீவிரமாக பரவும் 3ஆம் கட்ட கொரோனோ அலையை கட்டுப்படுத்த புதிதாக பொது முடக்கம் அறிவிக்கப்படபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வருடம்தோறும் உலகின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் போர்ப்ஸ் பத்திரிக்கையில் இந்த வருடத்திற்கான பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது.
கனடாவில் இளம்பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா ஒன்ராறியோவின் மிடில்செஸ் கவுண்டியில் இளம்பெண் காயங்களுடன் வீட்டில் மயக்கமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல்துறையினர் மருத்துவ உதவி குழுவை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பெண் 3 நாய்கள் சேர்ந்து தாக்கியதால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் […]
கனடாவில் தமிழர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக லாட்டரி சீட்டு பரிசு விழுந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது கனடா ஒன்ராறியோவின் மிசிசாகா நகரில் இலங்கையை சேர்ந்த சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாட்டரி சீட்டு வாங்குவதில் மிகவும் ஈடுபாடு உடையவர். இந்நிலையில் சிவராமனுக்கு பெரிய லாட்டரி சீட்டு பரிசு பணம் 75,000 டாலர் விழுந்துள்ளது. இதுகுறித்து சிவராமன் கூறுகையில் எனக்கு இந்தப் பரிசு விழுந்ததை நம்ப முடியவில்லை என்றும் லாட்டரி டிக்கெட்டை 5 முறை ஸ்கேன் செய்து பார்த்த […]
கனடாவில் தாத்தாவுடன் மீன் பிடிக்க சென்ற 3 வயது குழந்தை காட்டில் மாயமாகிய 3 நாட்களில் போராடி காவல்துறையினர் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் கிழக்கு ஒன்றாரியோ என்ற பகுதியில் இருக்கும் வனப்பகுதி ஒன்றிற்கு Jude Leyton என்ற 3 வயது சிறுவன், தன் தாத்தா chris fisher உடன் சென்றுள்ளார். அப்போது chris ஊஞ்சல் ஒன்றை செய்து கொண்டிருந்த சமயத்தில் குழந்தை மாயமாகியுள்ளது. இதனால் பதறிப்போன தாத்தா உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பின்பு […]
கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வரும் காரணத்தினால் அந்நாட்டு பிரதமர் 4 வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு பின்பற்றபட்டு வந்தது .தற்போது பல நாடுகளில் தொற்றின் அச்சுறுத்தல் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி கனடாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் மக்களின் பாதுகாப்பிற்காக அந்நாட்டு பிரதமர் “டக் போர்டு” […]
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கனடா Ontario மாகாணத்தில் கடந்த வாரம் புதிதாக 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏப்ரல் 3 ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி […]
கனடாவை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனடாவின் ஹலிபக்சில் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.10 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று விலகி அருகில் இருந்த சிமெண்ட் தடுப்பு மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுனரான 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினர்.
கனடாவில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வன்கூவர் பகுதியில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதி ஒன்றில் மார்ச் 30ஆம் தேதியன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்ததுள்ளது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள இரண்டு தங்கும் விடுதியில் தீப்பற்றி எரிந்ததுள்ளது. இதனால் அங்கு இருந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தங்கும் […]
கனடாவில் கறுப்பின இளைஞர் ஒருவர் தொடர்ந்து 7 பெண்களை கத்தியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள வட வான்கூவர் இருக்கும் ஒரு மாலில் Susanne Till என்ற பெண் நடன வகுப்பில் தன் மகளை அனுப்பி விட்டு வெளியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கருப்பின இளைஞர் திடீரென்று Susanne வை கத்தியால் தாக்கியுள்ளார். இதனைக்கண்ட Sheloah Klausen என்ற ஆசிரியை தன் குழந்தைகளை பத்திரமான இடத்தில் அமர சொல்லிவிட்டு ஓடிச்சென்று […]
கனடாவில் லாட்டரி வாங்கிய 10 பேர் நண்பர்கள் கொண்ட குழுவிற்கு $32,000 பரிசு தொகை கிடைத்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சரே என்ற பகுதியில் வசிக்கும் ஜெரிகா தாமஸ் என்பவர் தன்னுடன் பணியாற்றும் சக நண்பர்கள் 10 பேருடன் இணைந்து லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதில் இவர்களுக்கு $32,000 தொகை பரிசாக கிடைத்துள்ளது. இதுகுறித்து ஜெரிகா கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லாட்டரி டிக்கெட் பரிசு யாருக்கோ விழுந்திருப்பதாக அறிந்தேன். அதன்பின்பு நேற்று லோட்டோ செயலியில் […]
கனடா பாதுகாப்பை கருத்தில்கொண்டு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை 55 வயதிற்கும் குறைவானவர்களுக்கு செலுத்த இடைக்கால தடை விதித்துள்ளது. கனடாவில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சினைகள் ஏற்பட்டதால் தேசிய ஆலோசனை குழுவான NACI தற்காலிகமாக தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட் கிழமையில் கனடாவில் உள்ள மாகாணங்கள் அஸ்ட்ராஜெனகாவிற்கு தற்காலிக தடை அறிவித்துள்ளன. இதுகுறித்து NACI தெரிவித்துள்ளதாவது, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் செலுத்தப்பட்ட போது அரிய வகையான இரத்த உறைவினால் சிலர் […]
கனடாவில் நள்ளிரவில் மாயமான பெண்ணொருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . கனடாவில் ரொரண்ரோவை சேர்ந்த 23 வயதான பிரிட்டானியா போல்ட் என்பவர் கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் ஜேன் தெருவில் கடைசியாக காணப்பட்டு பிறகு காணாமல் போயுள்ளார். அவரை கண்டு பிடிப்பதற்காக போலீசார் அவர் காணாமல் போன அன்றைக்கு அணிந்திருந்த உடைகள் மற்றும் அவரின் உயரம் பற்றி தகவல் வெளியிட்டது. மேலும் பொது மக்களின் உதவியையும் போலீசார் நாடினர். அதற்கு பிறகு […]