மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம்-ஈரோடு ரோட்டில் ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் எதிரே மாது என்பவர் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டு சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது மாது மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் […]
Tag: கனமழையால் வீடு சேதம்
வீட்டில் சிமெண்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் காலனி தொகுப்பு வீட்டில் ராஜலட்சுமி(70) என்பவர் வசித்து வருகிறார் . இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் மூதாட்டி படுகாயமடைந்து அலறி சத்தம் போட்டார். அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள மலையன்குளம் பகுதியில் சாமிகண்ணு(66) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் கடைசி மகனான மகேஷ்(22) எழுந்து நடக்க முடியாத நிலையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். நேற்று முன்தினம் கடையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாமிகண்ணுவின் வீடு இடிந்து பாக்கியலட்சுமி, மகேஷ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் […]
தொடர் மழையால் வீடு இடிந்து சேதமானதில் மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டி வடக்கு தெருவில் மங்கையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருதாயி(80) என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மங்கையன் இறந்துவிட்டதால் மருதாயி மட்டும் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இரவு நேரத்தில் மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் […]
பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் நாகன் – பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நாதன் – பழனியம்மாள் தம்பதியினரின் பழமையான வீடு இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் இவர்களின் குடும்பத்தினர் யாரும் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதனை அடுத்து சேதமடைந்த வீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் […]