Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் கட்டப்படும்…. பிரம்மாண்ட விண்வெளி குடியிருப்பு…. இளவரசரின் கனவுத்திட்டம்…!!!

சவுதி அரேபியாவில் ட்ரோஜெனா என்ற விண்வெளி குடியிருப்பு திட்டமானது, வரும் 2026-ஆம் வருடத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. ட்ரோஜெனா, சவுதி அரேபியாவினுடைய இளவரசரின் கனவுத்திட்டம். அந்த விண்வெளி குடியிருப்பு, சவுதி அரேபியாவில் இருக்கும் தபூக் மாகாணத்தின் நியோம் பகுதியில் உருவாக்கப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து 8530 அடி உயரத்தில் உருவாக்கப்படும் இந்த குடியிருப்பில் இரண்டு மைல்கள் அகலமுடைய நன்னீர் ஏரி உருவாக்கப்படுகிறது. இந்த ட்ரோஜெனாவானது, மலைமுகடுகளில் குடியிருப்புகள், பனிச்சறுக்கு போன்றவற்றுடன் கட்டப்படுகிறது.

Categories

Tech |