நிலக்கோட்டை அருகே மூலப்பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான செந்தில் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரியில் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த லாரி வெள்ளைதாதன்பட்டியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் […]
Tag: கன்டெய்னர் லாரி
கன்டெய்னர் லாரியில் உள்ள பைகளை சோதனை செய்யுமாறு திமுகவினர் ,அதிகாரிகளிடம் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . தஞ்சை மாவட்டத்தில் ,நேற்று காலை பழைய ஆட்சியர் அலுவலகத்தின் முன் கன்டெய்னர் லாரியானது நின்றுகொண்டிருந்தது. நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ,பறக்கும் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பறக்கும் படை அதிகாரிகள் வந்து விசாரித்தபோது, இந்த லாரியானது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தது என்றும், ஹரியான மாநிலத்தில் இருந்து வந்துள்ளதாகவும், தெரிந்தது . […]
நெடுஞ்சாலைகளில் செல்லும் கண்டெய்னர் லாரிகளில் இருந்து திரைப்படத்தில் வருவது போல செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடும் கும்பலை ஆந்திரா போலீசார் பிடித்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஓடும் லாரியில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் எப்படி கொள்ளை போகின்றன, என்பதை விளக்கும் படத்தையும் அதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பரபரப்பான தங்க நாற்கர நெடுஞ்சாலை, ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கொல்கத்தா செல்லும் சாலை. ஊருக்கு வெளியே மாற்று வழி சாலை என்பதால் மக்கள் நடமாட்டமின்றி […]
சென்னை துறைமுகத்திற்கு வந்து செல்லும் கண்டெய்னர் லாரிகள் பொதுமுடக்கம் காரணமாக சாலைகளில் அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை துறைமுகத்திற்கு ஏற்றுமதி- இறக்குமதிக்காக நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் வந்து செல்லும். இந்த கனரக வாகனங்கள் மாதவரம் மஞ்சும்பாக்கத்திலிருந்து எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகத்திற்கு செல்கின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் எண்ணூர் விரைவு சாலைகள் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் இரு சக்கர வாகனங்களில் […]