Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நிகழ்ச்சி…. மாணவர்களுக்கு விழிப்புணர்வு…. மாவட்ட ஆட்சியரின் சிறப்புரை…!!

சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்களின் வரலாற்றை நினைவு கூறும் விதமாக சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் எஸ்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 7 நாட்கள் நடைபெறும். இந்த விழா செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும், தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுய உதவி குழு, சமூக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளின் “நெருங்கிய நண்பர்”…. தோழியின் தாயார் குளிக்கும் போது…. குடும்பத்தை உலுக்கிய கொடூரம்….!!

பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகள் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். எனது மகளுக்கும் பார்த்திபன் என்பவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்த்திபன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். இதனால் எங்களுக்குள் நல்ல உறவு ஏற்பட்டது. இந்நிலையில் நான் வீட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லாத முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி அருகே ஈசானிமங்கலம் பகுதியில் லட்சுமணன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கயிறு கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பூதப்பாண்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்…. மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…. அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தங்க  நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டணி அருகே புலிமார் தட்டுவிலை பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய தாயார் கமலாபாய் ஜெயந்தியுடன் வசித்து வருகிறார். இதில் கமலாபாய்க்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கமலாபாய் நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீர் தீ விபத்து…. உடல் கருகி இறந்த 3,000 கோழிகள்…. குமரியில் பரபரப்பு…!!

பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோழிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகில் இருக்கும் மாதவலாயம் பகுதியில் அப்துல் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செண்பகராமன்புதூர் அருகில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பண்ணையின் ஒரு பகுதியில் தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால்  தீ மளமளவென பண்ணை […]

Categories

Tech |