கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சி, பயணம் பகுதிகளை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாலத்தில் இருக்கும் திருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இருள் சூழ்ந்து சமூகவிரோதிகளும், மது பிரியர்களும் இருக்கும் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலை முடிந்து வீட்டிற்கு வரும் பெண்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் சார்பில் […]
Tag: கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகண்டறை நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை பத்மகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்றூர் மங்களா அருகே சென்ற போது எதிரே இன்னொரு அரசு பேருந்து வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இரண்டு பேருந்துகளுக்கும் நடுவே புகுந்து செல்ல முயன்ற போது நிலைதடுமாறி அவர் வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தது. அப்போது பத்மகுமார் மோட்டார் சைக்கிள் வந்தவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெரும்திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடத்திற்கான மார்கழி திருவிழா கொடி ஏற்றத்தோடு தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டார்கள். ஜனவரி 5ஆம் தேதி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி மேல காலனி பனையடி தெருவில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணலதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முகேஷ் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த முகேஷை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு காடுவெட்டி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015- ஆம் ஆண்டு செல்லப்பன் திங்கள் சந்தை பகுதியில் இருக்கும் டிவி விற்பனை செய்யும் கடையில் 24,500 கொடுத்து எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். அப்போது கடை உரிமையாளர் 3 ஆண்டுகள் வாரண்டி இருப்பதாக கைப்பட எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து டிவியை பயன்படுத்திய 2 ஆண்டுகளுக்குள் ஒலி மட்டுமே கேட்டு, ஒளி தெரியாமல் போனது. இதனால் செல்லப்பன் சம்பந்தப்பட்ட கடைக்கு டிவியை கொண்டு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதி இதன் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 5-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாள் எனவும் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சொகுசு கார் வேகமாக சென்றது. அந்த காரில் இருந்த 5 வாலிபர்களும் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அச்சத்தில் 5 வாலிபர்களும் போலீசுக்கு பயந்து காரை அங்கேயே விட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு பகுதிக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொகுசு காரில் திற்பரப்புக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அருவிக்கு செல்லும் நுழைவாயில் அருகே அந்த குடும்பத்தினர் இறங்கி விட்டதால் டிரைவர் மட்டும் காரை நிறுத்துவதற்காக ஓட்டி சென்றுள்ளார். அப்போது இட நெருக்கடி காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் நெல்லியார் கோணம் குழிவிளை பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான சஞ்சய் என்பவர் அறிமுகமானார். நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணியை அவரது நிறுவனம் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கட்டிட வேலையை முடிக்க வேலையாட்கள் காண்டிராக்டை எனக்கு தருவதாகவும், அந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கீழே புதுச்சேரி விளை பகுதியில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி ஞான சௌந்தரி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது தங்கை வனஜாவை பிரான்சிஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டு மனைவிகளுக்கும் தலா 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த பிரான்சிஸ் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் பட்டணம் கால்வாய் கரையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிக்கோடு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பழைய பகுதியில் இருக்கும் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அஸ்வின் விஜய் உறவினரான சஜிகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிறிஸ்துமஸ் குடிலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கல்லுக்குட்டி குருமாணி விளை முந்திரி ஆலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற மரத்தில் பயங்கரமாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வல்லவிளை பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் காரில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் அபாயகரமான வளைவில் அதிவேகமாக சென்றனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதி வயலுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் 4 வாலிபர்களும் உயிர் தப்பினர். பின்னர் அவர்களை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய காரை மீட்கும் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகர் பகுதியில் உள்ள பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் மண்ணரிப்பு ஏற்பட்ட சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலம் வழியாக வாகனங்கள் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு கருதி தடுப்பு வேலை வைத்து பாலத்தை அடைத்தனர். ஆனால் சிலர் தடுப்பு வேலிகளை அகற்றி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். நேற்றிரவு சேதமடைந்த பாலம் வழியாக ஆட்டோ ஒன்று சென்றது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலைதடுமாறி 40 […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜன் சிறுமியை தடுத்து நிறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கீழபுத்தேரி பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் சிவாஜி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வடசேரி கீழ புத்தேரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நடத்தி வந்த சுய உதவி குழுவில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அந்த குழு தலைவி பெண்களின் கையெழுத்தை பயன்படுத்தி, ஆவணங்களை காண்பித்து 70 லட்ச ரூபாய் வரை பல்வேறு வங்கிகளில் […]
கிறிஸ்துவ மக்கள் அதிக அளவில் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி பொது விடுமுறையும் அதற்கு முதல் நாளான இன்றும் டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 11ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பார்வதிபுரம் பாலம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பழக்கடை வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள் பழ கடையை அப்புறப்படுத்த முயன்ற போது வியாபாரியான சுதீர்தீன் என்பவர் மாநகராட்சி டெம்போவின் கீழ் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஊழியர்களால் வாகனத்தை இயக்க முடியவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை வயல்காலனியில் மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அஜேஷ் குமார் திருச்சியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கல்லூரிக்கு சென்ற குமார் படிக்க பிடிக்கவில்லை என கூறி ஊருக்கு திரும்பி வந்தார். இதனையடுத்து கடலில் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். பின்னர் குமார் தனது தாயிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். […]
அனைத்து கிறிஸ்தவர்களாலும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தற்போதிருந்தே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் ஈவ்-ஐ முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 11ஆம் தேதி வேலைநாளாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகனாபுரத்தில் விவசாயியான பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி(56) என்ற மனைவி உள்ளார். நேற்று காலை பாஸ்கரன் வெளியே சென்ற பிறகு வளர்மதி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வளர்மதியின் முகத்தை துணியால் மூடி, கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். அதே சமயம் வளர்மதி நகைகளை காப்பாற்றி கொள்வதற்காக திருடர்களுடன் போராடி ஒரு கட்டத்தில் ஒருவரின் கைவிரல்களை கடித்து குதறினார். […]
ரயில் பெட்டியில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாதானபுரம் நேதாஜி காலனியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெளியே சென்ற சாமிநாதன் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் அப்போது கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 2-வது நடை மேடையில் நிறுத்தப்பட்டிருந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருவதால் கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலக செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் கொட்டாரம் பகுதியில் இருக்கும் 64 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 12 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து 18 […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு கொல்லாய் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் சிவலெட்சுமி(35) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் வெளிநாட்டிற்கு சென்றதால் சிவலெட்சுமி தனது மாமனார் வீட்டில் பிள்ளைகளோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் கணவரோடு செல்போனில் பேசியபோது திடீரென கருத்து வேறுபாடு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் ரீத்தாபுரம் பகுதியில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வர்கீஸ் தனது மகள் ஆஷா, பேத்தி சரியா ஆகியோருடன் திங்கள்சந்தையில் இருந்து காரில் அழகிய மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் நெய்யூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் 25 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் பாய்ந்து தண்டவாளத்தில் கிடந்தது. அந்த சமயம் நாகர்கோவில் நோக்கி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் டார்ச்லைட் அடித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கற்காடு சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ மற்றும் அபிலாஷ் என்பது தெரியவந்தது. இருவரும் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்துள்ளனர். இருவர் மீதும் காவல் நிலையங்களில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பயங்குளம் பகுதியில் ரவீந்திரன்-ராஜகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஜிதா(29) என்ற மகளும், அஜின்(27) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் அஜிதா நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அஜின் தனது அக்காவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தேங்காப்பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முன்சிறை பகுதியில் சென்ற போது தனது தாய் ராஜகுமாரி கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததை அஜின் பார்த்தார். இதனால் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி மதீனா நகர் தெற்கு தெருவில் மதார் முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது ரிக்காஸ்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் தங்கி உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உணவை சப்ளை செய்துவிட்டு முகமது தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பார்வதிபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது அபிலாஷ் என்பவர் ஓட்டி […]
மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுக்கல் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் டிப்ளமோ படித்து வந்த நிலையில் பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு கோவையில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்தார். இந்நிலையில் விஷ்ணுவின் தாய் கீழே தவறி விழுந்ததால் கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் விஷ்ணுவின் கல்லூரி கட்டணத்தை செலுத்த இயலாததால் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தில் இருக்கும் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதன்படி பார்வதிபுரத்தில் இருக்கும் ஒரு சங்க அலுவலகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது சங்க அலுவலகத்திற்குள் முருகன் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை வழிபட அனுமதி வழங்க கோரி சிலை வைத்தவர்கள் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மழுவன்சேரி பகுதியில் மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மதுசூதனன் தோலடி சோதனை சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது செருவல்லூர் தேவிகோடு பகுதியை சேர்ந்த திலீப்குமார்(39) என்பவர் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்துள்ளார். மேலும் கத்தியை காட்டி திலீப் குமார் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுசூதனன் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன் புதூரில் அழகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதிரா தேவி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உதிரா தேவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்தி, உதிரா தேவியிடம் குடும்ப விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து தான் பலருக்கு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும், முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் உங்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். […]
தமிழகத்தில் பெண்களுக்கு என இலவச அரசு பேருந்து சேவை இயங்கி வருகிறது. அதனை பெண்கள் அடையாளம் காணும் வகையில் தனி நிறத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் கண்டக்டர்கள் இலவச பயணம் என்பதால் பெண்களை மதிப்பதில்லை, பேருந்து நிறுத்தங்களில் நிற்பதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புலியிறங்கி பகுதி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் […]
இளம்பெண் தனது கை குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் ஸ்ரீகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஞ்சனா(26) அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முருகனின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருநெல்வேலியில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதலர்கள் கொல்லங்கோடு பகுதியில் […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி வாத்தியார்விளை பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி தனியார் நர்சரி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் மகேஷ்குமார் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை சரியான நேரத்தில் திருப்பி கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஷ்குமார் […]
தண்ணீரில் மூழ்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நைனாபுதூரில் ஓட்டுனரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரமேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தார். இதனை சுரேஷின் அண்ணன் கணேஷ் தெங்கம்புதூர் பகுதியில் வைத்து பார்த்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சுரேஷ் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் ரமேஷிடம் விசாரித்தனர். அப்போது சிங்களேயர்புரி பால்குளம் படித்துறையில் வைத்து சுரேஷ் மது அருந்தியதாகவும், தான் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் ரமேஷ் […]
கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஆலங்கோடு புளியமூடு சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோட்டில் சி.எஸ்.ஐ ஆலயம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் ஆலயத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை ஒருவர் குச்சி மூலம் திருடிக் கொண்டிருந்ததை சபை செயலாளர் பார்த்துள்ளார். பின்னர் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது முட்டைக்காடு டாஸ்மாக் கடை அருகே சிறுநீர் வருகிறது என கூறி நைசாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்தரங்கோடு பேருந்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஜெய மாரிஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எந்திரம் மூலம் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு 4000 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் மனைவியின் வங்கி கணக்கிற்கு செல்லாததால் ராஜ் எழுத்து மூலமாக வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனாலும் பணம் திரும்ப கிடைக்காததால் மன உளைச்சலில் ராஜ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிக்கோடு பகுதியில் கூலி தொழிலாளியான பொன்னையன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு பொன்னையன் வெண்டலிகோடு சந்திப்பிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெனிஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னையன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த பொன்னையன் மற்றும் ஜெனிசை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடை பகுதியில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் நேற்று முன்தினம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது காட்டாத்துறையை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கண்விழித்து சத்தம் போட்டதால் அவரது கணவர் முதியவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் அவர் முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் கணவன் மனைவி இருவரும் அங்கிருந்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வடசேரியில் வசிக்கும் மாணவன் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் அந்த மாணவருக்கும், அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது வடசேரியை சேர்ந்த மாணவன் கையில் இருந்த ஸ்டீல் தண்ணீர் பாட்டிலால் மற்றொரு மாணவனின் தலையில் தாக்கியதால் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி எம்.ஜி.ஆர் நகரில் கட்டிட காண்ட்ராக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் பிரேமா தண்ணீரை சூடாக்க முயன்றார். அப்போது பக்கெட் தண்ணீரில் ஹீட்டரை போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து பிரேமா வந்துள்ளார். இந்நிலையில் தண்ணீர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பிரேமா தூக்கி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பறை அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை மீது தண்ணீர் பாய்கிறது. எனவே பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெட்டுமணி பகுதியில் இருந்து தடுப்பணை வழியாக ஒருவர் மறுக்கரைக்கு நடந்து சென்ற போது ஆற்றுக்குள் தவறி விழுந்ததால் வெள்ள நீர் அவரை இழுத்து சென்றது. ஆனாலும் அந்த நபர் நீந்தி புதர் மேட்டுப்பகுதியில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் ஆலுவிளை பகுதியில் சீமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞான ஜெபின், அவரது மனைவி பெனிலா, நண்பர் அஜீமோன் ஆகிய 3 பேரும் இணைந்து கந்துவட்டி வசூலிக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் குழித்துறை வாவுபலி திடல் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ஒருவர் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பதும், மற்றொருவர் மார்த்தாண்டத்தில் துணிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பதும் தெரியவந்தது. இருவரும் இணைந்து 300 கிராம் போதை […]
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா இன்று(3.12.22) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று(3.12.22) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட […]
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கான முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம். அதனால் ஒவ்வொரு வருடமும் இங்கு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படும். அவ்வகையில் நடப்பாண்டிற்கான திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் நாளை அதாவது டிசம்பர் 3ஆம் தேதி திருவிழாவை முன்னிட்டு காலை 11 மணிக்கு தேர் பவனி வரவுள்ளது. கடந்த இரண்டு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்க் வியூ பஜாரில் போரஸ் என்பவர் பேன்சி கடை வைத்து அதனை 9 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. அதில் ஒரு சில கடைகளுக்கு சம்பவம் நடந்த ஒரு ஆண்டுக்குள் இன்சூரன்ஸ் தொகை வந்தது. ஆனால் போரஸ் செலுத்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மட்டும் பணம் வரவில்லை. இதனால் போரஸ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் […]
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் […]