Categories
கன்னியாகுமாரி

திடீர் காய்ச்சல்…. 2 கிட்னியும் போய்டுச்சு…. இது தான் காரணம்…. அதிர்ந்து போன பெற்றோர்கள்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 11 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினுக்கு கடந்த 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது. இதனையடுத்து அவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கேரளாவிற்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”13.5 டன் லாரி” 110மீ தூரம் இழுத்து…. உலக சாதனை….. குமரி வாலிபருக்கு குவியும் பாராட்டு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளைப் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல்வலு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இரும்பு மனிதன் போட்டியில் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் ஒரு கனரக வாகனத்தை கயிறு மூலம் 40 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு உலக சாதனையை கண்ணன் படைத்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எல்லாமே பொய்….! கணக்கு டீச்சர் ஆபாச பாட விவகாரத்தில் திடீர் திருப்பம்?….. ஆசிரியர்கள் பகீர் குற்றச்சாட்டு….!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் சிலவற்றை நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் ஆசிரியர் மீது தவறு இல்லை என்றும், அவர்மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்….. அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி மோதி விபத்து….. குமரியில் பரபரப்பு….!!!!

மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் தினந்தோறும் சாலை விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்காகன நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். அதன்படி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம், வேகத்தடை பகுதிகளில் மெதுவாக செல்லுதல், விபத்து பகுதிகளில் எச்சரிக்கையாக வண்டி ஓட்டுதல், மது அருந்திவிட்டு வண்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கரைக்குத் திரும்பிய படகுகள்….. மலை போல் குவித்து வைக்கப்பட்ட மீன்கள்…. அமோகமாக நடைபெற்ற விற்பனை….!!!!

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பியதால் மீன்விற்பனை அமோகமாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 300 விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ் கடலுக்கு செல்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பலத்த காற்று வீசியதால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை ஓய்ந்து, காற்றின் வேகம் குறைந்ததால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றனர். இதில் 58 விசைப் படகுகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“துறைமுக முகத்துவாரத்தில் தொடர் விபத்துக்கள்” படகு கவிழ்ந்ததில் மீனவர் மாயம்….. குமரியில் பெரும் பரபரப்பு….!!!!

கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டினம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு வசதியாக துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்த துறைமுகம் சரியான முறையில் கட்டப்படாததால் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி கடந்த 4 வருடங்களில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சைமன் என்ற மீனவர் முகத்துவார பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓரிரு நாட்களில் திருமணம்” விஷம் குடித்த நிலையில் சுடுகாட்டில் பிணமாக கிடந்த புது மாப்பிள்ளை…. குமரியில் பரபரப்பு….!!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தற்கொலை என்பது சிலருக்கு மிகவும் சாதாரணமாகிவிட்டது. பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் வாலிபர்கள், திருமணமானவர்கள் என பல்வேறு நிலையை கடந்தவர்களும் ஏதாவது ஒரு பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த தற்கொலை என்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடையாது. தற்கொலை என்பது மிகவும் கோழைத்தனம். ஒரு பிரச்சனை வந்தால் தற்கொலை செய்வதற்கு பதிலாக அந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பார்த்தாலே பரவசமாகும் கடற்கரை” சூரிய உதயத்தை பார்க்க குவிந்த கூட்டம்….. விழாக்காலம் போல் களைகட்டிய குமரி….!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். ஒரு மனிதன் ஒரு இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு சென்று அங்கு தங்கி அந்த இடங்களை பார்த்து ரசிப்பது சுற்றுலா என்று அழைக்கப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்வில் அனுபவங்களை பெற்றிட சுற்றுலா செல்வது அவசியம் என்று கூறப்படுகிறது. ஓய்வு நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்று மகிழ்வதால் அவர்களுக்கு மன நிம்மதி மற்றும் ஒரு புதிய புத்துணர்வும் ஏற்படுகிறது. இன்றைய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்காக சென்ற பெண்…. தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி….!!!!

பிரசவத்திற்காக சென்ற பெண்மணிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மீன்பிடி தொழிலாளியான அருள்ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா ஹெலன் என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு பிரசவத்திற்காக இளங்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு இந்திராவுக்கு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் திடீரென இந்திராவுக்கு இரத்தப்போக்கு அதிகரித்ததால் அவருடைய கர்ப்பப்பை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மது குடிக்க ஆசை…. தோழியை நம்பி சென்ற பெண்…. ஓட ஓட விரட்டி மண்டைய உடைத்த காதலன்…. பகீர் சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வரும் நிலையில் கடந்த 6 வருடங்களாக அஜின் என்பவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு கஞ்சா, மது போதை பழக்கமும் இருந்துள்ளது. சில நாட்களாக கல்லூரி மாணவி அஜினுடன் இருந்த காதலை குறைத்துக்கொண்டுள்ளார். மேலும் வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது, கஞ்சா அடித்துக்கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதுகுறித்து காதலன் கேட்டதால் அவரை விட்டு பிரிந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்….. போக்சோ சட்டத்தில் உறவினர் கைது…. குமரியில் பரபரப்பு…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே கம்பிலார் பகுதியில் ஜான் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் ஜான் செல்வம் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்ற போது 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து ஜான் செல்வம் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு சிறுமியை பாலியல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடலில் தவறி விழுந்த மீனவர்…. தேடும் பணி தீவிரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே மேலக்குறும்பன் விளை பகுதியில் தேவதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவர் கடலில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசிவிட்டு துறைமுகத்துக்கு வந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு கையை கடல் நீரில் கழுவும் போது எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். இது தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. குமரியில் பரபரப்பு….!!!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல கிருஷ்ணன் புதூர் பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பேரின்ப விஜயகுமார் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தார். ஆனால் குழாயில் மறுபடியும் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் திடீரென போராட்டத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மருந்துகளை போதைக்காக விற்பனை செய்யக்கூடாது” விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை….!!!!

மருந்துகளை தவறான முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஹபீப் முகமது கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர் களிடம் மருந்து விற்பனையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் மாணவன் பலி‌‌…. குமரியில் பரபரப்பு….!!!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சிபின் என்ற மாணவன், தன்னுடைய நண்பர்கள் பிரின்சன் உட்பட 4 பேருடன் கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் குளச்சல் அருகே குன்னன்விளை பகுதிக்கு வந்த போது திடீரென சிபின் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிபினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீட்டில்…. சாலை விரிவாக்கப் பணிகள்… நடைபாதைகளை அகற்றும் பணி தீவிரம்…!!!

சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு சாலைகளில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோர்ட் ரோடு பகுதியில் உள்ள சாலையை இரு வழி சாலையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக நடைபாதைகளை அகற்றும் பணி பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இடிபாடுகளை அகற்றும் பணியும் நடைபெற்றது. இதேபோன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. குமரியில் பரபரப்பு….!!!

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே கோதையாறு அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கன்னியாகுமரியில் இருந்து 313 நம்பர் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து கோதையாறில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் கிளம்பி சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அக்னிபாத் திட்டம்” ராணுவத்தில் அட்சேர்ப்பு பணிகள்…. தீவிர உடற்பயிற்சியில் இளைஞர்கள்….!!!

ராணுவத்தில் சேர்வதற்கு இளைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பதற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த ஆட்சேர்ப்பு முகாம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் நெல்லை, கன்னியாகும,ரி தென்காசி உட்பட 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த முகாம் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பவர்கள் இணையதளத்தின் மூலம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சக்கரம் பழுதானதால் பறந்த தீப்பொறி…..பாதி வழியில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்…. குமரியில் திடீர் பரபரப்பு….!!!

சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு சரக்கு ரயில் கிளம்பியது. இந்த சரக்கு ரயிலில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்தது. இதில் 87 வேகன்கள் இருந்தது. இந்த ரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வந்தது. அப்போது திடீரென சக்கரங்கள் பழுதாகியது. இதனால் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக அவர் ரயிலை நிறுத்தினார். இது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்ததில் மீனவர் பலி….. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. குமரியில் பெரும் பரபரப்பு….!!!

மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது திடீரென படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த சைமன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் உடலை மற்ற மீனவர்கள் மீது குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட மீனவ கிராம மக்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை…. வாலிபருக்கு வலைவீச்சு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தலைமறைவாக உள்ள வாலிபரை தனிப்படை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே இலங்கன்விளை பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவரை ரஞ்சித் என்ற வாலிபர் காதலிப்பதாக கூறி, திவ்யாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக திவ்யா தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார். அப்போது செர்லின் புரூஸ் என்ற வாலிபருக்கும், திவ்யாவுக்கும் இடையே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காலாவதியான பிஸ்கெட்” கடைக்காரருக்கு ரூ. 13,000 அபராதம்….. நீதிமன்றம் அதிரடி….!!!!

கடைக்காரருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் காஜா ரமேஷ் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் ரூபாய் 145 கொடுத்து ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கியுள்ளார். இந்த பிஸ்கட்டை சாப்பிட்ட ராஜாவின் தாயாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா பிஸ்கட் பாக்கெட்டை பார்த்தபோது அதில் தேதி காலாவதியாகி இருந்தது. இதனால் கடைக்காரருக்கு ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வீடியோ காலில் ஏற்பட்ட தகராறு” பெண் தூக்கிட்டு தற்கொலை….. குமரியில் பரபரப்பு….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஞான பாக்கியபாய் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் ஞானபாக்யாபாய் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதனையடுத்து நேற்றும் வழக்கம்போல் தன்னுடைய கணவரிடம் வீடியோ கால் மூலமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கனமழையின் காரணமாக கடற்கரையில் ஒதுங்கும் மீன்கள்….. மகிழ்ச்சியாக பிடித்து செல்லும் பொதுமக்கள்….!!!

கடற்கரையில் ஒதுங்கும் மீன்களை ஏராளமானோர் மகிழ்ச்சியாக பிடித்து செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கடற்கரை ஓங்களில் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்குகிறது. இதில் குறிப்பாக வெளமீன்கள் அதிக அளவில் ஒதுங்குகிறது. இந்த மீன்களை பிடிப்பதற்காக ஏராளமான பெண்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தம்பி உயிரிழந்த சோகத்தில்….. அக்காவும் அதிர்ச்சி மரணம்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…. குமரியில் சோகம்….!!!!

தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் சந்தை அருகே பாறையன்விளை பகுதியில் ஹோட்டலில் வேலை பார்க்கும் முகமது காஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சையது அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இதில் முகமது காஜா வேலைக்காக திருச்சியில் தங்கி இருக்கிறார். இவருடன் செய்யது அலி பாத்திமாவின் தம்பி பயாஸ் அகமதுவும் தங்கி இருந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன? உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…..? ஆச்சரியத்தில் பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலயா சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இந்நிலையில் நேற்று இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரயில்வேயில் வேலை ரெடியா இருக்கு” 16 பேரிடம் 64 லட்சம் அபேஸ்…. கணவன்-மனைவிக்கு வலைவீச்சு….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி  பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜமுனா என்ற பெண் தன்னுடைய உறவினர்களுடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் என்னுடைய கணவர் 12 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டதாகவும், நான் என் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறேன். அதன்பிறகு என்னுடைய மருமகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக என் மகனின் பள்ளி தோழன் ஒருவர் கூறினார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கல்லுரியில் சேர்ப்பதற்காக சென்ற தாய்…. பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் பரபரப்பு…..!!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றியோடு அருகே கன்றுபிலாவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி எல்சிபாய் என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் எல்சிபாய் தன்னுடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக உடன் சென்றுள்ளார். அதன் பிறகு மண்டைக்காட்டு பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் கனமழை எச்சரிக்கை…. 50 தற்காலிக முகாம்கள் தயார்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

பொதுமக்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழையின் அளவு 49.23 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அமெரிக்க வாலிபருடன் இந்திய பெண் ஆன்லைனில் திருமணம்…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

இணையதளம் வாயிலாக திருமணம் செய்து கொள்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் பகுதியில் வம்சி சுதர்ஷினி (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ராகுல் என்பவரும் நானும் காதலித்து வருகிறோம். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வருகிறார். நாங்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென தாழ்ந்த நீர்மட்டம்…. 2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்….. நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள்….!!!!

கடலின் நீர்மட்டம் தாழ்ந்ததால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு குறிப்பாக விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதேபோன்று இன்று விடுமுறை தினம் என்பதால் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் காலையில் வரும் சூரிய உதயத்தை பார்த்து மகிழ்ந்து விட்டு பல இடங்களை சுற்றிப் பார்ப்பர். அதன் பிறகு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் தொடர் மழை…. சாலையில் வெள்ளம் ஓடும் தண்ணீர்….. அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு….!!!!

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை மற்றும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது‌. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குமரியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழையின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில்…. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றைக்கல் ஏறி தரிசனம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பல வருடங்களுக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றதால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கருவறையில் இருந்த அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் சுவாமியை ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு பறிபோனது. இந்த கோவில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் கடந்த 6-ம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சர்வேதச அளவிலான தடகள போட்டி…. குமரி மாவட்ட பெண் போலீஸ் தங்கம் வென்று சாதனை…. குவியும் பாராட்டு…!!!

பெண் காவலருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண ரேகா ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நெதர்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கான தடகள போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், உயரம் தாண்டுதலில் கிருஷ்ணரேகா வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். இதன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி வீட்டிற்கு வராததால் ஏற்பட்ட விபரீதம்…. விஷம் குடித்து ஊழியர் தற்கொலை…. குமரியில் பெரும் சோகம்….!!!

ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே முழகுமூடு முப்பந்தாங்கள் பகுதியில் அமல ராஜேஷ் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அவர்களை உடனடியாக கைது செய்யுங்கள்” தாய்-மகள் திடீர் தர்ணா…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

தாய் மற்றும் மகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழிக்கோடு அருகே தலப்பிள்ளைவிளை பகுதியில் நிர்மலா (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளுடன் நாகர்கோவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அதன் பிறகு திடீரென இருவரும் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் நிர்மலாவிடம் வந்து விசாரித்ததில், ஒரு மனுவை அவர்களிடம் கொடுத்தார். அந்த மனுவில், எங்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி…. இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்து மாவட்டத்திலும் உள்ள வழிபாட்டு தலங்களில் வழக்கம் போல், கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கோவில் திருவிழாக்களும், தற்போது வழக்கம் போல்,வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இங்கு நாளை மின்தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு …!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (21-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நாளை நடக்கிறது. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சண்முகம் தெரு, தாயகம் தெரு, வெள்ளாளர் காலனி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. 1,500 கிலோ குட்கா பறிமுதல்….!!

தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 5 பேரை கைது செய்த போலியார் 1,500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கன்னியாகுமாரி வழியாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் தனிப்படை போலீசார் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக தொடர்ந்து வந்த ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்றபோது…. மீனவருக்கு கடலில் நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்துள்ள மேல குறும்பனை பகுதியில் ததேயூஸ் மகேஷ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று அதிகாலையில் 5 மீனவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த யூஜின் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறும்பனையில் இருந்து 28 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலை முறித்து கொண்ட காதலி…. பள்ளி மாணவனின் விபரீத செயல்…. கதறி அழும் பெற்றோர்….!!

காதலி பேசாமல் இருந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தை அடுத்துள்ள ஈத்தவிளை பகுதியில் சிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜிஜின் கடமைலைகுன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிஜின் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் திடீரென காதலை கைவிடுமாறு கூறினார். இதனால் மனமுடைந்த ஜிஜின் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஷாக் தகவல்…. அன்பில் மகேஷ் கொடுத்த வார்னிங்…. வெளியான தகவல்….!!!

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே மத மாற்றத்தை ஊக்குவித்த பெண் ஆசிரியை மீது நடவடிக்கை அன்பில் மகேஷ் விளக்கம். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக வேலை பார்த்து வரும் ஒரு ஆசிரியர் தையல் கற்க வரும் மாணவிகளிடம்  இந்து மதக் கடவுளை அவதூறாக பேசி கிறிஸ்துவ மத போதனைகளை சொல்லி கட்டாய மத மாற்றத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ஷாக் நியூஸ்…. 5 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்….!!!

வருகின்ற 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் 5 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது, அரசு அலுவலகங்களில் 8 லட்சத்து 75 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில் தொழிலாளர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் 40க்கு மேற்பட்ட தொழிலாளர் சங்கங்களை 4 தொழிற்சங்க ஆணைகளாக மாற்றியிருக்கிறது. மேலும் தபால்துறை, ரயில்வே பாதுகாப்பு தொழில்களை கார்ப்பரேட்களிடம் கொடுக்கவும், சிறிய துறைகளை மூடவும் முடிவு செய்துள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( பிப்.16 ) உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கும். அப்படி மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை கொடுக்க அனுமதி வழங்கும். அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள்

வீட்டையும் விற்று பிழைக்கவில்லையே…. பேரனுக்காக உயிரை விட்ட பாட்டி…. பெரும் சோகம்…!!!!

பாட்டி ஒருவர் தன் வீட்டை  விற்றும்  பேரனின் உயிரை காப்பாற்ற முடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறியை அடுத்த தினவிளை  பகுதியில் விவசாய கூலி வேலை பார்க்கும் சுந்தர்ராஜ் , ரோசம்மாள் தம்பதியர் இருந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருந்த நிலையில் அவர்கள் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் சென்று விட்டதால் இந்த வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்குத் துணையாக தங்கள் மகள் வழி பேரன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தள விவகாரம் கடத்தல் அடிதடி…!!

சமூக வலைத்தளங்களில் பதிவு போட்டதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லிபின் என்ற வாலிபரை அரசியல்வாதிகள் சிலர் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி துணை செயலாளர் லிபின். அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளின் மகன்கள், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மகன்கள் லிபினை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு நெல்லைக்கு சென்றுள்ளனர். லிபினை கடுமையாக தாக்கி மீண்டும் நாகர்கோவிலில் கொண்டு வந்துவிட்டதாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் ஸ்டாலின் மற்றும் அவரின் நண்பரான விக்னேஷ் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் குலசேகரம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவரின் நண்பரான விக்னேஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் அருகில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எப்படி உயிர் போச்சு….? கல்குவாரியில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கல் குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கொத்தனார் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூட்டாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையில் இருந்த சமயத்தில் திடீரென செல்வராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய நண்பர்கள் ஆட்டோவை அழைத்து வர சென்ற நேரத்தில் திடீரென செல்வராஜ் உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதிலுமா பதுக்கி வைப்பாங்க… தலைதெறிக்க ஓடிய உரிமையாளர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்ட 1162 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா தொற்றின் 2- வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊடகங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. தற்போது தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் பகல் நேரங்களில் மது பாட்டில்களை வாங்கி இரவு நேரங்களில் அதனை […]

Categories
கன்னியாகுமாரி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

புயலால் இடைவிடாது கொட்டிய கனமழை ..!!

யாஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டியது. புயல் காரணமாக கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. முன்னதாக மாவட்டம் முழுவதும்  நேற்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலையில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து சாலையில் விழுந்தன. பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் […]

Categories

Tech |