Categories
மாநில செய்திகள்

சுற்றுலா தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் எஸ் வகை திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து வரை இருப்பதனால் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டியதில் அரசு கவனமாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் இருந்த பணம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஸ்கூட்டரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் நிதிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் இருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்து தனது ஸ்கூட்டர் இருக்கையின் கீழ் பகுதியில் இருக்கும் பாக்ஸில் வைத்துள்ளார். அதன்பிறகு நிதிஷ் தான் நடத்தி வரும் பேன்சி கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் 2 லட்ச ரூபாயை வைத்து விட்டு மீதி பணத்தை நிதிஷ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நகைகளை கழற்றி தா” பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் சஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருங்கல் பகுதியில் வசிக்கும் அபிஷா என்ற பெண்ணும், சஜினும் கடந்த 1 1/2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அபிஷாவிடமிருந்து செல்போனை வாங்கிக் கொண்டனர். இதனால் தனது பெற்றோர் வெளியே சென்ற சமயத்தில் அபிஷா அக்கம் பக்கம் இருந்தவர்களின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டுகள் புழக்கமா….? தந்தை-மகன் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

மீன் வாங்கி விட்டு தந்தை, மகன் இருவரும் கள்ள நோட்டை வியாபாரியிடம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக செல்வர். இந்நிலையில் ரீத்தாபுரம் பகுதியில் வசிக்கும் தந்தையும், மகனும் மீன் வாங்கிவிட்டு வியாபாரியிடம் பணத்தை கொடுத்துள்ளனர். அதில் ஒரு 500 ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வியாபாரி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா இருந்த பெற்றோர்…. வீட்டுக்குள் சிக்கிய 2 1/2 மாத குழந்தை…. தீயணைப்பு துறையினரின் துரித செயல்….!!!

கன்னியாகுமரியில் பெற்றோரின் கவன குறைவால் பூட்டிய வீட்டில் சிக்கிய 2 1/2 மாத குழந்தையை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் நிதின்-சிந்து என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 1/2 மாத கைக்குழந்தை இருக்கிறது. இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவனை வழியனுப்புவதற்காக சிந்து, தூங்கி கொண்டிருந்த குழந்தையை வீட்டின் நடு தளத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வீசிய காற்றினால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தும்பவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திங்கள் நகர் நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அஜித் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுபாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீராடி கொண்டிருந்த பக்தர்கள்…. தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

புனித நீராடி கொண்டிருந்த பக்தர்களின் உடைமைகளை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த சுற்றுலாப்பயணிகள் அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்தை பார்த்து ரசிக்கின்றனர். அதன் பிறகு சுற்றுலா பயணிகள் முக்கடல்  சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடைமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு புனித நீராடியுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிப்பதற்காக சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயில் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ரயில் நிலையத்திற்கு கூலி தொழிலாளியான லாசர் என்பவரும், அவரது சகோதரரும் வந்துள்ளனர். இந்நிலையில் லாசர் சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவரின் நண்பருடன் ஏற்பட்ட தொடர்பு…. திடீரென ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

கள்ளக்காதலனுடன் ஓடிய இளம் பெண்ணை காவல்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பட்டன்விளை பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளி தனது மனைவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தொழிலாளி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு வந்த குடும்பம்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம் …. போலீஸ் வலைவீச்சு …!!!

பீரோவை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வாணியங்குடி பகுதியில் மீனவரான ஆண்டனிபாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் விசைப்படகு வைத்து  மீன்பிடித்தொழில் செய்து வந்த நிலையில் தனது சொந்த ஊரான வணியங்குடி கிராமத்திற்கு ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். கிராமத்தில் நடந்த குருசடி திருவிழாக்கு சென்றுள்ளனர். இந்நிலையில்  வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆண்டனி பாபு  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்  உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீ கடையில் நடந்த சம்பவம்…வசமாக சிக்கிய வாலிபர்கள் … போலிஷ் நடவடிக்கை …!!

கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் அமைந்துள்ள சந்தைக்கு அருகே சசி, பத்மராஜ், விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து  டீக்கடையை நடத்தி வருக்கின்றனர். இந்த டீ  கடையின்   பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கல்லாவில்  இருந்த   1,500 ரூபாயை   கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர்கள் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”…. தமிழகத்தில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரியில் நாளை 10/12/2021 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதால் பணி தேடுபவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து அரசு பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. வழக்கமாக மாவட்ட அரசு வேலைவாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அவ்வப்போது தனியார் […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

BREAKING: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் குமாரசங்க.ர் திமுக பிரமுகரான இவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மழை கோட்டு அணிந்திருந்த ஓட்டுனர்…. சிரமப்படும் பொதுமக்கள்…. வைரலாகும் காட்சிகள்….!!

பேருந்துக்குள் குடை பிடித்த படி பொதுமக்கள் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்த பேருந்தின் மேற்கூரை வழியாக மழை நீர் ஒழுகியுள்ளது. இதனால் இருக்கையில் அமர முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். அதிலும் சிலர் குடை பிடித்த படி பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இதற்கிடையில் மழைகோட்டு அணிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கார் கண்ணாடி…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

காரின் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் 2 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விசுவாசபுரம் ராஜீவ் நகரில் முன்னாள் ராணுவ வீரரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக ஜேம்ஸ் 50 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு காரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தோவாளையில் இருக்கும் ஒரு வங்கியில் இருந்து ஜேம்ஸ் 2 லட்சத்தை எடுத்து ஏற்கனவே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முளங்கூட்டுவிளை பகுதியில் கூலி தொழிலாளியான டேவிட்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் டேவிட்சன் அருவிக்கரை தடுப்பணை பகுதியில் பரளியாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டேவிட்சன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாப்பிள்ளைக்கு இன்னும் வயசு வரல” நிறுத்தப்பட்ட காதல் திருமணம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

20 வயது வாலிபருக்கு நடக்கவிருந்த காதல் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் 20 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் குளச்சலில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த நிலையில் மாப்பிள்ளை திருமண வயதை அடையவில்லை என மாவட்ட சமூக நல அதிகாரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. மனைவிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவன் இறந்ததை தாங்க முடியாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிப்பாறை  வெள்ளாம்பி மலை கிராமத்தில் செம்பொன் காணி- வள்ளியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாவே செம்பொன் காணிக்கு உடல் நலம் பாதிக்கபட்டு இருந்தது. இந்நிலையில் செம்பொன் காணி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து செம்பொன் காணியின் உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீட்டுவந்த காவல்துறையினர்…. தொழிலதிபருக்கு டாட்டா காட்டிய மனைவி…. மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓட்டம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் கனியான் விளை பகுதியில் மோகன்ராஜ்- சோனியா காந்தி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். மோகன்ராஜ் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி வீட்டில் இருந்த மோகன்ராஜ் மனைவி 45 சவரன் நகை, 13,00,000 ரூபாய் மற்றும் அவரது மகளுடன் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து மோகன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியான புது அறிவிப்பு…! 1இல்ல 2இல்ல 19மாவட்டத்துக்கு லீவ்… குஷியான மாணவர்கள் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே …! 16 மாவட்ட கல்லூரிகளுக்கு லீவ்- சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் பிறகு கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வழிபாட்டு தலங்களில் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாத திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இருந்தாலும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில முக்கிய விழாக்களுக்கு மாவட்ட வாரியாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். தற்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரணத்திலும் பிரியாத தம்பதியினர்…. சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் அவருடனேயே உயிரிழந்துவிட்டார். மரணத்திலும் பிரியாத தம்பதியின் இழப்பு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கீரிப்பாறை அருகே வெள்ளந்தி பகுதியை சேர்ந்தவர் செம்பொன் காணி. 90 வயதான இவர் மனைவி வள்ளியம்மாள் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த செம்பொன் காணி நேற்று இரவு திடீரென இறந்துவிட்டார். உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடக்கம் செய்ய ஏற்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்ட மாணவர்களே…. பள்ளி, கல்லூரிகளுக்கு போகாதீங்க…. உங்களுக்கும் லீவு தான்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

FlashNews: கன்னியாகுமரி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கட்டிலில் மறைத்து வைக்கப்பட்ட நகை…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் கதவை உடைத்து 24 1/2 பவுன் தங்க  நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து  சென்ற  சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரன்கோணம் பகுதியில் பிரேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவரான ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில் பிரேமலதா டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தினமும் அதிகாலை டீ கடைக்கு சென்று விடுவார். அதே போல் நேற்றும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது பின்பக்க கதவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக தப்பான ஆட்சி முறை…! தெருத்தெருவாக போகும் காங்கிரஸ்…. 28ஆம் தேதி வரை அதிரடி …!!

மத்திய அரசின் தவறான ஆட்சி முறையை கண்டித்து வரும் 28-ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபடுவார்கள் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள காந்தி சிலை முன்பு எம்பி விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தவறான அணுகுமுறையால், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதாக சாடினார். […]

Categories
மாநில செய்திகள்

கவர்னர் 2 நாள் பயணமகா குமரிக்கு வருகை…. 500 க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிப்பு….!!

குமரி மாவட்டத்திற்கு தமிழக கவர்னர் 6 என்ற இரண்டு நாள் பயணமாக இன்று வந்தார். அதன்பிறகு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த், தென்மண்டல ஐ.ஜி. அன்பு மற்றும் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் ஆகியோர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். கவர்னர் வருகையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு மாலை 4 மணிக்கு படகு சவாரி மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில்… மழைவெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய குழுவினர் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இதில் மத்திய நிதித்துறை ஆலோசகர்கள் ஆர்.பி. கபில், நீர்வள ஆணையத்தின் இயக்குனர் தங்கமணி, தமிழக வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் வெள்ள சேதம் குறித்த படங்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெள்ள சேதம் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் வடக்கு […]

Categories
மாநில செய்திகள்

3 வேளாண் சட்டம் வாபஸ்… புதுசாக கொண்டாடிய காங்கிரசார்…!!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து நேற்று முன்தினம் காலை மக்களிடம் பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். […]

Categories
மாவட்ட செய்திகள்

வெள்ள நீரில் மூழ்கிய கார்… விரைந்து செயல்பட்ட தீயணைப்பு படையினர்….மீட்கப்பட்ட 12 பேர்…!!

நித்திரவிளை அருகே 12 பேருடன் சென்ற கார் சாலையில் தேங்கி இருந்த மழை வெள்ளத்தில் மூழ்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் சுஜின். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏர்போர்ட்டிற்கு சென்று சுஜினை வழியனுப்பி விட்டு வந்துள்ளனர். திரும்பி வரும் வழியில் நித்திரவிளை அருகே உள்ள நடுவரம்பன்கரை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனை அறியாத […]

Categories
மாவட்ட செய்திகள்

முகாம்களில் இருந்து வெளியேறுமாறு கூறிய அதிகாரிகள்…. போராட்டம் நடத்திய பொதுமக்கள்…!!

குமாரபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களை முகாமை விட்டு வெளியேறுமாறு கூறியதால் அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பத்மநாபபுரம் ஏரியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் முட்டைக்காடு காலனி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த மக்கள் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நாளை ஒருநாள் விடுமுறை… தமிழகத்தில் திடீர் அறிவிப்பு..!!!! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரணமாக செயல்படும் ஆவடி நடுகுதகை நடுநிலைப்பள்ளி, திருத்தணி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ரெட் அலர்ட் எச்சரிக்கை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

Breaking:  கன்னியாகுமரி மழை பாதிப்பு… நாளை ஆய்வு செய்கிறார் முதல்வர்…!!! 

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

குமரியில் மழை வெள்ளத்தால் பாதிப்பு….4 ரயில்கள் நிறுத்தம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு அணைகளும் நிரம்பி வழிகின்றது. மேலும் முக்கிய அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இரட்டை கரை சானலில் 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள ரயில் பாதையில் வெள்ள நீர் புகுந்து பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் தண்டவாளங்களில் மண் குவிந்துள்ளது. இதனால் அந்த வழியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலனுடன் சென்ற மனைவி…. நடுரோட்டில் நடந்த சம்பவம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் இருந்தவரை 2 பேர் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்ட தொடங்கினர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதும் கூட அவரை விடாமல் வெட்டினார்கள். இதை கண்டு ஏராளமானோர் திரண்டதால் அரிவாளுடன் நின்ற இருவரும் தப்பிச் சென்றனர். இதையடுத்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் உடனே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கித் தவித்த 7 குடும்பங்கள்…. தீயணைப்பு துறையினர் மீட்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 குடும்பங்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணை நிரம்பி மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் செண்பகராமன்புதூர் பெரிய குளத்திற்கு சென்றடைகிறது. இதையடுத்து நேற்று பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் அருகில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு வெள்ளம் புகுந்து பல இடங்களில் சுற்றி இறுதியாக பெரிய குளத்தை அடைகிறது. மேலும் தனியார் கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக  மழைநீர் தேங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கடந்த 5 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

காதல் விவகாரம்… வாலிபர் கொலையா?…. போலீஸ் விசாரணை…..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகிலுள்ள தோவாளைபுதூரில் சொர்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ்குமார் பி.காம் படித்துவிட்டு பெயிண்டிங் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவர் அழகியபாண்டிபுரம் அருகில் உள்ள காட்டுப் புதூரில் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சுரேஷ்குமார் வீட்டிற்கு பூதப்பாண்டி போலீஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி…. மகன் அளித்த புகார்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டிலிருந்து தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடியப்பட்டணம் பகுதியில் கில்லஸ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியை பிரிந்து மகன் பவினுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த  கில்லஸ் பாபு திடீரென மாயமாகி உள்ளார். இந்நிலையில் கில்லஸ் பாபுவை அவரது மகன் பவின் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கில்லஸ் பாபு கிடைக்கவில்லை. இதனால் அவரது மகன் பவின் இதுகுறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அலறிய 2 சிறுமிகள்…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு பகுதியில் பொன்னுபிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பொன்னுபிள்ளை அந்த சிறுமிகளை அடிக்கடி அழைத்து பேசுவார். இதேபோன்று பொன்னுபிள்ளை அருகில் உள்ள குளக்கரைக்கு சிறுமிகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் சிறுமிகள் அலறியுள்ளனர். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அங்கதான் போயிட்டு வரேன்னு சொன்னா” பெற்றோர் அளித்த புகார்…. தேடும் பணி தீவிரம்….!!

பெண் என்ஜினீயர் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் உள்ளார். இவர் பி.இ. படித்துவிட்டு நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நாகர்கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வினோதினி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வினோதினியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் வினோதினி கிடைக்கவில்லை. இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கி தராத பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

செல்போன் வாங்கி தராததால் விரக்தியடைந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூட்டேற்றி தொழிக்கோடு பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஆரதி, வீனா என்ற மகள்கள் உள்ளனர். தற்போது ஆரதி லேப் டெக்னீசியன் படித்துள்ளார். அவரது தங்கை வீனா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆரதிக்கு அய்யப்பன் செல்போன் வாங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னியாகுமரியில் நடைபெறும் சிம்புவின் புதிய பட ஷூட்டிங்…. ஹீரோயின் வெளியிட்ட பதிவு….!!

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் சிலம்பரசன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் ”பத்து தல” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.   இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார். அதில், ”ஒரு வாரமாக […]

Categories
அரசியல்

கோரிக்கை தான் வைத்தோம்…. ரவுடி மாதிரி நடந்துகொண்டார்…. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்….!!

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவை சேர்ந்த தலைவருக்கு எதிராக அக்கட்சியின் கவுன்சிலர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவை சேர்ந்த அழகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது அவருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ஊராட்சி ஒன்றிய தலைவரான அழகேசன் தங்களுக்கு உரிய […]

Categories

Tech |