சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடிமாத களப பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடக்கத்தில் கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு கற்கடக ஸ்ரீபதி விழா நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் நடைபெறும் நித்திய காரியபூஜைகள் முடிவு பெற்ற பின் மாலை 6.30 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் சிவபெருமானையும், கருட […]
Tag: கன்னியாகுமரி
முன்விரோதம் காரணமாக தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோள் அப்பட்டுவிள பகுதியில் ரங்கசாமி என்பவர் கூலித் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. எனவே இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கிருஷ்ணனின் மகன் சுபாஷ் மண்வெட்டியால் ரங்கசாமியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறத. இதில் ரங்கசாமிக்கு பலத்த […]
படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டணம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி படகில் மீன்பிடிக்க சென்று விட்டு மாலை வேளையில் துறைமுகத்தில் நுழைவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் துறைமுக முகத்துவார பகுதியில் வந்தபோது ராட்சத அலையில் படகு கவிழ்ந்து விட்டது. இதனால் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இனையம்புத்தன்துறையை சேர்ந்த ஆன்டனி […]
அரசு தொழிற் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி ஐ.டி.ஐ.மாணவர்களுக்கு இந்த ஆண்டுகளுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டு செய்முறை வகுப்புகளில் நடைபெற்றது. அதன்பின் சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பின் மாணவ-மாணவிகள் […]
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் கோவிலின் கருவறை மேற்கூரைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரைகள் அமைத்து தேவப்பிரசன்னம் பார்த்து முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. அதன்பின் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுசீந்திரம் பிரதீபன் நம்பூதிரி கோவிலில் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 23 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 280 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 23 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் கவிமணி அரசு பள்ளி மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனையில் வெளிநாடு செல்பவர்களுகான 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து […]
ஆடி மாதத்தை முன்னிட்டு நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடிமாதம் பிறந்ததை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் உட்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் பெரும்பாலானோர் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று […]
ஊரடங்கும் தளர்வுகளை மீறி சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. எனவே தற்போது ஊரடங்கி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே இருந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தொடங்கி இருக்கின்றனர். இதனால் கன்னியாகுமரி […]
கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதேபோன்று கன்னியாகுமரி வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், சிலுவை நகர், கீழமணக்குடி, பள்ளம் போன்ற பல்வேறு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ள வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். அதன்படி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுவிட்டு காலை 8 மணிக்கு கரை திரும்புவர். […]
மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுகோல் கிராம நிர்வாக அலுவலகம் முதல் புதுவீட்டுவிளை வரை 2 1/2 கி.மீ நீளத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்பட இருக்கின்றது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்து நிருபர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது இந்த மாவட்டத்தில் ஏ.வி.எம். கால்வாய் கடலோர மக்களின் பாதுகாப்பு அரணாகவும், […]
சபையார் குளத்தில் முட்புதர்களை கலெக்டரும் சேர்ந்து அகற்றியதால் பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரியமாணிக்கபுரம் சபையார் குளத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. இந்த பணியினை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்ததோடு தானும் மண்வெட்டி எடுத்து முட்புதர்களை வெட்டி அகற்றினார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகர நல அதிகாரி கிங்சால் போன்றோரும் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து புதர்களை வெட்டி அகற்றியதும் கலெக்டர் அரவிந்த் மரக்கன்று […]
ரயில்வே நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விரிவாக்கம் மற்றும் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் முகுந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் நடைமேடை, இருக்கைகள், பயணிகள் ஓய்வு அறை, பாதுகாப்பு அறை போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் இடம், தட்கல் டிக்கெட் எடுக்கும் இடம் போன்றவற்றையும் […]
ராட்சத அலையால் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் பகுதியில் சர்ஜீன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இணையம்புத்தன்துறை சேர்ந்த தாசன் மகன் ஆன்டனி பிரிட்டன் ராஜா, தேங்காய்ப்பட்டணத்தை சேர்ந்த வினித், முள்ளூர்துறையைச் சேர்ந்த ஷைஜீ, இணையம்புத்தன்துறையை சேர்ந்த மரியதாசன் உட்பட 7 பேர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு மாலை வேளையில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் […]
பேரப்பிள்ளைகள் வீட்டை கேட்டு மிரட்டுவதாக முதியவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி இறச்சகுளத்தில் மருதப்பன்- சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றுகொண்டு திடீரென தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேன் மூடியை கழற்றி கொண்டிருந்தனர். அதனைக் கண்ட காவல்துறையினர் சரஸ்வதி கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சரஸ்வதியிடம் நடத்திய […]
மனைவி இறந்த மன வேதனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகில் துரைசாமி என்பவர் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்திரை கனி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் சித்திரை கனி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் துரைசாமி தன்னுடைய மகன் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 34 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 34 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குழித்துறை, கோதநல்லூர் போன்ற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நாகர்கோவில் டதி பள்ளி, தம்மத்துகோணம் சி.எம்.சி. பள்ளி, சால்வேசன் மிலிட்டரி பள்ளி போன்று பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 16,600 தடுப்பூசிகள் வந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 44 ஆயிரத்து 153 நபர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 70 ஆயிரத்து 16 நபர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசிகள் என 4 லட்சத்து 14 ஆயிரம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த மாவட்டத்தில் முகாம்கள் நடைபெறவில்லை. […]
மர்ம விலங்கு ஏதோ கடித்ததில் கால்நடைகள் இறந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் கோவில் தெருவில் மனுவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான 1 நாய், 3 கோழிகள் அந்தப் பகுதியில் இறந்து கிடப்பதை கண்டு மனுவேல் அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் ராஜதுரைக்கு சொந்தமான 1 நாய், 9 கோழிகள் இறந்து கிடந்தது. இவ்வாறு ஒரே தெருவில் அடுத்தடுத்து கால்நடைகள் இறந்ததால் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய […]
காமராஜர் உருவ சிலைக்கு அமைச்சர் மற்றும் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரையிலுள்ள மணிமண்டபத்தில் அரசு சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 119- வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதனையடுத்து தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதன்பின் விஜய் வசந்த் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 6 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி முகாம் 6 இடங்களில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு பூதப்பாண்டி, குழித்துறை, பத்மநாபபுரம் போன்ற அரசு மருத்துவமனைகள், நாகர்கோவிலில் குருசடி புனித அந்தோணி மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி போன்றவற்றில் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகின்றது என்று கலெக்டர் அரவிந்த தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்காக பொதுமக்கள் நேரடியாக வருகின்றனர். இதேபோன்று கோவேக்சின் […]
இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில்வே மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் சில பேர் இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி முறைகேடாக முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து […]
செலவுக்கு பணம் கொடுக்காததால் மருமகனே தாய் மாமாவை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் சாந்தன் செட்டிவிளை பெரியநாடார் தெருவில் சிவதாணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற தாசில்தாராக இருந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இவருடைய மகள் நாமக்கலில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். ஆகவே வீட்டில் சிவதாணு, அவருடைய தங்கை மகன் விக்னேஷ் ராம் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதில் விக்னேஷ் ராமுக்கு இன்னும் திருமணம் […]
திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் காட்டுவிளை பகுதியில் ராஜமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயசிங் உட்பட 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஜெயசிங் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் மது குடித்து வந்ததாக தெரிகின்றது. இதனையடுத்து ஜெயசிங் யாரிடமும் சரியாக பேசாமல் தனியாக […]
வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் தம்மத்துகோணம் குருகுலம் சாலையில் பெபிலின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பை முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பெபிலின் இந்திரா தெரு பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பெபிலின் சிகிச்சைக்காக […]
கோவிலில் புகுந்து நகை மற்றும் வெள்ளியை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோவிலில் தினசரி மாலை வேளையில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் பூசாரி கோவிலுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். […]
வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எஸ்.டி. மங்காடு பகுதியில் லால் ஷைன் சிங் என்பவர் மதபோதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெபக்கூடம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் அந்த வீட்டை கண்காணித்தபோது, […]
பெண்களுக்கு கட்டணம் இன்றி டிக்கெட் வழங்கப்பட்டு இலவசமாக பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் நகரம் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த மே மாதத்தில் இருந்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 288 அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பேருந்தின் முன்புறம் இது குறித்து […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து வேப்பமூடு வரை சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விஜய் வசந்த் எம்.பி இதில் பங்கேற்று சைக்கிள் ஊர்வலம் சென்றுள்ளார். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் […]
ரேஷனில் விநியோகம் செய்யும் அரிசி தரமின்றி இருப்பதால் பொதுமக்களுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சில ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்ற நிலையில் இருப்பதாக புகார்கள் வந்தது. இதகுறித்து மாவட்ட கலெக்டரிடம், பா.ஜனதா எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி மனு ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் தம்மத்துகோணம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட அரிசி மிக மோசமாக இருப்பதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து […]
தெருக்களில் சுற்றித் திரிந்த 30 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் தொல்லை அதிகமாக இருக்கின்றது. எனவே தெருநாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், தெருக்களின் வீடுகளின் முன் விளையாடும் குழந்தைகளை கடிப்பதுமாக இருக்கின்றது. இதனால் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி மாநகரில் பல்வேறு […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 20 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு 20 இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கின்றது. அதன்படி, குருந்தன்கோடு, ஆறுசேதம், கோதநல்லூர், இடைக்கோடு என பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் வாடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 2-வது கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முகாம்களில் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை நினைவு பள்ளி, தேவசகாயம் மவுண்ட் ஆர்.சி. நடுநிலை பள்ளி, சுருளோடு புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி, குழித்துறை, குளச்சல், அருமனை போன்ற பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நாகர்கோவில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் செயல்பட்டு வரும் தடுப்பு முகாமில் கோவிஷீல்டு இரண்டம் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி 11 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகள் உள்ள சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்துவற்காக ஆர்வத்துடன் திரண்டு வருகின்றன. இதனை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் டோக்கன் பதிவு முறை தொடங்கி ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்வதால் சர்வர் பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் சில முகாம்களில் நேரடியாக […]
லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்துவதற்கு முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரியின் வழியாக ரேஷன் அரிசி கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பு காந்தி மைதானம் பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருக்கும்போது சந்தேகமடைந்த காவல்துறையினர் அதனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரியில் 20 டன் அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரம் பகுதியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். ஆனால் தற்போது கொரோனா காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஆஸ்டின் மோட்டார் சைக்கிளில் கோவளம் சாலையில் மின்வாரிய அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட ஆஸ்டின் படுகாயங்களுடன் […]
அறுந்து கிடந்த மின் கம்பியால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழத்தோட்ட பாலசுப்பிரமணிய புரத்தில் வேலையா என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். இந்த மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இந்நிலையில் வேலையா டீ அருந்துவதற்காக மாதவரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அவர் மிதித்து […]
கடல் சீற்றம் ஏற்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி சுற்றுலா தலத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்லும் நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைவான பயணிகளே வந்து செல்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த கன மழையால் கடல் சீற்றம் ஏற்பட்டு கடலின் அலை பல அடி உயரத்திற்கு எழுந்து வந்து பாறைகளில் மோதியவாறு இருந்தது. இதனையடுத்து மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு செல்வதற்காக கட்டுமரங்களை கொண்டு தயாராக இருந்தபோது பலத்த காற்று வீசியதால் […]
ஜே.ஜோ உடற்பயிற்சிக் கூடத்தை பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அருகில் ஜே.ஜோ என்ற உடற்பயிற்சிக்கான கூடம் அமைக்கப்பட்டு திறப்புவிழா சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மண்டைக்காடு சி.எஸ்.ஐ சபை போதகர் அருள் ஜெபசிங் கலந்துகொண்டு ஜெபம் செய்து நுழைவு வாசலை திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் போன்றோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் பாராளுமன்றம் உறுப்பினரான விஜய் வசந்த் […]
சாலையைக் கடப்பதற்கு முயற்சி செய்த புள்ளி மான் மீது வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட தெற்கு மலை பகுதிகளில் பெரும்பாலான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. காவல்கிணறு-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சில நேரங்களில் மலையில் வாழும் விலங்குகள் உணவு, தண்ணீர்காகவும், பிற விலங்குகளை விரட்டுவதற்கு வருகின்றது. அப்போது விலங்குகள் தேசிய நெடுஞ் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகிறது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் ஆண் […]
மருத்துவரின் கார் டயரில் காற்றை திறந்துவிட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை நெடியசாலை பகுதியில் மருத்துவர் ஜெயின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பனச்சமூடு பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகின்றார். எனவே தினசரி மாலை வேளையில் அருமனை சந்திப்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் ஜெயின் கடந்த 2016- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கம்போல் […]
போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் 33 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்க்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்னர். இதுகுறித்த விவரம் பின்வருமாறு, கோட்டார் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த சரவணக்குமார், கீரிப்பாறை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழியில் வேலைபார்த்த சின்னத்தம்பி களியக்காவிளை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி […]
பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர் உபகரணங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கப்பியறை வாத்தியார் கோணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்கள் சென்ற போது கம்ப்யூட்டர் ஆய்வகத்தின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மானிட்டர், கீபோர்ட், மவுஸ் போன்ற கம்ப்யூட்டர் உபகரணங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இவ்வாறு திருடப்பட்ட பொருட்களின் மொத்த […]
பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் எந்த விதி மீறலும் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்புக்கு தமிழக சட்டசபை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்பாவு வந்துள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது காமராஜர் காலத்தில் ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமென்று 42 அடி கொள்ளளவு உள்ள பேச்சிப்பாறை அணையை, 48 அடி தண்ணீர் தேக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். எனவே கூடுதலாக உள்ள 6 அடி […]
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கன்திட்டை விளையில் கணேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வருகின்றார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை ராஜாக்கமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அனிதாவுக்கு பிரசவம் பார்ப்பதற்காக […]
காரில் கடத்த முயன்ற மண்ணெண்ணையை தாசில்தார் பறிமுதல் செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதை தடுப்பதற்காக அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளவங்கோடு தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் சுனில்குமார் போன்றோர் மார்த்தாண்டம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிராயன்குழி பகுதியில் வந்த காரை அதிகாரிகள் நிறுத்த கூறியபோது டிரைவர் வேகமாக ஓட்டிச் […]
வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சாபிரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து செய்யது அலி தனது தொழிலுக்காக பல நபர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. இதன் இடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கடந்த […]
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் மருத்துவ கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு, கொரோனா நோயாளிகளின் பிரிவு என தனித்தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பின்பகுதியில் பழைய மருந்து அட்டைப் பெட்டிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த அட்டைப் பெட்டிகள் இரவு திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிலிருந்து […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை பாதியில் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இதனையடுத்து அபிஷேக்கிற்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயசங்கர் மகன் அபிஷேக்கை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக […]
குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கேமராவுடன் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்துவது குறித்து ஆயுதப்படை மைதானத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமை தாங்கினார். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நவீன்குமார், ராஜா, […]
கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாவூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் அதனை கண்ட பொதுமக்கள் நபரை விலகிச் செல்லும்படி சத்தமிட்டனர். ஆனால் அந்த நபர் ரயில் வரும் திசையை நோக்கி எதிரே வேகமாக சென்றதால் ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்த […]