தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் […]
Tag: கன்னியாகுமரி
மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் நாயகம் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வில்லியம்ஸ் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்கு போர் நிலவிய காரணத்தினால் வில்லியம்ஸ் இந்தியா வந்து தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கியிருந்து படித்து கொண்டிருந்தார் பின்னர் வில்லியம்ஸ் தனது நண்பர்கள் 6 பேருடன் டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செவரக்கோடு- மருதாக்கவிளை பகுதியில் வசிக்கும் 32 வயது வாலிபருக்கும், வெள்ளாங்கோடு பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த இரு விட்டாரும் நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணத்தை நேற்று தேமானூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். இந்நிலையில் திருமண விழாவிற்கு ஏராளமானார் வந்த நிலையில், மணப்பெண்ணின் வீட்டில் இருந்து யாரும் வராத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த போது மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதால் […]
ஓடும் பேருந்தில் இருந்து 4 வயது குழந்தை ஜன்னல் வழியாக கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சென்று கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக ஒரு குழந்தை சாலையில் விழுந்தது. அப்போது குழந்தையின் சத்தம் கேட்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தினார். இதனையடுத்து பேருந்தில் இருந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியாற்று முகம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வாடகை வீட்டில் தங்கி இருந்து தள்ளுவண்டியில் கூழ், மோர் மற்றும் பலகாரம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் பிரகாஷ் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த கார் தள்ளுவண்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ், கூழ் குடித்து கொண்டிருந்த ரெனால்ட் […]
தங்க கம்மலை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூச்சிவிளாகம் பகுதியில் தங்க கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய நிர்மலா என்ற மனைவி உள்ளார். இவர் கீழத்தாரவிளை சாலையோரம் இருக்கும் பொருட்களை தனது கால்நடைகளுக்காக பிடுங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த பகுதியில் மெக்கானிக் கடை இருக்கிறதா? என நிர்மலாவிடம் கேட்டுள்ளனர். அவர் பதில் கூறிக் கொண்டிருக்கும் போதே […]
லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் கேரளா உட்பட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் சர்ச் ரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முகமது அசாருதீன்(23) என்பது தெரியவந்தது. அசாருதீன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் கடல் அலைகள் நேற்று முன்தினம் பச்சை நிறத்தில் காணப்பட்டதோடு துர்நாற்றம் வீசியது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடல் நீரின் நிறம் மாறியதற்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? அல்லது ரசாயன கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர்கள் மீன் குஞ்சுகள் கடலில் செத்து மிதப்பதை […]
வங்கிக்கு 72 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோட்டை பகுதியில் கில்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி அதிகாரி கேட்டுக்கொண்டபடி 25 ஆயிரம் ரூபாய் வீதம் 48 தவணைகளில் சேர்த்து முடிக்கும் டெபாசிட் திட்டத்தில் இணைந்தார். அதற்கு 6.85 சதவீதம் வட்டி கிடைக்கும் என வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கில்லஸ் சில தவணைகளை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து வங்கிக்கு சென்று […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் வடிவேல் முருகன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு சுஜா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வயிறு வலிக்காக தம்பதியினர் தக்கலையில் இருக்கும் மருந்து கடையிலிருந்து மருந்து வாங்கி வந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு குடித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இறச்சகுளத்தில் இருக்கும் சுஜாவின் வீட்டிற்கு புதுமண தம்பதி சென்ற போது […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லாறை கைதக்கல் காலணியில் கூலித் தொழிலாளியான செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன், சஜின்(20) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சஜின் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஜின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு புதிதாக வீடு கட்டியதால் பண நெருக்கடியில் இருக்கிறோம். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பெருஞ்சாணி, சிற்றாறு, பேச்சிபாறை ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 316 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். ஆனால் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் […]
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற பகுதியில் வசித்து வந்தவர் வடிவேல் முருகன். இவருக்கும் இறச்சகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சுஜாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் வடிவேலு அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது சுஜா தன்னுடைய முன்னாள் காதலனோடு சேர்ந்து தன்னுடைய கணவனான வடிவேலுக்கு மருந்து எதையோ கலந்து கொடுத்து வருகிறார் என்பது வடிவேலுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து வடிவேலு காவல் […]
மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் மீனவரான சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சகாயத்தின் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சகாயம் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை தங்குத்தளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டு மரங்கள், 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக செல்கின்றனர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், கடலில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து அலுவலக வளாகத்தின் முன்புறத்தில் இருக்கும் புதர்களை அகற்றி, தேவையின்றி கிடந்த பொருட்களை அப்புறப்படுத்தினார். இதனையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்களை அகற்றியுள்ளனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது, பராமரிப்பின்றி கிடந்த கட்டிடத்தை புதுப்பித்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வர […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடையன்விளை பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவரது வயிறு வலி குறையவில்லை. இதனால் வேறொரு மருத்துவமனையில் மகேஸ்வரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முறையான ரசீது மற்றும் மருத்துவ சிகிச்சை சம்பந்தமான ஆவணங்களை தருமாறு முதலில் அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் மகேஸ்வரன் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை […]
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் சியாஹு(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இவர் உடற்பயிற்சி கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சியாஹுக்கு கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவி வேறு ஒருவரை காதலிப்பதாக நினைத்து சந்தேகப்பட்ட சியாஹு உன்னுடன் […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியனின் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணியனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனிமையில் இருந்த சுப்பிரமணியன் மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிளாங்கோடு பகுதியில் எலக்ட்ரீசியனான சாம்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது சாம்சன் தடிக்காரன்கோணம் நீதிபுரம் பகுதியில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் ஏற்பட்ட மின் பழுதை சாம்சன் சரிசெய்ய முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சாம்சனை அக்கம் பக்கத்தினர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரதபள்ளி மடத்துவிளை பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா(60) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று புஷ்பா வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று துணி துவைத்து குளித்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கரையில் புஷ்பாவின் துணிகள் இருந்தது. அவரை காணவில்லை. […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி கிழங்குவிளை பகுதியில் பிஜூ (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார் இந்த கடையில் 20 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெண்ணை மிரட்டி அருகில் நிற்க வைத்து பிஜூ செல்போனில் செல்பி எடுத்து வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. தற்போது இளம்பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாலும், பிஜூவின் நடவடிக்கை சரியில்லாததாலும் இனி வேலைக்கு வரமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பரசேரி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனையில் 26 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஜீப் ஓட்டுனராக வேலை பார்க்கும் அஜித்குமாருக்கு கடந்த சில வாரங்களாக பணி ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணி ஒதுக்க வலியுறுத்தி அஜித்குமார் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் அஜித்குமார் தனது மனைவி பினு, மகன் அபிஜித், மகள் பிவிஷ்மா ஆகியோருடன் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை புளியறத்தலை பகுதியில் சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூன்றாவது மகள் அபிதா களியக்காவிளை பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட அபிதாவை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிதா கடந்த 5-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அபிதாவின் தாய் தங்கபாய் நித்திரவிளை காவல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருகண்டான்விளை பகுதியில் வசிக்கும் கிறிஸ்டோபர், தாஸ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக அரசின் அனுமதி பெற்று மணல் எடுத்துள்ளனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மணல் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மண் எடுத்த பகுதியை ஒட்டி இருக்கும் ஷீபா, காளிதாஸ், சுந்தர்ராஜ் ஆகியோரின் வீடுகள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அமைச்சர் கூறியதாவது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குமரி மாவட்டம் நிர்வாகத்தின் […]
கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் பகுதியில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பள்ளிக்கு எதிரே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் பொன்மனை ஈஞ்சக்கோட்டை பகுதியில் வசிக்கும் வினோத் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் […]
கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை பகுதியில் கூலி தொழிலாளியான சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 3-வது மகள் அபிதா பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு காதல் விவகாரம் வாலிபரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் களியக்காவிளை சந்தை மற்றும் கறிக்கடைகளில் சோதனை மேற்கொண்டதில், அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விநியோகம் செய்தாலோ கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகிய மண்டபம், திருக்கணங்கோடு, கருங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 16 கடைகளில் உபயோகப்படுத்திய 40 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக திருக்கணங்கோடு பகுதியில் இருக்கும் 2 கடைகள், கருங்கல் பகுதியில் இருக்கும் ஒரு கடை, அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் ஒரு பேக்கரி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன்குளம் பகுதியில் காஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் ஜெனிஷ்(24) சென்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் அருண் தனது சித்தப்பாவான சுரேஷ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நூலகத்தில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் அருண் தனது சித்தப்பாவை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அருண் கூறியதாவது, […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர்பால் தலைமையிலான போலீசார் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேஜைக்குள் கட்டு கட்டாக இருந்த […]
குமரி கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் காதலியான கிரீஷ்மா வீட்டிற்கு சென்று வந்த ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது தனது காதலி குடிப்பதற்கு குளிர்பானமும், கஷாயமும் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த வாரம் வீட்டிற்கு முன்பு தவறி கீழே விழுந்ததால் லட்சுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் லட்சுமி மருத்துவமனையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் 17 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் சிறுமியை அவரது தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது டாக்டர் பரிசோதனை செய்து சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் செண்பகராமன்புதூர் பகுதியில் வசிக்கும் ஆதி கண்ணன் என்பவரை காதலித்ததாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் மார்த்தாண்டம் மேம்பால பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறுவதற்காக மாணவிகள் கை காட்டியுள்ளனர். ஆனால் சிறிது தூரம் சென்று ஓட்டுனர் […]
தனியார் நிறுவனத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிந்தன்விளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தை சேர்ந்த மரம் அறுக்கும் எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தினரிடம் மரம் அறுக்கும் எந்திரங்களை வாங்கியுள்ளார். சில நாட்களிலேயே பழுதான எந்திரங்களை சரி செய்து தருமாறு சசிகுமார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் 29 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் சசிகுமார் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் […]
ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகக்கோடு வண்டி பில்லாங்கால விளை பகுதியில் சுரேஷ்குமார்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரும்பு சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் எடை மேடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை சந்திப்பிலிருந்து மடிச்சல் செல்லும் சாலை சுமார் 100 மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மடிச்சல் பகுதியில் வசிக்கும் மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞரான புனித தேவகுமார் என்பவர் சமூக வலைதளங்களில் சாலையை சீரமைக்காவிட்டால் 31-ஆம் தேதி குழித்துறை சந்திப்பில் தீக்குளிப்பேன் என பதிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதிய […]
லிப்டில் சிக்கிய 9 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் லாட்ஜில் சுற்றுலாவுக்காக வந்த வட மாநிலத்தை சேர்ந்த 8 பேர் தங்கியுள்ளனர். நேற்று அனைவரும் கன்னியாகுமரி கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் லாட்ஜுக்கு வந்தனர். இந்நிலையில் மாடியில் இருக்கும் அறைக்கு செல்வதற்காக 9 பேர் லிப்டில் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பிறகு லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றதால் 9 பேரும் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து ஊழியர்கள் […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு (நவம்பர் 1ஆம் தேதி) இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் அரசு வேலை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவியோடு மாங்காலை பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனூப்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அனூப்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த குமாரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் சுஷ்மா(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுஷ்மாவுக்கு டெல்லியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சியாம்(28) என்பருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தலை தீபாவளி கொண்டாடுவதற்காக சுஷ்மா தனது கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் காளிகேசம் பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இதனை அடுத்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று இரவு அரல்வாய்மொழி, சாமிதோப்பு, மார்த்தாண்டம், குளச்சல், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மழை நீர் சுமார் 2 அடி அளவுக்கு தேங்கி வடிந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சில இடங்களில் மழைநீருடன் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இரவு முழுவதும் மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. பகலில் வெயில் பாட்டி வதைத்த நிலையில் இரவில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் அல் அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த அல் அமீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]
அட்டகாசம் செய்த 40 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய உணவு கிடைக்காததால் குரங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. அந்த குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து உணவு தின்பண்டங்களை எடுத்து செல்வதோடு குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அமைச்சர் மனோ தங்கராஜிடம் குரங்குகள் தொல்லை குறித்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சர் மாவட்ட வனத்துறை அலுவலர் தொடர்பு கொண்டு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வசிக்கும் பாபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உஷா தனது குழந்தைகள் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 5 1/2 பவுன் நகைகளை கழற்றி வீட்டில் அலமாரியில் வைத்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் விபின், வினிஷ், அனீஸ் ஆகியோர் தேங்காய் சிரட்டை வாங்குவது போல உஷாவின் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டனர். இதனை […]
நெல் முட்டைகள் சரிந்து விழுந்ததால் லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் யோகேஸ்வரர் தெருவில் பிரம்மநாயகம் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாபு என்பவருக்கு சொந்தமான லாரியை ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சத்யகலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து நெல் முட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பிரம்மநாயகம் அரிசி ஆலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அரிசி ஆலைக்கு சென்றவுடன் நெல் மூட்டைகளை […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் யானை பாகனான தனேஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் துணிக்கடையில் வேலை பார்த்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு செல்போனில் சிறுமியை தொடர்பு கொண்ட வாலிபர் அவரை கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]