நாளை (திங்கட்கிழமை ) முதல் 500 பேருந்துகள் இயக்குவதற்கு கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 500 பேருந்துகள் இயக்குவதற்கு கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றது. எனவே கடந்த மே மாதம் 10-ம் தேதி பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் […]
Tag: கன்னியாகுமரி
இளம்பெண் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்வதாக கூறி 3 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் பகுதியில் கிறிஸ்டல் ஆனந்த் என்ற பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு பிறப்பிலேயே வலது கை இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டல் ஆனந்த் ஆச்சாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சிகிச்சை எடுத்து வந்த தனது நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது கிறிஸ்டல் ஆனந்த் அந்த […]
மது அருந்துவதற்கு வற்புறுத்தியதால் நடந்த தகராறில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராமனின் நண்பரான சாமுவேல் என்பவர் மதுபானங்களை வாங்கிக்கொண்டு அழகிய நகர் பாலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த சாமுவேல் என்பவர் ராமனையும் மது அருந்துவதற்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ராமன் மது அருந்த மறுத்ததில் இருவருக்கும் இடையே கைத்தகராறு ஏற்பட்டு சாமுவேல் ராமனை தள்ளிவிட்டார். இதனால் ராமன் அருகில் […]
விவசாய தோட்டத்தில் அட்டகாசம் செய்த நோயுற்ற பெண் யானையை வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் பல விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒரு காட்டு யானை அந்த தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை மரம், வாழைத்தார் போன்ற மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த யானையை அகழி தோண்டியும், பட்டாசு வெடித்தும் விரட்டி உள்ளனர். ஆனால் அந்த யானை மீண்டும் விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து […]
காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கின்போது சுற்றி திரிந்தவர்களின் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டதை காவல்துறையினர் தினசரி 10 வாகனங்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காவல் […]
மாயமான வங்கி ஊழியர் உடல் துண்டான நிலையில் மீட்கப்பட்டதை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மணி திடீரென வீட்டை விட்டு வெளியே சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதே நேரத்தில் மணி தனது செல்போனையும் […]
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் முதல்கட்ட பரிகார பூஜையான மிருத்யுஞ்சய ஹோமம் கோலாகலமாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்தால் ஏற்ப்பட்ட கருவறை மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் 2 நாட்கள் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு, கோவிலை விரிவாக்கம் செய்வது உட்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. எனவே அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு […]
இருதரப்பினர் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிளம்பர் மீது டெம்போ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரையில் அரிச்சந்திரன் என்ற பிளம்பர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிஷா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கின்றது. இதில் அரிச்சந்திரன் மாலை வேளையில் வெண்டலிகோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மற்றொரு மோட்டார் சைக்கிளும் காரும் லேசாக மோதி இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதனை கண்ட அரிச்சந்திரன் […]
4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பறக்கைகுளம் பகுதியில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மதுபான கடை மூடப்பட்டுள்ளது. அதன்பின் கொரோனா தொற்று குறைவால் மீண்டும் திறக்கப்பட்ட அந்த மதுபான கடையில் பறக்கைகுளம் பகுதியில் வசிக்கும் சாலி என்பவர் மதுபானங்களைை வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு வலிகொலி அம்மன் கோயில் சாலையில் சாலி தனது நண்பர்களான பிரபு, அய்யப்பன், சுரேஷ் […]
ரீத்தாபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக குளச்சல் அருகே உள்ள சிங்காரவேலர் காலனி பகுதியில் டி.வி.எம். கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரீத்தாபுரம் பகுதியில் உள்ள காக்கைகுளம், பெரியகுளம், தாமரைகுளம் ஆகிய குளங்கள் நிறைந்ததால் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இவ்வாறு சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 28-ஆம் தேதி வருவாய் மற்றும் […]
ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டால் மீட்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டால் காவல்துறையினர் மேற்கொள்ளவேண்டிய மீட்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. அப்போது ரயில் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜங்ஷனில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். இதனையடுத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன் மற்றும் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி விழுந்த காண்ட்ராக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழபெருவிளை முத்தாரம்மன் கோவில் தெருவில் காண்ட்ராக்டர் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பார்வதிபுரம் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ஜார்ஜை அருகில் இருப்பவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து ஜார்ஜ் சிகிச்சை பலனின்றி […]
அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு போர்வெல் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் முன்பு நிறுத்திவிட்டு காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது வண்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோன்று மார்த்தாண்டம் அருகில் உள்ள புல்லாணியைச் சேர்ந்த ஆன்றோ லிபின் என்பவரும் அவருடைய […]
குளச்சல் அருகில் ராணுவ வீரர் மனைவியை கோவிலில் சங்கிலியால் கட்டி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இதனையடுத்து சொந்த ஊரில் இளம்பெண்ணும் மாமியாரும் ஒன்றாக இருந்த நிலையில் இருவருக்கும் இடையில் […]
கொரோனா நிவாரண தொகையாக 19 திருநங்கைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் காசோலையை அமைச்சர் வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் அரவிந்த் தலைமையில், அமைச்சர் மனோ தங்கராஜ் 19 திருநங்கைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண உதவி தொகையாக வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியபோது […]
மலைவாழ் மக்கள் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து கலெக்டர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அடுத்த கோதையாறு, குற்றியாறு தச்சமலை, மோதிரமலை போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து மலைவாழ் மக்களிடையே தடுப்பூசி குறித்து ஏற்பட்டுள்ள பயத்தை போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொரோனா தடுப்புப் பணிகளை பார்வையிடவும் […]
கன்னியாகுமரியில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 1500 டோஸ் தடுப்பூசிகள் வந்ததால் மீண்டும் பணி தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அனைவருக்கும் தடுப்பு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு கடந்த சில தினங்களாக பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் தடுப்பூசி மருந்துகள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 1,500 […]
தீ விபத்து ஏற்பட்ட பகவதி அம்மன் கோவிலில் நனைந்த உண்டியலை எண்ணியுள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைப்பதற்கு தீயணைப்பு துறை வாகனங்கள் மூலம் தண்ணீர் அடித்து குளிரூட்டப்பட்டது. அப்போது கோவிலின் முன்பு வைத்திருந்த ஒரு நிரந்தர உண்டியல் மற்றும் 7 குடங்களில் இருந்த காணிக்கை பணம் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விட்டது. இதனையடுத்து அந்த உண்டியலில் இருந்த […]
மழைக்காலங்களில் மிக்ஸி, டி.விகளை இயக்க வேண்டாம் என மின்வாரிய துறை அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தற்போது பெய்து வரும் பருவமழை நேரத்தில் மின்மாற்றி, மின் கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்வதை பொதுமக்கள் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் அறுந்துவிழும் மின்சார கம்பி அருகில் யாரும் செல்லக் கூடாது என்றும் அதுகுறித்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து […]
சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் காவல்துறையினர் நடைக்காவு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடையில் இருந்த 18 மது புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். […]
கேரள மாநிலத்திற்கு கடத்துவதற்கு மறைத்து வைத்திருந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் செய்யது அலி ஆகியோர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் விசாரணைக்கு வாணியங்குடி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் மறைவு […]
வள்ளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் ஆக்சிஜன் […]
தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்ப்பதற்காக தந்திரிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டு கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து காணப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணியினை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. […]
பறக்க முடியாமல் தவித்து வந்த அரியவகை ஆந்தையை காக்கை கூட்டம் சேர்ந்து துரத்தில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் ஒரு வித்தியாசமான ஆந்தையை காக்கைக் கூட்டம் துரத்தியதால் தன்னை காப்பாற்றிக்கொள்ள அலறியபடி பறந்துகொண்டிருந்தது. இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஆந்தை பறக்க முடியாமல் தரையில் வந்து அமர்ந்தது. ஆனால் காக்கை கூட்டங்கள் அந்த ஆந்தையை சூழ்ந்துகொண்டு கொத்த வந்ததனால் அந்த ஆந்தை பயத்தில் அந்த பகுதியில் நின்ற வண்டிக்கு இடையில் மறைந்திருந்தது. […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா பராமரிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிப்பது பற்றி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டருந்துள்ளார். இதனையடுத்து மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையத்தையும் கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். […]
கன்னியாகுமரியில் ஊரடங்கின்போது காவல்துறையினரால் பறிமுதல் செய்த வாகனங்களை உரிமையாளர்களிடம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் வாகன […]
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு புதிதாக வந்த 58 புதிய மருத்துவர்களுக்கு சிகிச்சை முறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள் இல்லாத நிலை இருக்கின்றது. எனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதிலும் கூடுதலாக மருத்துவர்கள் பணி நியமிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 60 புதிய மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு […]
தோவாளையில் 2 வாரத்திற்குப் பிறகு பூக்கள் விற்றதால் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டிலிருந்து பூக்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைப்பது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விற்பதற்காக வந்த பூக்களில் ஏராளமானவை தேக்கம் அடைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். எனவே விவசாயிகள் அவர்கள் விளைநிலங்களில் இருக்கும் பூக்களை பறிக்காமல் செடிகளில் விட்டு விட்டனர். இதனையடுத்து பொது மக்களின் தேவைக்காக ஒரு சில இடங்களில் வியாபாரிகள் பூக்களை […]
கன்னியாகுமரியில் மருந்துகள் இருப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்புசி செலுத்தும் பணி நடைபெற்று 25 ஆயிரத்து 122 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசிகளும், 1 லட்சத்து 82 ஆயிரத்து 787 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்திற்கு வந்த ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் நாகர்கோவில் கல்லூரி சிறப்பு […]
நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக ஆர்வத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் பணி முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் முகாம் அமைக்கப்பட்டு கோவேக்சின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு காலை 8 மணியில் இருந்து […]
பணி நியமன ஆணை வழங்க கோரி பேரூராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆளூர் பேரூராட்சியில் சரத், மணிகண்ட பிரபு இருவரும் தற்காலிக மின் நிலை உதவியாளராக வேலை பார்த்து வருகின்றார்கள். இந்நிலையில் ஆளூரில் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் மீட்டர் ரீடிங் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்த ஒருவருக்கு மின் நிலை உதவியாளராக பணி நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரத் மற்றும் மணிகண்ட பிரபு இருவரும் எங்களுக்கு […]
லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ ஈசாந்திமங்கலம் பகுதியில் ஆட்டோ டிரைவர் குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் புளியங்குளம் பகுதியை சேர்ந்த சுபாஷ், வடமாநில வாலிபர் சஞ்சய் ஆகிய 3 பேரும் சேர்ந்து மார்பிள் லோடு எடுப்பதற்காக ஆட்டோவில் நாவல்காடு பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஈசாந்திமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சுடலைமாடன் கோவில் அருகில் 3 பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த […]
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொடர்பாக 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனந்தபாலம் பகுதியில் ஆல்டோ மைக்கிள் டோனிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் வாணியங்குடி பகுதியைச் சேர்ந்த பிளஸ்- 1 மாணவிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாலிபர் காதலி மாணவியை உலக்கை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஆல்டோ மைக்கிள் டோனிக் மாணவிக்கு […]
தடுப்பூசி செலுத்தாததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி குமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முகாம்களில் தடுப்பூசி செலுத்த வருபவர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டு 2 நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக தக்கலை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை கலைபண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா, கலைபண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையதுறை முதன்மைச் செயலாளர் திரு.சந்திரமோகன் நேற்று சென்றுள்ளார். அதன்பின் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவிக்கு சென்று அருவியின் மேல் பகுதியில் இருக்கும் தடுப்பணை, சிறுவர் பூங்கா, படகுத்தளம் மற்றும் நீர்வீழ்ச்சி பகுதி போன்றவற்றை திரு.சந்திரமோகன் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து மாத்தூர் […]
கன்னியாகுமரியில் மழையினால் சேதமடைந்துள்ள குளங்களை சீரமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தேரூர் குளம் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். எனவே அவரது அறிவுறுத்தலின்படி மழை நீரால் சேத […]
விவசாய நிலத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து தென்னை, வாழை போன்றவற்றை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் வனத்துறை வீரர்கள் அப்பகுதியில் இருக்கக்கூடிய கிராம மக்களின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டி அடித்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் காட்டு யானைகள் வராமல் தடுப்பதற்காக அகழிகள் தோண்டப்பட்டபோதும் ஆனைக்கல் பகுதியில் உள்ள செல்வன் தென்னந்தோப்புக்குள் […]
கோவிலுக்குள் நுழைந்து சாமி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வைத்தியநாத புரத்தில் முத்தாரம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு காலை மாலை என இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது ஊரடங்கு காலம் என்பதனால் பக்தர்களை கோவிலுக்கு அனுமதிக்காமல் பூசாரி மற்றும் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூசாரி வழக்கம் போல் பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் பூஜை […]
காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உடையார்கோணம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் தென்னை, வாழை போன்ற மரங்களை முறித்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பகுதி மக்கள் பெரிய அளவிலான அகழிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி உள்ளனர். ஆனாலும் அதனை மீறி வேறு […]
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வகையில் நேற்று தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. சராசரியை விட இந்த வருடம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்துப் பகுதிகளிலும் கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில், பருவமழை தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் வருமானம் இன்று பலரும் தவித்து வரும் சூழலில் நாகர்கோவிலை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் தனது பெண் குழந்தையுடன் சைக்கிளில் டீ விற்பனை செய்தார். அதற்கும் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடவே வறுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் அவரை பற்றி கேள்விப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் […]
மார்த்தாண்டம் அருகில் துக்க வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுவிளை பகுதியில் ரெனின் என்பவர் வசித்து வருகின்றார். இவரது தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் தந்தை உடலை அடக்கம் செய்வதற்காக ரெனின் மற்றும் அவரது உறவினர்கள் மூவோட்டுகொணம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இறுதிச் சடங்கை முடித்து விட்டு மீண்டும் ரெனின் மற்றும் அவரது உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தபோது அறையின் கதவு திறந்து […]
மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகையை கூடுதலாக தரவேண்டும் என்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு தற்போது 5 ஆயிரம் ரூபாய் தடைக்காலதிற்கான நிவாரணம் தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 150 மீனவர்களுக்கு இந்த ஆண்டிலேயே உரிய உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை […]
சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரில் முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டபழஞ்சி பகுதியில் மேரி கமலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேரிகமலம் எப்போதும் போல் கடையை திறப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் 3 நாட்களாக பெய்த கன மழையால் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் மேரிகமலம் […]
கடலோரம் பகுதியில் குவிந்த மீன்களைப் பொதுமக்கள் சமையலுக்காக அள்ளி சென்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து கால்வாய்களில் ஓடிய வெள்ளம் மணக்குடி காயலிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலில் கலந்துள்ளது. இந்நிலையில் கோவளம் கடலோரம் பகுதிகளில் அதிகமான நன்னீர் மீன்கள் கரை ஒதுங்கியதால் அதனை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்களை அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மீனவர் வின்சென்ட் கூறியபோது, இதுபோன்று கனமழை […]
கணவன்- மனைவி தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்விளை பகுதியில் தீஸ்மாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் ஊழியராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 4 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த தீஸ்மாஸ் தனது வீட்டின் மாடியில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் இந்த கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி உபரிநீர், சிற்றாறு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் பள்ளமான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து நாகர்கோவிலில் பெய்த கனமழையால் மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மேலும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் மின்தடை […]
கன்னியாகுமரியில் காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இளந்தோப்பு விளையை சேர்ந்த துரைமணி கொத்தனாராக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்ரீ வித்யா அந்தப் பகுதியில் இருக்கும் பி.எட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் ஸ்ரீவித்யா வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]